Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எஸ்பிஐ., புதிய சேவை கட்டணம் : 10 அம்சங்கள்

Posted: 01 Jun 2017 02:50 AM PDT

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :

1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.
3. இதில் மெட்ரோ ...

தினகரனுக்கு டில்லி கோர்ட் ஜாமின்

Posted: 01 Jun 2017 09:57 AM PDT

புதுடில்லி: தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தினகரனுக்கு, டில்லி கோர்ட், நேற்று ஜாமின் வழங்கியது.

இடைத்தேர்தல் :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,பிளவுபட்டது. ஜெயலலிதாவின், சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் அறி விக்கப்பட்டது. அப்போது, 'கட்சியின் சின்ன மான இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பில், தேர்தல் கமிஷனில் ...

இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு... நீர்த்து போகாது!:புடின் உறுதி

Posted: 01 Jun 2017 10:18 AM PDT

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:"பாகிஸ்தானுடனான ராணுவ உறவு இருந்தாலும், இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக நிலவும்,நம்பிக்கை அடிப்படையிலான உறவு நீர்த்துப்போகாது; இந்தியா, எங்களுக்கு மிகவும் நெருங்கிய நட்பு நாடு," என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உறுதிபட கூறினார்.

நான்கு நாடுகள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, நேற்று அவர் ரஷ்யா சென்றுள்ளார். அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினுடன் சந்திப்பு உட்பட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நட்பு நாடு
பிரதமர் ...

கோர தாண்டவமாடிய தீ கட்டுக்குள் வந்தது: எலும்புக்கூடானது 7 மாடி கட்டடம்

Posted: 01 Jun 2017 10:24 AM PDT

சென்னை:சென்னை, தி.நகரில், சென்னை சில்க்ஸ் கடையின், ஏழு மாடி கட்டடம் தீ விபத்தால் வெறும் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், அடித்தளத்துடன், ஏழு மாடிகள் உடைய கட்டடத்தில், தி சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளிக் கடையும், குமரன் தங்க மாளிகை என்ற நகைக் கடையும் இயங்கி வந்தன. பட்டுப் புடவைகள், பல ரக சேலைகள், குழந்தைகள் உடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், 'எலக்ட்ரானிக்' மற்றும் அழகுசாதன பொருட்கள் ஏராளம் இருந்தன. இவற்றின் மதிப்பு, 200 கோடி ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது.இந்த கட்டடத்தின் ...

தினகரன் விடுதலை: மந்திரிகள் கவலை

Posted: 01 Jun 2017 10:27 AM PDT

இரட்டை இலை சின்னம் பெற, லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதான தினகரன், ஜாமினில் வெளி வருவதால், அ.தி.மு.க., - சசிகலா அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பன்னீர் அணி விதித்த நிபந்தனையை ஏற்ற, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், தினகரன் குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்குவதாக அறிவித்தனர். தினகரனும் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டில்லி போலீசாரால், தினகரன் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், ...

அரசு வக்கீல்களுக்கு 'கல்தா': பன்னீர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

Posted: 01 Jun 2017 10:32 AM PDT

அரசு வக்கீல் பதவிகளில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு, 'கல்தா' கொடுக்கப்பட்டு, பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அ.தி.மு.க., ஆதரவு வக்கீல்கள், அந்தந்த மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் பரிந்துரையின் படி, அரசு வக்கீல் களாக நியமனம் செய்யப்பட்டனர். கடந்த, 2016 மே மாதம் மீண்டும் முதல்வராக ஜெயலலிதாபொறுப்பேற்ற நிலையில், அரசு வக்கீல்கள் மாற்றப் படவில்லை. முதல்வர் பொறுப்பை பழனிசாமி ஏற்ற நிலையில், தற்போது, அரசு வக்கீல்கள் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் பன்னீர்செல்வம் ...

அண்ணன் தினகரன் வெளியே; தம்பி பாஸ்கரன்... 'உள்ளே?'

Posted: 01 Jun 2017 10:38 AM PDT

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி போலீ சாரால் கைது செய்யப்பட்ட, சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கு, ஜாமின் கிடைத்துள் ளதால், அவர் இன்று வெளியே வருகிறார்.

அதேநேரத்தில், அவரது சகோதரர் பாஸ்கரன், சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், அ.தி.மு.க., வில் பதவி வாங்கி தருவதாகவும் கூறி, பலரிடம் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள தால், விரைவில், 'உள்ளே' போகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை இலை
சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் ...

