Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கர்ணன் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 03 Jul 2017 09:21 AM PDT

புதுடில்லி : ஜாமின் கோரியும், தண்டனையை திரும்பப் பெறக் கோரியும், கோல்கட்டா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி, சி.எஸ்.கர்ணன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்தது.

தலையிட முடியாது:
கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த, சி.எஸ்.கர்ணனுக்கு,
கோர்ட் அவமதிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமர்வு, ஆறு மாத சிறை தண்டனை விதித்தது. தலைமறைவாக இருந்தகர்ணன், ஜூன் 20ல் கைது செய்யப்பட்டு, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமின் கோரியும், தண்டனையை திரும்பப் பெறக் ...

எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெற சீனா மிரட்டல்..! ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதாக 'திடீர்' குண்டு

Posted: 03 Jul 2017 09:25 AM PDT

புதுடில்லி: 'எல்லைப் பிரச்னை தொடர்பான ஒப்பந்தத்தை மீறி, சீன எல்லைக்குள் இந்தியப் படைகள் அத்துமீறி நுழைந்து பிரச்னையை ஏற்படுத்துகின்றன; படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, சீனா, புதிய மிரட்டல் குண்டை வீசி, பிரச்னையை மேலும் சிக்கலாக்கி வருகிறது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் - பூட்டான் இடையே உள்ள டோகாலாம் பகுதியில், 2006 முதல், நம் படையினர், பதுங்குக் குழி அமைத்து, கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா - பூட்டான் இடையே நடக்கும் வர்த்தகத்தை தடுக்கும் வகையிலும், அந்தப் ...

'மாற்றம் ஏற்படுத்த தைரியம் தேவை!'

Posted: 03 Jul 2017 09:28 AM PDT

புதுடில்லி : ''நம் நாடு அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை முழுமையாக அடையவில்லை; மாபெரும் மாற்றம்ஏற்படுத்த, தைரியம் தேவை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவுக்கு பின் சுதந்திரம் பெற்ற பல நாடுகள், நம்மை விட அதிகளவில் வளம் இல்லாத நாடுகள். ஆனால், அந்த நாடுகள், வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டுக் கொண்டிருக்கின்றன. நம் நாடு அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை முழுமையாக அடையாதது வருத்தம் அளிக்கிறது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த, அசாத்திய ...

கதிராமங்கலத்தில் வன்முறை காரணமாகவே தடியடி!: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

Posted: 03 Jul 2017 10:05 AM PDT

சென்னை: ''தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த, சிறப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க., - கோவி செழியன்: கதிராமங்கலம் கிராமத்தில், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம், இயற்கை எரிவாயு கொண்டு சென்ற குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. இயற்கை எரிவாயு எடுப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் ...

46 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 'டிரான்ஸ்பர்!'; போலீஸ் வட்டாரம் பீதி

Posted: 03 Jul 2017 10:10 AM PDT

தமிழகத்தில் ஒரே நாளில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 46 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை உட்பட பல நகரங்களில் பணியாற்றி வந்த போலீஸ் எஸ்.பி.,கள் திடீரென துாக்கியடிக்கப்பட்டு இருப்பதால் போலீஸ் வட்டாரத்தில் பீதி ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இங்கு பணியாற்றி வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தமிழக காவல் துறையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாகி வருகின்றன.
46 பேர் இடமாற்றம்அதேநேரத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ...

கோடநாடு எஸ்டேட் ஊழியர் மர்மச்சாவு; கழுத்தில் தூக்கு தடயத்தால் அதிர்ச்சி

Posted: 03 Jul 2017 10:20 AM PDT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை; அதற்குள் மற்றொரு சம்பவமாக அந்த எஸ்டேட் அலுவலக ஊழியர் மர்மமான முறையில் துாக்கில் சடலமாக தொங்கியது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சுயநினைவு இல்லாத நிலையில்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 'கோடநாடு எஸ்டேட்' 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் வளாகத்தில் 4,500 ச.அடியில் பிரமாண்ட பங்களாவும் 'கோடநாடு டீ' தொழிற்சாலையும் உள்ளது; 600 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த ...

விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted: 03 Jul 2017 10:26 AM PDT

சென்னை, அரசு விளம்பரங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறாக பயன்படுத்தக் கூடாது.சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு:அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறுகிறது. அ.தி.மு.க.,வினரைப் பொறுத்தவரை சொந்த செலவில் அவர்கள் கட்சி தலைவியின் புகைப்படத்தை போட்டு கொள்ளலாம். ...

தமிழகம் முழுவதும் 1,000 தியேட்டர்கள் மூடல்; கேளிக்கை வரியை நீக்கக்கோரி நடந்தது

Posted: 03 Jul 2017 10:53 AM PDT

தமிழக அரசின் கேளிக்கை வரியை நீக்கக்கோரி, மாநிலம் முழுவதும் நேற்று, 1,000க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி.,யில், சினிமா டிக்கெட்டுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தமிழக அரசின் கேளிக்கை வரி என, உள்ளாட்சிகள் மூலம், 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும், ஒரு முனை வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள், 58 சதவீத வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனால், 'கேளிக்கை வரியை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று முதல், ...

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை 4) எவ்வளவு?

Posted: 03 Jul 2017 11:47 AM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 4) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 5 காசுகள் குறைந்து ரூ.65.46 காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 4 காசுகள் குறைந்து ரூ.56.25 காசுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-04) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

தேர்வு வழிகாட்டல் இல்லை: மாணவர்கள் குழப்பம்

Posted: 03 Jul 2017 12:14 PM PDT

தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதற்கான வழிகாட்டல் விதிகள் வெளியிடப்படாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் ௧ வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.ஒவ்வொரு பாடத்துக்கும், ௨௦௦ மதிப்பெண்ணுக்கு பதில், ௧௦௦ மதிப்பெண்ணுக்கே கேள்விகள் இடம் பெறும்.அதில், செய்முறை தேர்வு உள்ள பாடங்களில், 'தியரி' என்ற, கருத்தியல் தேர்வுக்கு, 7௦; அகமதிப்பீடு, 10; செய்முறை தேர்வுக்கு, 20மதிப்பெண் தரப்படும். ...

நீர்வீழ்ச்சியில் குளித்த போது ‛‛செல்பி': 2 மாணவர்கள் பலி

Posted: 03 Jul 2017 12:56 PM PDT

ஐதராபாத்: தெலுங்கானாவில் நீர்வீழ்ச்சியில் குளித்த 2 மாணவர்கள் செல்பி எடுத்த போது பள்ளத்தில் விழுந்து பலியாயினர்.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தைச்சேர்ந்த 2 மாணவர்கள் உள்பட 4 இளைஞர்கள், குண்டாலா என்ற நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர். இதில் அன்சார், பைசான் என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் நீர்வீழ்ச்சி முன்பாக நின்று செல்பி எடுத்தனர். திடீரென நீர்வழ்ச்சி முன்பாக இருந்த பள்ளத்தில் விழுந்தனர். ஆழமான பகுதிக்கு இருவரையும் தண்ணீர் இழுத்து சென்றால் நீரில் முழ்கி பலியாயினர். சம்பவ இடத்தில் தீயணைப்புபடையினர் மாணவர்களை தேடினர். இதில் ...

பிரதமர் மோடி எழுதும் புத்தகம் இந்த ஆண்டு வெளியாகிறது

Posted: 03 Jul 2017 02:10 PM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எழுதும் புத்தகம், இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படுகிறது.
பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, ரேடியோ மூலம், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில், மாணவர்களை வழிநடத்தும் விதமாக பேசினார். இதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது.
இதை தொடர்ந்து, மாணவர்களுக்கு, அவர்களது வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக புத்தகம் ஒன்றை, அவர் எழுதுகிறார். இந்த புத்தகம், இந்த ஆண்டு இறுதியில், பல்வேறு மொழிகளில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™