Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பயங்கரவாதத்தை பரப்பும் பாக்.,கிற்கு மோடி - டிரம்ப் எச்சரிக்கை...!

Posted: 27 Jun 2017 09:07 AM PDT

வாஷிங்டன்: 'பயங்கரவாதிகள், பாகிஸ்தானை, புகலிடமாக பயன்படுத்துவதை, அந்நாடு அனுமதிக்க கூடாது. ஐ.எஸ்., லஷ்கர் - இ - தெய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் நேற்று, கூட்டாக பாகிஸ்தானை வலியுறுத்தினர்.

அமெரிக்காவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று முன்தினம் இரவு, சந்தித்து பேசினார்.அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, மும்பை மற்றும் ...

நல திட்டங்களுக்கு 'ஆதார்' கட்டாயம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 27 Jun 2017 09:14 AM PDT

புதுடில்லி: மதிய உணவு திட்டம் உட்பட, பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலனை பெறுவதற்கு, 'ஆதார்' எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு, கல்வி உதவித்தொகை உட்பட, மத்திய அரசின் பல்வேறு சமூகநலத் திட்டப் பலன்களை பெறுவதற்கு, வரும், 30க்குள், ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இந்த மனுக்கள், நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், நவின் சின்ஹா ...

ஜாதி அடிப்படையில் விவாதம் ஏன்? ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் வருத்தம்

Posted: 27 Jun 2017 09:21 AM PDT

ஜனாதிபதி தேர்தலில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், ''ஜனாதிபதி வேட்பாளரை, அவரது தகுதி அடிப்படையில் பார்க்காமல், சமூகம் அடிப்படையில் விவாதிப்பது கவலை அளிக்கிறது,'' என, தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல், ஜூலை 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் கவர்னரும், தலித் சமூகத்தை சேர்ந்தவருமான, ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.
இதையடுத்து, பீஹாரை சேர்ந்த மற்றொரு தலித் தலைவரும், லோக்சபா முன்னாள் சபாநாயகருமான மீரா குமாரை, ஐ.மு., ...

தனியார் பால் பவுடரில் 'காஸ்டிக் சோடா' கலப்படம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகார்

Posted: 27 Jun 2017 09:53 AM PDT

சென்னை: ''தனியார் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா' கலந்திருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளதாக கூறியதால், எனக்கு மிரட்டல்கள் வருகின்றன,'' என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அவர் அளித்த பேட்டி: 'நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ்' நிறுவனங்களின் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர்' கலந்திருப்பதாக, சோதனை முடிவு வந்துள்ளது. பத்திரிகை குழுமம் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில், சோதனை செய்த போது, இந்த முடிவு வந்துள்ளது.
அமிலம் அதிகமாகி, கெட்டுப்போன பாலில், அமிலத் தன்மையை ...

தொழில் முதலீடு: தமிழகம் பின்னடைவு

Posted: 27 Jun 2017 10:00 AM PDT

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் பின்தங்கியது. 2016ல், தொழில் துவங்க அனுமதி பெற்ற, 20 நிறுவனங்கள் வாயிலாக, 4,793 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே ஈர்த்துள்ளது.

ஒரு மாநிலத்தில், ஐந்து கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டில், தொழில் துவங்க விரும்பும் நிறுவனம், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு, ஐ.இ.எம்., என, பெயர்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், மாநில அரசை அணுகி, தொழில் துவங்கலாம். இவ்வாறு, ஐ.இ.எம்., கிடைக்கப் பெற்ற நிறுவனங்கள், குறிப்பிட்ட மாநிலத்தில்
தொழில் துவங்காமல், வேறு மாநிலத்திற்கு போகும் வாய்ப்பும் ...

எம்.பி.,க்கள் எதிர்ப்பு கொடி; சசிகலா குடும்பம் கடும் அதிர்ச்சி

Posted: 27 Jun 2017 10:18 AM PDT

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது' என, கூறியிருந்தார்.

அதற்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அரி, அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருத்தணியில் பேட்டி அளித்த அரி, 'கட்சியும், ஆட்சியும், முதல்வர் பழனி சாமி தலைமையில், சிறப்பாக நடந்து வருகிறது.
எனவே, தேவையில்லாமல் சசிகலா குடும்பம், கட்சியில் தலையிடக் கூடாது. பொதுச்செயலர் தேர்வே செல்லுமா என்ற ...

அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Posted: 27 Jun 2017 10:32 AM PDT

சென்னை: 'பள்ளிக்கு சரியாக வராமல், சொந்த தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான ஆசிரியர்களால், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது; அந்த அரசு பள்ளி மாணவர்களை, ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் காணப்படும் பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசிடம், 20 கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், பந்தநல்லுாரில், பசுபதி நடுநிலை பள்ளி உள்ளது; இது, அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு ஆங்கில வழி வகுப்பை துவங்க, பள்ளி ...

ஆளாளுக்கு அறிக்கை விடுவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம்

Posted: 27 Jun 2017 10:41 AM PDT

அ.தி.மு.க.,வில், பல தலைமை உருவாகி உள்ளதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடத் துவங்கி உள்ளனர். அதனால், கட்சியினர் மத்தியில் குழப்பம் அதிகரித்து வருகிறது.அ.தி.மு.க.,வில், பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என, மூன்று அணிகள் உருவாகி உள்ளன.

சசி பற்றி மவுனம்முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். ஆனால், சசிகலா குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். தினகரன் அணியினரோ, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
'ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு' என, ...

அரசு பள்ளி எதிரே 'டாஸ்மாக்' கடை; மூட கோரி மாணவியர் போராட்டம்

Posted: 27 Jun 2017 11:10 AM PDT

கடும் எதிர்ப்பையும் மீறி, கோவிலம்பாக்கம் அரசு பள்ளி எதிரே திறந்த, 'டாஸ்மாக்' கடையை மூடக்கோரி, மாணவியர் நடத்திய முற்றுகை போராட்டத்தால், கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

சென்னை, கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்துார் பகுதியில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு எதிரே, 23ம் தேதி, டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது.
கடையை நடத்த, தி.மு.க.,வைச் சேர்ந்த நபர் இடம் வழங்கி உள்ளார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நபர், 'பார்' நடத்துகிறார். இரண்டு பேரின் கூட்டு முயற்சியில், அதிகாரிகள் கடையை ...

இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவு

Posted: 27 Jun 2017 12:15 PM PDT

புதுடில்லி: இந்தியாவின் நிதியாண்டு கணக்கை, ஜன., - டிச., ஆக மாற்றுவதற்கு, மத்திய அரசுக்கு, உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.
உயர்மட்டக் குழு:
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், பிரிட்டன் வழக்கப்படி, 1867ல், ஏப்., - மார்ச் நிதியாண்டை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில், 'நிடி ஆயோக்' அமைப்பு, 'நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, குறிப்பாக, வேளாண் துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிதியாண்டை, ஜன., - டிச., ஆக மாற்றுவது நல்லது' என, தெரிவித்தது. இது குறித்து ஆராய, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா ...

'அமைச்சர் ராஜு என் ஹீரோ': நடிகை கஸ்தூரி கிண்டல்

Posted: 27 Jun 2017 01:30 PM PDT

'தெர்மாகோல் புகழ் அமைச்சரே, என் விருப்பமான சூப்பர் ஹீரோ' என, நடிகை கஸ்துாரி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி, பிரபு, விஜய்காந்த் என, 1990ல், பிசியாக வலம் வந்தவர் நடிகை கஸ்துாரி. திருமணமாகி வெளிநாடு சென்றவர், மீண்டும் இந்தியா திரும்பி வந்து, சில படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்பு குறைவாக இருப்பதால், 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், எப்போதும் 'பிசி'யாக இருக்கிறார்.
சமீபகாலமாக, அரசியல் உள்ளிட்ட சமூக பிரச்னைகளில் கருத்துக்கூறி, சிக்கலில் மாட்டுவதோடு, மற்றவர்களையும் மாட்டி விடுகிறார். ரஜினியின் அரசியல் பிரவேசம் ...

இந்தியாவுக்கு 22 ட்ரோன்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

Posted: 27 Jun 2017 02:20 PM PDT

வாஷிங்டன்: இந்தியாவுக்கு 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒப்பந்தம்:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. இதில், இந்திய கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்க, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் கோடி ரூபாய்(2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்பது ...

‛வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பு': மோடி

Posted: 27 Jun 2017 03:07 PM PDT

தி ஹேக்: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

3 நாடுகள் பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
நல்லாட்சி:
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ள பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™