Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லாலுவுடன் ஏற்பட்ட மோதலால் நிதிஷ் ஆட்சிக்கு ஆபத்து?

Posted: 22 Jun 2017 09:34 AM PDT

பாட்னா: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு, பீஹாரில் ஆளும் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்., வேட்பா ளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக, நிதிஷ் குமாருக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கும், ...

ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்; முதல்வர்களுக்கு மத்திய அரசு நன்றி

Posted: 22 Jun 2017 09:37 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., மசோதாவை, அமல் படுத்த, வழி வகை செய்ததற்காக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நன்றி தெரிவித்து, மத்திய அமைச்சரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருந்த தாவது:ஜூன் 30ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல், சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட உள்ளது.
மறைமுக வரி விதிப்புகளுக்கு, இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய ...

சோர்வுடன் காணப்படுகிறார் கர்ணன்; அரசு மருத்துவமனையில் அனுமதி

Posted: 22 Jun 2017 09:39 AM PDT

கோல்கட்டா: கோல்கட்டா போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் நீதிபதி கர்ணன், மருத்துவ பரிசோதனைக்கு பின், அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவர், சோர்வுடன் இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, கோல்கட்டா போலீசாரால் நேற்று முன்தினம் கோவையில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதிபதி கர்ணன், 62, கோல்கட்டா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு, முதற்கட்ட ...

ஸ்டாலின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்! ஐகோர்ட்டில் முதல்வர் பதில் மனு

Posted: 22 Jun 2017 10:03 AM PDT

சென்னை:'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, கோடிக்கணக்கில் பேரம் நடந்ததாக வெளியான செய்தி குறித்து விசாரணை நடத்த, சி.பி.ஐ., மற்றும் வருவாய் புலனாய்வு துறையை, வழக்கில் சேர்க்க கோரிய ஸ்டாலின் மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், முதல்வர் பழனிசாமி, சட்டசபை செயலர் ஆகியோர், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி அரசு மீது, சட்டசபையில், 2017 பிப்., 18ல், நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப் பில், அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து, 'நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லாது' என, ...

காஷ்மீரில் கூடுதல் படைகள் குவிப்பு; பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Posted: 22 Jun 2017 10:06 AM PDT

ஸ்ரீநகர்: காஷ்மீரில், பதற்றமான சூழல் நிலவு வதாகவும், பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கிடைத்த உளவுத்துறை தகவலை அடுத்து, அங்கு, கூடுதலாக, 2,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த, முதல்வர் மெஹபூபா முப்தி தலைமை யிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் தெற்கு காஷ்மீர் பகுதியில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கர வாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையாக, சமீபத்தில், நான்கு ...

அரசியலில் குதிப்பா? ரஜினி மீண்டும் பரபரப்பு

Posted: 22 Jun 2017 10:16 AM PDT

நடிகர் ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு, அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது.சென்னையில், ரசிகர்களை சந்தித்த ரஜினி, அரசியல் குறித்து பேசிய பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, அரசியல் பிரமுகர்களை சந்தித்து வரும் ரஜினி, புதுக்கட்சி அறிவிப்பு குறித்து, தன் பிறந்த நாளான, டிச., 12ல் அறிவிக்கப் போவதாக, தகவல் கள் வெளியாகின. தற்போது, காலா படப் பிடிப்புக்காக,மும்பை சென்றுள்ள அவர்,படபிடிப்பை முடித்து, விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கே மருத்துவ பரிசோதனையுடன், முக்கிய பிரமுகர்கள் சிலரை யும் சந்திக்கிறார். அதனடிப்படையில், அரசியல் பிரவேசம் ...

பழனி, பன்னீர் டில்லி பயணம்

Posted: 22 Jun 2017 10:19 AM PDT

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று டில்லி புறப்பட்டு சென்றனர்.

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில், ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவருக்கு, அ.தி.மு.க., வின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று மனு தாக்கல்செய்கிறார்.இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை, 5:00 மணிக்கு, டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு, அவர், பிரதமரை சந்தித்து பேசவும் திட்ட மிட்டு உள்ளார். பின், ...

