Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கடைகளில் பிளாஸ்டிக் அரிசி வரத்து அதிகரித்ததால் பீதி! :ஆந்திரா, தெலுங்கானாவில் குவியும் புகார்கள்

Posted: 07 Jun 2017 09:29 AM PDT

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக, போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி, இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. மீர்பேட்டை சேர்ந்த நபர் ஒருவர், போலீசில் அளித்த புகாரை ...

அக்டோபரில் காங்., தலைவர் ஆகிறார் ராகுல்?

Posted: 07 Jun 2017 10:04 AM PDT

புதுடில்லி: காங்கிரசின் நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலை, வரும் அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள் ளது. அதன்படி, அக்டோபரில், கட்சியின் தலை வராக, துணைத் தலைவர் ராகுல் தேர்ந்தெடுக் கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரசின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற் கான உட்கட்சி தேர்தல்களை, இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்நிலையில், கட்சியின் உயர்நிலை குழு வான, செயற்குழு கூட்டம், தலைவர் சோனியா தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. துணைத் தலைவர் ராகுல், ...

ஜூலை 17! புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

Posted: 07 Jun 2017 10:12 AM PDT

புதுடில்லி: நாட்டின், 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 17ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, வேட்பாளரை அறிவிக்க, பா.ஜ.,வும், காங்கிரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

நாட்டின், 14வது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ம் தேதி யுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதி பதியை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில, டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி, நிருபர்களை நேற்று மாலை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தல் குறித்து, அவர் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தல் ...

மகளிர் காங்கிரசார் குடுமிப்பிடி சண்டை தடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் தவிப்பு

Posted: 07 Jun 2017 10:15 AM PDT

'ஒற்றுமையாக இருங்கள்' என, கட்சி நிர்வாகி களுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் அறிவுரை கூறிச் சென்ற இரண்டு நாட்களுக் குள், சென்னை, சத்தியமூர்த்தி பவனில், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அடிதடியில் இறங்கினர்.

சமீபத்தில், சென்னை வந்திருந்த ராகுலை வரவேற்க, சத்தியமூர்த்தி பவன் முன், மகளிர் காங்கிரசார் வரவேற்பு பேனர்களை வைத்திருந் தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர், கவுரி கோபால் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அகில இந்திய மகளிர் காங்., செயலர் ஹசீனா சையது படம் இல்லை. இதனால்,கவுரி மீது அதிருப்தி அடைந்த ஹசீனா, கவுரியின் ...

ஆளுங்கட்சியில் குழப்பமோ குழப்பம் சட்டசபை தொடர் சுமுகமாக நடக்குமா?

Posted: 07 Jun 2017 10:20 AM PDT

ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வில் குழப்பம் நிலவும் சூழலில், சட்டசபை கூட்டத்தொடர், சுமுகமாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு, 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரசுக்கு, எட்டு; முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர்.ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,விற்கு, சபாநாயகர் தவிர்த்து, 134 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; ஒரு இடம் காலியாக உள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தற்போது, மூன்று பிரிவாக உள்ளனர். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியில், 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தினகரன் ஆதரவாளர்களாக, ...

கருணாநிதிக்கு பாராட்டு தீர்மானம்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 07 Jun 2017 10:37 AM PDT

சென்னை: 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை வைர விழாவை ஒட்டி, அவருக்கு பாராட்டு தெரிவித்து, சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் சார்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு, இந்த ஆண்டு, 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதை வைர விழாவாக, தி.மு.க.,வினர் கொண்டாடினர். அதையொட்டி, அவருக்கு பாராட்டு தெரிவித்து, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பில், தனித்தனியே சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதை ...

சசி சொந்தங்கள் மீதான வழக்குகள் அடுத்தடுத்த உத்தரவால் பரபரப்பு

Posted: 07 Jun 2017 10:42 AM PDT

அன்னிய செலாவணி மோசடி வழக்கு மற்றும் சொகுசு கார் இறக்குமதி வழக்கில், சசிகலா, அவரது கணவர் மற்றும் அக்கா மகன்கள் மீது, சென்னை, எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன், சுதாகரன், பாஸ்கரன், கணவர் நடராஜன் மீது, எழும்பூர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தொடர்ந்த, அன்னிய செலாவணி மோசடி மற்றும் சொகுசு கார் இறக்கு மதியில் வரி ஏய்ப்பு என, ஒன்பது வழக்குகள் நடந்து வருகின்றன.சசிகலாவின் கணவர் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர், லண்டனில் இருந்து, 'லெக்சஸ்' என்ற ...

