Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்

Posted: 01 Jun 2017 03:48 PM PDT

- இத்தாலியை சேர்ந்த நிறுவனம் காபி மிஷின் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது. - இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது. இந்த உறை மற்ற ஸ்மார்ட்போன் உறைகள் போல போனை பாதுகாக்க மட்டுமல்ல; காபி மிஷினாகவும் செயல்படும். இந்த நவீன உலகத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இப்படி எந்நேரமும் பிஸியாக இருப்பவர்களுக்காக சிறப்பாக இந்த ஸ்மார்ட்போன் உறை தயாரிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி காபி குடிப்பவர்களுக்கு ...

போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்? : தமிழக அரசு ஆலோசனை

Posted: 01 Jun 2017 03:35 PM PDT

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியை கோர்ட் அபராதமாக விதித்தது. அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 128 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் 68 சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்கும்படி கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி ...

வேலியே பயிரை மேய்ந்தது : சி.பி.ஐ.,யில் கறுப்பு ஆடுகள்

Posted: 01 Jun 2017 03:30 PM PDT

புதுடில்லி: நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின் அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்த நபர்களுக்கு, அந்த அமைப்பின் ஊழியரே போலி அடையாள அட்டைகள் தயாரித்து கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், ஏப்ரல் 22ல், வங்கி மோசடி வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ.,யின் ஒரு பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, பலரை ஏமாற்றிய, அகர்வால், திவாரி என்பவர்கள் சிக்கினர். திவாரியிடம் இருந்து, ...

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்... அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Posted: 01 Jun 2017 03:20 PM PDT

- 2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து... இரவு பகலாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஒவ்வொரு நாடுகளும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்ற அளவு குறைப்பது. அதாவது வளர்ச்சியின் பெயரால், பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால், சூழலியலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை நெறிமுறைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போலத் தேசங்கள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ...

சிரிப்போம் ரசிப்போம்

Posted: 01 Jun 2017 01:57 PM PDT

சிரிப்போம் ரசிப்போம்நன்றி youtube

ரமணியன்

அறிமுகம் - ரவிக்குமார்

Posted: 01 Jun 2017 10:35 AM PDT

பெயர்:சி.ரவிக்குமார்
சொந்த ஊர்: காரைக்கால்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வாயிலாக
பொழுதுபோக்கு:புக் படிப்பது மியூசிக்
தொழில்: அக்கௌன்ட்
மேலும் என்னைப் பற்றி: நிறைய வாசிக்க விரும்புவேன்

அறிமுகம் --குமார்

Posted: 01 Jun 2017 10:33 AM PDT

பெயர்: குமார்
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வாயிலாக
பொழுதுபோக்கு: புத்தகங்கள் படிப்பது
தொழில்: ஆய்வக பயிற்று விப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: தீவிர நூல் வாசிப்பேன்

அனைவருக்கும் அறிமுகம் மற்றும் சிறந்த வாழ்த்துக்கள்

Posted: 01 Jun 2017 10:32 AM PDT

பெயர்: ராமன்
சொந்த ஊர்: காவேரிபட்டினம், வாழும் இடம்: பெங்களூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வழியாக
பொழுதுபோக்கு: புத்தக வாசிப்பு, இசை கேட்பது
தொழில்: மின்னணு உற்பத்தி பொறியியல்
மேலும் என்னைப் பற்றி:
புதிய செய்திகளை அறிந்து கொள்வதிலும் சேகரிப்திலும் ஆர்வம்.
என் பொழுதுபோக்கு தமிழ் சரித்திர நாவல்களை படிபது.

iஅறிமுகம்---மதிவாணன்

Posted: 01 Jun 2017 10:26 AM PDT

பெயர்:  மதிவாணன்
சொந்த ஊர்:சிவகங்கை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: த்ரௌக் friends


பொழுதுபோக்கு:reading
தொழில்:auditor
மேலும் என்னைப் பற்றி:வொரசியஸ் reader

விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?

