Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில்... தில்லுமுல்லு!

Posted: 02 Jun 2017 10:20 AM PDT

பள்ளி கல்வித் துறையின், ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில், வசூலுக்காக, ௧,௯௦௦ இடங்கள் மறைக்கப்பட்டு, தில்லுமுல்லு நடந்துள்ளது. இதனால், கொதித்தெழுந்த ஆசிரியர் சங்கங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளன.

பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டைய னும், செயலராக உதயசந்திரனும் பொறுப் பேற்ற பின், பொதுத் தேர்வில் ரேங்கிங் முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு உட்பட, பல மாற்றங்கள் அமலாகின. இதனால், துறையில் இனி முறைகேடுகள் நடக்காது என, ஆசிரியர்களும், பெற்றோரும் நம்பினர்.
மாற்றம்
இந்நிலையில், வழக்கமாக,ஜூலை, ...

பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் அமெரிக்கா... விலகல்!: இந்தியாவுக்கே சாதகம் டிரம்ப் புகார்

Posted: 02 Jun 2017 10:26 AM PDT

வாஷிங்டன்: ''பருவநிலை மாறுபாடு தொடர் பாக, பாரிஸ் நகரில் செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தம், இந்தியா, சீனா போன்ற நாடு களுக்கே சாதகமாக உள்ளது; அமெரிக்கர்களின் நலனுக்கு எதிரான இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறோம்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கு பல நாடுகளும், வர்த்தக நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமடைதல் எனும் சுற்றுச்சூழல் பாதிப்பு உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. இதனால் பருவநிலை மாறு பாடுகள் ஏற்படுவதை தடுக்கும் வகை யிலும், புவி ...

தேர்தல் கமிஷனின் சவால் நிகழ்ச்சி நடக்குமா? உத்தரகண்ட் ஐகோர்ட் தடையால் சிக்கல்

Posted: 02 Jun 2017 10:35 AM PDT

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங் கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகள், டில்லியில் இன்று நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. எனினும், இந்த நடவடிக் கைக்கு, உத்தரகண்ட் ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளதால்,பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு
உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இந்த மாநிலங்களில் நடந்த தேர்த லில் பயன்படுத்தப்பட்ட, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் ...

ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று கூடுகிறது: தமிழக கோரிக்கைகள் நிறைவேறுமா?

Posted: 02 Jun 2017 10:40 AM PDT

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக அதிகாரிகள், டில்லி சென்றுள்ளனர். இன்றைய கூட்டத்தில், தங்கம் உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு, வரி விகிதம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

ஜூலை 1ல் அமல்
'வாட்' உள்ளிட்ட மாநில அரசு வரிகள்; கலால், சேவை வரி உள்ளிட்ட மத்திய வரிகள் நீக்கப் பட்டு, ஒரே சீரான, ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, நாடு முழுவதும், ஜூலை, 1ல், அமலுக்கு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெற்ற, ஜி.எஸ்.டி., கவுன் சில், 1,200 பொருட்கள், 500க்கும் ...

இந்தியாவில் முதலீடு செய்ய வானமே எல்லை! உலக தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு

Posted: 02 Jun 2017 10:48 AM PDT

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ''முதலீடுகள் செய்வதற்கு, இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன; அதற்கு வானமே எல்லை,'' என, பிரதமர் மோடி, உலக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதன் இரண்டாவது பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது: இந்தியாவின் வளர்ச்சிக்காக, உள்கட்டமைப்பு, வேளாண்மை, ...

தினகரன் மீது இனி நடவடிக்கை இல்லை?

Posted: 02 Jun 2017 10:51 AM PDT

புதுடில்லி: ''சசிகலா அக்கா மகன் தினகரன் மீதான வழக்கு, பொய் வழக்கு போல தெரிகிறது,'' என, மூத்த வழக்கறிஞர் நவீன் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலா அக்கா மகன் தினகரன் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஜாமின் அளித்து, டில்லியில் உள்ள, லஞ்ச தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட் நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து, மூத்த வழக்கறிஞர் நவீன் மல்ஹோத்ரா கூறியதாவது:
தினகரன் மீது அரசியல்பழிவாங்கும் ...

