Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'நீட்' தேர்வு அத்துமீறல்: 4 ஆசிரியைகள் 'சஸ்பெண்ட்'

Posted: 09 May 2017 09:24 AM PDT

கண்ணுார்: கேரளாவில், 'நீட்' எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம், சோதனை என்ற பெயரில் மிகக் கடுமையாக நடந்து கொண்ட, நான்கு ஆசிரியைகள், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர்.

'நீட்' எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும், ஞாயிற்றுக் கிழமை நடந்தது. அப்போது, கேரளா, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில், தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ, மாணவியரிடம், கண்காணிப்பாளர்கள் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முழுக்கைச் சட்டை அணிந்த மாணவர்கள், கம்மல், மூக்குத்தி, கால் கொலுசு அணிந்து வந்த ...

தேசிய கட்சிகளின் வருவாய் எவ்வளவு?

Posted: 09 May 2017 09:27 AM PDT

புதுடில்லி: கடந்த, 2015 - 16 நிதிஆண்டில், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., திரிணமுல் காங்கிரஸ் ஆகிய ஐந்து தேசியக் கட்சிகளின் மொத்த வருமானம், 200 கோடி ரூபாய்; அதில், 60 சதவீதத்தை செலவழித்துள்ளதாக இந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ள தாவது:பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட7தேசியக் கட்சிகள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வரவு - செலவு கணக்கை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2015 - 16 நிதி ஆண்டுக்கான கணக்கை, 2016, அக்., 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். ...

மனைப்பிரிவுகள் வரன்முறையில் சிக்கல்: அதிகாரிகள் குழப்பம்

Posted: 09 May 2017 09:38 AM PDT

அங்கீகாரமில்லாத மனைகள் போல, மனைப் பிரிவுகளை வரன்முறை செய்யவும், தமிழக அரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால், அவற்றை அமல்படுத்துவதில் சிக்கல் கள் ஏற்படும் என, நகரமைப்புத்துறை அதிகாரி கள் தெரிவித்துஉள்ளனர்.

தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்யவும், விவசாய நிலங்களை, வேறு தேவைகளுக்கு மாற்றுவதை கட்டுப் படுத்தவும், தமிழக அரசு, சமீபத்தில் விதிமுறை களை அறிவித்தது. இவற்றில், தனி மனைகளுக் கான வரன்முறை விதிகள் போல, மனைப்பிரிவு களை வரன்முறை படுத்துவதற்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
விதிகள் என்ன?* மூன்றில் ஒரு ...

பழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்!

Posted: 09 May 2017 09:57 AM PDT

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், அரசை மிரட்ட துவங்கியுள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, 12 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள், பழனிசாமி அரசுக்கு எதிராக, பகிரங்க போர்க்கொடி துாக்கி உள்ளனர். பழனிசாமி அரசுக்கு, 122 எம்.எல். ஏ.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதில், தினகரனுக்கு ஆதரவாக,எட்டு 8 எம்.எல். ஏ.,க் கள் உள்ளனர். அவர்கள், பழனிசாமி க்கு கட்டுப்படாமல், கட்சிக்குள் தனி அணியாக செயல்படுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின எம்.எல்.ஏ.,க்கள், 27 பேர், தங்கள் சமுதாயத் திற்கு, கூடுதலாக அமைச்சர்பதவி கேட்டு ...

இணைப்பு பேச்சு தோல்வி வார்த்தை போர் துவக்கம்!

Posted: 09 May 2017 10:00 AM PDT

அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டதால், இரு அணியின ரும், ஒருவரை ஒருவர் விமர்சிக்க துவங்கி உள்ளனர்.

மே, 5ல், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற் றார். அவர் பேசும் போது, 'தமிழக சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் வர வாய்ப்புள்ளது' என்றார்.இதற்கு, பழனிசாமி அணியைச் சேர்ந்த, அமைச்சர் ஜெயகுமார், 'பன்னீர் கருத்து விஷ மத்தனமானது. அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஜெ., ஆட்சி தொடர வேண்டும் என, நினைக்கின்றனர்' என்றார். அதற்கு,பன்னீர் அணியைச் சேர்ந்த, ...

அமைச்சரை காப்பாற்ற தில்லு முல்லு : போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை?

Posted: 09 May 2017 10:03 AM PDT

சென்னை: பண மோசடி புகாரில், அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்காமல், தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்ட, டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள, கீழவாளாச்சேரி செட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர், எஸ்.வி.எஸ்.குமார்; ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ளார்.
ரூ.30 லட்சம் :
இவர், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, தனக்கு சொந்தமான வீட்டை ஆக்கிரமித்தோரை காலி செய்ய, அமைச்சர் காமராஜருக்கு, அவரது உறவினர் ராமகிருஷ்ணன் வாயிலாக, 30 லட்சம் ரூபாய் ...

