Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

Posted: 06 Jun 2017 10:02 AM PDT

தோஹா:சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கத்தாரில் வசிக்கும், 6 லட்சம் இந்தியர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

'ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பு களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கர வாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்' என, சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு நாடுகள், நேற்று முன்தினம் ...

ஜி.எஸ்.டி., அமலால் முன்னதாகவே வந்தது... தீபாவளி! அதிரடி தள்ளுபடி

Posted: 06 Jun 2017 09:08 AM PDT

மும்பை:வழக்கமாக, தீபாவளி பண்டிகையை யொட்டி, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உப யோக பொருட்களுக்கு, மிகப் பெரிய அளவில் விலை தள்ளுபடி அறிவிக்கப்படும். ஆனால், தற்போதே நாட்டின் பல்வேறு பகுதிகளில், இப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவ னங்கள், 40 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையே.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்காக, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு,ம் சேவை வரி முறையை, வரும், ஜூலை, 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
வரி ...

புதிய வியூகத்துடன் தயாராகும் பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் தீவிரம்

Posted: 06 Jun 2017 10:07 AM PDT

எதிர்க்கட்சிகளின், 'மதசார்பின்மை' என்ற நிபந்தனையை, லாவகமாக கையாளும் வகையில், ஜனாதிபதி தேர்தலுக்கான தங்களது வேட்பாளர் பெயரை, அடுத்த வாரத்தில், பா.ஜ., அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய அரசியலின் தற்போதைய மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது ஜனாதிபதி தேர்தல்தான். புதிய ஜனாதிபதி யார் என்பதை காட்டிலும், தேர்தலில் போட்டி இருக்குமா இல்லையா என்ற கேள்விதான் முக்கியமாக உள்ளது.நரேந்திர மோடி அரசின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்த முடியாமல் திணறும் நிலையில், அடுத்த, 2019, லோக்சபா தேர்தலுக்கு முன், பலம் மிகுந்த சக்தியாக மாற வேண்டுமென ...

2019 தேர்தலை எதிர்கொள்ள தயார் கட்சி, ஆட்சியில் மாற்றம் செய்ய மோடி திட்டம்

Posted: 06 Jun 2017 10:14 AM PDT

புதுடில்லி:மத்திய அரசு மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளே உள்ளதால், அதற்கு தயாராகும் வகையில், கட்சி மற்றும் ஆட்சியில் மாற்றங்கள் செய்ய, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு சமீபத்தில் மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேயின் மறைவு, ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பரீக்கர், கோவா முதல்வராக பொறுப்பேற்றதை தொடர் ந்து, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப் படும் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.மோடி தலைமையிலான ...

அரசு அலுவலகங்களில் முதல்வர் படம்

Posted: 06 Jun 2017 10:22 AM PDT

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங் களில், முதல்வர் பழனிசாமியின் படம் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின், பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக இருந்த வரை, அவரது படம், அரசு அலுவலகங்களில் வைக்கப்படவில்லை.
உத்தரவு
அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டு, சசிகலா ஆதர வுடன் முதல்வரான பழனி சாமி, பன்னீர் செல் வம் பாணியில், அரசு அலுவலகங்களில் தன் படத்தை வைக்க வேண்டாம் என, அதிகாரி களுக்கு வாய்மொழி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலை யில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களிலும், மறைந்த ...

'பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை!': ஸ்டாலின்

Posted: 06 Jun 2017 10:24 AM PDT

சென்னை:'சட்டசபையில், பெரும்பான்மைக் கான, 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு, முதல்வர் பழனிசாமிக்கு இன்றைய தேதியில் இல்லை' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்குள் 3- வது அணி உருவாகி விட்டது. சிறையிலிருந்து வெளிவந்தவர்தலைமையில், 12க்கும் மேற் பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எதிர்ப்பு அரசியல் செய்ய துவங்கி விட்டனர்.ஏற்கனவே, 11 எம்.எல். ஏ.,க் கள், பன்னீர் செல்வத்துடன் ஐக்கியமாகி விட்டனர்.இந்த எண்ணிக்கைகளை கூட்டிப் பார்த்தால், சட்ட சபை யில், ...

கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விரைவில் உருவாகிறது தனி அமைப்பு

Posted: 06 Jun 2017 10:28 AM PDT

புதுடில்லி:நாட்டின் உயர் கல்வி நிறுவனங் களை கட்டுப்படுத்தும், யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி. டி.இ., அமைப்புகளுக்கு பதிலாக, ஒருங்கி ணைந்த ஒரே உயர் கல்வி கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

புகார்நாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கு கின்றன. பல்கலைகளுக்கு நிதி ஒதுக்குவது, அதற்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை, யு.ஜி.சி., கவனிக்கிறது.அதே போல், தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய ...