Posted: 01 Jun 2017 10:25 AM PDT

விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?

வரைமுறை விதிகளை மீறலாம் --ஆண்டவனின் விதியை மீறமுடியுமா?


ரமணியன்

சாமக்கோள் ஆருடம்.pdf

Posted: 01 Jun 2017 10:24 AM PDT

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது?

Posted: 01 Jun 2017 10:20 AM PDT

உலகின் முதலாவது சமையல் குறிப்புப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது? நீங்கள் நினைப்பது போல் கிருஷ்ணா அம்மா எழுதிய சமையல் புத்தகம்? Nope. முதலாவது புத்தகம் (களி மண்ணினால் எழுதப்பட்ட) கி.மு. 1750  இல் மெசொபத்தேமியா (Mesopotamia -Old Babylonian Period, ca. 1750 BC ) அப்போதைய அரசனுக்காக தயாரிக்கப்படும் 25 வகையான உணவு வகைகளை அடக்கி உள்ளது. 21 அசைவ,4 சைவ உணவுகளாகும். உபயோகிக்கப்படும் பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அளவு/சமைக்கும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்கிறார்கள். பாபிலோனியா என்றால் அது ...

பூமியை பிளந்து கொண்டு வந்த ராட்சத தண்ணீர் (வீடியோ இணைப்பு)

Posted: 01 Jun 2017 09:12 AM PDT

பூமியை பிளந்து கொண்டு வந்த ராட்சத தண்ணீர் (வீடியோ இணைப்பு) பூமிக்கடியில் போடப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் வெடித்தால் தண்ணீர் எப்படி பொங்கி சிதறும் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ இணையத்தில் வருகிறது. தண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என்பதற்கும், அதன் வலிமைக்கும் இது உதாரணமாக உள்ளது.     கடந்த 2004-ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி உருவாகியது. கடல் பொங்கி கட்டுப்படுத்த முடியாத வீரியத்துடன் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை காவு வாங்கியது. தண்ணீரின் சக்தி மிகவும் பலமானது.   இதே ...

அன்பிலார் எல்லாந் தமக்குரியர்….

Posted: 01 Jun 2017 08:59 AM PDT

அதிபர் ட்ரம்பிற்கு வந்த அடுத்த டுவிட்டர் சோதனை.

Posted: 01 Jun 2017 07:40 AM PDT

Barron Trump-ட்ரம்பை குடும்பத்தைக் குழப்பிய காணொளி.மன்னிப்புக் கேட்ட CNN CNN இன் காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் காதி கிரிபின் (Kathy Griffin )  ட்ரம்பின் தலையை துண்டித்து கையில் பிடித்திருந்தது போன்ற காட்சியை, உண்மை என நம்பிய ட்ரம்பின் 11 வயது மகன்…………. மன்னிப்புக் கேட்டு நிகழ்ச்சியை இரத்து செய்த CNN , நிகழ்ச்சி தயாரிப்பாளரை வேலையில் இருந்து தூக்கியது.

வருகை - கவிதை

Posted: 01 Jun 2017 05:00 AM PDT


-
விகடன்

இரண்டு தம்பிகள்- சிறுவர் பாடல்

Posted: 01 Jun 2017 04:52 AM PDT

கானல் பழம் – கவிதை

Posted: 01 Jun 2017 04:51 AM PDT

பத்துக் கொலைகளுக்கு அதிகம் – கவிதை

Posted: 01 Jun 2017 04:47 AM PDT


-
விகடன்

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை

Posted: 01 Jun 2017 04:09 AM PDT

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்

Posted: 01 Jun 2017 03:13 AM PDT

உங்கள்   உதவிக்கு நன்றி . என்னுடைய செல் போனில் இப்படி வர வில்லை . கம்ப்யூட்டரில் அடிக்கும் போது தமிழில் அழகாக வருகிறது. எனக்கு ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும் 1   கள்ளிப்பூ காதல் 2   அன்புடை நெஞ்சம் 3   விழியில் விழுந்து இதயம் நுழைந்து 4   எண்ணிலுறையும் உயிர் நீ 5   என்னை மறந்ததேன் என்னுயிரே 6   நீயின்றி நான் ஏதடி 7   வீழ்கிறேன் உனது விழியில் 8   நீயா நானா 9   விழிநீர் தாங்காயோ 10 மன்னிக்க வேண்டுகிறேன்   எப்போது கிடைக்குமோ அப்போது தாருங்கள் . அவசரம் படுத்த வில்லை. உங்கள் ...

