Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

Posted: 24 Jun 2017 06:33 AM PDT

முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரன் தரப்பினரை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக முடிவுகளை அறிவிப்பது, தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., - சசிகலா அணியில், தற்போது முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் ஆதரவு அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. 'சிறையில் இருந்து, ஜாமினில் வெளிவந்த தினகரனை, யாரும் சந்திக்க மாட்டார்கள். அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்த, எங்களுடைய நிலை பாட்டில் மாற்றமில்லை' என, அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.
நோன்பு திறப்பு
ஆனால், 34 எம்.எல்.ஏ.,க் கள், தினகரனை சந் தித்து, ஆதரவு ...

எதிர்க்கட்சியினருடன் அமைச்சர்கள் ரகசிய 'டீல்' குமுறும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 24 Jun 2017 06:37 AM PDT

சட்டசபையில், எதிர்க்கட்சியினரை சமாளிக்க, அமைச்சர்கள், அவர்களுடன் ரகசிய, 'டீல்' போட்டு, அவர்களின் கோரிக்கைகளை உடனுக் குடன் நிறைவேற்றி கொடுக்கின்றனர். அதனால், 'எங்கள் கோரிக்கைக்கு முக்கியத்து வம் அளிப்பதில்லை' என, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் குமுறி வருகின்றனர்.

ஜெ., இருந்தவரை, அ.தி.மு.க., கட்டுக்கோப்பாக இருந்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் என, அனைவரும் வாய் திறக்க பயந்தனர். ஜெ., சொல்லை மட்டும் வேத வாக் காகக் கருதி செயல்பட்டனர். அவர் மறைவுக்கு பின், அனைத்தும் தலைகீழாகி விட்டது. கட்சி யில், மூன்று அணிகள் உருவாகி உள்ளன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க் கள், ...

பயங்கரவாதத்திற்கு எதிராக உறவை பலப்படுத்த உறுதி : மோடி

Posted: 24 Jun 2017 08:32 AM PDT

லிஸ்பென்:பயங்கர வாதத்திற்கு எதிராக இருநாட்டு உறவை பலப்படுத்த தீர்மானித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறினார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து அறிவியல், விண்வெளி , வரிவிதிப்பு உள்ளிட்ட இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் மோடி பேசியதாவது:
இரு நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் இந்தி- போர்ச்சுக்கீசிய மொழிஅகராதி உருவாக்கப்படுகிறது.இந்தித் திரைப்படங்கள் போர்ச்சுக்கீசிய மொழி தலைப்புகளுடன் ...

யோகியின் நடவடிக்கையால் உ.பி.,யில் வளர்ச்சி திட்டங்கள்... வேகம்!

Posted: 24 Jun 2017 07:26 AM PDT

உ.பி.,யில், அரசு திட்டங்களின் செயல்பாடு மற்றும் அதன் நிலை குறித்து, மாநில அமைச்சர்களேநேரடியாக கண்காணித்து, அது குறித்த அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். இந்த அறிக்கையின்அடிப்படையில், பணிகளை மேலும் சீர்படுத்த, முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு உள்ளார்.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். சட்ட சபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மார்ச்சில், முதல்வர் யோகி தலைமை யிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.ஆட்சி பொறுப்பேற்றது முதலே,மாநிலத்தில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும்,முதல்வர் யோகி, ...

'ஸ்மார்ட்' நகரங்கள் திட்ட தயாரிப்பு பணிகளில் தமிழக அரசு... மெத்தனம்

Posted: 24 Jun 2017 07:59 AM PDT

தமிழகத்தைச் சேர்ந்த, 1௦ நகரங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், அவற்றுக்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி களில்,மாநிலஅரசு மெத்தனம் காட்டி வருகிறது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வேகத்திற்கு செயல்பட முடியாமல், தமிழக அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால், மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம், மேம்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, சீரான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை, நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் இணைத்து வழங்கும் வகையில், நாடு முழுவதும், 100 ...

உலகின் நல்ல சக்தி என இந்தியாவுக்கு அமெரிக்கா... பாராட்டு!

Posted: 24 Jun 2017 10:15 AM PDT

வாஷிங்டன்:''உலகின் நல்ல சக்தியாக இந்தியா உள்ளது; இந்திய உறவில், அலட்சியம் காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்லும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, வெள்ளை மாளிகையில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் விருந்தளிக்க உள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப், ஜன., 20ல் பதவியேற்றார். இதன் பின், சீனாவிடம், அமெரிக்கா அதிகம் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவு டனான உறவுக்கு, முன்பிருந்த அமெரிக்க அதிபர்கள், அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால், இப்போது, ...

ஐ.நா., விருது பெற்றார் மம்தா சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கவுரவம்

Posted: 24 Jun 2017 10:45 AM PDT

புதுடில்லி:பெண் குழந்தைகளின் முன்னேற்றத் திற்காக, 'கன்யா ஸ்ரீ' திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்திய, மேற்கு வங்க அரசின் சாதனையை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பொது சேவை விருது வழங்கப்பட்டது. இதை, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெற்றுக் கொண்டார்.