பாரபட்சமின்றி பத்திரிகைகளுக்கு விளம்பரம் வழிமுறை வகுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted: 01 Jun 2017 10:45 AM PDT

சென்னை:பாரபட்சமின்றி, 'சர்குலேஷன்' அடிப்படையில், பத்திரிகைகளுக்கு விளம்பரம் வழங்குவது குறித்து, வழிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், அரசுக்கு ஆதர வாக செய்திகளை வெளியிடும் பத்திரி கைகளுக்கு மட்டுமே, அரசு விளம்பரங் களை வழங்குவது வழக்க மாக உள்ளது. பல ஆண்டு களாக, 'தினமலர்' நாளிதழுக்கு, அரசு விளம் பரங்கள் வழங்கப்படுவது இல்லை.இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு:தமிழக அரசு, 'தினமலர்' நாளிதழ் ...

தேர்தல் கமிஷன் சவால் தமிழக கட்சிகள் பாராமுகம்

Posted: 01 Jun 2017 10:51 AM PDT

ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பான பிரச்னை யில், தேர்தல் கமிஷன் விடுத்த சவாலை, தமிழக அரசியல் கட்சிகள் கண்டுகொள்ள வில்லை.

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களுக்கு, சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இவற்றில், பா.ஜ., பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, ஓட்டு பதிவு இயந்திரங்களில், முறைகேடு செய்யப்பட் டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர் பாக, தேர்தல் கமிஷன் சார்பில்,அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. 'ஓட்டுபதிவு இயந்திரத்தில், எந்த மோசடியும் செய்ய முடியாது. இதை நிரூபிக்க, ஜூன், 3ல் சோதனை நடத்த தயாராக உள்ளோம். இந்த சவாலில் பங்கேற்க ...

பிலிப்பைன்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted: 01 Jun 2017 11:42 AM PDT

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள விடுதி ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கதல் நடத்தியுள்ளனர். மணிலாவில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். ...

வங்கி டூ வங்கி மாற வசதி

Posted: 01 Jun 2017 12:36 PM PDT

வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது: தற்போது, மொபைல் போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவைக்கு, வாடிக்கையாளர்கள் மாறும் வசதி உள்ளது. இதே போல, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்கி வாடிக்கையாளர்களும், அவர்களது கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு பொதுத் துறை வங்கிக்கோ அல்லது தனியார் வங்கிக்கோ மாற, வழிவகை ...

வேலியே பயிரை மேய்ந்தது : சி.பி.ஐ.,யில் கறுப்பு ஆடுகள்

Posted: 01 Jun 2017 01:29 PM PDT

புதுடில்லி: நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின் அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்த நபர்களுக்கு, அந்த அமைப்பின் ஊழியரே போலி அடையாள அட்டைகள் தயாரித்து கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், ஏப்ரல் 22ல், வங்கி மோசடி வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ.,யின் ஒரு பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, பலரை ஏமாற்றிய, அகர்வால், திவாரி என்பவர்கள்
சிக்கினர்.
திவாரியிடம் இருந்து, சி.பி.ஐ., அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவனிடம் ...

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப்

Posted: 01 Jun 2017 02:02 PM PDT

நியூயார்க்: பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பல ஆயிரம் பேர் வேலையிழக்க போவதாக பேசப்படுகிறது

கடந்த 2015ம் ஆண்டு பாரிஸில் 196 நாடுகளின் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பு நடந்தது. இந்த கூட்டத்தில் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்து கரியமில வாயு வெறியேற்றத்தை முடிந்த அளவு குறைப்பது குறித்து ஒர் ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.
அதாவது பொருளாதார முன்னேற்றத்தை காரணம்காட்டி சூழலை கெடுக்கும் வகையில் செயல்படும் தொழிற்சாலைகளை ...

வெயில் அளவு சரிய துவங்கியது: ஜூன் 4 முதல் பரவலாகும் மழை

Posted: 01 Jun 2017 02:45 PM PDT

தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் அளவும் குறைய துவங்கி உள்ளது.தென்மேற்கு பருவமழை, மே, 30ல், துவங்கியது. அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று வலுவாகி உள்ளதால், அக்கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா பகுதிகளில், மழை பெய்து வருகிறது.
வங்ககடல் பகுதியில், தென்மேற்கு பருவமழையின் நிழற் பகுதிகளான, அசாம், மேகாலயா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பரவலாக மழை பெய்கிறது.தமிழகத்தில் முதற்கட்டமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் மழை துவங்கி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™