Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


67,000 அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனை அதிரடி!

Posted: 18 Jun 2017 10:12 AM PDT

புதுடில்லி: சிறப்பாக பணியாற்றாதவர்களை கண்டறியும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் சேவை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை, அரசு துவக்கி உள்ளது.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு அமைந்தது முதல், அரசு ஊழியர் களின் சேவைத் திறனை அதிகரிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் ஊழியர்கள் வந்து பணியாற்ற வேண்டும்; தங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக ...

கணக்கு தாக்கல் செய்ய வர்த்தகர்களுக்கு அவகாசம்

Posted: 18 Jun 2017 10:14 AM PDT

புதுடில்லி: வர்த்தகர்கள், ஜூலை - ஆகஸ்டு மாதங்களில், வருமான கணக்கு தாக்கல் செய்வதில், அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1ம் தேதி முதல் அமலாகிறது. வருமான கணக்கு தாக்கல் செய்வதை தள்ளிப் போட வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், ஜூலை - ஆகஸ்டு மாதங்க ளில், வருமான கணக்கு தாக்கல் செய்வதில், வர்த்தகர்களுக்கு அவகாசம் அளிக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட, வருமான கணக்கு தாக்கல்அட்டவணைப்படி, வர்த்தகர்கள், ஜூலை மாதத்துக்கான ...

ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறு நிற சீட்டு

Posted: 18 Jun 2017 10:33 AM PDT

புதுடில்லி :'ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்க ளுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் வெவ்வேறு நிற ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன், மனு தாக்கல் முடிகிறது.இந்த தேர்தலில், எம்.பி.,க்கள் மற்றும் அனைத்து மாநில, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட உள்ளனர். ஓட்டுச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எம்.பி.,க்களுக் ...

இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்தது: சுவிஸ் வங்கி அறிவிப்பு

Posted: 18 Jun 2017 10:35 AM PDT

புதுடில்லி: சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளில், இந்தியர்கள், குறைந்தளவே கணக்குகள் வைத்திருப்பதாக, சுவிஸ் நாட்டை சேர்ந்த, தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத் துள்ள கறுப்புப்பணத்தை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளது குறித்த
விபரங்களை அளிப்பதற்கான ஒப்பந்தம், அந்நாட்டு அரசுடன் செய்யப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்த முடிவை, சுவிஸ் அரசு, சமீபத்தில் உறுதிப்படுத்தியது. வங்கிகளில் ...

தினகரன், அமைச்சர்கள் மீது வழக்கு பதிய தேர்தல் கமிஷன் பரிந்துரை

Posted: 18 Jun 2017 11:08 AM PDT

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த, பணப்பட்டுவாடா விவகாரத்தில், திடீர் திருப்பமாக, அ.தி.மு.க., சசிகலா அணி வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரான, ஜெயலலிதா இறந்த பின், அந்தத் தொகுதிக்கு, ஏப்ரல், ௧௨ல் இடைதேர்தலை,தேர்தல் கமிஷன் அறிவித்தது. ...

கோர்ட் தடையை மீறிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பதிவுத்துறையில் ஆட்டம் ஆரம்பம்

Posted: 18 Jun 2017 11:13 AM PDT

உயர்நீதிமன்ற தடையை மீறி, அங்கீகாரமில் லாத மனைகள் விற்பனையை பத்திரப்பதிவு செய்ததால், ௨௬௦ அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி, அவர்க ளில், 54 பேருக்கு பதவி உயர்வு வழங்க, பதிவுத் துறை முடிவு செய்துஉள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தடை விதித்தது
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல், தடை விதித்தது. இந்த தடையை மீறி, அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனை பதிவு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஆரம்பத்தில் மறுத்த பதிவுத்துறை, பின், 9,760 ...

நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி; மத்திய அரசிடம் தர ரஜினிகாந்த் சம்மதம்

Posted: 18 Jun 2017 11:15 AM PDT

சென்னை: 'அறிவித்தபடி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதி தாருங் கள்' என, நடிகர் ரஜினியை சந்தித்த விவசாயிகள் வலியுறுத்தினர்.

சில ஆண்டுகளுக்கு முன், காவிரி பிரச்னைக் காக, சென்னையில், உண்ணாவிரதம் இருந்த நடிகர் ரஜினி, 'நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, தன் பங்களிப்பாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்' என்றார். ஆனாலும், நதிகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு இன்னும் செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சென்னை,
போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்,நேற்று அவரை சந்தித்துப் ...

ஜனாதிபதி வேட்பாளர் யார்? அத்வானிக்கு ஆதரவாக போஸ்டர்

Posted: 18 Jun 2017 11:19 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பா ளராக, தே.ஜ., கூட்டணி யாரை அறிவிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 'அத்வானியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, டில்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால், பா.ஜ.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம், ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் துவங்கிவிட்டது; இதையடுத்து, ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
பா.ஜ., குழு
மத்தியில் ஆளும், பா.ஜ., ...

தடுப்பணைகள் கட்டும் விவகாரம்; தமிழக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்

Posted: 18 Jun 2017 11:22 AM PDT

வேலுார்: ''பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை, தமிழக அரசு அமைக்க வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

வேலுார் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து, குப்பம் செல்லும் சாலையில், ஆந்திர மாநிலத்திற்கு சொந்தமான பாலாறு என்ற கிராமத்தில், பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணையை, ஆந்திர மாநில அரசு கட்டி வருகிறது. மேலும், இதற்கு அருகில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள, கங்குந்தி தடுப்பணையின் உயரத்தை, 5ல் இருந்து, 15அடியாக உயர்த்தியு உள்ளது.தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ...

பிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'

Posted: 18 Jun 2017 12:08 PM PDT

பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும்.
ஆனால், தற்போது ...

பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவியரின் சீருடை நீக்கப்பட்ட கொடூரம்

Posted: 18 Jun 2017 01:00 PM PDT

பெகுசராய்: பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவியரின் சீருடைகளை கழற்றி, அவர்களை ஆசிரியை வெளியே அனுப்பிய சம்பவம், பீஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்தவர், சுன்சுன் சாஹ். இவருக்கு, 7 மற்றும் 6 வயதில், இரண்டு மகள்கள். இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளியில், இரண்டு மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™