'எய்ம்ஸ்' முடிவு தமிழக அரசின் கையில் மத்திய அரசு பதில் மனு

Posted: 22 Jun 2017 10:25 AM PDT

மதுரை:மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க தாக்கலான வழக்கில், 'தகுந்த இடத்தை அடையாளம் கண்டு மாநில அரசு பரிந்துரைத்தால் முடிவு செய்யப்படும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

மதுரை பாஸ்கர் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் 15 தென் மாவட்டங்களுக்கு மைய மான இடமாக மதுரை உள்ளது. இங்கு உயர்தர சிகிச்சைக்கு எவ்வித மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.'எய்ம்ஸ்' அமைய தேவையான இட வசதி மதுரையில் உள்ளது.தமிழக தென்மாவட்டங்கள், கேரளாவின் சில பகுதிகளை கருத்தில் கொண்டு மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை ...

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார்

Posted: 22 Jun 2017 10:41 AM PDT

ஜனாதிபதி தேர்தலில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக, லோக்சபா முன்னாள் சபாநாயகரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான, மீரா குமாரை, 72, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் களத்தில் இறக்கியுள்ளன.

இதன் மூலம்,ஜனாதிபதி தேர்தலில் போட்டியை தவிர்க்க, பிரதமர் மோடி வகுத்த வியூகத்தை, எதிர்க்கட்சிகள் முறியடித்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராம்நாத் கோவிந்த், இன்று, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 17ல், ...

ஜூலைக்குள் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' : அமைச்சர் ராஜு

Posted: 22 Jun 2017 11:43 AM PDT

சென்னை : ''பொது மக்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள், ஜூலை மாதத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - முத்தையா: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி, அரியக் குடி கிராமத்தில், புதிய ரேஷன் கடை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ராஜு: அரியக்குடி முழு நேர ரேஷன் கடை, 978 குடும்ப அட்டைகளுடன், அரசு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மற்றொரு கடை அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
தி.மு.க., - ...

போராட்டத்தில் குதிக்கும் போலீஸ்; உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

Posted: 22 Jun 2017 01:17 PM PDT

'உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி' முறையை ஒழிக்க வேண்டும்' என, போலீசார் சார்பாக போராட்டம் அறிவித்து இருப்பது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், போலீசார், தங்கள் கோரிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். தற்போது, சென்னையின் பல பகுதிகளில், 'போஸ்டர்' ஒட்டி, ஜூலை 6ல், குடும்பத்துடன், தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
கோரிக்கைகள் என்ன
* பிற அரசு ஊழியர்களுக்கும், ஆண்டு ...

சாலை விழிப்புணர்வு விளம்பரத்தில் பும்ரா ‛நோபால்'

Posted: 22 Jun 2017 02:07 PM PDT

ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பும்ரா நோபால் விசியதை, சாலை விழிப்புணர்வு விளம்பரத்திற்கு ஜெய்பூர் போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடனான பைனலில் முக்கிய தருணத்தில் இந்திய வீரர் பும்ரா நோபால் வீசினார். இதனால் 4 ரன்களில் அவுட்டாகி இருக்க வேண்டிய பாக்., துவக்க வீரர் ஜமான், நோபால் கண்டத்திலிருந்து தப்பி அதிரடி சதம் விளாசினார். இதனால் இமாலய இலக்கை குவித்த பாக்., எளிதில் வெற்றி பெற்றது. பும்ரா நோபால் வீசாமல் போயிருந்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் ...

ராம்நாத் கோவிந்துக்கு அரசு சார்பில் தற்காலிக பங்களா ஒதுக்கீடு

Posted: 22 Jun 2017 02:34 PM PDT

புதுடில்லி : தே.ஜ., கூட்டணியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ராம்நாத் கோவிந்துக்கு, அரசு சார்பில், டில்லியில் தற்காலிகமாக பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு காரணம்:
ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் கவர்னராக இருந்த, ராம்நாத் கோவிந்த், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பீஹார் கவர்னராக இருந்த போது, அவருக்கு, டில்லியில், வடக்கு அவென்யூவில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜனாதிபதி வேட்பாளராக, அவர் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™