Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெண்களுக்கு வரிச்சலுகை, இலவச மருத்துவம் அசத்தல்!:மத்திய அரசின் தேசிய கொள்கையில் சிறப்பு திட்டம்

Posted: 07 May 2017 09:07 AM PDT

புதுடில்லி: பெண்களுக்கு, வருமான வரியை குறைக்கவும், ஆதாருடன் இணைந்த, சுகாதார திட்டத்தைஅறிமுகம் செய்யவும் வசதியாக, தேசிய கொள்கையை வகுக்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

நாட்டு மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளபோதும், அவர்களின் வாழ்வாதாரம் போதிய அளவில் உயரவில்லை என, ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதை அடுத்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த் தவும், பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுக்கான பல்வேறு புதிய சலுகைகளை வழங்கும் வகை யில், தேசிய கொள்கை வகுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுகாதார வசதி
இதன்படி, திருமணமாகாமல் தனியாக ...

'தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக வடகிழக்கு மாநிலங்களை உருவாக்குவோம்'

Posted: 07 May 2017 09:10 AM PDT

புதுடில்லி: தென்கிழக்கு ஆசியாவின் நுழை வாயிலாக, வடகிழக்கு மாநிலங்களை உரு வாக்க, மத்திய அரசு இலக்கு நிர்ண யித்துள்ள தாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேகாலயாவின் ஷில்லாங் நகரில், தன்னார்வ அமைப்பான, 'பாரத் சேவாஸ்ரம்'சங்கத்தின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்,டில்லியில்இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக, வடகிழக்கு மாநிலங்களைஉருவாக்குவதை இலக் காக வைத்து, அரசு செயல்பட்டு வருகிறது. இத்த கைய நுழைவாயில், அசுத்தமாக இருந்தால், ...

கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கினார்: முன்னாள் அமைச்சர் 'பகீர்'

Posted: 07 May 2017 09:13 AM PDT

புதுடில்லி:''டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றொரு அமைச்சரிடம் இருந்து, இரண்டு கோடி ரூபாய் பணம் வாங்கியதை என் கண்ணால் பார்த்தேன்,'' என, முன்னாள் அமைச்சர், கபில் மிஸ்ரா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந் துள்ளது. பஞ்சாப், கோவா சட்ட சபை தேர்தல் தோல்வி, டில்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி என, அரசியல் ரீதியில் கடும் பின்னடைவை ஆம் ஆத்மி சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், கட்சியிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. கட்சியின் நிறுவனத் தலைவர் களில் ஒருவரான ...

யோகி பெயரில் மாம்பழம்; உ.பி.,யில் அசத்தல்

Posted: 07 May 2017 09:14 AM PDT

லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல மாம்பழ ஆராய்ச்சியாளரான, ஹாஜி கலீமுல்லா, தான் புதிதாக கண்டுபிடித்துள்ள மாம்பழத்துக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை வைத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ., அரசு அமைந்தது முதல், இரண்டு மாதங்களாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார். இங்குள்ள மலிகாபாத் பகுதியைச்
சேர்ந்தவர் ஹாஜி கலீமுல்லா, 74. தன்தோட்டத் தில் விதவிதமான மாம்பழவகைகளை உருவாக்கி, பல்வேறு சாதனை களை புரிந்தவர்.மாம்பழ மனிதர் எனப்படும் இவர், ...

சேகர் ரெட்டியிடம் விலை போன மந்திரிகள் மீது நடவடிக்கை... பாய்கிறது?

Posted: 07 May 2017 10:02 AM PDT

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி யிடம் சிக்கிய, 'டைரி'யில், 300 கோடி ரூபாயை அவர், லஞ்சமாக வாரி இறைத்தது அம்பலமாகி உள்ளது. அவரிடம் விலை போன, அமைச்சர் கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ள கடிதம், கோட்டையை கலங்க வைத்துள்ளது.

மத்திய அரசு, 2016, நவ., 8ல், செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட பின், பிரபல மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதிய, 2,000 ...

சட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்: அலட்சியத்தால் அவதிப்பட்ட அவலம்

Posted: 07 May 2017 10:07 AM PDT

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில், தேர்வு நிபந்தனைகளை படிக்காமல் வந்த மாணவர் கள், சட்டையை கிழித்து விட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.

நாடு முழுவதும், 103 நகரங்களில், 'நீட்' நுழைவு தேர்வு நேற்று நடந்தது.தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட, 11.35 லட்சம் பேர், இத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய இந்த தேர்வில், முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.
அணியக்கூடாது
அதாவது, 2015ல் நடந்த, 'நீட்' தேர்வின் போது, பலர் ...

