Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரித்தது ஏன்? அ.தி.மு.க., - தி.மு.க., உறுப்பினர்கள் மோதல்

Posted: 16 Jun 2017 10:07 AM PDT

சென்னை: சட்டசபையில், உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு பேசுகையில், தி.மு.க., - அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், அவ்வப்போது அமளி ஏற்பட்டது.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - வேலு: தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு, கருணாநிதி முதல்வராக இருந்த போது, ஒப்புதல் தரவில்லை; ஜெயலலிதாவும் ஒப்புதல் தரவில்லை. ஆனால், மருத்துவமனை யில், ஜெ., இருந்த போது, அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இவ்வாறு, வேலு கூறியதும், அமைச்சர் காமராஜ் பதிலளிக்க எழுந்தார். ...

கோப்புகள் தேங்கியதில்லை: 'மாஜி' முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு

Posted: 16 Jun 2017 10:11 AM PDT

சென்னை: ''நான் முதல்வராக இருந்த போது, மூன்று நாட்களுக்கு மேல், எந்த கோப்பும் என்னிடம் இருந்ததில்லை,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - வேலு: கருணாநிதி முதல்வராக இருந்த போது, சிறப்பு பொது வினியோக திட்டத்தை அமல்படுத்தினார். அந்த திட்டத்தை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நீட்டிக்க வேண்டும். கடந்த, 2016 டிச., 31ல், முடிந்த திட் டத்தை, உடனே நீட்டிக்காமல்,3 மாதங்களுக்கு பின், நீட் டிப்பு செய்தனர்.இதனால்,பருப்பு கொள்முதல் செய்ய முடிய வில்லை. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ...

வங்கிக் கணக்கு துவக்க 'ஆதார்' அடையாள அட்டை கட்டாயம்

Posted: 16 Jun 2017 10:39 AM PDT

புதுடில்லி: வங்கிக் கணக்கு துவக்க மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்வதற்கு, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளவர்களும், டிசம்பர் இறுதிக்குள் ஆதார் எண்ணைக் குறிப் பிட வேண்டும் என, மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.சமையல் காஸ் உட்பட பல்வேறு அரசு மானியங்கள், நலத் திட்டப் பணிகளுக்கு, 12 இலக்க ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அந்த வரிசையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், 'பான்' எனப்படும் வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் பெறவும், ஆதார் எண்ணைக் ...

10 இடங்களில் 'அம்மா பெட்ரோல் பங்க்'

Posted: 16 Jun 2017 10:58 AM PDT

'தமிழகத்தில், 10 இடங்களில், 'அம்மா பெட்ரோல் பங்க்' அமைக்கப்படும்' என, சட்டசபையில், அரசு அறிவித்துள்ளது.

தமிழக்தில், 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப் பேற்றதும், வருவாய் துறையில், 'அம்மா' திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக, அம்மா உணவகம், 'அம்மா' சிமென்ட், 'அம்மா' மருந்தகம், 'அம்மா' ஆரோக்கிய திட்டம், 'அம்மா' உப்பு, அம்மா குடிநீர் என, படிப்படியாக, அம்மா பெயரிலான திட்டங்கள், அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன.இந்நிலையில், 'அம்மா' பெயரில், பெட்ரோல் பங்க் அமைக்கப் படும் என, அரசு அறிவித்துள் ளது.சட்டசபை யில் நேற்று, உணவுதுறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு ...

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய தீவிரம்!

Posted: 16 Jun 2017 11:07 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக, பா.ஜ., சார்பில் அமைக்கப் பட்டுள்ள குழுவினர் நேற்று, காங்., தலைவர் சோனியாவை, நேரில் சந்தித்து ஆதரவு கேட் டனர். எனினும், வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படாததால், ஆதரவு குறித்து எந்த உறுதியை யும், காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்படவில்லை.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. இதையொட்டி, ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 17ல் நடக்கிறது. இத் தேர்தலில், காங்., தலைமையில் ஒருங் கிணைந்து, பொது வேட்பாளரை நிறுத்த, எதிர் கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசிக்க, காங்., தலைவர் சோனியா ...

