Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.

Posted: 02 Jun 2017 03:47 PM PDT

கலைஞரை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.   சனிக்கிழமை அவரது பிறந்த தினம். பெயரிலேயே கட்சியை வைத்திருப்பவர். அரசியலில் சாணக்கியர் ,கத்திரி போன்றவர். வந்தவர்களை வெட்டிவிடுவார் --தான் வெட்டுப்படமாட்டார். படிப்படியாக பெரிய பணக்காரராக வளர்ந்தவர். நாவன்மை மிக்கவர் அவரது நா வன்மை யையும் பொழியும். அவர் தூற்றாத மாற்று கட்சி  தலைவர்கள் இல்லை. வேண்டுமெனில் ,தூற்றியவர்களையே போற்றி புகழாரம் சூட்டினதும் உண்டு. நீண்ட நாட்கள் அவர் வாழ   (அவருக்கு பிடிக்காத) ஆண்டவன் அருள் புரிவாராக. ரமணியன்

கனடாவில் தமிழுக்கு அளித்த கௌரவம்: இனி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்படும்

Posted: 02 Jun 2017 03:24 PM PDT

கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் எதிர்வரும் யூலை 1ம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் , அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், ...

தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை

Posted: 02 Jun 2017 09:50 AM PDT

- ரஷ்யாவில் நடந்த சம்பவம்: - மாஸ்கோ : ரஷ்யாவில் தீயில் சிக்கிக் கொண்ட மனைவி மற்றும் மகளை அவரது தந்தை காப்பாற்றுவதற்காக கட்டிடத்திற்கு வெளியில் தூக்கி எறிந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர தீ விபத்து ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்றில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் 5-வது மாடியில் தங்கியிருந்த குடும்பத்தினர் கட்டிடத் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட அவர்கள் வெளியில் வரமுடியாமல் ...

அஞ்சலி...!!

Posted: 02 Jun 2017 08:35 AM PDT

கவிக்கோ. அப்துல்ரகுமான் அவர்களுக்கு அஞ்சலி. * கவிக்கோ. அப்துல்ரகுமான் மகரந்தச் சிறகு. கஜல் கவிதைகள். 1, இறந்த பிறகும் என் கண்கள் திறந்தே இருந்தன எல்லாம் பழக்கம் தான் இப்போதும் உனக்காகக் காத்திருக்கிறேன். 2. இறைவா! எங்கெங்கோ தேடிப் பார்த்து விட்டேன் நீ கிடைத்து விடுகிறாய், மனிதன் தான் கிடைப்பதில்லை. 3. சோகத்தில் ஏன் சிரிக்கிறாய் என்கிறாய்? இருள் சூழும்போது தான் விளக்ளேற்ற வேண்டும். 4. மரணத்தைப் பற்றிய உண்மையை வாழ்கிறவர்களிடம் கேள். பயணிக்கு ஒரு சத்திரத்தின் முகவரி மற்றொரு ...

ஓரெழுத்து சொல்

Posted: 02 Jun 2017 08:34 AM PDT

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் விளங்குகின்றன, அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனித்தனியாக பொருள் உண்டு. என்னே தமிழின் சிறப்பு ! இந்தத்தகவலை கூகுளில் எதோ தேடும் போது கண்ணில் பட்டது . http://geeonenews. blogspot.comதகவல் தொகுத்தவர்களுக்கு நன்றி அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா ...

மோகமுள் - தி. ஜானகிராமன்

Posted: 02 Jun 2017 04:15 AM PDT

மோகமுள் நாவல் மறைந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களால் 1956ல் எழுதப்பட்டது. முதல் பதிப்பு வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகளாகியும், காலத்தால் அழியாவண்ணம் தமிழ் புத்தகவாசிகளிடத்தில் ஒரு செவ்வியல் புதினமாகக் கொண்டாடப்படுகிறது. 1995ல் திரு. ராஜ ஞானசேகரன் அவர்கள் இந்நாவலைத் தழுவி திரைப்படமாக வெளியிட்டார், ஆனால் வணிக ரீதியாக இப்படம் வெற்றியடையவில்லை. இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் பல ஆண்டுகளாக இருந்தது, ஆனால் அதற்கான வாய்ப்பு சமீபத்தில்தான் அமைந்தது. எனது 10ம் அகவையில் தூர்தர்ஷனில் ...

