Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சலுகைகள் பெற 'ஆதார்' கட்டாயமா? 5 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும்

Posted: 12 Jul 2017 09:06 AM PDT

புதுடில்லி: 'தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை உட்பட, ஆதார் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 18 - 19ம் தேதிகளில் விசாரிக்கும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், அரசின் பல்வேறு இலவசத் திட்டங்களையும், மானியங்களையும் பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கின் விசாரணையை விரைவில் துவங்க வேண்டும்' என, வாதிட்டனர். ...

தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு!

Posted: 12 Jul 2017 09:49 AM PDT

புதுடில்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது தொடர்பாக, குழப்பமான பதில் அளித்து வரும் தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'உறுதியான முடிவை எடுக்காமல் மவுனம் சாதித்து வருவது, பிரச்னைக்கு தீர்வாகாது' என்றும், சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

அரசியலில் கிரிமினல்கள் நுழைவதை தடுக்கும் நோக்கில், சுப்ரீம் கோர்ட்டில், பா.ஜ., தலைவர் அஷ்வனி குமார் சார்பில், பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது; அந்த மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:நாட்டை எதிர்நோக்கியுள்ள மிக ...

'செல்லாத ரூபாய் நோட்டுகளை இரவு, பகலாக எண்ணுகிறோம்!'

Posted: 12 Jul 2017 10:02 AM PDT

புதுடில்லி:''வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இரவு, பகலாக தொடர்ந்து நீடிக்கிறது,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக் கப்பட்டன. அந்த நோட்டுகளை, வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து, செல்லத் தக்க நோட்டுகளை பெறவும், செல்லாத நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்யவும், டிச., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், 'வங்கி களில் டிபாசிட் செய்யப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு மற்றும் ...

ஜி.எஸ்.டி.,யை தமிழக அரசு ஆதரித்தது ஏன்? அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

Posted: 12 Jul 2017 10:06 AM PDT

சென்னை:''ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரியில், 169 பொருட்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கைகளை, மத்திய அரசு ஏற்று, திருத்தம் செய்ததால், ஜி.எஸ்.டி., வரியை ஆதரித்தோம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ராமர்: ஜி.எஸ்.டி., வரி என்பது வரமாக இருக்க வேண்டும்; சாபமாக மாறி விடக்கூடாது. வரி வசூல் என்பது, தேன் எடுப் பது போல் மென்மையாக இருக்க வேண்டும்; தேனி கொட்டுவது போல் கடுமையாக இருக்கக் கூடாது.அமைச்சர் வீரமணி: ஜி.எஸ்.டி., வரி, மத்திய அரசால் கொண்டு ...

 பீஹாரில் ஆர்.ஜே.டி., உடனான கூட்டணியை முறிக்கிறார் நிதிஷ்?

Posted: 12 Jul 2017 10:15 AM PDT

பாட்னா:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரு மான, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான, சி.பி.ஐ., அமலாக் கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனைகள் தொடர்வதால், லாலு மற்றும் குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்துள்ள, பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், லாலு கட்சியுடனான கூட்டணியை முறிக்க முடிவு செய்துள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆர்.ஜே.டி., தலைவரும், பீஹார் ...

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை சிறைத்துறை அதிகாரி பரபரப்பு அறிக்கை

Posted: 12 Jul 2017 10:24 AM PDT

பெங்களூரு:'பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.அவர் விரும்பும்உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என, கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா சிறைக்கு சென்று, ஆய்வு செய்தார். அங்கு ...

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நீதிபதிகள் நியமனத்தில் ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 12 Jul 2017 10:34 AM PDT

சென்னை:''மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில், மாநில அரசின் உரிமைகளை பறிக்க முயற்சிக் கும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், ஸ்டாலின் பேசியதாவது:மருத்துவக் கல்லுாரிகளில் சேர, 'நீட்' தேர்வு இருப்பது போல, மாவட்ட மற்றும் கீழமை நீதிபதிகள் நியமனங்களில், அகில இந்திய அளவிலான தேர்வு முறையை கொண்டு வர, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அரசியலமைப்பு சட்டம், மாவட்ட அளவிலும், அதற்கு கீழுள்ள நீதிமன்றங்களிலும், ...

காவிரி வழக்கில் கர்நாடகா மீண்டும் பிடிவாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தீவிரம்

Posted: 12 Jul 2017 10:40 AM PDT

புதுடில்லி:'தமிழகத்துக்கு, காவிரியிலிருந்து, 132 டி.எம்.சி., நீர் பெற மட்டுமே உரிமை உள்ளது' என, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடகா தெரிவித்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுக் கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் மனு உள்ளிட்ட அனைத்து மனுக்கள் மீதும், சுப்ரீம் கோர்ட்டில், 11ம் தேதி முதல், இறுதி விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி கள், தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்த விசாரணையின் போது, கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், பாலி நாரிமன் ...

பிளஸ் 2 பொது தேர்வு; புதிய விதிகள் தயார் மாதிரி தேர்வு நடத்த முடிவு

Posted: 12 Jul 2017 10:45 AM PDT

பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசாணை வெளியிடும் முன், மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சீர்திருத்த நடவடிக்கைகளில், முக்கிய அம்சமாக, தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
வல்லுனர் கமிட்டி
மேலும்,தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ்1 பொது தேர்வு, பாடத்துக்கு, 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு ...

பெட்ரோல் டீசல் விலை இன்று(ஜூலை 13) எவ்வளவு?

Posted: 12 Jul 2017 11:44 AM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.36 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.67காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை- 13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 2 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.66.36 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.57.67 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-13) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

'ஆன்லைன் ரம்மி'க்கு தெலுங்கானாவில் தடை - மீறினால் கைது நடவடிக்கை பாயும்

Posted: 12 Jul 2017 01:04 PM PDT

ஐதராபாத்: கம்ப்யூட்டர் மற்றும் 'ஸ்மார்ட்' போன்களில், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டிற்கு, தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி, அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்த, சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் பெரும்பாலான இளைஞர்கள், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவதாக, உளவுத் துறை ஆய்வில் தெரிய வந்தது.
மன உளைச்சல்கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன்களில் ஆன்லைன் ரம்மி என்ற பெயரில், சீட்டாட்டம் ...

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட முடியுமா? ம.பி., அமைச்சர் வழக்கு ஐகோர்ட்டுக்கு பரிந்துரை

Posted: 12 Jul 2017 02:20 PM PDT

புதுடில்லி : ம.பி.,யில், சமீபத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை, டில்லி ஐகோர்ட்டின் விசாரணைக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று பரிந்துரை செய்துள்ளது.

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். அவர் அமைச்சரவையில், நீர் வளத்துறை அமைச்சராக உள்ள நரோத்தம் மிஸ்ரா, தாதியா சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்; மாநில அரசின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். பணம் தந்து, செய்தி வெளியிடுவது தொடர்பாக, நரோத்தம் ...

அமர்நாத் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்பு

Posted: 12 Jul 2017 03:27 PM PDT

புதுடில்லி: 'அமர்நாத் யாத்ரீகர்கள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும், உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமர்நாத் பனி லிங்க தரிசன யாத்திரை, இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது. ஒரு மதத்தினர் செல்லும் யாத்திரைக்கான ஏற்பாடுகளை, மற்ற மதத்தினர் செய்கின்றனர். இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். அமர்நாத் யாத்ரீகர்கள் மீது, பயங்கரவாதிகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™