Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சட்டவிரோதமாக கட்டப்பட்டதா கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட்?

Posted: 03 Jul 2017 03:57 PM PDT

சட்டவிரோதமாக கட்டப்பட்டதா கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட்? ஆர்டிஐ தகவலால் பரபரப்பு சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட் சட்டவிரோதமாக கட்டபட்டது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சசிகலா அளித்திருந்தார். ஆனால் உடனடியாக அவரை ஆட்சியமைக்க ...

நாடகமே உலகம்

Posted: 03 Jul 2017 03:44 PM PDT

நாடகமே உலகம் கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை, தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே, நடனத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் பேணி வளர்த்தனர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர். உள்ளக் குறிப்புப்புறத்தில் தோன்றும்படி திறம்பட நடிப்பவள் விறலி (திருச்சிரப்பள்ளிக்கு அண்மையில் உள்ள விறலி மலை என்பது இன்று தவறாக 'விறாலிமலை' என வழங்குகிறது) எனப்பட்டாள்.கூத்தி, கூத்தர் ஆகிய இவர்கள் கதை தழுவி ...

தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகின்றன சினிமா காட்சிகள் இன்று முதல் ரத்து

Posted: 03 Jul 2017 10:23 AM PDT

சென்னை, சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் ...

இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Posted: 03 Jul 2017 08:48 AM PDT

இன்று  ரசித்த  நகைச்சுவை ...நன்றி நடிகர்  விஷால். நடிகர் விஷால் கர்நாடகம் சென்று , தமிழக விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய நீர் திறந்துவிடவேண்டும்  என்று கேட்டாராம் உடனே அவர்களும் திறந்து விட்டார்களாம் . அதற்கு நன்றி கூறி நீர்ப்பாசன மந்திரிக்கு  நன்றி கூறி விஷால் கடிதம் எழுதியுள்ளாராம். தினசரிகளில் இதை படித்ததும் மெய்சிலிர்த்து விட்டது. ஆஹா விஷால் , நீரே தமிழகத்திற்கு முதல் மந்திரியாக வரவேண்டும். நீரே இலங்கைக்கும் சென்று தமிழக மீனவர் பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டும். அப்பிடியே ...

பெருமிதம் – கவிதை

Posted: 03 Jul 2017 04:50 AM PDT

ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண்

Posted: 03 Jul 2017 03:24 AM PDT

- அகமதாபாத், குஜராத்தைச் சேர்ந்த மங்குபின் மக்வானாவுக்கு கடந்த வியாழக்கிழமை மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது. காரணம், 12 சிங்கங்கள் புடை சூழ ஆம்புலன்ஸில் குழந்தையை பிரசவித்துள்ளார் மங்குபின். இந்தச் சம்பவம் குறித்து அவசர மேலாண்மை நிர்வாகி சேதன் காதே கூறியபோது, "குஜாராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லுனாசாபூர் கிராமத்தைச் சேர்ந்த மங்குபினுக்கு வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அருகேவுள்ள அரசு மருத்துவமனையில் மங்குபினை அனுமதிக்க ...

பசு பாதுகாப்பு என்ற பெயரில் படுகொலைகள்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை

Posted: 02 Jul 2017 08:15 PM PDT

புதுடெல்லி : பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் படுகொலைகள் நடப்பது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசியதாவது: ''பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் படுகொலைகள் நடப்பது குறுத்து கவலை அளிக்கிறது. கும்பல் மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியாததாகிவிடும் போது சமுதாயத்தின் அடிப்படையைக் காக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் யாரும் தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. ஜனநாயக மாண்புகளைப் ...

அரசியல் கார்ட்டூன்

Posted: 02 Jul 2017 08:05 PM PDT

4-வது ஒருநாள் போட்டி: 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

Posted: 02 Jul 2017 08:00 PM PDT

ஆன்டிகுவா: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. புவனேஸ்வர் குமார், யுவராஜ் சிங் மற்றும் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ...

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் : பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

Posted: 02 Jul 2017 07:59 PM PDT

டெர்பி: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை, 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகளின் ...

நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் விரைவில் மாற்றம்

Posted: 02 Jul 2017 07:22 PM PDT

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கான, விதிகளில் மாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து, விருது வழங்க, விதிகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விதிகள் வகுக்கப்பட்டு, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர். பல ஆண்டுகளாக ஒரே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில், விருது பெறுவது குறித்து விபரம் தெரிந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™