Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராம்நாத்துக்கு எதிராக அம்பேத்கர் பேரன்?: ஜனாதிபதி தேர்தலில் பரபரப்பு திருப்பம்

Posted: 21 Jun 2017 09:51 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து, பொது வேட்பாளரை நிறுத்த, காங்., தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

சட்டமேதை அம்பேத்கரின் பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரகாஷ் அம்பேத்கரை, 63, நிறுத்த, கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக உள்ளன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஜூலை, 17ல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், பீஹார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக நிறுத்துவ தாக, பா.ஜ., அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து ...

செலவில்லாத உடல்நல காப்பீடு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Posted: 21 Jun 2017 10:01 AM PDT

லக்னோ: ''உடல் நிலைக்கு எந்த செலவும் செய்யாமல், காப்பீடு செய்வது போன்றது யோகா,'' என, பிரதமர் மோடி கூறினார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தி லும், ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக யோகா உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர்கள், யோகாவின் வலிமையை கண்டறிந்தனர். யோகா பயிற்சியால், கடும் தவம் செய்து, இறைவனை கண்டனர். இன்று, உலகை ஒருங்கிணைக்கும் சக்தியாக, யோகா மாறியுள்ளது. உலகுக்கு, இந்தியா அளித்த கொடை, யோகா. நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், பல கல்வி ...

ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு மாநில அரசுகள் ஒப்புதல்

Posted: 21 Jun 2017 10:13 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை, ஜூலை, 1 முதல் நடைமுறைப்படுத்த, ஜம்மு - காஷ்மீரை தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஒப்புதல் அளித்துள்ளன.

ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, மாநில, ஜி.எஸ்.டி., மசோதாவை, அந்தந்த மாநிலங்கள், சட்டசபை யில் நிறைவேற்ற வேண்டும்.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களும், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளன.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம், நேற்று வெளி யிட்டுள்ள ...

செல்லாத ரூபாய் நோட்டு டிபாசிட் செய்ய வாய்ப்பு

Posted: 21 Jun 2017 10:14 AM PDT

புதுடில்லி: 'வங்கிகள், தபால் நிலையங்கள், தங்கள் வசம் உள்ள, செல்லாத பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, அடுத்த மாதம், 20க்குள் ரிசர்வ் வங்கியில் டிபாசிட் செய்யலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கறுப்பு பண பதுக்கல், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், அப்போது புழக்கத் தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த, பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், தபால் ...

சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கோலாகலம் கொண்டாட்டம்!

Posted: 21 Jun 2017 10:27 AM PDT

புதுடில்லி: மூன்றாவது சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கொட்டும் மழையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 51 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், மக்கள் உற்சாகமாக பங்கேற்று, யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

மத்திய அரசின் முயற்சியை ஏற்று, 'ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும்' என, ஐ.நா., சபை அறிவித்தது. அதன்படி, 2015 முதல், சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ...

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசு தயக்கம்; ஸ்டாலின் புகார்: அமைச்சர் பதிலடி

Posted: 21 Jun 2017 10:42 AM PDT

சென்னை:''உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், அதை சந்திக்க, தி.மு.க., தயாராக உள்ளது,'' எனக்கூறிய, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினு க்கு பதிலடியாக, ''தேர்தல் நடத்தினால், அ.தி.மு.க., 100 சதவீதம் வெற்றி பெறும்,'' என, அமைச்சர் வேலுமணி கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ராமச்சந்திரன்: அரசு செயல்படு கிறதா, இல்லையா என்பதை, உள்ளாட்சிகளின் செயல்பாடுகளை வைத்து தான் கூற முடியும். ஏனெனில், உள்ளாட்சி துறை, நம்மோடு இணைந்த துறை.ஆனால், ஒன்பது மாதங்க ளாக, உள்ளாட்சி துறையில் எந்த செயல்பாடும் இல்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது, அவர்கள் மக்கள் ...

உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்புகள் ஏராளம்!

Posted: 21 Jun 2017 10:51 AM PDT

சென்னை:சட்டசபையில், இரண்டு நாட்களாக நடந்த, உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து, நேற்று ஏராளமான அறிவிப்புகளை, அமைச்சர் வேலுமணி வெளியிட்டார். அவற்றில், 'விண்ணப்பித்த, 30 நாட்களில் வீடு கட்ட, கட்டட வரைபட அனுமதி வழங்கப்படும்; திட்ட ஒப்புதல் தருவதில், எளிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதுடன், அதற்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்; பஸ், குடிநீர் மற்றும் மின் கட்டணம் செலுத்த, புதிதாக, 'ஸ்மார்ட் கார்டு' வசதி ஏற்படுத்தப்படும்' என்ற அறிவிப்புகள், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழக சட்டசபையில், ...

கர்ணன் பதுங்க உதவியது யார்? சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்

Posted: 21 Jun 2017 10:55 AM PDT

கோவை:மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்ட, கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன், கோவையில் உள்ள தன் மகன் வீட்டில், உறவினரின் உதவியுடன் தலைமறைவாக இருந்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த கர்ணனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு மாத சிறை தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, கோல்கட்டாவில் இருந்து சென்னை திரும்பிய கர்ணன், ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில், 12ம் தேதி, கர்ணனின் பணிக் காலம் நிறைவடைந்தது. அவரை கைது செய்ய, மேற்கு வங்க ...

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Posted: 21 Jun 2017 11:22 AM PDT

சென்னை: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., அணிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டது. 'கட்சியில் தினகரனுக்கு, முக்கியத் துவம் அளிக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் ஒத்துழைக்க மாட்டோம்' என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, தினகரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவை சந்தித்து, ஜனாதிபதி தேர்தல் குறித்து ...

அமைச்சர் தலை வழுக்கை ஏன்?: சபையில் ஜாலியான விவாதம்

Posted: 21 Jun 2017 12:37 PM PDT

சென்னை: 'அமைச்சர் ஜெயகுமாரின் தலை வழுக்கையானது ஏன்?' என்பது குறித்து, சட்டசபையில், நேற்று சுவாரசியமான விவாதம் நடந்தது.
கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - முருகுமாறன்: காட்டுமன்னார்கோவில் தொகுதி, இலால்பேட்டையில் உள்ள, மீன் வளர்ப்பு பண்ணையை விரிவுபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ஜெயகுமார்: தற்போதுள்ள பண்ணையில், 8.20 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 4.50 ஏக்கர் பரப்பளவில், மீன் வளர்ப்பு குளங்கள் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு ...

மோடி உயிருக்கு ஆபத்து: கேரள முதல்வர் ஒப்புதல்

Posted: 21 Jun 2017 01:32 PM PDT

திருவனந்தபுரம்: கேரளாவில், மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க வந்த, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக, அந்த மாநில டி.ஜி.பி., சென்குமார் கூறிய கருத்துக்களை, முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக் கொண்டுஉள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். கொச்சியில், இம்மாதம், 17ல் நடந்த மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி, கேரளா வந்திருந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் ...

தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கே? அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Posted: 21 Jun 2017 02:35 PM PDT

மதுரை: தமிழகத்தில் எங்கு, 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ளது என்பது பற்றி, அறிவிப்பு வெளியிட தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய குழு ஆய்வு செய்தது. அதன்பின், மத்திய அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன; பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™