Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…

Posted: 12 Jul 2017 08:01 AM PDT

1. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள். – 2.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது. – 3. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது. – 4. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம். – 5. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள். – 6. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து ...

இராஜராஜேச்சரம்

Posted: 12 Jul 2017 07:41 AM PDT

கோயில்என்றால் சைவர்களுக்குசிதம்பரந்தான் வைணவர்களுக்கு கோயில்என்றால் திருவரங்ம் அதேப்போல் பெரிய கோயில்' என்றால்பொது மக்களுக்கு அது தஞ்சை இராஜராஜேச்சரமே மட்டுமே ஆகும்." அது 214 அடி உயரமுள்ள விமானத்தாலா ? 13 அடி உயரமுள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தாலா ? 12 அடி உயர நந்தியாலா? 81 டன் எடையுள்ள உச்சி வட்டம் காரணமா ? எப்படியோ பெரிய கோயில், 'ப்ருஹத் ஈஸ்வரம்' எனும் வடமொழிப் பெயரால் 'பிரஹதீஸ்வரம்' என்று தற்போது அழைக்கப்படுகிறது , பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் 'பிரஹதீஸ்வரர் ...

அவர் அப்படித்தான் - ஒரு பக்க கதை

Posted: 12 Jul 2017 07:23 AM PDT

கேரளாவில் நாளை அப்துல் கலாமின் நினைவாக புதிய அருங்காட்சியகம் திறப்பு

Posted: 12 Jul 2017 07:15 AM PDT

திருவனந்தபுரம்: முன்னாள் குடியரசுத்தலைவரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான மறைந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கலாமின் கோட்பாடுகளை பிரபலப்படுத்தும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு 'டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்' என பெயரிடப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே எதிர்காலத்தை பற்றி அதிக விழிப்புணர்வை ...

கவலையைத் தொலைத்துவிடு…!

Posted: 12 Jul 2017 07:01 AM PDT

- தோல்விக்காக கவலைப்படாதே கவலைப்பட்டால் கவலைக்காக கண்ணீர் விடவேண்டும் கண்ணீர் விட்டால் கண்ணீரைத் துடைக்க கைகள் வேண்டும் – கண்ணில் வரும் கண்ணீரை துடைக்க நம் கையை விட மூன்றாவது கையையே மனம் எதிர்பார்க்கும் மனிதனைப் போல் வேறு எந்த உயிரும் ஆறுதல் தேடுவதில்லை – காக்கை கூட்டில் குயில் முட்டை காக்கை அடைகாக்க குயில் குஞ்சு கண்விழிக்க காக்கை அடையாளம் காண பொன் குஞ்சுக் கூட்டுக்குள் வந்த – புண் குஞ்சை விரட்டுகிறது… குயில்கள் தன் பிறப்பின் அவலத்தை எண்ணியா கூவுகிறது. – குயிலின் குரல் ...

ஏக்கம் - கவிதை

Posted: 12 Jul 2017 06:52 AM PDT

- உன்னை நினைத்து விடுமுறையில் குதூகலிக்க சொந்த ஊர் வந்தேன்! ஓர் இரவில் என்னைத் தழுவி சில மணித்துளியிலேயே மறைந்தாய்! விட்ட குறை தொட்ட குறையாய் உன் வாசம் சுமந்து நகரம் நகர்ந்தேன்! நானில்லாத நாட்களில் வந்து போனதாய் கூறினர் உன்னுடன் பயணித்த நாட்களில் உன் அருமை தெரியவில்லை கட்டி வைக்கவும் தோணவில்லை! என்று தணியும் உன் கோபம் எப்போது தீரும் என் தாகம் நீ வந்ததும் உன்னை உச்சி முகர்ந்து கொள்ள காத்திருப்பது நான் மட்டுமல்ல என் தாய்நாடும் தான்! மழையே வருவாயோ… உன் இதழ் துளி எங்களுக்கு ...

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted: 12 Jul 2017 05:42 AM PDT

இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: மாட்டிறைச்சி குறித்தான பொதுநல வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், "மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் சட்ட ரீதியான முறையில் பரிசீலனை நடந்து வருகிறது. மக்களின் கருத்துகளை கேட்டு தடையில் புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்படும்'' என்றும் தெரிவிக்கப்பட்டது. ...

அறிமுகம் - மொஹமட்

Posted: 12 Jul 2017 05:19 AM PDT

பெயர்: மொஹமட் முஃமின்
சொந்த ஊர்:  இலங்கை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தளம் மூலம்
பொழுதுபோக்கு: வாசிப்பு ,, தேடல் ,, ஆராய்ச்சி
தொழில்: தெரிந்தவை அனைத்தும்
மேலும் என்னைப் பற்றி:நல்லதும் நன்மையையும் எப்போதும்  செய்வோம்.

எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்

Posted: 12 Jul 2017 05:18 AM PDT

எழுத்துலகில் சம்பாதிப்பவர்கள் அபூர்வம். அதிலும் நல்ல சம்பாத்தியத்தை அடைபவர்கள் மிக அபூர்வம். அதிலும் விற்பனையிலும், சம்பாதித்தியத்திலும் பில்லியனைத் தொடுபவர்கள் மிக மிக அபூர்வம். இந்த வகையில் அபூர்வ எழுத்தாளர் காலஞ்சென்ற சிட்னி ஷெல்டன்! இவருடைய 100வது ஆண்டு சமீபத்தில் (பிப்.11) கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் இவர் காலமானது 2007ல் தான்! சிகாகோவில் சியிச்டெல் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் காலத்தில் அமெரிக்காவே தொழில் மந்தத்தில் திணறியதால், 3வது கிரேடுடன் படிப்பு நிறுத்தப்பட்டார்! இதனால் ...

