Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'குயின்' ரீமேக்கில் எமி ஜாக்சன் ?

Posted:

2014ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'குயின்'. நடிகை கங்கனா ரனவத்-திற்கு இந்தப் படம் மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் ...

மன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர்

Posted:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் நடிக்க உள்ளார்.
சஞ்சய் பாரு எழுதிய புத்தகம் : கடந்த, 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமரான போது அவரது மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. அவர், 2008-ம் ஆண்டு வரை அப்பணியில் இருந்தார். அவர் மன்மோகன் ...

விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் - வெற்றி யாருக்கு ?

Posted:

80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு பெரும் நடிகர்களுக்கு மத்தியிலும் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, ராமராஜன், மோகன் என அடுத்த கட்ட நடிகர்களும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்கள். ஆனால், அது போன்ற ஒரு நிலை இந்த 2017ல் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குமான வியாபாரமும், வரவேற்பும், வசூலும் ...

மாணவர்களுக்கு மரம் நடுதலின் அவசியத்தை விளக்கிய மம்முட்டி..!

Posted:

சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தவிர திரையுலக பிரபலங்களும் இந்த மரம் நடுதல் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோகன்லால் தான் தற்போது நடித்துவரும் 'வெளிப்பாடிண்டே புத்தகம்' படத்தின் ...

அல்போன்ஸ் புத்ரனின் புதிய படம் 'தொபாமா'..!

Posted:

'பிரேமம்' படம் ரிலீசாகி இரண்டு வருடங்களாகி விட்ட நிலையிலும் இன்னும் தனது புதிய படத்தை துவங்காமல் இருக்கிறார் மலையாளம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபகாலமாகத்தான் தனது அடுத்த படம் பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அதன்படி அவரது அடுத்த படம் தமிழில் தான் என்றும் இசை சம்பந்தப்பட்ட படமாக அது இருக்கும் ...

உதயநிதி நடிக்க இருப்பது பஹத் பாசில் பட ரீமேக்..?

Posted:

உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சரவணன் இருக்க பயமேன்' என்கிற படத்தை பார்த்தால் உதயநிதி இன்னும் காமெடி என்கிற ஒரு பாதுகாப்பான வட்டத்தை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கிறார் என்பது புரிந்தது. அடுத்ததாக தூங்கா நகரம் 'கௌரவ் நாராயணன்' இயக்கத்தில் 'இப்படை வெல்லும்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். கெத்து' படத்தை ...

வினீத் சீனிவாசன் பட ஆடியோவை வெளியிட்டார் மோகன்லால்..!

Posted:

இளம் வயதிலேயே இயக்குனராகிவிட்டவர் மலையாள நடிகர் சீனிவாசனின் மகனான வினீத் சீனிவாசன். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதாலோ என்னவோ ஒரு படத்திற்கும், இன்னொரு படத்திற்கும் கொஞ்சம் அதிகமான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். இந்த நேரத்தில் அவரை மற்ற இயக்குனர்கள் தங்களது படங்களில் ஹீரோவாக நடிக்க கொத்திக் கொண்டு ...

யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை - ஸ்ருதிஹாசன்

Posted:

400 கோடி ரூபாய் செலவில் தமிழில் பிரம்மாண்டமாகத் தயாராக உள்ள சரித்திரப் படமான 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கான உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் வெளியாகவில்லை. படத்தில் நடிக்க வேண்டாம் என கேன்ஸ் விழாவிற்குச் செல்வதற்கு முன்பு ஸ்ருதிஹாசன் முடிவெடுத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் பலரும் ...

'கபாலி' போலவே 'காலா' படப்பிடிப்புக் காட்சிகள் 'லீக்'

Posted:

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முறையாக நடித்த 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி மலேசியாவில் நடந்தது. அங்கு படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே அடிக்கடி 'கபாலி' படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தொடர்ந்து பலரும் அதை வெளியிட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் ...

'வேலைக்காரன்' காப்பி போஸ்டர், கலங்க வைக்கும் மீம்ஸ்கள்

Posted:

'தனி ஒருவன்' என்ற தரமான படத்தைக் கொடுத்து வியக்க வைத்த இயக்குனர் மோகன் ராஜா அடுத்து இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் முதல் பார்வையை நேற்று வெளியிட்டார். அது வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அது ஒரு 'காப்பி போஸ்டர்' என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

1993ம் ஆண்டு மைக்கேல் டக்ளஸ் நடித்து வெளிவந்த ...

