Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ரொரன்ரோ டவுன்ரவுன் தீ சம்பவம் : உணவகம் தீக்கிரை

Posted: 10 Jun 2017 11:50 AM PDT

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் உணவகம் ஒன்று தீக்கிரையானதுடன், அருகில் இருந்த வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளன. மேற்கு டண்டஸ் வீதி மற்றும் யூனிவேசிற்றி அவனியூப் பகுதியில் அமைந்துள்ள "Ryus Noodle Bar" எனப்படும் உணவத்தில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது. பிற்பகல் 1.30 அளவில் உணவகத்தில் ஏற்பட்ட அந்த தீப்பரவல் பின்னர் அருகில் இருந்த வீடுகள் சிலவற்றுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தில் பரவ ஆரம்பித்த தீ, விரைவிலேயே அப்பகுதி முழுவதுக்கும […]

The post ரொரன்ரோ டவுன்ரவுன் தீ சம்பவம் : உணவகம் தீக்கிரை appeared first on TamilStar.com.

வேலைவாய்ப்பில் ஆச்சரியமான அதிகரிப்பு

Posted: 10 Jun 2017 11:47 AM PDT

கனடாவில் கடந்த மாதத்தில் புதிதாக முழுநேர வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஆச்சரியகரமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் காட்டுகின்றன. கடந்த மாத புள்ளிவிபரங்களின் படி சுமார் 77,000 பேருக்கு முழுநேர வேலைவாயப்பு கிடைத்துள்ளதுடன், பெருமளவானோருக்கு பகுதி நேர வேலைகளும், வெவ்வேறு வகையிலான வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அளவில் ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கியூபெக் ஆகிய மாகாணங்களிலேயே அதிகளவானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதனை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அதிகளவானோருக்கு […]

The post வேலைவாய்ப்பில் ஆச்சரியமான அதிகரிப்பு appeared first on TamilStar.com.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொலைந்த விமானம் – தேடுதல் தீவிரம்

Posted: 10 Jun 2017 11:43 AM PDT

பிரிட்டிஷ் கொலம்பியாவில் விமானம் ஒன்று காணாமல் போயுள்ள நிலையில், அதனை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் பகுதிக்கு சென்று சேரவேண்டிய அந்த சிறியரக விமானம், உரிய நேரத்தில் அங்கு சென்றுசேரத் தவறியதை அடுத்து, அது காணாமல் போன விடயம் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து தேடுதல் மீட்பு சிறப்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வழிகளிலும் தேடுதல் நடவடி்ககைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிரேன்புரூக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய அந்த விமானம், […]

The post பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொலைந்த விமானம் – தேடுதல் தீவிரம் appeared first on TamilStar.com.

வளைகுடாவில் பாரிய நெருக்கடி! மஹிந்தவின் கோட்டையில் ஏற்படும் திடீர் மாற்றம்

Posted: 10 Jun 2017 11:35 AM PDT

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கைக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள ஐந்து நாடுகள் கட்டாருடான ராஜதந்திர உறவுகளை நிறுத்தியுள்ளன. இதன்காரணமாக கட்டார் அரசாங்கம் பல்வேறு நெருக்கடி முகங்கொடுத்துள்ளது. இதில் பிரதானமாக கட்டார் நாட்டுக்கு சொந்தமான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டார் எயார்வேஸ் உட்பட பல விமான சேவை நிறுவனங்கள், விமான பயணங்களை இரத்து செய்துள்ளமையினால் பல விமானங்கள் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை இலங்கை […]

The post வளைகுடாவில் பாரிய நெருக்கடி! மஹிந்தவின் கோட்டையில் ஏற்படும் திடீர் மாற்றம் appeared first on TamilStar.com.

இந்திய பிரதமர் மோடியை ஏமாற்றிய இலங்கையர்கள்!!

Posted: 10 Jun 2017 11:31 AM PDT

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் டிக்கோயா வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 12ம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டிக்கோயா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். எனினும் இந்த வைத்தியசாலை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வைத்தியசாலையை திறக்கும் போது அதற்கு தேவையான எந்தவிதமான பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அந்த சந்தர்ப்பத்தில் வேறு வைத்தியசாலைகளில் இருந்த […]

The post இந்திய பிரதமர் மோடியை ஏமாற்றிய இலங்கையர்கள்!! appeared first on TamilStar.com.

நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது: சீ.வி.விக்னேஸ்வரன்

Posted: 10 Jun 2017 11:23 AM PDT

மனதிற்கு இதமளிக்கக்கூடிய விடயமும், நீண்டகால எதிர்ப்பார்ப்பும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வட பகுதியில் கணிதம், விஞ்ஞானம், தொழில் நுட்பத்தில் புகழ்பூத்த […]

The post நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது: சீ.வி.விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இரும்புகளை திருடிய வழக்கு! – கோத்தா விசாரணைக்கு அழைப்பு

Posted: 10 Jun 2017 11:21 AM PDT

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் பழைய இரும்புக்காக திருடப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ எதிர்வரும் 15 ஆம் திகதி பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கோத்தபாய ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், குறித்த சீமெந்து தொழிற்சாலை பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த பழைய இரும்புகளை ராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்த தாமே உத்தரவிட்டதாக குறிப்பிட்டார். எனவே அந்தவிடயம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தாம் […]

The post காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இரும்புகளை திருடிய வழக்கு! – கோத்தா விசாரணைக்கு அழைப்பு appeared first on TamilStar.com.

ஜப்பானில் மகிந்தவை சந்தித்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதியமைச்சர்

Posted: 10 Jun 2017 11:18 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இந்த சந்திப்பு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார். ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தகரான சமன் பிரியங்கரவுடன் அருந்திக பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அதேவேளை ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்கவும் ஜப்பான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

The post ஜப்பானில் மகிந்தவை சந்தித்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதியமைச்சர் appeared first on TamilStar.com.

அதிகாரங்களை மத்தியில் வைத்துக்கொண்டு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது! – சம்பந்தன்

Posted: 10 Jun 2017 11:14 AM PDT

மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போதான துரித செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தற்போது பின்பற்றப்படும் அரசாங்க முறைமையானது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் இம்முறையை மாற்றுவதற்கான காலம் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய […]

The post அதிகாரங்களை மத்தியில் வைத்துக்கொண்டு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது! – சம்பந்தன் appeared first on TamilStar.com.

தாயகத்தின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

Posted: 10 Jun 2017 11:07 AM PDT

தமிழீழத் தாயகத்தில் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள தமது நிலங்களை மீளத்தருமாறும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைநிலையினை அறிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாக நாடு புலம்பெயர் தேசங்களில் நாடு கடந்து தமிழீழ அரசாங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ […]

The post தாயகத்தின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™