ஜனாதிபதி தேர்தல் எப்படி?

Posted: 07 Jun 2017 10:51 AM PDT

இந்தியாவின் 15வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17ல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ல் நடைபெறும். ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள். முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே. ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் குறித்த ஒரு பார்வை.

இந்திய அரசியலமைப்பு விதி 54, ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடுகிறது. இது, மறைமுக தேர்தலாக அமைந்துள்ளது. மக்கள் நேரடியாக வாக்களிக்காமல் அவர்களது பிரதிநிதிகளான எம்.பி., , எம்.எல்.ஏ,.க்களால் தேர்ந்தெடுக்கப்படு கிறார். இவர்களை உள்ளடக்கிய 'எலக்ட்டோரல் காலேஜ்' மூலம் ஒற்றை மாற்று ஓட்டு முறை யில் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார். ஜனாதிபதி தேர்தலையும் ...

அரசியலுக்கு நடிகர் சிரஞ்சீவி முழுக்கு?

Posted: 07 Jun 2017 11:04 AM PDT

ஐதராபாத்: அரசியலில் இருந்து விலக, முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான, சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில், 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்பட்டவர் நடிகர் சிரஞ்சீவி, 61. தெலுங்கு திரையுலகில், 30 ஆண்டுகள் கொடி கட்டி பறந்த சிரஞ்சீவி, ஆந்திர முன்னாள் முதல் வர், என்.டி.ராமராவ் பாணியில், அரசியலில் ஈடுபட்டு, முதல்வராக விரும்பினார்.கடந்த, 2008ல், 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை துவக்கினார். 2009ல் நடந்த, ஆந்திர சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பிரஜா ராஜ்யம் கட்சி போட்டியிட்டது. ஆந்திராவில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு மாற்றாக, ...

ரயில் நிலையங்களை புதுப்பிக்க மலேஷியாவுடன் ஒப்பந்தம்

Posted: 07 Jun 2017 12:35 PM PDT

புதுடில்லி: ரயில் நிலையங்களை புதுப்பித்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மலேஷியா அரசுடன், ரயில்வே துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ரயில் நிலையங்களை புதுப்பித்து, ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது. அரசு - தனியார் பங்கேற்புடன், இந்த பணிகளை மேற்கொள்ளவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை புதுப்பிப்பதுடன், அதை ஒட்டியுள்ள, ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில், ஓட்டல்கள், வணிக வளாகம், அலுவலக வளாகம், மருத்துவமனை போன்றவற்றை கட்டவும் முடிவு செய்துள்ளது.
இந்த ...

மீண்டும் கூவத்தூர் : தமிழிசை கணிப்பு

Posted: 07 Jun 2017 01:41 PM PDT

சென்னை: ''தமிழகத்தில், மீண்டும் கூவத்துார் உருவாகி விடும் நிலை உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
'துாய்மை இந்தியா' திட்டத்தில், சென்னை, விருகம்பாக்கம், பாஸ்கர் காலனி, மாநகராட்சி பூங்காவில் உள்ள குளத்தை, பா.ஜ., சார்பில் சுத்தம் செய்யும் பணி, நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற பின், தமிழிசை கூறியதாவது: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், யார் பக்கம் உள்ளனர் என தெரியவில்லை. இன்னொரு கூவத்துார் உருவாகும் நிலை உள்ளது. ஆறு மாதங்களாக, தமிழகத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது. முதல்வர் பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்களை தக்கவைத்துக் ...

தயான் சந்திற்கு பாரத ரத்னா: விஜய் கோயல் கோரிக்கை

Posted: 07 Jun 2017 03:03 PM PDT

புதுடில்லி: மறைந்த ஹாக்கி வீரர் தயான் சந்திற்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் விஜய் கோயல், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரத ரத்னா:
பாரத ரத்னா விருது 1954ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு விளையாட்டு துறையில் ஆற்றிய பணியை கவுரவிக்கும் விதமாக, சச்சினுக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது. இதன் மூலம் விளையாட்டு துறையில் முதன் முதலாக பாரத ரத்னா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™