Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வீட்டுக்கு வீடு மின்சாரம்: கேரள அரசு சாதனை

Posted: 06 May 2017 11:43 AM PDT

திருவனந்தபுரம்: மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, கேரள அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில், குஜராத், ஆந்திராவை அடுத்து கேரளாவும் இணையவுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்கு, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க, மாநில அரசு திட்டமிட்டது.
மாநில அரசு ...

சூரிய மின்சக்தி அமைப்பதில் தமிழக அரசு அலட்சியம்

Posted: 06 May 2017 06:47 AM PDT

விளையாட்டு மைதான பார்வையாளர்கள் மாடத்தில், மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதில், தமிழக அரசு, அலட்சியம் காட்டி வருகிறது.

மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரிய சக்தி மின் உற்பத்தியை ஊக்குவிக்க, மானியம், கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. இதையடுத்து, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், அரசு மற்றும் தனி யார் நிறுவனங்கள், சூரிய சக்தி மின் நிலையங் களை அதிகம் அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. கர்நாடகாவில், விளையாட்டு மைதானங்களில், சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, மின் வாரிய ...

அணிகள் இணைப்பு விவகாரத்தில் திருப்பம் பன்னீரும், பழனியும் விரைவில் தனி ஆலோசனை

Posted: 06 May 2017 07:10 AM PDT

அ.தி.மு.க., அணிகள் இணைவதில் உள்ள சிக்கல் தீர, முதல்வர் பழனிசாமியும், முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தனியாக சந்தித்து பேச வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, இருவரும் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் விரும்பு கின்றனர். சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் மட்டும் விரும்பவில்லை.
நிபந்தனை
இணைப்பு பேச்சு நடத்த, இரு அணிகளிலும் குழு அமைக்கப்பட்டதும், இருதரப்பிலும் ...

பிரதமர் மறுப்பு: ஸ்டாலின் கடுப்பு

Posted: 06 May 2017 07:14 AM PDT

பிரதமர் மோடியை சந்திக்க, அனுமதி கேட்டு எழுதிய கடிதத்தை, பிரதமர் அலுவலகம் கண்டு கொள்ளாததால், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், 'அப்செட்' ஆகியுள்ளார்.

சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், காங்., - கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட, 22 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், விவசாயிகள் கடன் தள்ளுபடி, தற்கொலை செய்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, ஸ்டாலின் தலைமையில், அனைவரும், டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முடிவு ...

ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய மந்திரி காமராஜ்... ராஜினாமா?

Posted: 06 May 2017 07:22 AM PDT

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது, 30 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக, ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை யடுத்து, அமைச்சர் காமராஜ், எந்த நேரத்திலும் பதவியை ராஜினாமா செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த, எஸ்.வி.எஸ்.குமார், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது நடவடிக்கை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில், அவர் கூறியிருந்ததாவது: ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நான், சென்னை, மயிலாப்பூரில், 2009ல், வீடு ஒன்றை வாங்கினேன். வீட்டின் ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் தயக்கம் ஏன்?

Posted: 06 May 2017 08:14 AM PDT

இம்மாதம் இரண்டு மாநிலங்களில், இடைத் தேர்தலை அறிவித்த, தலைமை தேர்தல் கமிஷன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியை கண்டுகொள்ளவில்லை.

ஜெ., மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மார்ச்சில் தேர்தலை அறிவித்தது. தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில் போட்டி யிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்தார். ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.அதன் தொடர்ச்சியாக, ...

ஜனாதிபதி ஒப்புதலுக்கே போகாத 'நீட்' மசோதா!

Posted: 06 May 2017 08:30 AM PDT

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழக அரசால் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு போகாமல், மத்திய உள்துறை அமைச்சகத்தில், கிடப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய அளவிலான, 'நீட்' பொது நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
நிறைவேற்றம்
'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து, 'மருத்துவ ...

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில்...பதற்றம்....! எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து

Posted: 06 May 2017 10:07 AM PDT

சண்டிகர், இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில், எல்லை பாதுகாப்பு படை வீரர் கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் இருவரை, பாக்., ராணுவத்தி னர், தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தியது. இதனால், காஷ்மீரிலும், பஞ்சாப் மாநில எல்லையிலும் பதற்றம் காணப்படுகிறது.பஞ்சாப் மாநிலத்தின் பதன் கோட் மாவட்டத்தில், சோதனைச்சாவடி வழியாக, ...

