Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எங்களுக்கு அதிக அதிகாரம் தேவை; தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி வலியுறுத்தல்

Posted: 29 Jun 2017 09:15 AM PDT

புதுடில்லி: ''ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர், நசீம் ஜைதி கூறினார்.

இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர், நசீம் ஜைதி, டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தேர்தல் கமிஷன் மிக நேர்மையாகவும், நடு நிலையாகவும் செயல்படும் அமைப்பு. தேர்த லில் தோல்வி அடையும் அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷன் ஒரு தலைபட்சமாக செயல் படுவதாக குற்றம்சாட்டுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் கமிஷ னின் ...

துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் அறிவிப்பு... ஆகஸ்ட் 5!

Posted: 29 Jun 2017 09:57 AM PDT

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின், 80, பதவிக்காலம் முடிவடைவதால், 'புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆக., 5ல் நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.ஜனாதிபதி தேர்தலை போலவே, துணை ஜனாதிபதி தேர்தலிலும், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் வேட்பாளருக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

'ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் முடிவடைவதால், புதிய ஜனாதி பதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஜூலை, 17ல் நடக்கும்' என, தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணி ...

ஜி.எஸ்.டி.,யின் 17 ஆண்டு கால பயணம்

Posted: 29 Jun 2017 10:44 AM PDT

புதுடில்லி: சுதந்திர இந்தியாவின் மிக முக்கிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜி.எஸ்.டி., இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

ஜி.எஸ்.டி., தற்போது அமலுக்கு வரும் நிலையில், இதற்கான விதை, 17 ஆண்டுகளுக்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி., கடந்து வந்த பாதை:* 1986ல், காங்கிரஸ் சார்பில் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, அப்போதைய நிதியமைச்சர் வி.பி.சிங் முதன் முதலாக வரி சீர்த்திருத்தம் குறித்த முயற்சியை துவக்கினார். வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, மதிப்பு கூட்டு வரி உருவாக்கப்பட்டது. எனினும், அது ஜி.எஸ்.டி.,க்கான நிலமாக இருந்ததே தவிர, ...

பசு பாதுகாப்பு பெயரில் மனிதர்களை கொல்வதா... மோடி ஆவேசம்

Posted: 29 Jun 2017 10:48 AM PDT

ஆமதாபாத்:''பசு பாதுகாப்பு என்ற பெயரில், சட்டத்தை கையில் எடுத்து, சக மனிதர்களை கொலை செய்வதை ஏற்க முடியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை அடுத்துள்ள சபர்மதி ஆசிரமம், மஹாத்மா காந்தியால் துவக்கப்பட்ட பெருமை உடையது. ஆசிரமம் துவங்கப்பட்டதன், 100வது ஆண்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்பு தபால் தலை, நாணயம் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.
இதன்பின், அவர் பேசியதாவது: எறும்பு, நாய்கள், மீன் என, அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் பாரம்பரியம் உடையது, நம் நாடு. ...

200 ரூபாய் நோட்டு அறிமுகம்; ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு

Posted: 29 Jun 2017 10:50 AM PDT

புதுடில்லி: பணப் புழக்க தட்டுப்பாட்டை குறைக்கும் வகையிலும், சுலபமாக மாற்றும் வகையிலும், 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016, நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பற்றாக்குறை
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன், நாட்டில், 17.9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அது, இந்த ஆண்டு, ஜூன், 9, நிலவரப்படி, 14.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதாவது, ...

தினகரனை சந்திக்க மறுத்த முதல்வர் பழனிசாமி

Posted: 29 Jun 2017 10:54 AM PDT

முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டில்லி பிரதிநிதியுமான தளவாய்சுந்தரம் மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில், தினகரனை சந்திக்க விரும்பாததால், அவர் சென்ற பின், முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

தளவாய்சுந்தரத்தின் மகள் டாக்டர் பூர்ணிமா வின் திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை, வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்,நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர் பழனிசாமி, தினகரன் இடையே நடக்கும் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, இருவருக்கும் தளவாய் சுந்தரம் அழைப்புவிடுத்திருந்தார்.இந்த விழாவில், தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், ...

