Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவக்கம்!

Posted: 14 Jun 2017 09:07 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன், நேற்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் நேற்று துவங்கின.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் முடிகிறது. இதையொட்டி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் ஜூலை, 17ல், நடக்கிறது.ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் நேற்று முறைப்படி வெளியிட்டது. இதை யடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள் நேற்று துவங்கின. 28ம் தேதி வரை, வேட்புமனு தாக்கல் செய்யலாம்.ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது ...

12 நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுது: ரூ.1.78 லட்சம் கோடி வாராக்கடன் பாக்கி

Posted: 14 Jun 2017 09:21 AM PDT

மும்பை: வாராக் கடனில், 25 சதவீதம் அளவுக்கு கடன் பாக்கி வைத்துள்ள, நாட்டின் மிகப் பெரிய, 12 நிறுவனங்களிடம் இருந்து, 1.78 லட்சம் கோடி ரூபாயை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளின் மிகப் பெரிய பிரச்னையாக, வாராக் கடன் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, வங்கிகளின் மொத்த வாராக் கடன், 7.11 லட்சம் கோடி ரூபாய்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ரிசர்வ் வங்கி சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி, கடன் பாக்கி வைத்துள்ள நிறுவனங் கள் மற்றும் தனிநபரை, திவாலானவராக அறிவித்து, சொத் ...

அமைச்சர்கள் மேஜையில் ஜெ., படம் 'மிஸ்சிங்'

Posted: 14 Jun 2017 09:54 AM PDT

சட்டசபையில், பெரும்பாலான அமைச்சர் களின் மேஜையில், நேற்று, ஜெ., படம் இல்லை.

ஜெ., முதல்வராக இருந்தபோது, அமைச்சர்கள் அனைவரும், சட்டசபைக்கு வந்ததும், தங்கள் மேஜை மீது, ஜெ., படம் உள்ள டைரி அல்லது நோட்டை வைப்பது வழக்கம். ஜெ., படம் இருப்பது, அனைவருக்கும் தெரிவது போல் வைப்பர்.ஜெ.,வைபாராட்டி உறுப்பினர்கள் பேசினாலோ, ஜெ., ஏதேனும் திட்டங்களை அறிவித்தாலோ, அமைச்சர்கள் மேஜையை தட்டுவர். அப்போது, ஜெ., படம் மீது கை படாதவாறு பார்த்துக் கொள்வர்.ஜெ., படத்தை, மேஜை மீதுபய பக்தியுடன் வைப்பர்; சபை முடிந்த பின், பய பக்தியுடன் எடுத்துச் செல்வர்.தற்போது அந்த காட்சிகள் ...

மீண்டும் பிரச்னை கிளப்புவோம்! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Posted: 14 Jun 2017 09:57 AM PDT

சென்னை:எம்.எல்.ஏ.,க்கள் பேரம் தொடர்பான விவகாரத்தை, இன்றும் சட்டசபையில் எழுப்பப் போவதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் நேற்று கூறியதாவது:
குதிரை பேரம் அடிப்படையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்றுள்ளனர் என்பது, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் வாக்குமூலம் தெளிவு படுத்துகிறது. எனவே, இந்த ஆட்சி கலைக்கப் பட வேண்டும். ஆட்சியாளர்கள், ராஜி னாமா செய்ய வேண்டும். ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பை, சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும்.இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்; யாருக் கெல்லாம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் ...

மத்திய அமைச்சர் மீது ஒடிசாவில் முட்டை வீச்சு

Posted: 14 Jun 2017 10:17 AM PDT

கேந்திரபரா, ஒடிசாவில், மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள், முட்டைகள் எறிந்து, கறுப்புக்கொடி காட்டியசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஒடிசாவில், பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் கேந்திரபரா மாவட்டத்திற்கு மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜுவல் ஓரம் நேற்று வந்திருந்தார். அங்கு, பொது நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜுவல் ஓரம் சென்றபோது, ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சித் தொண்டர்கள், அவர் வாகனம் மீது முட்டைகளை வீசியெறிந்தனர்; கறுப்புக் ...

சோலார் மின் நிலையத்திற்கு புதிய நடைமுறை: பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறையும்?

Posted: 14 Jun 2017 10:18 AM PDT

மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களில், 'நெட் மீட்டர்' கணக்கீடு தொடர்பாக, மின் வாரியம், புதிய முறையை அமல்படுத்த உள்ளது.

வீடுகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற் றின் மாடியில், மேற்கூரை சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற் றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கட்டடத் தின் உரிமையாளர்கள் பயன்படுத்தி யது போக, எஞ்சிய மின்சாரத்தை, மின் வாரியத்துக்கு விற்கலாம். அதற்காக, 'நெட் மீட்டர்' பொருத்தப்படுகிறது.
அந்த மீட்டரில், உரிமையாளர், மின் வாரியத் துக்கு தந்த சூரியசக்தி மின்சார அளவு; அவர் பயன்படுத்திய, மின் வாரிய மின்சார அளவு ஆகிய விபரங்கள் ...