ஆட்சி மாறும் வரை 'அள்ளுவதற்கு' திட்டமா? : சர்ச்சையை கிளப்புது முதல்வர் அறிவிப்பு

Posted: 06 May 2017 10:53 AM PDT

கோவை:இன்னும் மூன்று ஆண்டுகளில், ஆறுகளில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும் என்ற தமிழக முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு, சூழல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அதிருப்தியையும், சர்ச்சையையும் ஏற்படுத்திஉள்ளது.

தமிழகத்தில், மணல் குவாரிகளை, 2003லிருந்து தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது; அதற்கு முன், தனியாரிடம் இருந்தபோது, மணல் விலையில் பெரும் ஏற்ற, இறக்கம் காணப் பட்டது.ஆனால், அரசே மணல் குவாரிகளை எடுத்தபின், இன்று வரையிலும் மணல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், மணல் விலை, ...

தமிழகத்திற்கு முன்னதாகவே சட்டசபை தேர்தல்...வருமா?பழனிசாமி வட்டாரம் அதிர்ச்சி

Posted: 06 May 2017 11:05 AM PDT

தமிழகத்தில், ஆளும் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், விரைவில், சட்டசபை தேர்தல் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அதே கருத்தை தெரிவித்திருப்பதால், முதல்வர் பழனிசாமி வட்டாரம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. சசிகலா குடும்பத் திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள, பன்னீர்செல்வம் பக்கம், தொண்டர்கள் திரளாக உள்ளனர்.சசிகலா ஆசியுடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள பழனிசாமியை, 122 எம்.எல்.ஏ.,க்கள் ...

இலங்கை செல்ல அகதிகள் ஆசை குவியும் விண்ணப்பங்கள்

Posted: 06 May 2017 01:00 PM PDT

சிவகங்கை: இலங்கை அகதிகள், தங்கள் நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து, அதிகளவில் விண்ணப்பித்துவருகின்றனர். 119 முகாம்கள்இலங்கையில், 1983ல், உள்நாட்டு போர் துவங்கியதில் இருந்து அகதிகள் இந்தியா வரத் துவங்கினர். தமிழகத்தில், 119 முகாம்களில், 67 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.
இதுதவிர, போலீசார் அனுமதியுடன், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் உள்ளனர். 2009 மே மாதம், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், ஒரே சமயத்தில், 5,000 பேர் இலங்கைக்கு சென்றனர். வேலைவாய்ப்புதற்போது, இலங்கையில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிகளவில் ...

70 லட்சம் 'செட் - டாப் பாக்ஸ்' வாங்க முடிவு

Posted: 06 May 2017 02:05 PM PDT

தமிழகம் முழுவதும், 'டிஜிட்டல்' முறையில், கேபிள் இணைப்பு வழங்குவதற்காக, 70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கருவிகளை வாங்க, தமிழக அரசு, 'டெண்டர்' கோரிஉள்ளது.

கேபிள், 'டிவி' ஒளிபரப்பை, டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான உரிமத்தை, தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு, மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான, 'டிராய்' வழங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களுக்கு, செட் - டாப் பாக்ஸ்களை வழங்கி, டிஜிட்டல் ஒளிபரப்பை துவங்காவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என, டிராய் எச்சரித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, பல ஆண்டு ...

உருவாகிறது நக்மா கோஷ்டி: உடைகிறது மகளிர் காங் .,

Posted: 06 May 2017 02:58 PM PDT

அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலர் நக்மா, தனக்கென கோஷ்டி உருவாக்கி வருவதால், தமிழக மகளிர் காங்கிரசில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:மறைந்த, பெண் எம்.எல்.ஏ., பொன்னம்மாளின் பேத்தி, ஜான்சிராணி; தமிழக மகளிர் காங்., தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், மகளிர் அமைப்பை பலப்படுத்தும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில், திண்டுக்கல்லில், இந்திரா நுாற்றாண்டு விழா நடந்தது. அதில், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்., செயலர் செல்லக்குமார் உள்ளிட்டோர், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™