எம்.பி.பி.எஸ்., படிப்பு 600 பேருக்கு பாதிப்பு

Posted: 06 Jun 2017 10:35 AM PDT

உள்கட்டமைப்பு வசதியில்லாத, 20 தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், தமிழகத்தில், 600 மாணவ, மாணவியர், எம்.பி.பி.எஸ்., படிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும், இந்திய மருத்துவ கவுன்சில் என்ற, எம்.சி.ஐ., தனியார் மருத்துவக் கல்லுாரி களை ஆய்வு செய்தது. இதில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க, மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பரிந்து ரைத்தது.அதன்படி, நாடு முழுவதும், 20க்கும் மேற் பட்ட தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மீது, மத்திய அரசின் நடவடிக்கைபாய்ந்தது. தமிழகத்தில் மட்டும், ...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு!

Posted: 06 Jun 2017 10:43 AM PDT

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிகளில், முதல் நாளான இன்று, மாணவர் கள், புதிய வகுப்புக்கு மாற்றம் செய்யப்படுகின் றனர். பின்,அரசு மற்றும் அரசு உதவி பள்ளிக ளில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகள், இன்றே வழங்கப்படுகின்றன.
அறிவுறுத்தல்
மேலும், 8ம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை களும் வழங்கபட உள்ளன.இவற்றை எல்லாம் உடனடியாக ...

நாடு முழுவதும் இயல்பு மழை ஆய்வு மையம் கணிப்பு

Posted: 06 Jun 2017 11:32 AM PDT

புனே : 'நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில், நாடு முழுவதும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய கணிப்பு தெரிவிக்கிறது.

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலம், ஏற்கனவே, அந்தமான், கேரளாவில் துவங்கியுள்ளது. பருவ மழை காலத்தில் மழையின் அளவு எப்படி இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம், ஏப்., 18ல், முதல் அறிக்கையை வெளியிட்டது. அப்போது நீண்டகால சராசரியின் அடிப்படையில், நடப்பு பருவமழை காலத்தின் போது, 96 சதவீதம் அளவுக்கு மழை பதிவாகும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ...

விரைவில் மிகவும் பின் தங்கிய கிராமங்களிலும் அதிவேக இன்டெர்நெட்

Posted: 06 Jun 2017 12:30 PM PDT

புதுடில்லி: இந்தியாவின் செயற்கைகோள் தொழிற்நுட்பத்தால் விரைவில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் கூட அதிவேக இன்டெர்நெட் சேவை கிடைக்கும்.

இன்டெர்நெட் பயன்பாட்டை பொருத்தவரை சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.இருந்தாலும் மற்ற நாடுகளை காட்டிலும் சேவையிலும் வேகத்திலும் குறைவாக உள்ளது.
அதிக அளவிலான இணைய சேவை ஆப்டிகல் பைபர் கேபிள் வழியே பெறப்படுவதும், நேரடி செயற்கைக்கோள் சேவை குறைந்த அளவில் கிடைப்பதுமே இதற்கு காரணம். இதற்கு தீர்வு காணவே தற்போது ஜி-சாட் 19 செயற்கைக்கோள் விண்ணுக்கு ...

'நீட்' இழுபறி: இன்ஜி., கவுன்சிலிங்கில் சிக்கல்

Posted: 06 Jun 2017 01:34 PM PDT

'நீட்' தேர்வில் இழுபறி நீடிப்பதால், தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த மாதம் துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல், 'நீட்' தேர்வு நடத்தப்பட்டது.
குழப்பம் : அதேநேரம், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு, ஜனாதி பதி ஒப்புதல் இன்னும் ...

மக்களை நாங்கள் சைவமாக்க முயற்சிக்கவில்லை : வெங்கைய நாயுடு

Posted: 06 Jun 2017 02:37 PM PDT

மும்பை: மக்கள் அனைவரையும் சைவமாக மற்ற பா.ஜ., முயற்சிப்பதாக வரும் கருத்துக்கள் முட்டாள்தனமானது என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.

கால்நடைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள சட்டம் நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த சட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும், பலர் ஆதரவு தெரிவித்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். பி.டி.ஐ., நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் :‛‛ பா.ஜ., அரசு அனைவரையும் சைவமாக மாற்ற ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™