Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சபாஷ்! ஜி.எஸ்.டி., நடைமுறையை கண்காணிக்க குழு

Posted: 04 Jul 2017 09:07 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அது முறையாக செயல்படுத்தப்படு கிறதா என்பது உள்ளிட்டவற்றை, மாவட்ட அளவில் கண்காணிக்க, நாடு முழுவதும், 200 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, இம்மாதம், 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதை அமல்படுத் துவதில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், வணிகர் களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.அதேபோல், வரி தொடர்பாக பொதுமக்களுக் கும் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட அளவில் இதை ...

பாடத்திட்டம் மாற்றம்; உயர்மட்ட குழு அமைப்பு

Posted: 04 Jul 2017 09:27 AM PDT

சென்னை: தமிழக பாடத்திட்டம் மாற்றம் தொடர்பாக, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் இடம் பெறும், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 13 ஆண்டு பழமையானது. 10ம் வகுப்பு பாடத்திட்டம், ஆறு ஆண்டுகள் பழமை யானது. அவற்றை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என, கல்வி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, புதிய உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார்.
மற்ற உறுப்பினர்கள் ...

சோனியா குடியுரிமையில் சந்தேகம்: உள்துறை பதில் அளிக்க உத்தரவு

Posted: 04 Jul 2017 09:43 AM PDT

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் குடியுரிமை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேள்வி :
ம.பி., மாநிலம்,உஜ்ஜைனியைச் சேர்ந்த ஒருவர், காங்., தலைவர் சோனியா
உள்ளிட்டோர், இந்தியக் குடியுரிமை பெற்றது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார். சோனியாவின் குடியுரிமை விண்ணப்பம், அதற்கு ஆதாரமான ஆவணங்கள், உத்தரவுகள், விதிகள், சரிபார்ப்பு ...

சசிகலாவின் சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை!

Posted: 04 Jul 2017 09:44 AM PDT

அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனு தள்ளுபடியாகும் என்பதால், அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை.

அவர் நான்காண்டு, 'உள்ளே' இருப்பது உறுதி யாகும் என,சட்ட நிபுணர்கள் கருத்து தெரி வித்து உள்ளனர். அவர் வெளியே வந்தால், கட்சிக்கும், ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் என்ப தால், அ.தி.மு.க.,வினரும் பீதியுடன், தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர்.சொத்து குவிப்பு வழக்கில்,ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ...

மோடியை 'ஹிந்தி'யில் வரவேற்று அசத்தினார் இஸ்ரேல் பிரதமர்

Posted: 04 Jul 2017 09:47 AM PDT

டெல்அவிவ்: மூன்று நாள் பயணமாக, இஸ் ரேல் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்துக்கே, தன் அமைச்சர் களுடன் சென்று, ஹிந்தியில் வரவேற்று அசத்தினார், இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாஹு.

இந்தியா - இஸ்ரேல் இடையேயான துாதரக உறவின், 25வது ஆண்டையொட்டி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் அரசு முறை பயணமாக, இஸ்ரேலுக்கு வந்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.
முதல் பிரதமர்:மத்திய கிழக்கு நாடான
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமரான மோடியை, மரபுகளை மீறி, விமான நிலையத் துக்கே நேரில் சென்று, ...

'ஆதார் தகவல் பதிய வருவோரை திருப்பி அனுப்புவது ஊழல் குற்றம்'

Posted: 04 Jul 2017 09:48 AM PDT

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்ய வருவோரிடம், தொழிற்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களை கூறி, அவர்களை திருப்பி அனுப்புவது, ஊழலாக கருதப்படும்' என, 'ஆதார்' அடையாள அட்டை ஆணையம் எச்சரித்துள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைமை நிர்வாகி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆதார் அடையாள அட்டை பெறுவதற்காக, நாடு முழுவதும், 25 ஆயிரம் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் அனைத்தும், விரைவில், அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலக கட்டடங்களுக்கு மாற்றப்பட உள்ளன. அடையாள ...

ரூ.570 கோடி யாருக்கு சொந்தம்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை

Posted: 04 Jul 2017 09:50 AM PDT

சென்னை: மூன்று கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் குறித்த, சி.பி.ஐ., யின் விசாரணை அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சீலிட்ட உறையில், அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதால், அதன் விபரங்கள் தெரியவில்லை. தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருப்பூர் மாவட்டத்தில், மூன்று கன்டெய்னர் லாரி களை, தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். அதில், 570 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. கோவையில் இருந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு, பணத்தை கொண்டு செல்வதாக தெரிவிக் ...

அணிகள் இணைப்பு; ஓ.பி.எஸ்., கைவிரிப்பு

Posted: 04 Jul 2017 10:12 AM PDT

பெரியகுளம்:''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில நாட்களுக்கு முன் ஆட்டோவும், தனியார் பள்ளி பஸ்சும் மோதின. ஆட்டோவில் சென்ற கார்த்திகா, மகள் சகாந்தினி, உறவினர்கள் கயல்விழி, கலையரசன், பலியாகினர். இறந்தவர் களின் வீட்டுக்கு நேற்று சென்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.அப்போது நிருபர்கள்,'அ.தி.மு.க.,வின் இரு அணிக ளும் இணைவதற்கான பேச்சுக்கு வாய்ப்பு உள்ள தாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?' என ...

விவசாயிகளின் கடன்கள் தி.மு.க., கோரிக்கை

Posted: 04 Jul 2017 10:16 AM PDT

சென்னை:''அரசு கொள்கை முடிவு எடுத்து, அனைத்து விவசாயிகளின் கடன்களையும், தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும் நடந்த விவாதம்:
தி.மு.க., - வேலு: சிறு, குறு விவசாயிகளின் கடன்களை,அரசு தள்ளுபடி செய்தது. அனைத்து விவசாயிகளின் கடன்களை யும், தள்ளுபடி செய்ய வேண்டும் என, சட்டசபை யில் வலியுறுத்திய போது,'நீதிமன்றத்தில் வழக்கு
நிலுவையில் உள்ளது' என, அமைச்சர் தெரிவித்தார். கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிடலாமா என்பதை அறிந்து கொள்வதற்காக, நீதிமன்றம் சென்றதாகவும் கூறினார். ...

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை 5) எவ்வளவு?

Posted: 04 Jul 2017 11:48 AM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 5) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-05) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. ...

மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...

Posted: 04 Jul 2017 01:08 PM PDT

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பாடல் பாடி நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்க எழுந்தார். அப்போது ‛‛மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்… ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புழக வேண்டும் …'' என்ற பாடலை பாடி, மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோருக்கு ...

30 நாட்களுக்குள் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்

Posted: 04 Jul 2017 02:12 PM PDT

புதுடில்லி: திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அவ்வாறு திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்யாததற்கு, உரிய காரணம் இல்லாத நிலையில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணத்தைப் ...

கேளிக்கை வரியை ரத்து செய்ய நடிகர் ரஜினி வேண்டுகோள்

Posted: 04 Jul 2017 02:39 PM PDT

சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்ச சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவத்திருப்பதாவது: ‛‛ தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சகணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™