Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


150ஆவது பிறந்தநாள் – ஒட்டாவாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 05 Jun 2017 08:43 AM PDT

கனடா அதன் 150ஆவது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடுகின்றது. இதற்காக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், முதன்மை நிகழ்வுகளை தலைநகர் ஒட்டாவாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஒட்டாவா நகரபிதா, கனடாவின் 150ஆவது பிறந்தநாளின் முதன்மை நிகழ்வுகளை ஏற்று நடாத்தும் நகரம் என்ற வகையில்,அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சாத்தியமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள […]

The post 150ஆவது பிறந்தநாள் – ஒட்டாவாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on TamilStar.com.

ஒன்ராறியோ ஏரியில் சடலம் மீட்பு

Posted: 05 Jun 2017 08:40 AM PDT

ஒன்ராறியோ ஏரியில் சனிக்கிழமை மாலையிலிருந்து காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த படகோட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லோயலிஸ்ட் பிராந்தியப் பகுதியில், ஒன்ராறியோ ஏரியின் ஆம்ஹேர்ஸ்ட் ஐலன்ட் இற்கும் கிரேப் ஐலன்ட் இற்கும் இடைப்பட்ட பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்துபோனதாக சனிக்கிழமை மாலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து ஒன்ராறியோ மாநில காவல்த்துறையினரும் உள்ளூர் அவசர மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர். ஏரியினுள் கவிழ்ந்த அந்த படகில் இரண்டு பேர் இருந்த நிலையில், ஒருவர் மட்டும் ஒருவாறு கரை சேர்ந்ததாக […]

The post ஒன்ராறியோ ஏரியில் சடலம் மீட்பு appeared first on TamilStar.com.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க அதிகார வரம்பை மீறுவதில் குற்றமில்லை! – ஐங்கரநேசன்

Posted: 05 Jun 2017 08:36 AM PDT

மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்படவில்லை. அந்தவகையில்,மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது என்று சொல்லப்படுகிறது. எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்கமுடியாது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தின நிகழ்ச்சி இன்று பூநகரி […]

The post இயற்கை வளங்களைப் பாதுகாக்க அதிகார வரம்பை மீறுவதில் குற்றமில்லை! – ஐங்கரநேசன் appeared first on TamilStar.com.

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

Posted: 05 Jun 2017 08:19 AM PDT

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட் டுக்­களை விசா­ரிப்­ப­தற்­காக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னால் நிய­மிக்­கப்பட்ட விசா­ர­ணைக் குழு தனது அறிக்­கை­யில், கல்வி, பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­யாட்டு மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் தம்­பி­ராசா குரு­கு­ல­ராசா மற்­றும் விவ­சா­ய­மும் கம­நல சேவை­க­ளும், கால்­நடை அபி­வி­ருத்தி, நீர்ப்­பா­சன, கூட்டுறவுத்துறைமற்­றும் சுற்­றா­டல் அமைச்­சர் பொன்­னுத்­துரை ஐங்­க­ர­நே­சன் ஆகி­யோ­ரை பதவி வில­க­வேண்­டும் பரிந்­து­ரைத்­துள்­ளது. இந்த அறிக்­கை­யின் முக்­கிய பகு­தி­கள் தற்­போது கசிந்­துள்­ளன. விசா­ர­ணைக் குழு­வுக்கு வழங்­கப்­பட்ட ஆணை, விதி­முறை, அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக் கள், […]

The post வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? appeared first on TamilStar.com.

ஐங்கரநேசன், குருகுலராசா உடனடியாக பதவி விலக வேண்டியதில்லை! – என்கிறார் சிறீதரன்

Posted: 05 Jun 2017 08:14 AM PDT

விசாரணைக் குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். " வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்ற போது அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். அதற்காக குறிப்பிட்ட அமைச்சர்கள் உடனடியாகப் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய குழுவினரை வடமாகாண முதலமைச்சர் […]

The post ஐங்கரநேசன், குருகுலராசா உடனடியாக பதவி விலக வேண்டியதில்லை! – என்கிறார் சிறீதரன் appeared first on TamilStar.com.

