Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


10 லட்சம் போலி 'பான்' கார்டுகளா? ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

Posted: 11 Jun 2017 10:33 AM PDT

புதுடில்லி:'நாடு முழுவதும், தனிநபர் பெயரில் உள்ள, 10.52 லட்சம் போலி, 'பான்' கார்டுகளை, குறைந்த எண்ணிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது; அது, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க கூடும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வாங்குவதற்கும், ஆதாரை கட்டாய மாக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும்' என, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, ...

நீதிபதி பதவிக்கு 'நீட்' பாணி தேர்வு; சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசு பரிந்துரை

Posted: 11 Jun 2017 10:36 AM PDT

புதுடில்லி: 'கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, மருத்துவக் கல்விக்கு உள்ள, 'நீட்' நுழைவுத் தேர்வு போன்ற, தேசிய அளவிலான பொதுத் தேர்வு நடத்தலாம்' என, மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள கீழ் கோர்ட்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள், 20 ஆயிரத்து, 502 ஆகும். கடந்த, 2015, டிச., 31 நிலவரப்படி, 4,452 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள பணியிடங்கள், மாநில ஐகோர்ட் மற்றும் மாநிலபணியாளர் தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வு மூலமாக ...

மொபைல் போனுடன் தேர்வு? யு.பி.எஸ்.சி., எச்சரிக்கை!

Posted: 11 Jun 2017 10:39 AM PDT

புதுடில்லி:'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர்,தேர்வு மையத்திற்குள், மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தால், அவர்கள் எதிர்காலத்திலும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுபணியாளர் தேர்வு வாரியம்எச்சரித்துள்ளது.

இது குறித்து. யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ள தாவது: சிவில்சர்வீஸ் எனப்படும் மத்திய அரசு பணிகளுக்கான முதல்கட்ட தேர்வு, ஜூன் 18ல்நடக்கிறது.இதில், லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு எழுதுபவர்கள், தேர்வு ...

மத்திய அமைச்சர்கள் செயல்பாடு சாட்டையை சுழற்றுகிறார் பிரதமர்

Posted: 11 Jun 2017 10:41 AM PDT

புதுடில்லி:மத்திய அரசு நிர்வாகத்தை வேகப் படுத்த நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பார்வை யிட்டு அனுப்பிய கோப்புகளின் விபரங்களை அனுப்பி வைக்கும்படி, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றது முதல், மத்திய அமைச்சர்களின் செயல்பாடு களை கண்காணித்து, அரசு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்களின் செயல் திறனை மதிப்பிட்டு, அமைச் சரவை பொறுப்புகளை மாற்றி வழங்கி வருகிறார். இந்நிலையில், ஜூலையில், ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன், மத்திய அமைச்சரவையை மீண்டும் ...

66 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைப்பு!

Posted: 11 Jun 2017 10:50 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், குறிப்பிட்ட, 66 பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப் பட்டுள்ளது. அதன்படி, இன்சுலின், முந்திரி, ஊறுகாய் உள்ளிட்டவற்றின் விலை குறையும்; 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுக் கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், வரும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ...

ஐ.நா., கவுன்சில் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பில்லை

Posted: 11 Jun 2017 10:55 AM PDT

சென்னை: ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனின் துணை உயர் கமிஷனர், கேட் கில்மோருக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்:

ஐ.நா., சபை மனித உரிமைகள் கவுன்சிலின், 35வது கூட்டத்தில், டி.ஆர்.பாலு, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று, இலங்கை தமிழர்களுக்கு எதிரான, மனித உரிமை மீறல்கள் குறித்து பேச ஆர்வமாக இருந்தேன். ஆனால், தமிழக சட்டசபை பணிகள் காரணமாக, கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.இலங்கை ராணுவம் நிகழ்த்திய இன படுகொலை கள், மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக் கிய, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழர்கள் ...

தினகரனுக்கு பரிதி ஆதரவு; பன்னீரிடமிருந்து ஓட்டம்

Posted: 11 Jun 2017 10:57 AM PDT

சென்னை: முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி, பன்னீர் அணியிலிருந்து விலகி, தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளார். முன் னாள் அமைச்சர் பச்சைமால், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் ஆகியோரும், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத்தலைவர்களில் ஒருவராக இருந்த, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அ.தி.மு.க.,வில் இணைந்தார். ஜெ., மறை வுக்கு பின், அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததும், பன்னீர் அணியில் பணியாற்றினார். நேற்று, பன்னீர் அணியில் இருந்து விலகி, தினகரன் அணிக்கு தாவினார். அவரை போலவே, ...

