Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 18 Jun 2017 09:14 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!

Posted: 18 Jun 2017 01:28 AM PDT

சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் தமிழ் விளையாட்டு ஒன்றை, முரசு நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்தக் கையடக்கத் தமிழ் விளையாட்டை, இதுவரை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர். நட்பு ஊடகங்கள் வழி மட்டுமே பகிரப்பட்ட இணைப்பு, 26 நாடுகளைச் சேர்ந்த பயனர்களைச் சென்றடைந்துள்ளது. விளையாடுவதற்கு எளிமையாக உள்ளது என்றும், விளையாடிக்கொண்டே புதிய சொற்களை அறிந்து கொள்வதற்குப் பயனுள்ள செயலி என்றும், சொல்வளத்தின் முன்னோடிப் பதிப்பைப் பெற்று விளையாடியத் ...

பேலியோ டயட்

Posted: 17 Jun 2017 11:16 PM PDT

நான் புதியதாக பேலியோ  டயட்டுக்கு மாறி உள்ளேன்.. காலை உணவு மட்டும் சைவ பேலியோ சாப்பிடுகிறேன் .    சர்க்கரை வியாதி உள்ளது. இன்சுலின் எடுக்கிறேன். மாத்திரையும் எடுக்கிறேன் . வேலை சூழ்நிலை காரணமாக 3  வேலையும் எடுக்க முடிவதில்லை. மற்ற நேரங்களில் குறைவாக கார்ப் உள்ள சைவ உணவு எடுக்கிறேன்.  இதனால் எதிர் பார்த்த பலன் கிடைக்குமா. சர்க்கரை நோயில் விடுபட முடியுமா? விபரம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி.

ஆளை விட்றா சாமி...!

Posted: 17 Jun 2017 06:55 PM PDT

மொக்க ஜோக்ஸ்

Posted: 17 Jun 2017 06:41 PM PDT

குச்சி ஐஸ் வேணுமா…

Posted: 17 Jun 2017 06:36 PM PDT

- கும்பகோணத்திலுள்ள, செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு… வகுப்பில் நாங்கள் எதாவது தப்பு செய்துவிட்டால், எங்கள் வகுப்பாசிரியை, வித்தியாசமாக தண்டனை தருவார். அதாவது, 'நிமிட்டாம் பழம் வேண்டுமா, குச்சி ஐஸ் வேண்டுமா' என கேட்பார். நிமிட்டாம் பழம் என்றால், நறுக்கென்று கன்னத்தில் கிள்ளுவார். குச்சி ஐஸ் என்றால், பிரம்பால், அடி நொறுக்கி விடுவார். ஆரம்பத்தில், இவற்றை வாங்கி தடுமாறினாலும், போக போக, சுதாரித்து, தப்பித்து விடுவோம். அன்று வகுப்பில், ...

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!

Posted: 17 Jun 2017 05:54 PM PDT

– தலைவர் எதுக்கு ஜிம் பாடி ஆட்களை கட்சியிலே சேர்க்கணும்னு உத்திரவு போடறார்? – கட்சியிலே தொண்டர் பலம் இல்லைன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கார்! – எஸ்.சுரேஷ்பாபு – ————————————– – காலேஜூக்கு படிக்க அனுப்பினா, பாலாஜின்னா ரொம்ப பிடிக்கும்னு சொன்னியாமே, யாரும்மா அது பாலாஜி! – ஐயோ..அப்பா…அது பாலாஜி இல்ல, பயாலஜி!! – கே.செல்வராஜ் – ————————————– – டாக்டருக்கு மந்திரத்திலே ரொம்ப ஈடுபாடு போல தெரியுது! – எத வச்சு சொல்றீங்க? – ஆபரேசன் முடிஞ்சு வயித்தை மூடும்போடு நோய் குணமாக ...