84 லட்சம் பேருக்கு வேலை இல்லை; முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி

Posted: 07 May 2017 10:09 AM PDT

சென்னை: 'தமிழகத்தில், 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலையின்றி காத்தி ருக்கின்றனர்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:
'அ.தி.மு.க., அரசு, ஒரு லட்சம் பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளது' என, முதல்வர் பழனிசாமி பேசியிருப்பது, வேலையின்றி தவிக்கும் இளை ஞர்களுக்கு, வெந்த புண்ணில்,வேல் பாய்ச்சுவ தாக உள்ளது.6ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், இளைஞர்களுக்கு, எவ்வித வேலை வாய்ப்பை யும் உருவாக்காததால், 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து ...

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்?

Posted: 07 May 2017 10:15 AM PDT

'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என, இரண்டாகப் பிரிந்துள்ளது.
தேர்தல் ரத்து
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணிகளும் பரபரப்பாக செயல்பட்டன. ஆனால், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த ...

மனைகள் வரன்முறையால் ரூ.10 ஆயிரம் கோடி: தமிழக அரசுக்கு வருவாய் வரும் என தகவல்

Posted: 07 May 2017 10:25 AM PDT

'தமிழக அரசு அறிவித்துள்ள, அங்கீகாரமில் லாத மனைகளுக்கான வரன்முறை திட்டத்தை செயல்படுத்தினால், 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்' என, மதிப்பிடப்பட்டுள் ளது. கட்டணத்தை முழுமையாக வசூலித்து, முறையாக செலவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை மேம்படும்.

விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்கக்கோரி, தொடரப்பட்ட வழக்கில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித் தது. உயர் நீதிமன்றம் எழுப்பிய பல கேள்வி களுக்கு, தமிழக அரசின் பதிவுத்துறை, வருவாய் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உரிய பதில் ...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மேக்ரன் வெற்றி

Posted: 07 May 2017 12:06 PM PDT

பாரீஸ்: பிரான்ஸின் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரன்(39) தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் பிரான்ஸின் இளம் அதிபர் எனும் பெயர் பெற்றார்.
அதிபர் தேர்தல்:
பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதிவிக்காலம் நிறைவடைவதையொட்டி, அங்கு தேர்தல் நடைபெற்றது. பிரான்ஸின் புதிய அதிபரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் ‛என் மார்சே' அணியின் இமானுவேல் மேக்ரன் மற்றும் ‛தேசிய முன்னணிக் கட்சி'யின்ல் மெரைன் லி பென் இருவரிடையே கடும் போட்டி நிலவியது.
இளம் அதிபர்:
ஏப்.,23ம் தேதி நடைபெற்ற ...

ரஜினியுடன் நக்மா திடீர் சந்திப்பு :அரசியல் குறித்து பேசினாரா?

Posted: 07 May 2017 01:15 PM PDT

சென்னை: நடிகர் ரஜினியை, சென்னையில் உள்ள, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில், அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலர், நக்மா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
சந்திப்பிற்குப் பின், நக்மா அளித்த பேட்டி: ரஜினியும், நானும் நீண்ட கால நண்பர்கள். திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளோம். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் சந்திப்பு இருந்தது. சாதாரண சந்திப்பு தான். அரசியல் கலப்பு எதுவும் இல்லை; அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசியலுக்கு, ரஜினி வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அரசியலுக்கு வந்தால், நிச்சயம் வெற்றி பெறுவார். ...

பல வண்ண சுழல் விளக்கு : ராணுவத்துக்கு அனுமதி

Posted: 07 May 2017 02:12 PM PDT

புதுடில்லி: முக்கியமான பணிக்கு செல்லும் போது மட்டும், தங்களின் வாகனங்களில், பல வண்ண சுழல் விளக்குகள் பயன்படுத்த, போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நாட்டில், வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
'ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா சபாநாயகர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் மட்டுமே தங்கள் வாகனங்களில், சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்தலாம்' என, மத்திய அரசு அறிவித்தது.
மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் ...

விளம்பரத்தில் மோடி படம் : அனுமதி கேட்டது யார்?

Posted: 07 May 2017 02:50 PM PDT

புதுடில்லி: 'விளம்பரங்களில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி கேட்டது யார் என்பதை தெரிவிக்க இயலாது' என, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்தாண்டு பத்திரிகைகளில், பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை குறிப்பிட்டும், 4ஜி சேவையை குறிப்பிட்டும் பெரியளவில் விளம்பரங்களை வெளியிட்டது. அதில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™