எதிர்பார்த்தது போலவே தமிழக சட்டசபையில் அமளி!

Posted: 14 Jun 2017 10:26 AM PDT

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, கடும் அமளியும், களேபரமும் ஏற்பட்டது.

கூவத்துாரில் நடந்த குதிரை பேர விவகாரம் குறித்து, சபாநாயகர் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். கூச்சல், குழப்பம் நிலவியதை தொடர்ந்து, தி.மு.க.,வினரை கூண்டோடு வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார்; சபை காவலர்களால், தி.மு.க.,வினர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் ...

ரூ.10 லட்சம் மேல் வருவாய்? சமையல் காஸ் மானியம் 'கட்!'

Posted: 14 Jun 2017 10:29 AM PDT

தமிழகத்தில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாயக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை, எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்த துவங்கியுள்ளன.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. அதற்கு, சந்தை விலையில், காஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின், மத்திய அரசு வழங்கும் சிலிண்டர் மானிய தொகையை, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கின்றன. மத்திய அரசு, நிதி நெருக்கடியை சமாளிக்க, வசதி ...

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

Posted: 14 Jun 2017 10:36 AM PDT

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலை நகர் லண்டனில் உள்ள, 24 தளங்கள் உடைய அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று நடந்த தீ விபத்தில், 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள னர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

மேற்கு லண்டனின் லாட்டிமர் சாலையில் லான்காஸ்டர் மேற்கு எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளது, 24 மாடிகள் உடைய கிரென்ர பெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.இதில், 100க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வந்தன. உள்ளூர் நேரப்படி, நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.விபத்து ஏற்பட்டு, புகை மண்டலத்துக்குள் ...

ஜி.எஸ்.டி., சட்ட மசோதா அறிமுகம்

Posted: 14 Jun 2017 11:02 AM PDT

சென்னை:சட்டசபையில், கடும் கூச்சல், குழப்பத்திற்கு இடையே, ஜி.எஸ்.டி., சட்ட மசோதா, நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1ல் அமலாக உள்ளது. இது, இந்தியாவை ஒரே சந்தையாக மாற்ற வழிவகுக்கும். ஜி.எஸ்.டி., வரியானது, மத்திய, மாநிலம் மற்றும் ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., என, மூன்று வகைகளாக பிரிக்கப் பட்டு உள்ளது.
கட்டாயம்
அதில், மாநில, ஜி.எஸ்.டி., மசோதாவை, அனைத்து மாநிலங்களும், சட்டசபையில் அறிமுகம் செய்து, சட்டம் இயற்ற வேண்டியது கட்டாயம். அதன்படி, உத்தர பிரதேசம், டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல ...

சட்டபேரவை முடியும் வரை சென்னை போலீசாருக்கு 'நோ' லீவு

Posted: 14 Jun 2017 11:59 AM PDT

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று துவங்கிய நிலையில், ஜூலை, 19 வரை, விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை, இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கவும், போலீசார், அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும், உயரதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று(ஜூன் 14) துவங்கியது. இந்நிலையில், 'லாக்கப் டெத்' தவிர்க்கும் வகையில், விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை, மாலை, 6:00 மணிக்கு மேல், போலீஸ் ஸ்டேஷன்களில் வைக்கக் கூடாது.
போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் ஆகிய சம்பவங்கள் நடக்கும் நிலையில், போலீசார், அதிகாரிகள் ...

'நெடுஞ்சாலை மதுக்கடை தடை : பீர், ஒயின் கடைக்கும் உண்டா?'

Posted: 14 Jun 2017 01:08 PM PDT

புதுடில்லி: 'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இயங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, பீர், ஒயின் கடைகளுக்கும் உண்டா?' என, விளக்கம் கேட்டு, கேரளா பீர் மற்றும் ஒயின் கடை உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இயங்குவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இந்த தடை, ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள பீர் மற்றும் ...

விரைவு போக்குவரத்து கழகம் மந்தம் : தனியார் பஸ்களை தேடும் பயணியர்

Posted: 14 Jun 2017 02:05 PM PDT

அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி.,யின் செயல்பாடுகள், ஆமை வேகத்தில் உள்ளதால், தொலைதுார பயணத்துக்கு, தனியார் வாகனங்களை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு, 419 பஸ்களையும், மாநிலத்திற்குள், 664 பஸ்களையும் இயக்கி வருகிறது.
பயணியருக்கு விரைவான சேவை வழங்கும் வகையில், 2011 முதல், www.tnstc.in என்ற, இணையதளம் வழியே, டிக்கெட் பெறும் முறை செயல்படுகிறது. 2015 - 16ல், 44.73 சதவீதமாக இருந்த, டிக்கெட் புக்கிங், படிப்படியாக குறைந்து வருகிறது. பராமரிக்கப்படாத பஸ்கள், ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™