Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வரும் 30ம் தேதி நள்ளிரவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம்! சரித்திர நிகழ்வுக்காக பார்லிமென்ட்டில் சிறப்பு கூட்டம்

Posted: 20 Jun 2017 09:47 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு மாறும் நிகழ்ச்சி, பார்லி., மையமண்டபத்தில், வரும், 30ம் தேதி நள்ளிரவு நடக்க உள்ளது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நாட்டில் உள்ள, பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக, ஜூன், 30 நள்ளிரவில், பார்லி., வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குறும் படம்
இது குறித்து, ...

லாலு குடும்பத்தின் ரூ.180 கோடி சொத்து முடக்கம்

Posted: 20 Jun 2017 09:55 AM PDT

புதுடில்லி: ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி, மகன், மகள்கள், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்ததாக குற்றஞ்சாட்டியுள்ள, வருமான வரித்துறை, 180 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது.

வழக்கு பதிவு
பிற நபர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கி, அவற்றில் கிடைக்கும் பலன்களை அனுபவிப்பது சட்டவிரோதம். இவ்வாறு வாங்கப்படுபவை, பினாமி சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இதை தடுக்க மத்திய அரசு இயற்றிய, பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டம், கடந்தாண்டு, நவ., 1 முதல் அமலுக்கு ...

மாட்டிறைச்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு!

Posted: 20 Jun 2017 10:11 AM PDT

சென்னை: மாட்டிறைச்சி விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, முதல்வர் பழனிசாமி நிராகரித்தார். அதை கண்டித்து, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நேற்று வெளிநடப்பு செய்தன. அவர்களுடன், அ.தி.மு.க., ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்தால், தனி மனித உரிமை, விவசாயிகள் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. இதற்கு, நாடு முழுவதும் ...

உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு யார் காரணம்? : சட்டசபையில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்

Posted: 20 Jun 2017 10:17 AM PDT

சென்னை: ''உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு யார் காரணம்,'' என, சட்டசபையில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., இடையே, காரசார விவாதம் நடந்தது.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - பிச்சாண்டி: உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிகாரிகள் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்து, அவர்களை இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கிறீர்கள்; இது ஜனநாயக படுகொலை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது, ஜனநாயகம் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.
அமைச்சர் வேலுமணி: உள்ளாட்சி தேர்தலை, ஜெ., அறிவித்தார். பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார். நீங்கள் ...

தொடர் சந்திப்பு: சிறையில் சசி 'பிஸி'

Posted: 20 Jun 2017 10:27 AM PDT

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து, பா.ஜ., மேலிடத்திடம் சமரசம் செய்து கொள்ளலாம் என, சசிகலாவும், தினகரனும் கணக்கு போட்டனர். அக்கணக்கு, தற்போது தவிடு பொடியாகி உள்ளது.

'பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி, கட்சித் தலைமை முடிவு செய்யும்' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி பேசி, ஆதரவை உறுதி செய்துவிட்டார். இதன் மூலம், அ.தி.மு.க., - சசிகலா அணியின் தலைமை, முதல்வர் பழனிசாமி தான் என்பதை, பா.ஜ., வெளிப்படுத்தி உள்ளது.
பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கக் கூடாது
இதை தொடர்ந்து, 'சசிகலா, ...

அரசியல் ஆதாயத்துக்காக ஜி.எஸ்.டி.,க்கு ஸ்டாலின் எதிர்ப்பு

Posted: 20 Jun 2017 10:34 AM PDT

மத்திய அரசு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.,) அமல்படுத்த, முனைப்போடு செயலாற்றுகிறது. ஆனால் இந்த மசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றும் போது எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., வெளிநடப்பு செய்தது.

நாடு முழுவதும் 'ஒரே நாடு; ஒரே வரி' என்ற கோட்பாட்டின்படி, வரும் ஜூலை முதல், ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரி சீர்திருத்த நடவடிக்கை இது.ஜி.எஸ்.டி., மசோதா, மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டதால், மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்றப்படுகிறது.
கடும் ...

உண்ணாவிரதம் எதிரொலி: சாமளாபுரம் மதுக்கடைக்கு பூட்டு

Posted: 20 Jun 2017 10:34 AM PDT

திருப்பூர்: சாமளாபுரம் அருகே, பொதுமக்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து, 'டாஸ்மாக்' கடை மூடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சி, காளிபாளையத்தில், 12ல், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, மதுக்கடை திறக்கப்பட்டது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில், அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
தாலி கொடியை கழற்றி
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாமளாபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே, ஏராளமானோர், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கினர். நேற்று முன்தினம், இரண்டாவது நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை, ...