விளையாட்டுத்துறை அமைச்சில் பதவியை ஏற்கலாம் சுசந்திகா! – அமைச்சர் கூறுகிறார்

Posted: 05 Jun 2017 08:10 AM PDT

சுதந்திகா ஜயசிங்க நாளை வேண்டுமானாலும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வந்து தனது பணிகளைச் செய்யலாம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஒலிம்பிக் பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக சுசந்திகா ஜயசிங்க விடுத்துள்ள அறிவிப்பு குறித்தே அவர் இவ்வாறு கூறினார். “விளையாட்டு நிதியத்திலிருந்து சுசந்திகா ஜயசிங்கவுக்கு 80 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிதியத்தின் பணத்திலிருந்து இப்படியான கொடுப்பனவுகளைச் செய்ய முடியாது. எனவே, முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 75 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் வாகன வசதிகளையும் […]

The post விளையாட்டுத்துறை அமைச்சில் பதவியை ஏற்கலாம் சுசந்திகா! – அமைச்சர் கூறுகிறார் appeared first on TamilStar.com.

தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 43 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted: 05 Jun 2017 07:59 AM PDT

தியாகி பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்களின் 43 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச் செயற்பாட்டில் பொன். சிவகுமாரன் ஈடுபட்டிருந்த வேளை இலங்கை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974 ஆம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழின ஒடுக்கு முறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர் பொன். சிவகுமாரன். தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி […]

The post தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 43 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் appeared first on TamilStar.com.

மஹிந்த ஆட்சிக்கால ஊழல், மோசடிகளை விசாரிக்க சிறப்பு உயர்நீதிமன்றம்!

Posted: 05 Jun 2017 07:50 AM PDT

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர்நீதிமன்றத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவோம் என்று தேர்தல் காலத்தில் அரசு வாக்குறுதி வழங்கியிருந்தது. எந்தவொரு வழக்கும் விசாரித்து முடிக்கப்படவில்லை. அதனையடுத்து, இவ்வாறான வழக்குகள் எதிர்வரும் 2 வருடங்களுக்குள் நடத்தி முடிப்பதற்கு வசதியாக இத்தகைய நீதிமன்றங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின் […]

The post மஹிந்த ஆட்சிக்கால ஊழல், மோசடிகளை விசாரிக்க சிறப்பு உயர்நீதிமன்றம்! appeared first on TamilStar.com.

பெருந்தொகை கடற்படையினரை குப்பை அள்ள வைத்த பொன்சேகா!

Posted: 05 Jun 2017 07:46 AM PDT

இலங்கை கடற்படையினரை குப்பை அள்ளும் நடவடிக்கையில், அமைச்சர் சரத் பொன்சேகா ஈடுபடுத்தியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக களனி கங்கையில் தேங்கிய கழிவுகளை துப்புரவு செய்யும் பணிகளுக்கு, 600 கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கடற்படையினர் வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. களனி கங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருந்த பகுதியை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையில் கடற்படையினரை ஈடுபடுத்த வேண்டும் […]

The post பெருந்தொகை கடற்படையினரை குப்பை அள்ள வைத்த பொன்சேகா! appeared first on TamilStar.com.

திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை விடுவிக்குமாறு தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

Posted: 05 Jun 2017 07:25 AM PDT

தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா சிங்களப் பேரினவாதப்பூதத்தின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு கண்டனமும் இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு வணக்கமும் தெரிவிப்பதற்காக மெரினா கடற்கரையில் அமைதியான முறையில் ஒன்று கூடல் நடத்தியமைக்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட […]

The post திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை விடுவிக்குமாறு தமிழீழ அரசாங்கம் கோரிக்கை appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™