இளையராசா பிறந்த நாளை கொண்டாடும் தமெரிக்கா நேயர்கள்.

Posted: 01 Jun 2017 11:46 PM PDT

இளையராசா பிறந்த நாளை கொண்டாடும் தமெரிக்கா நேயர்கள்.நன்றி-தmerica tv

தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

Posted: 01 Jun 2017 11:02 PM PDT

சென்னை: கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80. மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை பனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார். - - கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் ...

பள்ளி செல்லும் பிள்ளைகள்…...

Posted: 01 Jun 2017 11:01 PM PDT

பள்ளி செல்லும் பிள்ளைகள்…... நெடுதூரம் சென்று பள்ளியில் தங்கி விட்டு வாரம் ஒரு முறை வீட்டுக்கு வருகிறார்கள் இவர்கள். பாலத்துக்கு கீழே இலவச பள்ளி தலைநகரில்………... நன்றி-Hindustan Times

மாயனின் ஐந்திறம்

Posted: 01 Jun 2017 10:01 PM PDT

தமிழின் மிக பழமையான நூலாக கருதப்படும் இந்நூல் மாமுனி மாயன் என்பவரால் எழுதபட்டது. இது
சுமார் 10000 ஆண்டுகள் பழமையானது என்ற கூற்று உண்டு. ஈகரையில் என் முதல் மின்னூல் பதிவு எம் தமிழ் இனத்தின் மரியாதைக்காகவும் என் இன ஈகரை அன்பர் நண்பர்களுக்காகவும்...
டாக்டர் எஸ்.பி.சபாரத்தினம் அவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்களுடன்...
krishnamurti.abundanthope.org/index_htm_files/Mayans-Aintiram.pdf

இந்தியாவின் முதல் புத்தகக் கிராமம்

Posted: 01 Jun 2017 09:59 PM PDT

இந்தியாவின் முதல் புத்தகக் கிராமம் மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள பிலார் கிராமத்தை இந்தியாவின் முதல் புத்தகக் கிராமமாக உருவாக்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் வெல்ஷ் பகுதியில் உள்ள ஹே-ஆன்-வை கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தக் கிராமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிராமத்தில் 25 பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கே கலையம்சத்துடன் வடிவமைப்புகளைச் செய்து கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என்று பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களையும் வைத்திருக்கிறார்கள். மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ...

பெட்ரோலாக மாறும் பிளாஸ்டிக்!

Posted: 01 Jun 2017 09:38 PM PDT

பிளாஸ்டிக் பயன்பாடுகள் கூடிக்கொண்டே போகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளை மனிதர்களால் அழிக்க முடியாது என்று சொன்னாலும்கூட யாரும் கேட்பதாகவில்லை. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்தாலும் மக்காமல் அப்படியேதான் இருக்கும். பிளாஸ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும்கூடப் பெரிய சவாலாகவே மாறிவருகின்றன. நமக்கு வசதியாக இருக்கிறது என்று பயன்படுத்திய ஒரு பொருள் இன்று நமக்கே ஆபத்தாக வந்து நிற்கிறது. ஒரு புறம் பிளாஸ்டிக்குகளை ...

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

Posted: 01 Jun 2017 08:57 PM PDT

டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலில் 4.7ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். டெல்லி மற்றும் வடமாநில பகுதிகளில் இன்று காலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 4.7ஆக பதிவானது. - ஹரியானா மாவட்டத்தின் ரோட்டக் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் ...