'குட்கா' வியாபாரிகள் லஞ்சம் கொடுத்த விவகாரம்; முதல்வர் பதிலுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Posted: 29 Jun 2017 11:06 AM PDT

சென்னை: போதை பொருள் விற்பனையாளர் கள், அமைச்சர் , அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், முதல்வர் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி, எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நேற்று சட்டசபை யில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: போதை பொருள் பிரச்னை தொடர்பாக, நேற்று முன்தினம் பேச முற்பட்ட போது, அது தங்கள் ஆய்வில் உள்ளதாக தெரிவித்தீர்கள். அந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களை, தங்களிடம் வழங்கி உள்ளோம். இது குறித்து, விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.சபாநாயகர் ...

திறந்த வெளியில் 'உச்சா' போன மத்திய அமைச்சருக்கு கண்டனம்

Posted: 29 Jun 2017 11:09 AM PDT

புதுடில்லி: மத்திய அமைச்சர், ராதா மோகன் சிங், திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் புகைப் படங்கள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.இதன்படி, 'பொதுமக்கள் அனைவரும், சிறுநீர், மலம் கழிக்க, கழிப்பறை களை மட்டுமே பயன் படுத்த வேண்டும்' என, மத்திய அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இந் நிலையில், பா.ஜ.,வை சேர்ந்தமத்திய விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங், ...

30 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ஜி.எஸ்.டி., அறிமுகம்...இன்று!

Posted: 29 Jun 2017 11:19 AM PDT

புதுடில்லி: கடந்த, 30 ஆண்டுகள் காத்திருப்புக் குப் பின், புதிய ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, இன்று நள்ளிரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இதை அறிமுகம் செய்வதற்கு, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆகியகட்சி கள், இதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
'இந்த புதிய வரியை அறிமுகப்படுத்திய காங்., கட்சியே, விழாவை புறக்கணிப்பதா...' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, அன்னிய ...

இந்திராணி தாக்கப்பட்டது உண்மை: மருத்துவ அறிக்கையில் தகவல்

Posted: 29 Jun 2017 12:19 PM PDT

மும்பை : 'மகளை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள, இந்திராணி முகர்ஜி, சிறையில், தான் தாக்கப்பட்டதாக கூறுவது உண்மைதான்; அவரது உடலில் காயங்கள் உள்ளன' என, அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வன்முறை:
பிரபல தனியார், 'டிவி' உரிமையாளர், பீட்டர் முகர்ஜியின் மனைவி, இந்திராணி முகர்ஜி, 44. தன் மகள் ஷீனா போராவை கொன்று, உடலை எரித்ததாக, இந்திராணி கைது செய்யப்பட்டு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பைகுலா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், சிறையில் பெண் கைதி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, வன்முறை ஏற்பட்டது. ...

குறைபாடுள்ள கருவைக் கலைக்கலாமா?: முடிவு செய்யும்படி கர்ப்பிணிக்கு கோர்ட் உத்தரவு

Posted: 29 Jun 2017 01:50 PM PDT

புதுடில்லி: 'பல்வேறு குறைபாடுகள் உள்ள கருவைக் கலைப்பதால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என, மருத்துவக் குழு கூறியுள்ளதால், இது குறித்து, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, கர்ப்பிணிக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன், 24 வார கருவுக்கு, பல்வேறு இதயக் கோளாறுகள் இருப்பதால், அதை கலைக்க அனுமதிக்க வேண்டுமென, அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பதற்கு அனுமதி மறுக்கும் சட்டத்தை எதிர்த்தும், அவர் வழக்கு ...

கர்நாடகாவில் நடந்த விழா: தமிழகத்திற்கு தண்ணீர் கேட்ட விஷால்

Posted: 29 Jun 2017 02:51 PM PDT

கர்நாடகாவில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற, நடிகர் விஷால், 'தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்' என, கர்நாடகாவுக்கு கோரிக்கை விடுத்தார்.

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலருமான விஷால், பெங்களூருவில் நடந்த, 'ரகுவீரா' கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய விஷால், விழாவில் தாமதமாக பங்கேற்றார்.
விஷால் பேசியதாவது: கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவானாலும், தமிழில் பேசுவதில் பெருமை அடைகிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது, தமிழர்களுடைய ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™