உங்கள் வீட்டுக்கே மணல் வரும்! 'அள்ளி' விடுகிறார் பழனிசாமி

Posted: 11 Jun 2017 11:00 AM PDT

ஈரோடு:''அரசே மணல் குவாரியை எடுத்து நடத்துவதால், அதில் உள்ள பிரச்னைகள் களையப்பட்டு, உங்கள் வீட்டுக்கே மணல் தேடி வரும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஈரோட்டில், ஒரு மேம்பாலம், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட துவக்க விழா நடந்தது. விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: 'மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தும் என, அறிவித்து செயல்படுத்திய பின்னும், மணல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது' என, மக்கள் கேட்கின்றனர். அரசு ஏற்று நடத்தி, குறைந்த நாட்கள் தான் ஆகிறது. ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். இப்பணியில் உள்ள பிரச்னைகளை சீர் செய்து, குறைந்த நாளில், ...

சென்னை போயஸ் கார்டன் வீடு முன் பரபரப்பு!

Posted: 11 Jun 2017 11:21 AM PDT

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்குள் நேற்று நுழைய முயன்ற அவரது அண்ணன் மகள் தீபாவை, சசிகலா ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தினர்.

அதேநேரத்தில் ''ஜெயலலிதாவை, சசிகலாவும், என் தம்பி தீபக்கும் சேர்ந்து சதி செய்து, பணத்திற்காக கொலை செய்து விட்டனர்,'' என தீபா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதும், சர்ச்சையை கிளப்பியுள்ளது.சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு, சசிகலா குடும்பத்தினர் வசம் உள்ளது. 'போயஸ் கார்டன் வீடு, எங்களுக்கே சொந்தம்' என ஜெ., அண்ணன் மகன் தீபக் அறிவித்தார். அவரின் சகோதரியான தீபாவும், ஜெ., வீட்டுக்கு சொந்தம் ...

தகுதியில்லாத 44 பல்கலை., மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு

Posted: 11 Jun 2017 01:18 PM PDT

புதுடில்லி: நிகர்நிலை பல்கலையாக செயல்பட தகுதியற்றவை என கூறப்பட்ட, 44 பல்கலைக்கழகங்களில், மீண்டும் ஆய்வு நடத்த, பல்கலை மானிய கமிஷனுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும், நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்ட, 126 பல்கலைகள், அதற்கான தகுதியுடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய, டாண்டன் கமிட்டியை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், 2009ல் அமைத்தது. இந்த கமிட்டி, 126 பல்கலைகளில் ஆய்வு செய்து, 44 பல்கலைகள், நிகர்நிலை பல்கலையாகச் செயல்பட தகுதியற்றவை என, தெரிவித்தது. மேலும், 44 பல்கலைகளில் பல குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்தது. ...

பாக்., துறைமுகத்தில் சீன போர்க் கப்பல்கள்

Posted: 11 Jun 2017 01:49 PM PDT

கராச்சி:அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில், சீனாவின் மூன்று போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.சீனா - பாகிஸ்தான் நாடுகள், சமீபகாலமாக மிகவும் நெருக்கமாக பழகி வருகின்றன. இந்த இரு நாடுகளுடனும், இந்தியாவுக்கு எல்லை பிரச்னை உள்ளது. மேலும், நம் நாட்டுக்கு எதிராக, பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளையும் துாண்டிவிட்டு வருகிறது.இந்நிலையில், சீனா - பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நடக்க உள்ளது. இதற்காக, சீனாவின் மூன்று பெரிய போர்க் கப்பல்கள், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு வந்து, அங்கு நிறுத்தி ...

ரசாயனம், அணுசக்தி தாக்குதலை எதிர்கொள்ள சிறப்பு என்.டி.ஆர்.எப்., குழு

Posted: 11 Jun 2017 03:04 PM PDT

புதுடில்லி: உயிரியல், ரசாயனம் மற்றும் அணுசக்தி தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், அதிநவீன தற்காப்பு கருவிகளுடன் கூடிய, தேசிய பேரிடர் மீட்புப் படையின், சிறப்புப் பிரிவு, டில்லியில் அமைக்கப்பட்டுள்ளது .

என்.டி.ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள், டில்லியில் நேற்று கூறியதாவது: தலைநகர் டில்லியில், எந்தவித பயங்கரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. என்.டி.ஆர்.எப்.,பில், சிறப்பு பயிற்சிகள் பெற்ற, 45 அதிரடி வீரர்கள் அடங்கிய குழுக்கள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™