Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விவசாயிகள் தற்கொலை பிரச்னைக்கு கடன் தள்ளுபடி தீர்வாகுமா?

Posted: 15 Jun 2017 09:51 AM PDT

விவசாயிகள் தற்கொலை, உற்பத்தி பொருட் களுக்கான விலை குறைந்தது போன்ற கார ணங்களால், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, நாடு முழுவதும் போராட்டங் கள் நடந்து வருகின்றன. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதால், விவசாயி களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது.பருவமழை பொய்த்து போனது உள்ளிட்ட காரணங்களால், விவசாயத் தொழில் லாபகரமாக இல்லாததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
போராட்டம் ஏன்?
அப்படியே ...

இறைச்சிக்காக மாடுகள் விற்க தடையா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

Posted: 15 Jun 2017 09:58 AM PDT

புதுடில்லி: இறைச்சிக்காக மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பதற்கு தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப் பட்டுள்ள வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

'மாடு உள்ளிட்ட கால்நடைகளை, சந்தைகளில் இறைச்சிக்காக விற்கக் கூடாது. விவசாயிகள் மட்டுமே விற்க, வாங்க முடியும்' என அறிவித்து, அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, மத்திய அரசு, மே, 26ல் அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, இரண்டு பேர் தனித் தனியாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த ...

இருவழி பாதை திட்டம் முழுமை பெறுவதில் தாமதம்; நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல்

Posted: 15 Jun 2017 10:20 AM PDT

விழுப்புரம் - திண்டுக்கல் இருவழிப் பாதை திட்டத்தில், திருச்சி வரை பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், விவசாய நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் நீடிப்பதால், திட்டம் முழுமை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி, செங்கல்பட்டு துவங்கி, திண்டுக்கல் வரை, இருவழி ரயில் பாதை அமைப்பதற்கு, ரயில்வே நிர்வாகம் தீர்மானித்தது. முதல் கட்டமாக, செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே புதிய பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படுகின்றன.அடுத்ததாக, விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 281 கி.மீ.,க்கு இருவழி பாதை அமைக்கும் பணியை, 1,200 கோடி ...

'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கு அமையும்? முதல்வர் விளக்கம்

Posted: 15 Jun 2017 10:27 AM PDT

சென்னை:''தமிழகத்தில், ஏதேனும் ஒரு இடத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே, அரசின் நிலைப்பாடு,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - ஜெ.அன்பழகன்: மத்திய அரசின், எய்ம்ஸ் மருத்துவமனை, எந்த மாவட்டத்தில் அமைய உள்ளது?சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்து வலியுறுத்தி னார். ஜெ., வேண்டுகோளை ஏற்று, தமிழகத் திற்கு அறிவிக்கப்பட்டது.எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ...

ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூலம் பழனிசாமி அரசுக்கு தினகரன் நெருக்கடி

Posted: 15 Jun 2017 10:31 AM PDT

அ.தி.மு.க., - சசிகலா அணியில் உள்ள எம்.எல். ஏ.,க்களில், 34 பேர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், 'அவர்களின் துணையோடு, ஆட்சியை கலைத்து விடுவேன்' என, முதல்வர் பழனிசாமிக்கு, தொந்தரவு கொடுக்கும் வேலைகளில், தினகரன் இறங்கியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் உட்பட, 20க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, 4:30 மணிக்கு, சென்னை, தலைமைசெயலகத்தில், முதல்வரை, அவரது அறையில் சந்தித்து பேசினர்.அப்போது, 'கட்சியில் தினகரனை முன்னிலைப் படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, அவர் தலைமையில் நடத்த வேண்டும். ஆட்சி, உங்கள் ...

அதிரடி...பள்ளிக்கல்வியை சீரமைக்க 37 புதிய அறிவிப்புகள்

Posted: 15 Jun 2017 10:39 AM PDT

அரசு பள்ளிகளில், உயர் தரமான கல்வியை கற்பிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களை, நவீன தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப தயார்படுத்தவும் அதிரடி நடவடிக்கையாக 37 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதற்கு, பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அவர், 'ஐந்து ஆண்டுகளில், பள்ளிகளில், கல்வி மற்றும் கல்வி சார்ந்த வசதிகள், உட் கட்டமைப்பு வசதிகள் ...

'நீட்' தேர்வில் விலக்கு பெறுவதே அரசின் இலக்கு! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

Posted: 15 Jun 2017 10:45 AM PDT

சென்னை: ''நீட் தேர்வில் இருந்து, தமிழகத் திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே, தமிழக அரசின் கொள்கை.அதற்காக, அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறோம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழகம் முழுவதும் 'நீட்' தேர்வு, அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; மாநில அரசின் உரிமை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.'நீட்' தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களால், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாது. ...

