Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நீதிபதி கர்ணன் ஓய்வு: கைதுக்கு போலீஸ் 'ரெடி'

Posted: 12 Jun 2017 09:30 AM PDT

சென்னை உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ள, முன்னாள் நீதிபதி கர்ணன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தருமாறு, மேற்கு வங்க மாநில, டி.ஜி.பி., - தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, தலைமை நீதிபதி உட்பட, 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தினார். அந்த பட்டியலை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்தார்.
நீதிமன்ற அவதிப்பு வழக்கு
இதனால், இந்த ஆண்டு, பிப்ரவரியில், அவர் மேற்கு ...

12 லட்சம் மாணவர்கள் எழுதிய 'நீட்' தேர்வு முடிவை வெளியிட அனுமதி!

Posted: 12 Jun 2017 09:39 AM PDT

புதுடில்லி: மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை விதித்திருந்த தடையை நீக்கியுள்ள சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே திட்டமிட்டபடி, மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என கூறியுள்ளது. இதையடுத்து, எந்த நேரத்திலும், 'ரிசல்ட்' வெளியாகலாம் என்பதால், தேர்வெழுதிய, 12 லட்சம் மாணவர்களும், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, சுப்ரீம் ...

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக அரசியல் கட்சிகள் வேகம்! அமைச்சர்கள் தலைமையில் குழுவை அமைத்தது பா.ஜ.,

Posted: 12 Jun 2017 09:42 AM PDT

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், இதற்கு தயாராக, அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

மத்தியில் ஆளும், பா.ஜ., சார்பில், மூன்று மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 25ல் முடிவடைகிறது. முதன்முறையாக, காங்., அல்லாத கட்சியின் சார்பில், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாலும், தேவையான ஓட்டுகள் உள்ளதாலும், தங்களுக்கு சாதகமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் ...

வீடுகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு : ஜூலையில் புதிய திட்டம் துவக்கம்

Posted: 12 Jun 2017 09:57 AM PDT

சென்னை: ''வீடுகளுக்கு, ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம், ஜூலையில் துவக்கப்படும்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மின் தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விபரங்களை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் திட்டத்தை, மின் துறை அமைச்சர் தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று துவக்கி வைத்தார்.
48 மணி நேரத்துக்குள் இணைப்பு
அப்போது, மின் வாரிய தலைவர் சாய்குமார் மற்றும் வாரிய இயக்குனர்கள் உடனிருந்தனர்.பின், அமைச்சர் தங்கமணி கூறியதாவது: மக்கள் நலன் கருதி, வீடு, வணிக உபயோகத்துக்கு, ஒரே நாளில் மின் ...

விவசாய கடன்கள் தள்ளுபடி இல்லை: மாநிலங்களுக்கு ஜெட்லி கைவிரிப்பு

Posted: 12 Jun 2017 10:14 AM PDT

புதுடில்லி: ''ஏற்கனவே கூறியபடி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் மாநிலங்களே, அந்த சுமையை ஏற்க வேண்டும்; மத்திய அரசிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

ரபி பயிர் காலத்தில், அதிக விளைச்சல் கிடைத்தாலும், உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தையில் போதிய விலை கிடைக்காததால், பல மாநிலங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் வறட்சி காரணமாகவும், கடன்களாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.'பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும்; உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ...

லாரிகளில் பசுக்களை ஏற்றி வந்த தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல்

Posted: 12 Jun 2017 10:20 AM PDT

ஜெய்பூர்: ராஜஸ்தானிலிருந்து பசுமாடுகளை, லாரிகளில் ஏற்றி வந்த, தமிழக அதிகாரிகளை, பசு பாதுகாப்பு அமைப்பினர் தாக்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இனப்பெருக்கத்துக்காக, ராஜஸ்தானிலிருந்து, பசு மாடுகளை வாங்கி, தமிழகத்துக்கு கொண்டு வர, கால்நடைத்துறை அதிகாரிகள் சென்றனர்.ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியிலிருந்து, 50 பசு மாடுகளை வாங்கினர். இரண்டு லாரிகளில் பசு மாடுகளை ஏற்றி, தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தனர். பார்மர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, ...

