Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க

Posted: 22 Jun 2017 01:53 PM PDT

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்: தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம். ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று ...

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !

Posted: 22 Jun 2017 01:46 PM PDT

படித்ததில் மனம் கவர்ந்தவை.......... தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் ! திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது 'மோரு… மோரு…' என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், ...

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!

Posted: 22 Jun 2017 01:35 PM PDT

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!! ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ...

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?

Posted: 22 Jun 2017 01:29 PM PDT

நன்றி அய்யா ,
நீண்ட ஆயுள் வேண்டுமா?
என்ற பதிவில் 19 /6 /2017 வந்துள்ளதால் , உங்கள் பதிவு நீக்கப்படுகிறது.

வருந்துகிறேன்.

ரமணியன்

பிகு  நீக்கப்பட்ட பதிவு
ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 by SARATHI NEGAMAM Yesterday at 10:31 pm

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."

Posted: 22 Jun 2017 01:20 PM PDT

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..." ஒருமுறை அர்சுணனும் கிருஷ்ணனும் வீதியில் உலா வந்தார்கள்... வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்... அர்சுணன் மனமிறங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க வயோதிகர், 'ஆகா! இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு உபயோகப்படுமே...' என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார். இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் இரவில் வீட்டிற்குள் புகுந்து களவாடி சென்று விட்டான். சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் ...

துன்ப காலங்களில் கடவுள்

Posted: 22 Jun 2017 01:15 PM PDT

துன்ப காலங்களில்  கடவுள் ஒரு  மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.  சத்தமாகக் கேட்டான். "என்னுடன் வருவது யார்?" "நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் ...

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்

Posted: 22 Jun 2017 09:47 AM PDT

நாடி அடிப்படையில் திருமண காலங்கள் ஆண் குரு நாடி படி 1,5,9,2,7யில்  சுக்கிரன் இருந்தால் உரிய வயதில் திருமண ம் நடக்கும் சனிக்கு 1,5,9,27 யில் சுக்கிரன் இருந்தால் திருமணம்  கால தாமதம் ஆகும் தானே அமை யும் சனி சுக்கிரன் கே து ராகு என்று இருந்து தாெ டர் பு திருமண பாே ரட்டமாகும் பெ ண் செ வ்வாய்க்கு 1,5927 குரு இருந்தால் உரிய வயதில் திருமணம் செ வ்வாய் க்கு1,5,9,2,7 சனி இருந்தால் கால தாம த திருமணம் ஜனன காலத்தில் சுக்கிரன்குரு இனண வு இருப்பவருக்கு முயற்சி செ ய்தால் காே ட்சார குரு சுக்கிரனுக்கு ...

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை

Posted: 22 Jun 2017 07:42 AM PDT

ஜெயமோகன் வெண்முரசு நாவல் அவர் இணையத்தில் இருந்து யாராவது pdf கோப்பாக சேமித்து இருந்தால் கொடுக்கவும்

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 22 Jun 2017 04:50 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 22 Jun 2017 04:47 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™