110 விதி அறிவிப்புகள் என்னாச்சு? முதல்வர் - ஸ்டாலின் காரசார விவாதம்

Posted: 15 Jun 2017 10:50 AM PDT

சென்னை: ''சட்டசபையில், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக, அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - பொன்முடி: சட்டசபையில், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், செயல்படுத்தப்படாமல் உள்ளன. 2011ல், 'செயற்கைக் கோள் மூலம், கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு தான், 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.முதல்வர் பழனிசாமி: 2011 முதல், 2016 வரை, 110 விதியின் கீழ், 879 அறிவிப்புகள் வெளியிடப் ...

வீட்டு வசதித்துறை அறிவிப்புகள் அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலை

Posted: 15 Jun 2017 10:55 AM PDT

மத்திய அரசின் மானிய உதவி திட்டங்களை, தமிழக அரசின் புதிய அறிவிப்புகளாக வெளியிட, அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான, தமிழக அரசின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், சட்டசபையில் துவங்கி உள்ளது. இதற்காக, துறைவாரியாக அறிவிக்க வேண்டிய, புதிய திட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.வீட்டு வசதி துறைக்கான புதிய அறிவிப்புகள் பட்டியலை, வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.இதில், மத்திய அரசு ...

பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்

Posted: 15 Jun 2017 11:53 AM PDT

பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டுவது குறித்து முன்கூட்டியே தகவல் அளித்தும், மாநில அரசு மெத்தனமாக இருந்துள்ளது.
பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை உட்பட, எந்த விதமான கட்டுமானங்களையும், தமிழக அரசு அனுமதியின்றி,கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் மேற்கொள்ளக்கூடாது. ஆனால், இந்த விதியை மீறி, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே, 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதனால், பாலாற்றில் மேற்பரப்பு நீரோட்டமும், நிலத்தடி நீர்வளமும் குறைந்து, வேலுார், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் ...

ஜி.எஸ்.டி., பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

Posted: 15 Jun 2017 12:43 PM PDT

புதுடில்லி : வணிக நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர், தற்போதைய, 'வாட்' வரி விதிப்பில் இருந்து, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்கான கெடு, நேற்றுடன் முடிந்த நிலையில், மீண்டும், வரும், 25ல், பதிவு நடைமுறை துவங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., வரி நடைமுறைக்கான பணிகளை, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் நவின் குமார் கூறியதாவது: நாட்டில் தற்போது, 80 லட்சம் பேர், உற்பத்தி வரி, சேவை வரி, 'வாட்' வரி செலுத்தி வருகின்றனர். இவர்களில், இதுவரை, 66 லட்சம் பேர் தான், ஜி.எஸ்.டி.,க்கு மாறி உள்ளனர். ...

நீதியின் அரசர் பகவதி காலமானார்

Posted: 15 Jun 2017 01:43 PM PDT

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி,95 உடல்நலக்குறைவால் காலமானார். மும்பையில் பிறந்து வளர்ந்த பகவதி, வழக்கறிஞராக மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றிய போது பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதாடினார். 1960-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றினார். 1973-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் 17-வது தலைமை நீதிபதியாக கடந்த 1985-86-ம் ஆண்டுகளிலும் திறம்பட பணியாற்றினார். அப்போது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார். இந்திய நீதித்துறையில் பொதுநல வழக்கு தொடரும் முறை இவரது பதவி காலத்தில் ...

அபுதாபி பள்ளிவாசலுக்கு இயேசுவின் தாய் பெயர்

Posted: 15 Jun 2017 02:20 PM PDT

அபுதாபி: அபுதாபியில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு ‛மேரி - இயேசுவின் தாய்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு மதங்களை வழிபடும் மக்களிடையே சமூக ஒற்றுமையையும், வலிமையையும் ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய அரபின் முடி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஷாயித் அல் -நாக்யனின் உத்தரவு படி அபுதாபியில் உள்ள பள்ளி வாசலின் பெயரை ‛மேரி - இயேசுவின் தாய்' என மாற்றியுள்ளனர்.
மேலும் இது குறித்து அந்நாட்டில் மக்களிடையே சகிப்புதன்மையை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட அமைச்சர் ஷிக்கா லுப்னா கூறுகையில்: ‛‛புனிதமான மனிததன்மை மக்களிடையே சகிப்புதன்மையை ...

மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை

Posted: 15 Jun 2017 02:35 PM PDT

பனாஜி: ''மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவ சின்னமாக கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும்,'' என, சாத்வி சரஸ்வதி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனாஜியில், அகில இந்திய ஹிந்து மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள சனாதன தர்ம பிரசார் சேவா சமிதியின் தலைவர், சாத்வி சரஸ்வதி பேசியதாவது: மாட்டிறைச்சி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™