செலவை குறைக்க 'சாலெட்டை' நீக்குங்க: ஏர் இந்தியா ஊழியர் அதிரடி யோசனை

Posted: 12 Jun 2017 10:24 AM PDT

புதுடில்லி: 'ஏர் இந்தியா' நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க, பயணியருக்கு, 'சாலெட்' எனப்படும் வெட்டிய, பச்சை காய்கறி, பழங்கள் கலந்த உணவு வழங்குவதை நிறுத்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளலாம்' என, அதன் ஊழியர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான, ஏர் இந்தியா, கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதன் கடன் சுமை, 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சென்றதையடுத்து, அரசு, கடனுதவி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க, சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, ஏர் ...

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.6 கோடி: சசிகலா கொடுத்ததாக வீடியோ பரபரப்பு

Posted: 12 Jun 2017 10:43 AM PDT

கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 6 கோடி ரூபாய் தர, சசிகலா குடும்பத்தினர் முன் வந்ததாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கூறும், வீடியோ காட்சிகள், நாடு முழுவதும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் முதல்வரானார். அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு, சசிகலா முதல்வராக முடிவு செய்தார். பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார்; அவருக்கு ஆதரவு அதிகரித்தது. எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் பக்கம் செல்வதை தடுக்க, சசிகலா குடும்பத்தினர், எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க ...

இணைப்பு பேச்சு குழுவை கலைக்காதீங்க! பன்னீருக்கு ஜெயகுமார் வேண்டுகோள்

Posted: 12 Jun 2017 10:51 AM PDT

சென்னை: ''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு குறித்து பேச அமைக்கப்பட்ட குழுவை கலைக்கும் முடிவை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி:எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த இயக்கத்தை, 1.50 கோடி தொண்டர்களுடன், எக்கு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. ஜெ., ஆட்சி, தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், முதல்வர் பழனிசாமி அரசை நடத்தி வருகிறார்.
பேசி, தீர்வு காணலாம்
அ.தி.மு.க., என்ற இயக்கத்தை உடைத்துவிடக் கூடாது; இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது. ...

பயங்கரவாதம் என்ற மிருகத்தை பட்டினி போட வேண்டும்

Posted: 12 Jun 2017 01:04 PM PDT

வாஷிங்டன்: பயங்கரவாதத்திற்கு நிதி கொடுக்கும் நாடுகளை தடுத்து நிறுத்த பயங்கரவாதம் என்ற மிருகத்தினை பட்டினி போட வேண்டும் என அமெரிக்க அதிபர் கூறினார்.பயங்கரவாதத்தை ஒழிப்பது மற்றும் கத்தாரின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டி, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை நாம் வெற்றி கரமாக முறியடித்து விட்டோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரித்து ...

நாடு கடத்தப்படுவாரா மல்லையா: மான்செஸ்டர் கோர்ட் விசாரணை

Posted: 12 Jun 2017 01:30 PM PDT

லண்டன்: வங்கி மோசடியில் நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர் மல்லையா மீதான வழக்கு அந்நாட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையாவை நாடு கடத்திகொண்டு வரும் வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.ரூ. 9000 கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடினார் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. லண்டன் மெட்ரோ பொலிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஏப்ரலில் ஜாமினில் விடுதலையானார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையாவை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ...

ஜி.எஸ்.டி., சான்று பெறுவதில் சிக்கலா? கைகொடுக்கிறது மொபைல் போன்

Posted: 12 Jun 2017 03:06 PM PDT

புதுடில்லி : ஜி.எஸ்.டி., பதிவுக்காக, வலைதளத்தில் விண்ணப்பிக்கும் போது, அதற்கான சான்று கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக நிறுவனங்களும், வர்த்தகர்களும் தெரிவித்து உள்ளனர்.

இப்பிரச்னை குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் கையொப்பம் மூலம் பதிவு சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், வங்கி விபரங்களை அளித்து பெறலாம் அல்லது மொபைல் போன் மூலம் கடவுச் சொல் பெற்றும் சான்று பெறலாம். ஜி.எஸ்.டி.,க்கு விண்ணப்பிப்போர் பான் கார்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வர்த்தகம் நடைபெறும் மாநிலம் உள்ளிட்ட விபரங்களை அளிக்க ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™