Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தமிழகத்துக்கு அடித்தது ஜாக்பாட்!

Posted: 23 Jun 2017 09:25 AM PDT

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், தமிழகத்தின் திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி உட்பட, நாடு முழுவதும், மேலும், 30 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம், மேம்படுத் தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, சீரான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை, நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் இணைத்து வழங்கும் வகையில், ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
பரிசீலனை
'நாடு முழுவதும், 100 நகரங்கள், இவ்வாறு ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படும்' என, ...

ஹிந்தியிலும் பாஸ்போர்ட் தகவல்கள்; மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை

Posted: 23 Jun 2017 09:28 AM PDT

புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக் கும், 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்; பாஸ் போர்ட்டில் இடம் பெறும் தகவல்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என, இரு மொழி களிலும் இடம் பெறும்,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பாஸ்போர்ட் பெறுவதில் இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு ...

வரலாற்று பிழை செய்ய வேண்டாம்; நிதிஷ் குமாரிடம் லாலு கெஞ்சல்

Posted: 23 Jun 2017 10:04 AM PDT

பாட்னா: ''ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட் பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்தால், அது வரலாற்றுப் பிழை ஆகிவிடும். அந்த மாபெரும் தவறை, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் செய்ய கூடாது,'' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில், பீஹார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தே.ஜ.,கூட்டணியில்இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும், அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. கூட்டணியில் இடம் பெறாத, முக்கிய கட்சிகளும், ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.பீஹார் முதல்வரும், ஐக்கிய ...

'டிஜிட்டல்' மயமாகிறது வாத் நகர்; மோடி பிறந்த ஊரில் பணிகள் விறுவிறு

Posted: 23 Jun 2017 10:09 AM PDT

ஆமதாபாத்: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், வரும் தீபாவளி பண்டிகைக் குள், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலம் வாத் நகரை, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

குஜராத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநிலத்தின், மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள வாத் நகரில்பிறந்தார்.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல கிராமங்களிலும், டிஜிட்டல் சேவைகள் அறிமுகம்செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பிரதமர்மோடி பிறந்த ஊரை பெருமைப்படுத்தும் ...

'நீட்' நுழைவுத்தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் 'பாஸ்'; 81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி

Posted: 23 Jun 2017 10:17 AM PDT

நாடு முழுவதும், 778 கல்லுாரிகளில், 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. தேர்வு எழுதியதில், 56 சதவீதம் பேரான, 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். 'டாப்பர்ஸ்' பட்டியலில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள, 470 மருத்துவ கல்லுாரி களில், 65 ஆயிரத்து, 170 எம்.பி.பி.எஸ்., மற்றும், 308 பல் மருத்துவ கல்லுாரிகளில், 25 ஆயிரத்து, 730 பி.டி.எஸ்., இடங்கள் என, 778 கல்லுாரி களில், 81 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றுக் கான மாணவர்கள் சேர்க்கையை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' ...

பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மனு தாக்கல்

Posted: 23 Jun 2017 10:33 AM PDT

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையி லான தே.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பீஹார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த், நேற்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் பழனி சாமி உள்ளிட்ட, 20 மாநிலங்களின் முதல்வர் கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் முன்னிலை யில் வேட்புமனு தாக்கல் செய்யப் பட்டது. எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், வரும் 27ல், வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடைகிறது. புதிய ஜனாதி பதியை ...

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' ரத்து; உரிமை குழு பரிந்துரையை நிராகரித்தார் சபாநாயகர்

Posted: 23 Jun 2017 10:47 AM PDT

சென்னை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேரை, ஆறு மாதங்கள், 'சஸ்பெண்ட்' செய்யும், உரிமை குழு பரிந்துரையை, சபாநாயகர் ரத்து செய்தார்.

சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், துணை சபாநாயகர் ஜெயராமன், அவை உரிமை குழு அறிக்கையை அளித்தார். அந்த அறிக்கையை, உடனே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தும் தீர்மானத்தை, சபை முன்னவரான, அமைச்சர் செங்கோட்டையன் முன்மொழிந்தார். தீர்மானத்தை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்தனர்.
அதை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் பேசியதாவது:
சட்டசபையில், பிப்., 18ல், தி.மு.க., உறுப்பினர் கள் சிலர் நடந்து கொண்ட விதம், சபையில் ...

'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கு அமையும்? ஸ்டாலின் கேள்விக்கு மந்திரி மழுப்பல் பதில்

Posted: 23 Jun 2017 10:52 AM PDT

சென்னை:''தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவ மனை, எந்த மாவட்டத்தில் அமைய உள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நேரடி பதிலளிக்க மறுத்து விட்டார்.

ஒவ்வொரு மாவட்டத்தினரும், தங்கள் பகுதிக்கு, அந்த மருத்துவமனை வர வேண்டும் என விரும்புவதாக, அவர் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: 'எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் அமைய வேண்டும்' என, அப்பகுதி எம்.எல்.ஏ.,க்கள், பொது மக்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.அதேபோல், 'தஞ்சாவூரில் ...

ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா புகார் கமிஷனர், தேர்தல் கமிஷன் பதிலளிக்க உத்தரவு

Posted: 23 Jun 2017 11:01 AM PDT

சென்னை:சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு, தேர்தல் கமிஷன் மற்றும் போலீஸ் கமிஷனர் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. தேர்தல் கமிஷனின் அறிக்கை யில் குறிப்பிடப்பட்ட பெயர்கள், முதல் தகவல் அறிக்கையில் ஏன் காட்டப்படவில்லை எனவும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் வைரக் கண்ணன் தாக்கல் செய்த மனு:ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக, ஏராளமான புகார்கள் வந்தன. ...

எம்.ஜி.ஆர்., பற்றிய விமர்சனம்: அமைச்சர் விளக்கம்

Posted: 23 Jun 2017 12:23 PM PDT

சென்னை : 'நான் எம்.ஜி.ஆர்., குறித்து, தவறுதலாக எதுவும் கூறவில்லை' என, அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மதுரையில், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவிற்கு பந்தல் அமைக்கும், 'கால்கோள் விழா' நடந்தபோது, 'விழாவிற்கு யாரையெல்லாம் அழைப்பீர்கள்?' என, பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
முயற்சி:
'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்கு, அவரோடு இருந்தவர்களையும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களையும் அழைப்போம். அவரைப் பற்றி அறியாதவர்களை, அழைக்க வேண்டுமா' என, நான் கூறிய கருத்தை, ஊடகங்கள், தவறாக வெளியிட்டுள்ளன. ...

கிரிக்கெட்: ஆட்டம் ரத்து; வென்றது மழை!

Posted: 23 Jun 2017 01:07 PM PDT

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், மழை தொடர்ந்து விளையாட ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி, டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 39.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்த போது, ஆட்டம் மழையால் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், ...

தோல்வியடையவே மீராகுமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்: நிதிஷ்

Posted: 23 Jun 2017 01:27 PM PDT

பாட்னா: எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் தோல்வியடைய வே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நிதிஷ் பங்கேற்றார். ஜனாதபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்து வரும் நிலையில் நிதிஷ் ஆதரவு யாருக்கு என்பதி்ல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்நிலையில் இப்தார் விருந்துக்கு பின்னர் அவர் பேசுகையில், பா.ஜ. அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™