Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க அமர்வில் காண் ஒளி மூலம் உரை ஆற்றிய சித்தார்த்தன் எம் பி

Posted: 06 Jun 2017 07:43 AM PDT

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றத்தினுடைய ஏழாவது அமர்வுகள் கடந்த வாரம், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடைபெற்றன. இந்த அமர்வினில் சிறப்பு அதிதியாகப் பங்கேற்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், நேரடியாக அந்த அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத சூழலில், அவர் காணொளி மூலம் உரையாற்றினார். அந்த உரை கீழே தரப்பட்டுள்ளது: அனைவருக்கும் வணக்கம்! உங்களுடைய இந்த அமர்வுகளிலே […]

The post நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க அமர்வில் காண் ஒளி மூலம் உரை ஆற்றிய சித்தார்த்தன் எம் பி appeared first on TamilStar.com.

ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு அழைப்பு

Posted: 06 Jun 2017 07:41 AM PDT

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப்படு கொலையாளிகள் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் தண்டிக்கப்படல் வேண்டும், தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய முன்னணியினரால் அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை […]

The post ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு அழைப்பு appeared first on TamilStar.com.

காங்கேசன்துறையில் இருந்து மாத்தறைக்கு மனிதாபிமான ரயில்! – உதவிப் பொருட்களுடன் செல்கிறது

Posted: 06 Jun 2017 07:35 AM PDT

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மனிதாபிமான ரயில் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இயற்கை சீற்றத்தால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும், அந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி, களுத்துறை, […]

The post காங்கேசன்துறையில் இருந்து மாத்தறைக்கு மனிதாபிமான ரயில்! – உதவிப் பொருட்களுடன் செல்கிறது appeared first on TamilStar.com.

நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்செயலாளருடன் பிரதமர் ரணில் முக்கிய சந்திப்பு

Posted: 06 Jun 2017 07:31 AM PDT

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்றதாக இன்னர் சிட்டிபிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட அவர், ஐக்கிய நாடுகளின் சமுத்திரவலய மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளரை அத்தோனியோ குட்டேரஸை நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். இதேவேளை, இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து […]

The post நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்செயலாளருடன் பிரதமர் ரணில் முக்கிய சந்திப்பு appeared first on TamilStar.com.

நாமலின் கை விரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு உத்தரவு

Posted: 06 Jun 2017 07:28 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 30 மில்லியன் ரூபா பணம் தூய்மையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதவான் கிஹான் கலதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ச உட்பட மூவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் ,உயர் நீதிமன்றத்தில் இருந்து கிடைத்த அழைப்பாணைக்கு அமைய அவர்கள் […]

The post நாமலின் கை விரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு உத்தரவு appeared first on TamilStar.com.

மஹிந்த மைத்திரி இணைப்பு முயற்சி நடக்கவில்லை! – குமார வெல்கம

Posted: 06 Jun 2017 07:21 AM PDT

மஹிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்று மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். மஹிந்த மற்றும் மைத்திரியை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்று மஹிந்த […]

The post மஹிந்த மைத்திரி இணைப்பு முயற்சி நடக்கவில்லை! – குமார வெல்கம appeared first on TamilStar.com.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியாலினை மாற்றத் தடை!

Posted: 06 Jun 2017 07:17 AM PDT

கட்டாரில் இருந்து இலங்கை வருவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் ரியாலை, இலங்கை ரூபாய்க்கு மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள வங்கி கிளையினால் கட்டார் ரியால் மாற்றுவதற்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்காமையினால் தாம் கடுமையான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் அறிவிக்கும் வரை கட்டார் ரியால் மாற்ற வேண்டாம் என மத்திய வங்கியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வங்கி […]

The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியாலினை மாற்றத் தடை! appeared first on TamilStar.com.

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் – அமைச்சர் தயாசிறி

Posted: 06 Jun 2017 07:14 AM PDT

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்காக தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். இதேவேளை, புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடக பௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் – அமைச்சர் தயாசிறி appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™