'ரூ.1 லட்சத்துக்கு குறைவான மோசடியை புகார் செய்யாதீங்க!'

Posted: 16 Jun 2017 11:09 AM PDT

புதுடில்லி: 'ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான மோசடிகளை, போலீசில் புகார் செய்ய வேண்டாம்' என, வங்கிகளை, சி.வி.சி., கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிகளில் நடக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான, ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான மோசடிகள், உள்ளூர் போலீசிடம் புகார் செய்யப்பட்டு வருகின்றன. இதில், பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது என, வங்கிகள் தெரிவித்தன. இதையடுத்து, சி.வி.சி., என்கிற மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷன், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில்,சி.வி.சி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, ...

உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்

Posted: 16 Jun 2017 11:12 AM PDT

ஆந்திர மாநிலம் கர்னுாலில் அமைக்கப்பட்டு வரும், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய் யும், உலகின் மிகப் பெரிய சோலார் பூங்கா, இம் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

வரும், 2022ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்உற்பத்தி உட்பட, 175 ஜிகாவாட் திறனுள்ள மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமை யிலான தெலுங்கு தேசம் ஆட்சி அமைந்துள்ள ஆந்திராவில், 10 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தி, 8,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கர்னுாலில், ...

கறுப்பு பணம் பதுக்கியது யார்? தகவல் அளிக்க சுவிஸ் ஒப்புதல்

Posted: 16 Jun 2017 11:14 AM PDT

புதுடில்லி: கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு, சுவிட்சர்லாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், வரும், 2019 முதல், தங்கள் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த தகவல்களை, சுவிட்சர்லாந்து தானாகவே அளிக்கும்.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முழு முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கறுப்புப் பண முதலைகள், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், அதிக அளவில் பணம் பதுக்கி வருகின்றனர். முதலீடுகளுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால், சுவிட்சர்லாந்து ...

விவசாய கடன் தள்ளுபடி மேல் முறையீடு திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 16 Jun 2017 12:05 PM PDT

சென்னை: ''அனைத்து விவசாயிகளின் கடன்களையும், தள்ளுபடி செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து, அரசு செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை, திரும்பப் பெற வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - வேலு: தி.மு.க., ஆட்சியில், சிறு, குறு, பெரு விவசாயிகள் என, பாகுபாடு இன்றி, அனைத்து விவசாயிகளின் கடன்களும், தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், இந்த அரசு பாகுபாடு பார்த்து தள்ளுபடி செய்தது. இதனால், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி, ...

வீடு வாங்குவோரை ஏமாற்றினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 16 Jun 2017 12:31 PM PDT

புதுடில்லி : 'குடியிருப்பு திட்டங்களில் பணம் செலுத்தியோரிடம், ஜி.எஸ்.டி., வரியை சுட்டிக் காட்டி கூடுதலாக பணம் வசூலிக்கும் கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது கட்டுமான பொருட்களுக்கு, 12.5 சதவீதமும், சிமென்டிற்கு இதை விட கூடுதல் வரியும் உள்ளது. மேலும், கட்டுமான பொருட்களுக்கு, மாநிலங்களின், 'வாட்' உள்ளிட்ட இதர வரிகளும் உள்ளன.கட்டுமான நிறுவனங்கள், இந்த வரிகளுக்கான கழிவை, ஒருங்கிணைந்த குடியிருப்பு திட்டத்தின் கீழ் ...

காந்தியின் சபர்மதி ஆசிரம நூற்றாண்டு விழா இன்று துவக்கம்

Posted: 16 Jun 2017 01:49 PM PDT

ஆமதாபாத்: தேச தந்தை மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் துவக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொள்கிறார்.இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தீரத்துடன் கடந்த 1917-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி மகாத்மா காந்தி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்தார். இங்கு 1930-ம் ஆண்டு வரை தனது மனைவி கஸ்தூர்பா காந்தியுடன் வசித்தார்.காந்தியின் சுதந்திர போராட்ட களம் இங்கு தான் துவங்கியது. 1930-ம் ஆண்டு மார்ச் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க தண்டி யாத்திரை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™