கர்ணன் கைதுக்கு உதவிய தமிழக அதிகாரி

Posted: 20 Jun 2017 10:38 AM PDT

கோவை: சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த, கொல்கத்தா உயர்நீதிமன்ற மாஜி நீதிபதி கர்ணன், யாரும் எதிர்பாராத வகையில், கோவையில் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எட்டு ஆண்டுகளாக பணியாற்றியவர் கர்ணன், 60; கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சக நீதிபதிகள், 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய இவர், அது தொடர்பான பட்டியலை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி பரபரப்பை ...

யோகாவின் முக்கிய கோட்பாடுகள்

Posted: 20 Jun 2017 10:46 AM PDT

நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவை உலகளவில் வளம் பெறச் செய்யத்தக்க, பொருளாதார, ஆன்மிகத் துறைகளில் செழிப்பானதாக மாற்றக்கூடிய பிரதமர், நமக்கு கிடைத்துள்ளது, சிறப்பான விஷயம்.

போற்றத்தக்க கடந்த காலம்; செழிப்பான நிகழ்காலம்; பொன் மயமான வருங்காலம் ஆகிய அனைத்தும், பிரதமர் நரேந்திர மோடியால், நமக்கு ஒருங்கே கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தின திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பின், 177 நாடுகளின் ஆதரவுடன், சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டது. இன்று, 200க்கும் மேற்பட்ட நாடுகள், யோகா தினத்தை கொண்டாடுகின்றன. ...

இன்றைய(ஜூன் 21) விலை: பெட்ரோல்: ரூ 66.94; டீசல்: ரூ 56.80

Posted: 20 Jun 2017 11:35 AM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.94 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
பெட்ரோல்,டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.66.94 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ.56.80 ...

சென்னை விமான நிலையத்தில் கர்ணன்

Posted: 20 Jun 2017 11:48 AM PDT

கோவை: கோர்ட் அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட் நீதிபதி கர்ணன், கோவையிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை அழைத்து வரப்படுகிறார்.
கோர்ட் அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்ய மேற்குவங்க போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன் பேரில் ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த நீதிபதி கர்ணன் நேற்று(ஜூன், 20) கோவையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கோல்கட்டா அழைத்து செல்வதற்காக மேற்கு வங்க போலீசார் கர்ணனை, கோவையிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை அழைத்து வருகின்றனர். இரவு ...

அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடை

Posted: 20 Jun 2017 12:45 PM PDT

பீஜிங் : பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாரை, தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கும், மத்திய அரசின் முயற்சிக்கு, மீண்டும் முட்டுக்கட்டை போட, சீனா திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை, ஐ.நா., சபையில், மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்தது. 'போதிய ஆதாரங்கள் அளிக்காமல், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது' என, சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், இந்தத் தீர்மானத்தை ...

கூடங்குளம் போராட்டத்திற்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் பண உதவியா?

Posted: 20 Jun 2017 01:56 PM PDT

புதுடில்லி: கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெளிநாட்டில் இருந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் நிதியுதவி அளித்திருக்கலாம் என தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய '' ஸ்டிங் ஆபரேஷன்'' மூலம் தெரியவந்திருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கு எதிராக பெரும் பேராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலக அளவில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பேராட்டமாக கருதப்பட்டது. இந்த போராட்டத்தை சுப. உதயகுமார் என்பவர் ஒருங்கிணைத்து நடத்தினார்.
இந்த போராட்டத்தில் ...

மும்பை தாஜ் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமை

Posted: 20 Jun 2017 02:43 PM PDT

மும்பை : டாடா குழுமத்தைச் சேர்ந்த, மும்பை தாஜ் மகால் பேலஸ் ஓட்டல் கட்டடத்திற்கு, படக் காப்புரிமை பெறப்பட்டு உள்ளது. இந்தியாவில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பின் கீழ், ஒரு கட்டட வடிவமைப்பிற்கு படக் காப்புரிமை வழங்கப்பட்டு உள்ளது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு மும்பையில், 240 அடி உயரத்தில், ஏழு மாடிகள், 560 அறைகளுடன் கட்டப்பட்ட இந்த ஐந்து நட்சத்திர ஓட்டல், 1903 டிச., 16ல் திறக்கப்பட்டது.
இந்தோ - சரசெனிக் கட்டடக் கலையில், இந்த ஓட்டலின் புகழுக்கு, பெருமை சேர்க்கும் விதமாக, புளோரண்டைன் கோதிக் கலையில் அமைந்துள்ள, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™