பெண்களிடம் பேசி ஜெயிப்பது எப்படி?

Posted: 01 Jun 2017 12:47 AM PDT


-

கால் நடை’க்கு லோன் தருவேன்னு சொன்னீங்களே…!!

Posted: 01 Jun 2017 12:45 AM PDT


-
திருப்பதிக்கு கால் நடையா போயிட்டு வந்தேன் சார்!

அதை ஏன் பாங்கில வந்து சொல்றீங்க?

நீங்கதானே சார்'கால் நடை'க்கு லோன் தருவேன்னு
சொன்னீங்க!

அசோக்ராஜா
-------------------------------

அறிமுகம்

Posted: 01 Jun 2017 12:39 AM PDT

பெயர்:பிரவீன் குமார்
சொந்த ஊர்:திருக்கழக்குன்றம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தோழர் ஒருவரால் அறிந்தேன்
பொழுதுபோக்கு: விவசாயம்
தொழில்: ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் - குழந்தை வளர்ச்சிதுறையில்
மேலும் என்னைப் பற்றி:

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 01 Jun 2017 12:31 AM PDT

மின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது….?

Posted: 01 Jun 2017 12:25 AM PDT

- வயல்பகுதிகளில் மின்மினிப்பூச்சிகள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். சிறுவெளிச்சம் இப்பூச்சியில் இருந்து வெளிப்படுவதால் மின்மினி என்று பெயர் பெற்றது. இதற்குள் வெளிச்சம் எவ்வாறு உருவாகிறது. பொதுவாக ஒருபொருள் ஒளிவிடும்போது அதில் இருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒருமின்விளக்கில் 90சதவீதம் வெப்பமும் 10சதவீதம் ஒளிமட்டுமே வரும். அப்படி என்றால் இந்த சிறிய பூச்சி வெந்துகருகிவிடாதா என்று தோன்றும். ஆனால் மின்மினிப்பூச்சியின் உடலில் உருவாகும் ஒளி குளிர்ஒளி, உயர்ஒளி ...

“சர்வருக்கெலாம் வைரஸ் அட்டாக்காம்!”

Posted: 01 Jun 2017 12:24 AM PDT

- "அந்த ஹோட்டல் ஏன் மூடியிருக்கு?" "சர்வருக்கெலாம் வைரஸ் அட்டாக்காம்!" – நந்து சுந்து விகடன் ——————————– உமது பாடலில் காதல் ரசம் தூக்கலா இருக்கிறதே? – ஸாரி மன்னா…இது மகாராணிக்காக எழுதப்பட பாடல்! – சிவகுமார் – ———————————— – ஏ.சி.மேலே என்ன பேப்பர் ஒட்டியிருக்கு? – என் கணவர் கரண்ட் பில்லை ஒட்டி வெச்சிருக்கார்! – அம்பை தேவா – ———————————— – நீ கொடுத்த மீன் வருவலை சாப்பிட்டதும் வயிற்றிலேயிருந்து சத்தம் கேட்குதே? – இது 'கானாங்'கெளுத்தி மீன் வறுவல் சார்! – கே.அருள்சாமி – ———————————— குமுதம் ...