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்

Posted: 12 Jul 2017 05:12 AM PDT

இத்தாலிய மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டு அரசின் உதவியினைப் பெற்று, புதிய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டார். தனது நீண்ட நெடிய கடல் பயணத்தில் கொலம்பஸ் கி.பி. 1492ஆம் ஆண்டில் வட அமெரிக்காவின் அருகில் மேற்கிந்திய தீவுகள் என்று பின்னாட்களில் அறிவிக்கப்பட்ட திவுகளில் ஒன்றாகிய ஹைட்டி என்ற தீவில் கரையேறினார். அந்தத் தீவிற்கு இஸ்பேனியோலா என்று பெயர் சூட்டினார். கொலம்பஸ் தன்னோடு கொண்டுவந்த வெடிமருந்துகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்தி, அங்கிருந்த ...

எனது கிராமத்தின் குளங்களின் நிலை பற்றி அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய விழிப்புராவுப் பதிவு .

Posted: 12 Jul 2017 04:56 AM PDT

[b]எனது  கிராமத்தின் குளங்களின்   நிலை  பற்றி அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய விழிப்புராவுப் பதிவு . கட்டுவன்வில் பிரதேச வாசிகளாகிய நாம் மிக நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு நீரை மையமாக கொண்டே எமது நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்திருந்தோம். ஆனால் இன்று எம்மிடம் பணத்தின் பெருமை எம்மை எங்கயோ கொண்டு சென்று விட்டது. இன்று நாம் எவ்வாறு நிலையில் பிறந்தோம், இருந்தோம் என்ற நிலையை மறந்து இன்று கொஞ்ச பணத்தை கண்டதும் எமது பழக்க வழக்கம் செயற்பாடுகள் என்பன எம்மை மாற்றி விட்டது.   அந்த வகையில் இன்று நாம் ...

அர்த்தமுள்ள தத்துவங்கள்

Posted: 12 Jul 2017 02:54 AM PDT

- விவேகானந்தர் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். " நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. சேவை மட்டுமே செய்ய முடியும்" என்பது விவேகானந்தரின் புகழ் பெற்ற கருத்து. - -----------------------------------

பொன்மொழிகள் –

Posted: 12 Jul 2017 02:49 AM PDT

- எறும்பை அழிக்க வேண்டுமானால் இறைவன் அதற்கு சிறகு கொடுப்பதாகச் சொல்வதுண்டு…. அது பறந்து தீயில் விழுந்து மடிகிறது! – ——————————- – காட்டுமிராண்டியாகத் திரிந்த ஆதிகால மனிதன் பிறரைக்கொல்ல விஷந்தோய்ந்த அம்பை ஏவினான். நாம் இன்று விஷ வாயுவை ஏவுகிறோம், இதுதான் நமது முன்னேற்றம் – -பெர்னார்ட்ஷா – —————————————– பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. – வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து ...

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!

Posted: 12 Jul 2017 02:48 AM PDT

- 1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள். 3. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. 4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும். 5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ...

அரசியல் கார்ட்டூன்

Posted: 11 Jul 2017 07:52 PM PDT

வெள்ளை மாளிகை நிர்வாக தலைமை பொறுப்பில் இந்தியர்

Posted: 11 Jul 2017 07:41 PM PDT

அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ், 44, நியமிக்கப்பட உள்ளார். இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டில், செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில், நியோமி, 54க்கு 41 என்ற ஓட்டு விகிதத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம், வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், நியோமி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த பொறுப்பில் ...

கோவில் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது

Posted: 11 Jul 2017 07:39 PM PDT

புதுடில்லி, 'கோவில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:வழிபாட்டுத் தலங்கள், மத அமைப்புகள் சார்ந்த அன்னதானகூடங்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி., உண்டு என, தவறாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையல்ல. இதற்கு, ஜி.எஸ்.டி., கிடையாது.ஆனால் இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் ...

சர்க்கரை இறக்குமதி வரி 50% ஆக உயர்வு: பஸ்வான்

Posted: 11 Jul 2017 07:37 PM PDT

புதுடில்லி: சர்க்கரை இறக்குமதி வரி 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சர்க்கரை இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் சர்க்கரை விலை குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரை மீதான வரி, 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். - ---------------------------------- தினத்தந்தி

பெண்கள் உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி., இன்று மோதல்

Posted: 11 Jul 2017 07:35 PM PDT

பிரிஸ்டல்: பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று(ஜூலை 12) மோதுகின்றன. இன்று வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இரு அணிகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தும். 5 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா 4ல் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் மழை வர 10 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி துவங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவிசாஸ்திரி:

Posted: 11 Jul 2017 07:26 PM PDT

- முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா - இலங்கை இடையேயான போட்டியிலிருந்து ரவிசாஸ்திரி தனது பணியை துவங்குவார். மேலும் 2019 உலக கோப்பை வரை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீட்டிப்பார். இவ்வாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது - ----------------------------- தினத்தந்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™