Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு

Posted: 20 Jun 2017 03:33 PM PDT

சாம்பியன் டிராபி தொடர் முடிந்த கையுடன் இந்திய அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5-ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இலங்கை செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5-ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி என விளையாடவுள்ளது, இத்தொடருக்கு முன்னர் இந்திய அணி, இலங்கை அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது. அப்போட்டி ...

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு

Posted: 20 Jun 2017 03:30 PM PDT

சென்னை, ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்கிறது. இந்த தொகையில் தார், சிமெண்டு, இரும்புக்கம்பிகள் வாங்கப்படுகிறது. கடந்த 2014–ம் ஆண்டு முதல் தாரின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த வகையில் கடந்த 2014–2015–ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு தார் வாங்கியதில், ரூ.750 கோடியை குறைத்து வழங்கி இருக்கவேண்டும். ஆனால் அந்த தொகையை அரசு குறைக்காமல் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.750 கோடி ...

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!

Posted: 20 Jun 2017 03:24 PM PDT

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!

Posted: 20 Jun 2017 03:23 PM PDT

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!

Posted: 20 Jun 2017 03:22 PM PDT

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

Posted: 20 Jun 2017 03:20 PM PDT

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனார்கள். இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் ...

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்

Posted: 20 Jun 2017 11:59 AM PDT

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன் ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!! கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம் ..!! நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார் அதற்கு அந்தப் பெண் இல்லை இல்லை என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..!! கருத்து ↓மனைவி எங்கே கூப்பிட்டாலும் செல்ல ...

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது

Posted: 20 Jun 2017 10:03 AM PDT

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது தலைமறைவாக இருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் இன்று கைது செய்யப்பட்டார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அவர் மாற்றப்பட்டார். கொல்கத்தா நீதிபதியாக நியமிக்கப்பட்ட கர்ணன் அதன் பிறகும் நீதிபதிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே ...

துணிவே துணையாகும்!

Posted: 20 Jun 2017 07:52 AM PDT

வாழ்க்கை வழக்கன்று; விளக்கம் பெறுதற்கு வெறுப்பில் வாழாதே! வெதும்பிச் சாகாதே! தாழ்வு வரும்போது தளர்ந்துநீ போகாதே தோல்வியைப் புறந்தள்ளு! புத்தெழுச்சி கொண்டெழு! தாமரையின் தன்மையது சேற்றினால் மாறிடுமோ சந்தனத்தின் வாசமது திரையிட்டால் போயிடுமோ சோதனையின் விளிம்பில்தான் சாதனை பிறக்குமடா! சிந்தனையை நேர்படுத்து; சிக்கல்கள் மறையுமடா! வேதனை கடந்தவரே வாகை சூடிடுவார் விலகி நின்றவரோ விரக்தியில் மூழ்கிடுவார் போராடும் குணமிருந்தால் எதிர்ப்புகளும் சுகமாகும் பகையெல்லாம் தூளாகும்; துணிவே துணையாகும்!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன

Posted: 20 Jun 2017 05:51 AM PDT

செங்குன்றம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். பருவமழை பொய்த்து விட்டதாலும் கடுமையான வெயில் காரணமாகவும் இந்த ஏரி வறண்டு காணப்படுகிறது. தற்போது வெறும் 57 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைத்து ராட்சத மோட்டார்கள் மூலம் சென்னை குடிநீருக்காக புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள். இந்த தண்ணீரும் 5 நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டு புழல் ...

ஓங்கி அடிச்சா...!

Posted: 19 Jun 2017 06:02 PM PDT

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 19 Jun 2017 05:58 PM PDT

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!

Posted: 19 Jun 2017 05:48 PM PDT

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் 'தமிழன்' இதழுக்குத் தனித்த இடமுண்டு. இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு 'தமிழன்' எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் 'தமிழன்' இதழுக்கு முக்கியப் பங்குண்டு. சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று 'ஒரு பைசாத் தமிழன்' எனும் வார இதழைத் தொடங்கினார் அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு ...

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி

Posted: 19 Jun 2017 05:42 PM PDT

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தந்த அழுத்தமே இந்திய தோல்விக்கு முக்கியக் காரணம் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் ஆடிய பாக். அணி 338 ரன்கள் அடிக்க, இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணி மேற்கொண்டு பாகிஸ்தான் பந்துவீச்சு ...

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

Posted: 19 Jun 2017 05:30 PM PDT

சென்னை, பூமியை கண்காணிக்கும் கார்ட்டோசாட்–2இ மற்றும் 36 நானோ வகை செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட்டை வருகிற 23–ந் தேதி (வெள்ளிக்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர். பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™