குடி குடிதான் – ஒரு பக்க கதை –

Posted: 01 Jun 2017 12:24 AM PDT

சுந்தரத்திற்கு கைகள் கிடுகிடுவென ஆடின. அவன் எவ்வளவோ கட்டுப்படுத்திப் பார்த்தும் பயன் இல்லை. – ஒரு கட்டிங்காவது போட்டால்தான் அடங்கும் என நினைத்தான். – காலையிலிருருந்து அலைகிறான். ஒரு இடத்தில் கூட அவனுக்கு மது கிடைக்கவே இல்லை. – நேற்று வரை ஊற்றிக்கொடுத்த கடைகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன. முதல் நாளே வாங்கி வைத்து விற்கும் கடைகள் கூட கை விரித்து விட்டன. – இப்படி கைகால்கள் ஆட்டத்தோடு எப்படி அவன் மூட்டை தூக்கப்போவான். – என்ன சுந்தரம், வேலைக்குப் போகல? – குரல் கேட்டு நிமிர்ந்தான் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 01 Jun 2017 12:23 AM PDT

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 01 Jun 2017 12:21 AM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !பேப்பர் வாழை இலை உபயோகிக்க கூடாது…

Posted: 01 Jun 2017 12:14 AM PDT

- நம்மில் பெரும்பாலானோர்…வீட்டில் விசேஷம் என்றால் வாழை இலை கிடைக்காத காரணத்தாலோ…அல்லது விலை அதிகம் என்பதாலோ… கடைக்கு போனால் எந்த நேரமும்டனே கிடைக்கிறது என்பதாலோ… மெழுகு பூச்சு தடவப்பட்ட இந்த பச்சை நிற இலை போன்ற பேப்பரை உபயோகிக்கிறோம்…. – சூடான பதார்த்தங்கள் வைத்து சாப்பிடுவதற்கு இது உகந்ததல்ல. குறிப்பாக சூடான சாதம், சாம்பார் போன்றவற்றை இட்டு சாப்பிடும்போது… மேல்பூச்சாக உள்ள மெழுகு உருகி…சாம்பாரோடு…கலந்து…வயிற்றுக்குள் சென்று பல வில்லங்கங்கள் உருவாக கூடும்… விளைவு…சில பல நாட்களுக்கு, ...

இளவரசியின் ஃபாலோயர் மன்னா!

Posted: 01 Jun 2017 12:10 AM PDT

– ஏரியில குளிக்கப்பபோன தலைவர் ஏன் இவ்ளோ கடுப்பா திரும்பி வர்றார்? – பின்னால இருந்து எவனோ,'யாருய்யா ஏரியில் எருமை மாட்டை குளிப்பாட்டினது'னு கத்தினானானம் – பேனட் ஜெயசிங் – ———————————– – யாரங்கே? – இளவரசியின் ஃபாலோயர் மன்னா! – அம்பை தேவா – ———————————- – மன்னர் பொற்கிழி கொடுக்காம ஒரு தங்ககாசு மட்டும் கொடுத்தாராமே…ஏன்? – நீ கிழிச்ச கிழிக்கு இது போதும்னுதான்! – தீ.அசோகன் – ———————————— என்ன சர்வர்! பிரியாணியில ஆட்டுப்புழுக்கை கிடக்குது? – மட்டன் பிரியாணின்னு சொன்னா சிலர் ...

‘ராவா’ உப்புமா கொண்டு வான்னு சொல்றாரே!

Posted: 01 Jun 2017 12:00 AM PDT

சிறுமி தோழியிடம்: – அய்யோ…ஓடாதேடி…எங்கம்மா என்கிட்டே சொன்னது பிரண்டை சாப்பிடுனுதான், ஃப்ரெண்டை சாப்பிடுன்னு இல்லை! – ஜெயாப்ரியன் – —————————- – ஏங்க…நம்மளை வரச்சொல்லி பையன் ஆசையா மெசேஜ் அனுப்பி இருக்கான்! – நம்பிப் போகாதே…குழந்தைக்கு புது புஸ்தகம், நோட்டு எல்லாத்துக்கும் அட்டை போடக கூப்பிடறான்! – நந்து சுந்து – ————————————- – யாரங்கே? – பீகார் ஆட்களை வேலைக்கு வச்சுட்டு இப்படி தமிழ்ல கூப்பிட்டா எப்படி வருவாங்க…மன்னா! – பர்வின் யூனுஸ் – ————————————— சாப்பிட வந்திருக்கிறவர் ...