சீனாவில் டிரிபிள் எக்ஸ் படத்தை முந்திய தங்கல்

Posted:

அமீர்கான் நடித்துள்ள தங்கல் படம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ள நிலையில் சமீபத்தில் சீனாவில் திரையிடப்பட்டது. இந்திய மற்றும் உலக அரங்கங்களின் வசூலை மிஞ்சும் அளவுக்கு சீனாவில் சுமார் ஆயிரம் கோடி வசூலை எட்டியிருக்கிறது தங்கல் படம். இந்நிலையில் சீனாவில் அதிகம் வசூலித்த டாப் 25 படங்களின் பட்டியலில் ...

ரீ-லோடு - ஜென்டில்மேன்-ஆக மாறியது

Posted:

இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் படம் ரீ-லோடு. சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார்கள். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக், காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு "ஏ ஜென்டில்மேன்" என்று பெயர் ...

ஏபிசிடி-3யில் நான் நடிக்கவில்லை - சல்மான்

Posted:

நடன இயக்குநர் ரெமோ டிசோசா இயக்கத்தில் டான்ஸை மையமாக வைத்து வெளிவந்த படங்கள் ஏபிசிடி மற்றும் ஏபிசிடி-2. முதல்பாகம் சூப்பர் ஹிட்டானது. இரண்டாம் பாகம் முதல்பாகம் அளவுக்கு ஹிட்டில்லை என்றாலும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இந்நிலையில் ரெமோ, ஏபிசிடி-3 படத்தை இயக்க இருப்பதாகவும், இதில் சல்மான்-ஜாக்குலின் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் ...

தமால்-3: சஞ்சய்க்கு பதில் அஜய்

Posted:

இந்திர குமார் இயக்கத்தில், சஞ்சய் தத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் தமால் வரிசை படங்கள். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மூன்றாம் பாகம் "டோட்டல் தமால்" என்ற பெயரில் உருவாக இருக்கிறது. இதில் முந்தைய பாகங்களில் நடித்த சஞ்சய் தத் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார். ...

தாத்தாவின் பிறந்த நாளில் டீசர் வெளியிட்ட ராணா டகுபதி!

Posted:

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி என பல மொழிகளிலும் படங்களை தயாரித்தவர் டி.ராமா நாயுடு. தமிழைப்பொறுத்தவரை சிவாஜியின் வசந்தமாளிகை, ரஜினியின் தனிக்காட்டு ராஜா மற்றும் கைநாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்த டி.ராமாநாயுடுவின் பேரன்தான் பாகுபலி பட வில்லன் ராணா டகுபதி.

இவர் தற்போது ...

எம்.எல்.ஏ படத்தில் காஜல் அகர்வால்!

Posted:

தற்போது விவேகம், விஜய் -61 மற்றும் தெலுங்கில் நேனே ராஜூ நேனே மந்திரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய் என இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் காஜல் அகர்வால், அடுத்தபடியாக இன்னும் சில பிரபல நடிகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் ...

சினிமாவுக்கு வருகிறார் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகி பிரியா!

Posted:

புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக மூன்று வருடங்கள் இருந்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து சில ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் லீடு ரோலில் நடித்து பெரிய அளவில் பிரபலமானார். ஆனால் திடீரென்று சீரியலை விட்டு விலகப்போவதாக அறிவித்த பிரியா, வெளிநாடு சென்று ...

ஜூன்-15ல் ஸ்கெட்ச் போட்டு முடிக்கிறார் விக்ரம்!

Posted:

இருமுகன் படத்தை அடுத்து ஸ்கெட்ச், துருவநட்சத்திரம், சாமி-2 என மூன்ற படஙக்ளில் ஒப்பந்தமான விக்ரம், வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பைக் திருடன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெமினி படத்தில் தோன்றிய தாடி கெட்டப்பில் நடித்துள்ள விக்ரம், ...

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் பாராட்டிய எக்ஸ்பிரஸ் கவிஞர்

Posted:

தமிழ் திரைப்பட பாடல் ஆசியர்களில் தஞ்சை ராமய்யாதாஸ் வித்தியாசமானவர். இசை அமைப்பாளர் மெட்டை சொல்ல சொல்ல ஆன் தி ஸ்பாட்டிலேயே பாடல் வரிகளை சொல்லக்கூடியவர். அதனால்தான் இவரை எம்.ஜி.ஆர் எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று அழைத்தார்.
மயக்கும் மாலை பொழுதே நீ போ..., கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்..., புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே..., ...

காதலருடன் இணைந்து தொடர் தயாரிக்கும் சமீரா

Posted:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வரும் அன்வரும், சமீராவும் நிஜத்திலும் காதலர்கள். தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே இருவரும் காதலர்கள். இருவருமே ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். இருவரும் இணைந்து தெலுங்கில் பல குறும்படங்களிலும், சில தொடர்களிலும் நடித்துள்ளனர். பகல்நிலவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™