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -

Posted: 17 Jun 2017 05:53 PM PDT

பாட்னா : தாஜ்மகாலுக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற பா.ஜ., சாதனை விளக்க கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலக அதிசயங்கள் பட்டியலில் 7-வது இடத்திற்குள் உள்ள தாஜ்மஹால், இந்தியாவின் அடையாளமா? வெளிநாட்டுப் பயணத்தின் போது இந்தியாவின் முந்தைய பிரதமர்கள், ஜனாதிபதிகள் தாஜ்மஹால், அல்லது மினார் கலை பொருட்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு அன்பளிப்பாக ...

பசங்களுக்குத்தான் பெரிய மனசு

Posted: 17 Jun 2017 05:53 PM PDT

மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை

Posted: 17 Jun 2017 05:52 PM PDT

- மனிதநேயமே நம் செயல்பாடுகளை நல் வழிப்படுத்துகிறது! மனிதநேயமே நம் துன்பங்களை மறக்கச் செய்கிறது! மனிதநேயமே நம் போராட்டங்களை நிறுத்தி வைக்கிறது! மனிதநேயமே நம் தவறுகளை மன்னிக்கச் செய்கிறது! மனிதநேயமே நம் கனவுகளை நனவாக்கச் செய்கிறது! மனிதநேயமே நம் எண்ணங்களை மேன்மைப்படுத்துகிறது! மனிதநேயமே நம் வன்முறைகளுக்கு சமாதி கட்டுகிறது! மனிதநேயமே பிரிந்த உள்ளங்களை ஒன்று சேர்க்கிறது! மனிதநேயமே மனித வாதங்களுக்கு மங்களம் பாடுகிறது! மனிதநேயமே வாடிய பயிரை கண்டு வாடும்படி ...

கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!

Posted: 17 Jun 2017 05:50 PM PDT

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)

Posted: 17 Jun 2017 05:48 PM PDT

- எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான், கூர்ம அவதார தத்துவம். திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது. ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும், பக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள். இதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும், சிவனையும் பிரார்த்தித்தனர், ...

அப்பாவின் நினைவில் மகள்!

Posted: 17 Jun 2017 05:46 PM PDT

நடிகர் கலாபவன் மணி மறைந்து, ஒரு ஆண்டாகிறது. அவரது ஒரே மகளான ஸ்ரீ லட்சுமி, தந்தையை பற்றி கூறும் போது, 'நான் படித்து, டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார், என் அப்பா. அவர் என்னிடம், 'நீ டாக்டரானால், உனக்கு மருத்துவமனை கட்டி தருவேன்; அம்மருத்துவமனையில், ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்...' என்பார். 'அவர், ஏழ்மையில் வாழ்ந்தவர் என்பதால், யார் பசித்திருந்தாலும் சகிக்க மாட்டார்; அதேபோன்று, உணவை வீணாக்கவும் சம்மதிக்க மாட்டார். நாங்கள் சாப்பிடும் போது, உணவை வீணாக்கினால், ...

ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

Posted: 17 Jun 2017 05:44 PM PDT

சென்னை: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டிய, 12 கோடி ரூபாய் கட்டணத்தை, ஜெயலலிதாவின் சொத்துக்களை விற்று செலுத்தும்படி கோரிய மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை, 7க்கு தள்ளி வைத்துள்ளது. சென்னையை சேர்ந்த, குமரன் தாக்கல் செய்த மனு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கர்நாடக ...

இந்தியா - பாக்., மோதல்:ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

Posted: 17 Jun 2017 05:31 PM PDT

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நாளை மோதும் இறுதி போட்டிக்கு, 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் நாளை(ஜூன்18) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி நடத்தும் தொடர் ஒன்றில் இரு அணிகளும் 10 வருடங்களுக்கு பின் பைனலில் மோதுகின்றன. இந்த போட்டிக்காக ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளது. இந்திய அணி வெற்றி பெறும் என அதிகம் பேர் பணம் கட்டியுள்ளனர். இது தொடர்பாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™