3D ஓவியங்கள் !

Posted: 31 May 2017 11:58 PM PDT3D ஓவியம்........

பிங்க் நிலா !

Posted: 31 May 2017 11:56 PM PDTபிங்க் நிலா ! பெங்களூரில் இன்று கிருஷ்ணா எடுத்தது புன்னகை

உணவுகளின் போட்டோகள் ! :) - மாங்காய் தித்திப்பு பச்சடி !

Posted: 31 May 2017 11:49 PM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை    

'உள்ளேன் ஐயா' சொல்வதில் உள்ள நன்மைகள்!

Posted: 31 May 2017 11:44 PM PDT

'நெடு நாளைய நண்பர்; நெருக்கமான நண்பர்ன்னு சொல்றீங்க; ஆனா, சந்திச்சு, ஐஞ்சு வருஷம் ஆச்சுங்கிறீங்களே...' 'ஆமா... எங்க நேரம் இருக்கு...' 'வயசான அத்தை; ரொம்ப பாசமா இருப்பாங்க; ஊர்ல இருக்காங்க; பாக்க போகலாம்ன்னா, முடியவே மாட்டேங்குது...' 'கூடப் படிச்சவன்; இப்ப மாவட்ட பதிவாளனா, பதவி உயர்வு பெற்றுட்டான்; வாழ்த்த கூட முடியல; மறதி, வேலை மிகுதி...' - இப்படிப்பட்ட வாக்கியங்களை, பலர் பேச கேட்டிருப்பீர்கள்; ஏன், நீங்களே கூட, இப்படி சொல்லியிருக்கலாம். மேலே கூறப்பட்டவற்றில், சந்திப்பதற்கு தடையாக ...

படித்ததில் பிடித்தது - II :) -- இப்படியும் ஒரு சேவையா?

Posted: 31 May 2017 11:40 PM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

மனநிலை கொதிநிலையாகும்போது...

Posted: 31 May 2017 11:37 PM PDT

'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...' 'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர். ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான். இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான். ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை. சட்டென்று, ...

பெண்!

Posted: 31 May 2017 11:35 PM PDT

நீளமான காரிடரின் இரு மருங்கிலும், நாற்காலிகள் போடப்பட்டும், மையத்தில், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. நடுவில், சில நாற்காலிகள் போடப்பட்டு, முன்புற டேபிளில், 'வெல்வெட்' துணி விரிப்பில், அலங்கரித்த, பூச்சாடி வைக்கப்பட்டிருந்தது. வங்கியின் பெயரும், அது துவங்கப்பட்ட ஆண்டும், மற்ற குறிப்புகளும் எழுதப்பட்ட, 'பேனர்' பின்புறம் தொங்க, மற்றொருபுறம், அன்று வங்கியில் இருந்து, விருப்ப ஓய்வு பெறும் வர்ஷாவின் புகைப்படமும், வாழ்த்தும் இடம் பெற்றிருந்தது. இத்தனை நாளும், வங்கிக்கும், அதன் கிளை ...

எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பாருங்கள் ! :)

Posted: 31 May 2017 11:32 PM PDT

சர்வதேச மகளிர் தினம், சமீபத்தில், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை மையமாக வைத்து, ரஷ்யாவை சேர்ந்த ஒரு நிறுவனம், செமத்தியாக கல்லா கட்டியுள்ளது. 'மகளிர் தினத்துக்கு பரிசளிப்பதில், உங்கள், 'பாய் பிரண்ட்' கஞ்சத்தனம் காட்டுகிறாரா... எங்களை அணுகுங்கள்...' என்று, அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியிட்டது இந்நிறுவனம். நூறு ரோஜாப் பூக்கள் அடங்கிய, பிரமாண்டமான, பூங்கொத்துகளை தயாரித்து, 10 நிமிடங்களுக்கு மட்டும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டது. இதற்காக, கணிசமான தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ...