'கன்யா ஸ்ரீ' திட்டம்
பெண் குழந்தைகளின் கல்வி, அவர்களின் முன்னேற்றம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சுத்தம், சுகாதாரம், மூத்த குடி மக்களுக்கான உதவி உள்ளிட்ட சேவைகளில் சிறப்பாக செயல்படும் நாடுகளுக்கு, ஆண்டு தோறும், ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பொது சேவை விருதுகள் ...

மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு... 85 சதவீதம்

Posted: 24 Jun 2017 11:07 AM PDT

சென்னை:தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.

'நீட்' தேர்வு மதிப்பெண்படியே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும், பிளஸ் 2 மார்க் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்றும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள் ளார். இதன் அடிப்படையில், ஜூலை, 17ல் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - துரைமுருகன்: 'நீட்' தேர்வு முடிவு ...

திவாகரனிடம் தஞ்சம் புகும் பழனிசாமி படையினர்

Posted: 24 Jun 2017 11:14 AM PDT

அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் தினகரனுக்கு, 'செக்' வைக்க, எதிரிக்கு எதிரி நண்பன் பாணியில், திவாகரனை முன்னிலைப் படுத்தி வருகிறார், முதல்வர் பழனிசாமி.

முன்னாள் முதல்வர், ஜெ.,வின் உடன் பிறவா சகோதரியாக வலம் வந்த சசிகலா, ஜெ., மறைவுக்குப் பின், அளவுக்கதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை சென்றதும், அவரது உறவினர்களின் ஆட்டம், கட்சியிலும், ஆட்சியிலும் பலம் காணத் துவங்கியது.முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், பதவியி லிருந்து நீக்கப்பட்டு, பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்; பன்னீர் தனி அணி துவக்கி னார்.தமிழகம் முழுவதும் மக்கள், சசிகலா ...

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் எப்படி?

Posted: 24 Jun 2017 11:19 AM PDT

சென்னை: ''தமிழக மருத்துவ கல்லுாரிகளில், தமிழகத்திற்கான, 85 சதவீத இடங்களில், 15 சதவீதம், சி.பி.எஸ்.இ., உட்பட மத்திய பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறினர்.அவர்கள் கூறியதாவது:

*தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளுக்கு, இரண்டு வகை யான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அவை முறையே, அரசு மருத்துவ கல்லுாரிகள், அரசு பல் மருத்துவ கல்லுாரி, சுயநிதி மருத்துவ கல் ...

மீண்டும் பயமுறுத்தக் கிளம்புகிறது 'ஸிகா' வைரஸ் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

Posted: 24 Jun 2017 12:23 PM PDT

''ஏடிஸ் கொசுக்கள் மூலம், 'ஸிகா' வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறினார்.
அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகள் உட்பட, 67 நாடுகளில், ஸிகா வைரஸ் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில், இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட, மூவருக்கு, ஸிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
தீவிரம்
இதையடுத்து, நான்கு சர்வதேச விமான நிலையங்களில், பயணியர் கண்காணிக்கப்படுவதோடு, தடுப்பு நடவடிக்கைகளையும் ...

சமூக வலைதளங்களில் அ.தி.மு.க., சசிகலா அணி உற்சாகம்

Posted: 24 Jun 2017 01:32 PM PDT

அ.தி.மு.க., - சசிகலா அணியில், தகவல் தொழிற்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், வேகமாகச் செயல்படத் துவங்கி உள்ளனர். வேகமாகச் செயல்பட்ட, பன்னீர் அணி நிர்வாகிகள், அடக்கி வாசிக்கத் துவங்கி உள்ளனர்.
ஜெ., மறைவுக்கு பின், பன்னீர் அணி உருவானபோது, அ.தி.மு.க., தகவல் தொழிற்நுட்ப செயலர் ராமச்சந்திரன், முன்னாள் செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள், அங்கு சென்றனர்.
முக்கிய பங்கு
அவர்கள், சசிகலா குடும்பத்தினர் செய்த தவறுகளை, சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பினர். கூவத்துாரில் எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களின் ...

நட்புநாடு அந்தஸ்தை பாக்.,கிடம் பறிக்க அமெரிக்காவில் மசோதா தாக்கல்

Posted: 24 Jun 2017 02:31 PM PDT

வாஷிங்டன்:பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட முக்கிய நட்புநாடு நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற வலியுறுத்தி அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அல்குவைதா, தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 2004ல் நடந்த போரில், பாகிஸ்தானின் உதவியை பெறுவதற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், அந்நாட்டுக்கு முக்கிய நட்பு நாடு அந்தஸ்தை வழங்கினார். அமெரிக்காவின் நவீன ராணுவ ஆயுதங்களை வாங்கும் தகுதி இந்த அந்தஸ்தை பெற்ற நாடுகளுக்கு மட்டுமே உண்டு. தவிர, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™