காட்டு யானையின் மனித வேட்டை: சிறுமி உட்பட 4 பேர் பலி

Posted: 02 Jun 2017 11:04 AM PDT

கோவை: தமிழகத்தில், இதுவரை நடந்திராத வகையில், கோவையில் நேற்று ஒரே நாளில், காட்டு யானை தாக்கி, 12 வயது சிறுமி உட்பட, நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர்; மூன்று பேர் படுகாயமடைந்து உள்ளனர். இதனால், கோவை மக்கள் பெரும் கொதிப்புக்கும், அச்சத்துக்கும் உள்ளாகி உள்ளனர்.

கோவை நகரை ஒட்டியுள்ள, மதுக்கரை வனப்பகுதியிலிருந்து, 18 வயது ஆண் யானை, சில நாட்களாக, அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் தலை காட்டி வந்தது.இனப்பெருக்க காலம் என்றழைக்கக் கூடிய, 'மஸ்த்'தில் யானை இருந்ததாக தெரிகிறது. இணை கிடைக்காத ஆவேசத்தில் இருந்த இந்த யானை, வழியில் தெரியும் பயிர்களையும், ...

தினகரனை சந்திக்க மாட்டோம்; ஜெயகுமார் திட்டவட்டம்

Posted: 02 Jun 2017 11:11 AM PDT

சென்னை: ''நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில் வரும் கருத்து, அ.தி.மு.க.,வின் கருத்து அல்ல,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை, ராயபுரத்தில், நேற்று, 'அம்மா திட்ட முகாம்' நடந்தது. இதில் பங்கேற்ற பின், ஜெயகுமார் கூறியதாவது:பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு நடத்த, நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். 'கூடி வாழ்ந்தால், கோடி நன்மை' என்பர். அதேபோல், நாங்கள் இணைந்து செயல்பட, தயாராக இருக்கிறோம்.'விரைவில், பொதுத்தேர்தல் வரும்' என, பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இந்த ஆட்சி தொடர கூடாது என நினைக்கிறாரோ, என்னவோ தெரியவில்லை. அப்படி அவர் நினைத்தால், ஜெ., ஆன்மா, அவரை ...

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அபராதம்

Posted: 02 Jun 2017 11:13 AM PDT

புதுடில்லி:'எந்த ஒரு பரிவர்த்தனையிலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வாங்கினால், அதே அளவு தொகையை, அபராதமாக செலுத்த நேரிடும்' என, வருமான வரித் துறை எச்சரித்து உள்ளது.

ஊக்குவிப்பு
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கவும், மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்கவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், அந்த பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை அபராதமாக செலுத்தும்வகையில், நிதி ...

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாக்., மீண்டும் அத்துமீறல்

Posted: 02 Jun 2017 12:17 PM PDT

ஜம்மு: காஷ்மீர் எல்லையை ஒட்டிய பூஞ்ச் பகுதியில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில் 3வது முறையாக பாக்., அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையை ஒட்டியுள்ள பூஞ்ச் பகுதியில் பாக்., ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் பாக்., நடத்திய 3வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்., ராணுவத்தினரின் இத்தாக்குதலுக்கு, ...

500 கோடி ரூபாய் கேட்டு விப்ரோ நிறுவனத்துக்கு மிரட்டல்

Posted: 02 Jun 2017 01:00 PM PDT

பெங்களூரு: பெங்களூரில் பிரபல, ஐ.டி., நிறுவனமான விப்ரோவுக்கு, 500 கோடி ரூபாய் கேட்டு, மீண்டும் 'இ - மெயில்' மிரட்டல் வந்துள்ளது.
பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு, மே, 5ல், மர்ம நபர் ஒருவரிடமிருந்து, 'இ - மெயிலில்' மிரட்டல் வந்தது. அதில், '500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்; இல்லையெனில், பயங்கர பின்விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, பெல்லந்துார் காவல் நிலையத்தில், புகார் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. நிறுவனத்தின் சுற்றுப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், ...

தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல்: பல்கலை மானிய குழு வெளியிடுகிறது

Posted: 02 Jun 2017 02:09 PM PDT

உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

மூன்று பிரிவுகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, கல்லுாரிகளை, அவற்றின் கல்வித் தரம் அடிப்படையில், மூன்று பிரிவாக பிரிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தேசிய தர மதிப்பீட்டுக் குழுவான, 'நாக்' மூலம், 3.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, முதல், 50 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™