ஒரு தீர்வு!

Posted: 31 May 2017 11:31 PM PDT

காலை, 6:00 மணிக்கு வந்துடுறோம் சார்...' என்று, பேரூராட்சி ஊழியர்கள், தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருந்ததால், சீக்கிரமே எழுந்து விட்டார், சுந்தரம். 'தூங்கும் நேரமாக வந்து, அரைகுறையாக அள்ளிப் போட்டு போய் விடுவரோ...' என்று நினைத்து, இரவெல்லாம் அவருக்கு தூக்கமே வரவில்லை. அவர் மனைவி சும்மா இல்லாமல், ''அவங்க, வருவாங்கன்னா நினைக்கிறீங்க... எத்தனை நாளு இப்படி சொல்லி, வராம போயிருக்காங்க. அவங்க வேலை நேரமே, 10:00 மணிக்கு தான் ஆரம்பிக்குது; இதுல எப்படி, காலையில், 6:00 மணிக்கு வருவாங்க; ...

தானத்தில் சிறந்தது அன்னதானம்!

Posted: 31 May 2017 11:25 PM PDT

'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...' என்றும், 'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...' என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர். கல்வி, வீரம் மற்றும் காருண்யத்தில் சிறந்து விளங்கிய போஜராஜன் ஆண்டு வந்த காலம் அது... ஏழை விவசாயி ஒருவர், தன் மகளை மணமுடித்து கொடுக்க பொருள் வசதி இல்லாததால், மன்னர் போஜராஜனிடம் பொருள் உதவி பெற நினைத்தார். அதனால், தன் மனைவியிடம் வழியில் சாப்பிடுவதற்கு ரொட்டி செய்து தருமாறு கேட்டார். அவர் மனைவியும், நிறைய ...

நேரத்தை மிச்சம் பிடிக்க கூடாத இடம்!

Posted: 31 May 2017 11:13 PM PDT

தமிழகத்தில் மட்டும், ஆண்டுதோறும், சாலை விபத்தில், 5,000 பேர், இறப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தாங்கள் செய்த தவறுக்காகவோ, செய்யாத பிழைக்காகவோ, தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர் என்பது, எவ்வளவு பெரிய துன்பம்! விலைக்கு கிடைக்கிற உரிமங்கள்; சாலை விதிகளை மீறுவதை, சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வோர், அலட்சியம் மற்றும் கவனக்குறைவு போன்றவை, உயிர்களை பறித்தபடி உள்ளன. இவை தவிர, ஒரு பிரதான காரணம், நம்மவர்கள், சாலைகளில் நேரத்தை, மிச்சப்படுத்துவதில் காட்டுகிற முக்கியத்துவமே என்பேன். நான், இளைஞனாக இருந்த ...

கிணற்றுத் தண்ணீர்!

Posted: 31 May 2017 11:12 PM PDT

வீட்டுக்குள் நுழையும் போதே, ''என்னடா ஆச்சு... இந்த வேலையாவது கிடைச்சுடுமா?'' என்ற அம்மாவின் கேள்வி எரிச்சலுாட்டியது என்றால், அருகில், ஒரு அழகான இளம் பெண் நின்றிருக்கும் போது, அதைக் கேட்டது கோபத்தை ஏற்படுத்தியது. வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் அம்மா பேசுவது கேட்டது... ''இவந்தாம்மா என் பையன்... பி.காம்., படிச்சிருக்கான். படிச்சு முடிச்சு, ஆறு வருஷம் ஆச்சு; இன்னும், ஒரு வேலையும் கிடைக்கல. இவன் தலையெடுத்து தான், இவனோட தங்கைக்கு திருமணம் செய்யணும்... இதோ அவளும், பிளஸ்2 முடிச்சு நாலு வருஷம் ஆறது; ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™