Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Posted: 14 Jun 2017 01:14 PM PDT

சென்னையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, சூளைமேட்டில் இந்தப் பணப்பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமரன் என்பவரது காரிலிருந்து இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையுடன் இணைந்து வருமான வரித்துறையினர் ரூபாய் 2 கோடி மதிப்பிலான இந்தப் பழைய நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அவரது காரில் சோதனை நடத்தினர். காவல்துறையினரும் ...

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

Posted: 14 Jun 2017 12:43 PM PDT

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின  வாழ்த்துக்கள்.



நலமும் வளமும் எந்நாளும் உம்மோடு இருக்க வாழ்த்துகள்.

ரமணியன்

திறந்தவெளி கழிப்பறைக்கு தீர்வு: உ.பி., மாநிலத்தில் அசத்தல் திட்டம்

Posted: 14 Jun 2017 12:06 PM PDT

கோண்டா: உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில், மக்கள் வழிபடும் வேம்பு உள்ளிட்ட மரங்களை நடுவதன் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது. துாய்மை இந்தியா: உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்குள்ள கோண்டா, மிகவும் பின்தங்கிய பகுதி. நாட்டின் சுத்தமான நகரங்கள் பட்டியலில், 434வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில், மக்கள் பெரும்பாலும், திறந்த வெளிகளில் மலம் கழித்து வருகின்றனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் கனவு ...

குண்டான குழந்தைகள்: இந்தியாவிற்கு 2வது இடம்

Posted: 14 Jun 2017 12:05 PM PDT

வாஷிங்டன் : உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இந்தியாவில் 14.4 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. உலக அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக உடல் எடை காரணமாக நோய்களும் அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. 2015ல் ...

லண்டனில் கிரென்பெல் டவர் --எரிந்து கொண்டிருக்கிறது

Posted: 14 Jun 2017 11:59 AM PDT

[b] லண்டனில் கிரென்பெல் டவர் --எரிந்து கொண்டிருக்கிறது[/b] லண்டன்: சென்னை சில்க்ஸ் பற்றி எரிந்ததைப் போலவே லண்டன் 24 மாடி கட்டிடமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லண்டனில் கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடம் பல மணிநேரமாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுக்கடங்காமல் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தைப் போலவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ...

உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த எம்.பி. உயிரிழப்பு

Posted: 14 Jun 2017 11:53 AM PDT

விர்ஜினியா:
அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த
எம்.பி. உயிரிழந்தார். விர்ஜினியாவில் பேஸ்பால் பயிற்சியின்
போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் மீது
துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

படுகாயமடைந்த ஸ்டீவ் ஸ்கேலிஸ் சிகிச்சைக்காக மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
-
--------------------
தினகரன்

சாம்பியன்ஸ் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

Posted: 14 Jun 2017 11:50 AM PDT

கார்டிப்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 37.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ...

நூல்கள் தேவையா !!!!!

Posted: 14 Jun 2017 11:14 AM PDT

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்

டெஸ்லா--எலக்ட்ரிக் கார்

Posted: 14 Jun 2017 07:57 AM PDT

வியக்க வைத்த டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்! எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா. அதி செயல்திறனும், சொகுசு வசதிகளிலும் மித மிஞ்சிய மின்சார கார்களை டெஸ்லா தயாரித்து வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு வசதிகளிலும் பெயர் பெற்று விளங்குகின்றன. உலகின் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய எஸ்யூவி மாடலாக மாடல் எக்ஸ் காரை டெஸ்லா கூறி வருகிறது. இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டு இரண்டு ...

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012

Posted: 13 Jun 2017 11:39 PM PDT

ஆனந்த விகடனில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆண்டி வாரியாக தொகுத்துள்ளேன்

விகடன் சிறுகதைகள் 2011
https://db.tt/h089pRZ8

விகடன் சிறுகதைகள் 2012
https://db.tt/8IrnaiDd

பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்

Posted: 13 Jun 2017 04:50 PM PDT

லக்னோ: 'பட்டமளிப்பு விழாவின்போது, கறுப்பு நிற கவுன் அணியும் பிரிட்டிஷ் கால நடைமுறைக்கு மாற்றாக, பாரம்பரிய உடையான, பைஜாமா, குர்தா, சுடிதார் அணிய வேண்டும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., கூறியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் கான்பூரில் அமைந்துள்ளது, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம். வரும், 15 மற்றும் 16ல், இதன் பட்டமளிப்பு விழா நடக்கிறது. ஐ.ஐ.டி.,யின் பொன்விழாவையொட்டி நடக்கும் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில், டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் ...

புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

Posted: 13 Jun 2017 04:43 PM PDT

புதுடில்லி: ஏ வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு மிகுந்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™