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை!

Posted: 09 May 2017 10:42 AM PDT

புதுடில்லி:கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ண னுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித் துள்ளது. ஐகோர்ட் நீதிபதிக்கு, கோர்ட் அவ மதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன், 61, சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது குறித்து, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு, அவர் கடிதம் எழுதி இருந்தார். இதை கோர்ட் ...

டில்லி சட்டசபையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி... காமெடி!:ஓட்டு இயந்திரத்திலும் முறைகேடு செய்யலாமாம்

Posted: 09 May 2017 10:47 AM PDT

புதுடில்லி:டில்லி சட்டசபையில் நேற்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறை கேடுகள் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் சோதனையை, ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., சவுரவ் பரத்வாஜ் செய்து காட்டியது, சிரிப்பை ஏற்படுத்தியது.

'பஞ்சாப் சட்டசபை தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம்' என, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக கூறி வந்தார். மாறாக, பஞ்சாப் தேர்த லில், காங்., வென்றது; ஆம் ஆத்மி, இரண்டாம் இடம் பெற்றது.
செயல்முறை விளக்கம்
இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத கெஜ்ரி வால், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் செய்யப் பட்ட ...

கோர்ட் அவமதிப்பு வழக்கிலும் குற்றவாளி: மல்லையாவுக்கு நெருக்கடி

Posted: 09 May 2017 11:01 AM PDT

புதுடில்லி:'கோர்ட் உத்தரவை மீறி, தன் குழந்தைகளின் பெயருக்கு, 250 கோடி ரூபாயை மாற்றிய, தொழிலதிபர் விஜய் மல்லையா, கோர்ட் அவமதிப்பு குற்றவாளி' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள மல்லையாவுக்கு, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய உத்தரவால், நெருக்கடி அதிகரித்துள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த மதுபானத் தொழிலதிபர் விஜய் மல்லையா, 'கிங்பிஷர்' என்ற பெயரில் விமான சேவை நிறுவனம் துவக்க, வங்கிக ளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப் பிச் செலுத்தாமல் மோசடி செய்தார். சட்டரீதி யில், வங்கிகள் நடவடிக்கை எடுத்ததால், பிரிட்டனுக்கு ...

ஜாதவ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை

Posted: 09 May 2017 11:32 AM PDT

புதுடில்லி: உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை விதித்துள்ளது.
மரண தண்டனை:
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை மாஜி அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் ஜாதவை மீட்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பார்லிமென்டில் மத்திய அரசு ...

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

Posted: 09 May 2017 12:37 PM PDT

புதுடில்லி: வரும், 26ல், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்து, மூன்றாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. அதன் பின், மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவும், கட்சி மற்றும் அரசில்ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து, தீவிரஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள சிலரை, கட்சிப் பணியில் ஈடுபடுத்த, அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களின் இடத்தில் வேறு சிலர், புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள். ...

தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை

Posted: 09 May 2017 01:37 PM PDT

சென்னை: தமிழகத்தில் கீழ் இயங்கும் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1994ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கையை ரத்து செய்து விட்டு தமிழில் மட்டுமே தீர்ப்புகளை எழுத வேண்டும் என்று உத்தரவிடக் கோரி 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் ...

ஏமனில் கடத்தப்பட்ட பாதிரியார் இந்திய அரசு விடுவிக்க கோரிக்கை

Posted: 09 May 2017 02:07 PM PDT

ஏடன்: ஏமனில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுனலில், தன்னை காப்பாற்றுமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டையத்தைச் சேர்நத பாதிரியார் தாமஸ் உழுனலி்ல், ஏமனில் ஏடன் தெற்குநகரில் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த போது கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.எஸ்.பயங்கரவாதிளால் துப்பாக்கி முனையில்கடத்திச் செல்லப்பட்டார்., பாதிரியார் கடத்தப்பட்டதை உறுதி செய்திருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ...

'பயங்கரவாதிகளால் எச்.ஐ.வி., பரவலா?'

Posted: 09 May 2017 03:00 PM PDT

தமிழகத்தில், மருத்துவ மாணவர்கள் என்ற பெயரில், இலவசமாக நீரிழிவு பரிசோதனை செய்வதாக கூறி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர், எச்.ஐ.வி., வைரஸ் தொற்றை, பொதுமக்களுக்கு பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்ற தகவல், சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில், ''நீரிழிவு பரிசோதனைக்காக, மருத்துவ கல்லுாரி மாணவர்களை பயன்படுத்தவில்லை. இந்த தகவல் முற்றிலும் வதந்தி,'' என்றார்.
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க, திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் கூறுகையில், ''எச்.ஐ.வி., வைரஸ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™