Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபரோவில் தீ சம்பவம்: 4பேர் காயம்

Posted: 19 Jun 2017 07:51 AM PDT

ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 7ஆவது தளத்தில் தீ பரவல் ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். சென் கிளையர்ஸ் அவனியூவிற்கு தெற்கே வாடன் அவனியூவின் ஃபெயர்வெலி கோர்ட்டில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஏழாவது தளத்திலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டது. அந்த கட்டத்தின் கிழக்காக உள்ள பக்கத்தில் தீ பரவல் ஏற்பட்டதாக ஞாயிறு இரவு 9.22மணியளவில் முறைப்பாடு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாகவே தீயணைப்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட அவர்கள் சுமார் […]

The post ஸ்காபரோவில் தீ சம்பவம்: 4பேர் காயம் appeared first on TamilStar.com.

பிரம்டனில் விபத்து : உந்துருளி ஓட்டுனர் படுகாயம்

Posted: 19 Jun 2017 07:49 AM PDT

பிரம்டன் Mavis வீதி மற்றும் Steeles Avenue West பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை 4.40 அளவில் சிற்றூர்தி ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதாகவும், சுமார் 40 வயது மதிக்கத்தக்க உந்துருளியின் சாரதியே படுகாயமடைந்தாகவும் பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த அந்த நபர் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் சணிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். விபத்தினை அடுத்து அந்த வீதிச் சந்திப்பு […]

The post பிரம்டனில் விபத்து : உந்துருளி ஓட்டுனர் படுகாயம் appeared first on TamilStar.com.

சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Posted: 19 Jun 2017 07:45 AM PDT

சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரியவருவதாவது, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வது நினைவு தினத்தில், அவரின் மனப்பதிவுகளை சொல்ல எண்ணுகின்றேன். முக்கியமாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழ் […]

The post சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி appeared first on TamilStar.com.

கூட்டமைப்பு உடையாது என்கிறார் சுமந்திரன்!

Posted: 19 Jun 2017 07:42 AM PDT

எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றி பெறாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, "தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் […]

The post கூட்டமைப்பு உடையாது என்கிறார் சுமந்திரன்! appeared first on TamilStar.com.

ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா

Posted: 19 Jun 2017 07:39 AM PDT

நுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தினாலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா appeared first on TamilStar.com.

நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுமாறு பரிந்துரை

Posted: 19 Jun 2017 07:36 AM PDT

வடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு சமய தலைவர்கள் நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயர் ஆகியோரே குறித்த பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனும் மற்றும் கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை […]

The post நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுமாறு பரிந்துரை appeared first on TamilStar.com.

இன்றைய நிலைமைக்கு யார் காரணம்? – ஆனந்தசங்கரி

Posted: 19 Jun 2017 07:32 AM PDT

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பயங்கரமான நிலைமைக்கு யார் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்க வேண்டியது மக்களின் கடமை என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- "2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், அன்றைய தமிழ் அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள், ஆகியோரின் ஒரே ஆசை, சகல தமிழ் […]

The post இன்றைய நிலைமைக்கு யார் காரணம்? – ஆனந்தசங்கரி appeared first on TamilStar.com.

வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! சமரசத்தில் இறங்கியுள்ள சர்வதேசம்

Posted: 19 Jun 2017 07:30 AM PDT

வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் வெளிநாட்டு தூதுவர்கள் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது வரையில் சாதகமான நிலை கிடைக்காத நிலையில், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் கொழும்பிலுள்ள சில தூதரகங்கள் மற்றும் உயர் ஆணைக்குழுக்கள் இந்த […]

The post வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! சமரசத்தில் இறங்கியுள்ள சர்வதேசம் appeared first on TamilStar.com.

வடக்கு நெருக்கடி குறித்து அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்று பேச்சு!

Posted: 19 Jun 2017 07:26 AM PDT

வட மாகாணசபையில் நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய இன்று அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், வட மாகாண சபையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்னவென கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

The post வடக்கு நெருக்கடி குறித்து அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்று பேச்சு! appeared first on TamilStar.com.

சூடு பிடிக்கும் வடக்கு முதல்வர் விவகாரம்! காப்பகத்திலிருந்து ஆவணங்கள் திருட்டு

Posted: 19 Jun 2017 07:24 AM PDT

அலுவலகத்தின் காப்பகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்றைய தினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 14ஆம் திகதி ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்கள் குறித்த விசாரணை அறிக்கையின் மீதான தீர்மானத்தை அறிவித்தேன். எனினும், அன்றைய தினம் இரவு அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், காப்பகத்திலிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். மேலும், விசாரணைகள் […]

The post சூடு பிடிக்கும் வடக்கு முதல்வர் விவகாரம்! காப்பகத்திலிருந்து ஆவணங்கள் திருட்டு appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™