Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சுய அறிமுகம்--கேசவன்

Posted: 27 Jun 2017 10:33 AM PDT

பெயர்: கேசவன்
சொந்த ஊர்: திருச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலை மூலம்
பொழுதுபோக்கு: கதை புத்தகம் படிப்பது
தொழில்: சுயதொழில்
மேலும் என்னைப் பற்றி: விளையாட்டு மற்றும் கதைகள் விரும்பும் சாதாரண ஒருவன்.

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா

Posted: 27 Jun 2017 12:51 AM PDT

வாஷிங்டன்: நாசாவின் கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. அதில் 10 கிரகங்களில் மனிதர்கள்  வாழலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்து வருதற்கான ஆதாரங்களை நாசா விரைவில் வெளியிட இருப்பதாக வீடியோ செய்தி வெளியாகியுள்ளது. தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள விரும்பாத சிலர் ஹாக்டிவிஸ்ட் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளனர். அதில் கடைசியாக நடைபெற்ற நாசா விஞ்ஞானிகள் கூட்டத்தில் நாசா தலைவர் தாமஸ் சுர்புச்சென் பிரபஞ்சத்தில்  வேற்று ...

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி

Posted: 27 Jun 2017 12:50 AM PDT

வாஷிங்டன்:  அமெரிக்காவில் சிரியா, லிபியா உள்ளிட்ட 6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு அதிபர்  டொனால்ட் டிரம்ப் தடைவிதித்ததற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிகழும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட  6 இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி(2017) மாதம் அறிவித்தார் .இதையடுத்து டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் ...

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்

Posted: 27 Jun 2017 12:49 AM PDT

புதுடில்லி: தென்மேற்கு பருவமழை டில்லியை இவ்வாரத்தில் தாக்கும்.  இதனால் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் மாதம் ஆரம்பத்தில் தொடங்கியது. ஆனால், இன்று வரை வழக்கமான மழையை விட 1 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. மழை அதிகரிக்கும் வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்று கூறியுள்ள  இந்திய வானிலை ஆய்வு மையம்இன்னும் மூன்று நான்கு நாட்களில் பருவமழை டில்லியை தாக்கும் என கூறியுள்ளது. அப்போது மிகமிக அதிக அளவில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.மேலும், ...

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்

Posted: 27 Jun 2017 12:47 AM PDT

பெய்ஜிங்: சீனாவில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக ஓடக்கூடிய புல்லட் ரெயில் சேவை இன்று (ஜூன்-26) தொடங்கியது. சீனா, ரயில்வே பயணிகளை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி  மற்றும் கனடா நாடுகளின் முன்னணி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பம் உதவியுடன்  13 ஆண்டுகளில் இந்த அதிவேக புல்லட் ரயிலை தயாரித்துள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை இன்று ...

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது

Posted: 27 Jun 2017 12:47 AM PDT

புதுடெல்லி, எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள மானசரோவர்  கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இந்திய பக்தர்களை தங்கள் எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்று சீன ராணுவம் கூறிவிட்டது. இதனால் இந்திய–சீன எல்லையில் குழப்பம் நிலவியது. கைலாய மலைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பாலம் உடைந்துவிட்டதாக சீன தரப்பு காரணம் கூறியது. யாத்திரை சென்ற பக்தர்களும் சிக்கிம் ...

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது

Posted: 27 Jun 2017 12:45 AM PDT

புதுடெல்லி தற்போது, ஏப்ரல் மாதம் முதல் அதற்கடுத்த ஆண்டின் மார்ச்  மாதம்வரை, நிதி ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.  1867–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தை கொண்டு வந்தனர். இதற்கிடையே, காலண்டர் ஆண்டைப் (ஜனவரி–டிசம்பர்)  போலவே, நிதி ஆண்டையும் ஜனவரி மாதம் தொடங்குவது போல் மாற்ற பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார். அதையடுத்து, இதுபற்றி ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த டிசம்பர் மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. நிதி ஆண்டின் தொடக்கத்தை ...

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க

Posted: 26 Jun 2017 09:29 PM PDT

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்: தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம். ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று ...

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்

Posted: 26 Jun 2017 08:33 PM PDT

[img:4418]https://www.filepicker.io/api/file/6lUckJrhRECsAtyOcGiG+019PHO000000011U00006000[SVC2].jpg[/img:4418] [img:4418]https://www.filepicker.io/api/file/mlZIBJqxTLq6tJC5JNma+019PHO000000011U00009000[SVC2].jpg[/img:4418] [img:4418]https://www.filepicker.io/api/file/iEnj7ItCRo2EjGXTQDwU+019PHO000000011U00012000[SVC2].jpg[/img:4418] [img:4418]https://www.filepicker.io/api/file/cXQDcradRQWAfmxC8bof+019PHO000000955U00010000[SVC2].jpg[/img:4418] என் கணினியின் பழையக் கோப்புகளை களைய எண்ணி ...

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

Posted: 26 Jun 2017 07:49 PM PDT

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்; பழமையை காதலிக்கும் டாக்டர் தம்பதி காரைக்குடி: சிவங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த டாக்டர் சண்முகம் மகள் ஷோபனா- அருண் திருமணம் அரியக்குடி பெருமாள் கோயிலில் நடந்தது. மணமக்கள் இருவரும் டாக்டர்கள். திருமணத்திற்கு பிறகு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள திருமண மண்டபத்துக்கு, மணமக்கள் இருவரும் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர். உறவினர்கள் உடன் நடந்தே வந்தனர். மாட்டு வண்டிக்கு முன் பாரம்பரிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™