நாடுகளில் இல்லாதவை

Posted: 01 Jun 2017 08:52 PM PDT


-

ஆப்கானிஸ்தானில் இரயில்கள் இல்லை

ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை

இந்தியாவில் எரிமலைகள் இல்லை

சவூதி அரேபியாவில் நதிகள் இல்லை

திபேத்தில் பத்திரிகைகள் இல்லை

—————-

உயிரினங்களிடத்து இல்லாதவை

Posted: 01 Jun 2017 08:44 PM PDT

- ஆமைக்குப் பல் இல்லை – ஈக்குப் பல் இல்லை – ஈசலுக்கு வயிறு இல்லை – தவளைக்கு கழுத்து இல்லை – நண்டுக்குத் தலை இல்லை – பறவைகளுக்குப் பல் இல்லை – பாம்புக்குச் செவி இல்லை – பென்குயின் பறவை பறப்பது இல்லை – முதலைக்கு நாக்கு இல்லை – வண்ணத்துப்பூச்சிக்கு வாய் இல்லை – ————————–

ஆரோபம்

Posted: 01 Jun 2017 08:40 PM PDT

அத்யாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம் வீடு என்று உணரும் வேதாந்தம் எல்லாம் மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத்தால் முக்தியாம் இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய் --கைவல்ய நவநீதம் -19 அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய். வேதாந்த தத்துவம் பரிபூரண ஞானத்தை இரண்டு படிவகைகளில் வைத்து விளக்கும் ...

பயம் நீக்கும் பாட்டு !!!

Posted: 01 Jun 2017 08:40 PM PDT

- தேவையற்ற பயம் நெஞ்சை ஆட்கொண்டிருக்கிறதா? இதோ! இந்தப் பாடலைப் படியுங்கள். குமரா நம என்று கூறினார் ஓர்கால் அமராவதி ஆள்வர் அன்றி -யமராஜன் கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாய் உதரப் பைபுகுதார் சேரார் பயம். – பொருள்: – "குமராயநம' என்னும் ஆறெழுத்து மந்திரத்தை, ஒருமுறை பக்தியுடன் ஓதுபவர்கள், தேவர்கள் வாழும் அமராவதி நகரத்தில் வாழும் பேறு பெறுவர். உயிர்களைப் பறிக்கும் எமனின் கையில் அகப்பட்டு அடையும் துன்பம் வராது. இவர்கள் போரூரில் அருள்செய்யும் முருகப் பெருமானின் திருவடியில் தங்கி ...

ராஜா குரலில் ஒலிக்கப் போகும் சிம்பு படப் பாடல்

Posted: 01 Jun 2017 08:16 PM PDT

– சிம்பு ரசிகர்கள் முன்னை விட உற்சாகமாக வலம் வருகிறார்கள். ஏனெனில் தொடர் தோல்விகள், சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர்களது அபிமான நாயகன் இப்போது நம்பிக்கையுடன் பல முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். போகட்டும், சிம்பு குறித்த அண்மைய தகவல் இது. மீண்டும் சிம்பு படத்தில் அவருக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளாராம் இளைய ராஜா. சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானாகான், நீது ...

விக்ரமைப் புகழும் ஸ்ரீ பிரியங்கா

Posted: 01 Jun 2017 08:13 PM PDT

தமிழ்த் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஸ்ரீபிரியங்காவும் ஒருவர். இவர் அச்சு அசல் தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரம் நடித்து வரும் 'ஸ்கெட்ச்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீபிரியங்கா. இதில் இவருக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். அது மட்டுமல்ல, அண்மைய சில தினங்களாகத் தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் விக்ரம் புராணத்தையே பாடிக்கொண்டிருக்கிறாராம். விக்ரமைப் போல் கலகலப்பான ஒரு கதாநாயகனைப் பார்க்கவே முடியாது என்பது பிரியங்கா அளிக்கும் ...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி - போபண்ணா ஜோடி முன்னேற்றம்

Posted: 01 Jun 2017 07:59 PM PDT

பாரீஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இந்தியாவின் சானியா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. ஆனால் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. - நடால்–ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 4–வது நாளான நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–1, 6–4, 6–3 என்ற நேர் செட்டில் நெதர்லாந்தின் ராபின் ஹாசை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ...

எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Posted: 01 Jun 2017 07:45 PM PDT

மே 31 - சென்னை, கடந்த வாரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்-இல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் பின் அந்த அறிவிப்புக்குக் குறித்து விரிவான விளக்கத்தையும் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ள எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. - புதிய ...

தவறுதலாக குண்டுவீச்சு: பிலிப்பைன்ஸ் வீரர்கள் 10 பேர் பலி

Posted: 01 Jun 2017 07:34 PM PDT

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017 உலகம் அ+ அ- Soldiers-Killed 2017 6 1 மணிலா : பிலிப்பைன்ஸ் விமானப்படை வீசிய குண்டு தவறுதலாக சொந்த நாட்டு படைகள் மீது விழுந்ததில் 10 வீரர்கள் பலியாகினர். சிறைபிடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மாராவி தீவு பகுதிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த நகரில் உள்ள பொதுமக்களில் பலரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒருவாரத்திற்கும் மேலாக மனித கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களை ஒடுக்குவதற்காக பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் முயற்சி ...

உணவு நல்லது வேண்டும் - டாக்டர் விகடன்

Posted: 01 Jun 2017 07:06 PM PDT

சமாதியிலே ஏன் இரண்டு க்யூ..?

Posted: 01 Jun 2017 06:57 PM PDT

ஞாயிற்றுக்கிழமையாச்சேன்னு...!

Posted: 01 Jun 2017 06:44 PM PDT

பிறக்கும்போதே பற்களுடன் பிறந்த பிரபலங்கள்

Posted: 01 Jun 2017 04:55 PM PDT

தென்னிந்திய அளவில் அடைமொழி பெற்றவை

Posted: 01 Jun 2017 04:41 PM PDT


-
தென்னிந்தியாவின் கங்கை - காவிரி
-
தென்னிந்தியாவின் காஷ்மீர் - கொடைக்கானல்
-
தென்னிந்தியாவின் சிரபுஞ்சி - அரும்பி
-
தொன்னிந்தியாவின் பனாரஸ் - காஞ்சிபுரம்
-
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயமுத்தூர்

-
------------------
படித்ததில் பிடித்தவை

தலைவருக்கு டபுள் ரோல்...!

Posted: 01 Jun 2017 04:33 PM PDT

-- தலைவர் படதிலே நடிக்கப்போறாராமே.. என்ன வேடம்? - அதுலயும் இரட்டை வேடம்தான்! - அஜித் - ----------------------------- - நம்ம படத்துல முதல் சீனே அரசியல்வாதியோட வீட்டைக் காட்டறோம் சார்...! - அப்புறம்? - ரெய்டுதான்!! - வெ.ராம்குமார் - ---------------------- - ஹீரோ கடமை தவறாத போலீஸ் அதிகாரி, ஹீரோயினோட அப்பா ஒரு நேர்மையான அரசியல்வாதி... - நிறுத்துய்யா...கொஞ்சம் நம்புற மாதிரி கதை சொல்லு...! - எஸ்.கோபாலன் - --------------------------- கல்கி

அறம் – கவிதை

Posted: 01 Jun 2017 03:58 PM PDT

நட்சத்திரப்பிடாரி – கவிதை

Posted: 01 Jun 2017 03:56 PM PDT

மீண்டும் கதாநாயகியாக களம் இறங்கும் நமீதா...

Posted: 01 Jun 2017 03:55 PM PDT

- திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவரின் உடல் எடை கூடியதால், பட வாய்ப்புகளை இழந்து மும்பையில் செட்டில் ஆனார். அதன் பின் ஒருவழியாக உடல் எடைய குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். இந்நிலையில், மியா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் 'ஸ்பீடு' என்ற படத்தின் மூலம் பிரபலமான இரட்டை இயக்குனர்கள் மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகியோர் இப்படத்தை இயக்குகின்றனர். இப்படம் ஹாரர் மூவியாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நமீதாவின் கதாபாத்திரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™