Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் :இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானவர்களை எதிர்பார்க்கும் கல்கரி

Posted: 07 Jun 2017 08:44 AM PDT

கல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள கனடாவின் 150 பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 30 நிமிட வான வேடிக்கை, சிறப்பு ஒளிக்கீற்று காட்சிகள், பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள், பண்பாட்டு கண்காட்சி நிகழ்வுகள், பிரமாண்ட உணவுப் பந்தல்கள், பல்சுவை கலை நிகழ்வுகள் என்று பெருமளவான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் யூலை முதலாம் நாள் "கனடா டே" அன்று, ஃபோர்ட் கல்கரியில் வெள்ளை மற்றும் சிவப்பு சட்டைகளுடன் கூடவுள்ள […]

The post 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் :இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானவர்களை எதிர்பார்க்கும் கல்கரி appeared first on TamilStar.com.

மேலும் 45,000 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைக்கிறது ஒன்ராறியோ

Posted: 07 Jun 2017 08:41 AM PDT

அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அதிகரிப்பது குறித்து ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒன்ராறியோ மக்களுக்கான குழந்தைகள் பராமரிப்புச் சேவைகளை மேலும் இலகுவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர், தற்போது இருப்பவற்றிற்கு மேலதிகமாக மேலும் 45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தினால் தமது பிள்ளைகள் அங்கீகரிக்கப்பட்ட […]

The post மேலும் 45,000 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைக்கிறது ஒன்ராறியோ appeared first on TamilStar.com.

விசாரணை அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள்! – ஐங்கரநேசன்

Posted: 07 Jun 2017 08:37 AM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில், விசாரணையின் போது குறிப்பிடப்படாத பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், தாம் குறிப்பிட்ட சில விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்படாமல் உள்ளதென்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சரால் மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விரும்பும் பட்சத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தன்னிலை விளக்கமொன்றை அளிக்க முடியுமென அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் […]

The post விசாரணை அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள்! – ஐங்கரநேசன் appeared first on TamilStar.com.

குற்றமிழைத்த படையினரை அரசாங்கம் பாதுகாக்கக் கூடாது! – சம்பந்தன்

Posted: 07 Jun 2017 08:34 AM PDT

மனித நேயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள், போர் வீரர்கள் என்ற போர்வையில் மூடிமறைக்கப்படக்கூடாது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். ஜெனீவா பிரேரணை தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதை காலதாமதப் படுத்துவதோ அல்லது மறுப்பதோ நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். பிரேரணையில் உள்ளடங்கிய விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதே நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கான முதற்படியாக […]

The post குற்றமிழைத்த படையினரை அரசாங்கம் பாதுகாக்கக் கூடாது! – சம்பந்தன் appeared first on TamilStar.com.

இராணுவத்தில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அமைச்சரின் சுய கருத்து

Posted: 07 Jun 2017 08:31 AM PDT

இராணுவத்தில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற கருத்து அமைச்சர் மங்கள சமரவீரவின் சொந்த கருத்தாகவே இருக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாத் தீர்மானம் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி நேற்றுச் சமர்ப்பித்திருந்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அமைச்சர் மங்கள சமரவீர இராணுவத்தில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இன்று சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது […]

The post இராணுவத்தில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அமைச்சரின் சுய கருத்து appeared first on TamilStar.com.

இராணுவத்தில் உள்ள கறுப்பு ஆடுகளைத் தண்டிக்க வேண்டும்! – மங்கள சமரவீர

Posted: 07 Jun 2017 08:24 AM PDT

இராணுவத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட சில கறுப்பு ஆடுகள் இருக்கலாம். அவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டாலே இராணுவத்தின் நற்பெயரைக் பாதுகாக்க முடியும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜெனீவா பிரேரணை தொடர்பில் தினேஷ் குணர்வத்தன எம்பி கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜெனீவா ஒப்பந்தத்தில் வெ ளிவிவகார அமைச்சர் என்ற […]

The post இராணுவத்தில் உள்ள கறுப்பு ஆடுகளைத் தண்டிக்க வேண்டும்! – மங்கள சமரவீர appeared first on TamilStar.com.

ஞானசார தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை? அமைச்சர் கேள்வி!

Posted: 07 Jun 2017 08:21 AM PDT

பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் எழுந்த சர்ச்சைகளுக்கு பின்னால் ஞானாசார தேரர் உள்ளார் என ராஜித கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் ஞானசார தேரரை ஒப்பிட முடியாது. விக்னேஸ்வரன் கூறும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், சிங்கள சமூகத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்குமாறு அவர் […]

The post ஞானசார தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை? அமைச்சர் கேள்வி! appeared first on TamilStar.com.

மகிந்த அரசைப் போலவே தவறு செய்கிறது மைத்திரி அரசு! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

Posted: 07 Jun 2017 08:17 AM PDT

முன்னைய அரசாங்கத்தைப் போலவே, இந்த அரசாங்கமும் தவறிழைக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு எதிராக 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸ் குழுக்களும் புலனாய்வுப் பிரிவினரும் என்ன செய்கின்றார்கள்? இது ஒரு வெட்கப்பட வேண்டிய விடயம். ஒரு மத குருவும் குண்டர்களடங்கிய குழுவும் சேர்ந்து முஸ்லிம் மதத்தை அவமதித்து அல்லாவையும், நபிகளாரையும் தூஷித்து முஸ்லிம்களுக்கு எதிராக […]

The post மகிந்த அரசைப் போலவே தவறு செய்கிறது மைத்திரி அரசு! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு appeared first on TamilStar.com.

இலங்கையில் புகையிலை பயிரிட தடை

Posted: 07 Jun 2017 08:14 AM PDT

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் புகையிலை பயிரிடப்படுவது முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டை குறைக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஒரு சிகரட் விற்பனை மாத்திரமல்லாது பாடசாலைகளுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரட் விற்பனை செய்யப்படுவது தடை […]

The post இலங்கையில் புகையிலை பயிரிட தடை appeared first on TamilStar.com.

இராஜதந்திர அணுகுமுறைகளை தமிழரசுக் கட்சியினர் கற்க வேண்டும்! – ஆனந்தசங்கரி அறிவுரை

Posted: 07 Jun 2017 08:12 AM PDT

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இராஜதந்திர அணுகுமுறையை, கற்றுக்கொள்ள வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கூறியுள்ளார். தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைக் கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுவதற்கே மிக அக்கறையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அவர்கள் அறிக்கைகள் விட முடியாது. சிந்தனையற்ற செயற்பாடுகள், அறிக்கைகள் போன்றவை […]

The post இராஜதந்திர அணுகுமுறைகளை தமிழரசுக் கட்சியினர் கற்க வேண்டும்! – ஆனந்தசங்கரி அறிவுரை appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™