Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நிர்பயா வழக்கு தீர்ப்பு: 10 அம்சங்கள்

Posted: 05 May 2017 05:01 AM PDT

புதுடில்லி: டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டில்லியில் நண்பருடன் பஸ்சில் வந்த மருத்துவ மாணவியை 6 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்து தாக்கினர். படுகாயமடைந்த அந்த மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார். சம்பவத்தை கண்டித்து லட்சக்கணக்கான மாணவர்கள் டில்லியில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் மைனர் என்பதால், குறைந்தளவு தண்டனை கிடைத்தது. மற்ற 4 பேருக்கும் கோர்ட் தூக்கு தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு ...

ஏரி, குளம், கால்வாய், கோவில் நிலத்தில் வீடுகள் கட்ட... தடை!

Posted: 05 May 2017 10:21 AM PDT

சென்னை:அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன்முறை செய்வதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம், ஏரி, குளம், கால்வாய் மற்றும் கோவில் நிலத்தில் வீடுகள் கட்டவும், விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்றவும், தடை விதிக்கப் பட்டு உள்ளது. இது தொடர்பான, இரண்டு அரசாணைகளை, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு, நேற்று தாக்கல் செய்தது.

தமிழகத்தில், அங்கீகாரமற்ற வீட்டு மனை களை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல், தடை விதித்தது. இதையடுத்து, மனைகள் வரன்முறை திட்டம், விவசாய நிலங்கள் பயன்பாடு மாற்றம் தொடர்பான புதிய விதிமுறைகளுக்கு, மே, 2ல் நடந்த ...

மாணவி 'நிர்பயா' வழக்கில் நால்வருக்கு... தூக்கு! சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Posted: 05 May 2017 10:26 AM PDT

புதுடில்லி:நாட்டையே உலுக்கிய, மருத்துவ மாணவி, 'நிர்பயா'வை ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து, தெருவில் வீசியெறிந்து கொலை செய்த வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த, 23 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த, 2012, டிச., 16 இரவில், தன் நண்பருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பஸ் டிரைவர் உட்பட ஆறு பேர், இவ்விருவரையும் தாக்கியுள்ளனர். மேலும், ஓடும் பஸ்சில், மாணவியை, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இரும்பு கம்பியால் அவருடைய பிறப்புறுப்பை தாக்கினர். பின், ...

வாரா கடன்களை வசூலிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வந்தது

Posted: 05 May 2017 10:32 AM PDT

புதுடில்லி:வங்கித் துறையை பெரிதும் பாதித்து வரும், வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கிகள் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசர சட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இதன் மூலம், கடன் வாங்கி செலுத்தாமல் ஏமாற்றியவர்களுக்கு கடிவாளம் போடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

கடன் வாங்கி அதை செலுத்தாமல் ஏமாற்று வோரால், வங்கிகளின் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த, சில ஆண்டுகளில் வங்கிக ளின் வாராக் கடன் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது. இத னால், வங்கிகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த, 2016, டிச., ...

கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை?

Posted: 05 May 2017 10:36 AM PDT

கோவை:கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, சிறையிலுள்ள சசிகலாவிடம், தமிழக போலீசாரால் விரைவில் விசாரணை நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவை சிறையில் தள்ளி, அவரை மரணம் வரை கொண்டு சேர்த்ததில், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சொத்துக்களின் பட்டியலில், மிக முக்கிய இடம் பிடித்தது, கோடநாடு எஸ்டேட். சொத்து குவிப்புப் பட்டியலில், இந்த எஸ்டேட்டின் பரப்பு, 900 ஏக்கர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின், இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ், பல நுாறு ஏக்கர் நிலங்கள் ...

ஐகோர்ட் அதிரடி: டாக்டர்கள் போராட்டம் 'வாபஸ்'

Posted: 05 May 2017 10:40 AM PDT

சென்னை:உயிர் காக்கும் பணி என்பதால், டாக்டர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது. தேவைப்பட்டால், 'எஸ்மா' சட்டத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தியதால், 17 நாட்க ளாக நடந்து வந்த டாக்டர்கள் போராட்டம், 'வாபஸ்' பெறப்பட்டது.

அவசர சிகிச்சை
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், ஏ.கே.வேலன் தாக்கல் செய்த மனு:டாக்டர்களின் பணிமுக்கியத்துவம் வாய்ந்தது;உயிர்களை காப்பாற்றும் பணியில் உள்ளனர். ஏழை, எளியவர்கள், அரசு மருத்துவ மனைகளையே நாடுவர்.தற்போது, அரசு ...

கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் ரூ.34 கோடி முடக்கம்:அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி

Posted: 05 May 2017 10:43 AM PDT

சென்னை:மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியி டம் இருந்து, பறிமுதல் செய்யப்பட்ட, 34 கோடி ரூபாயை, அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

தேவஸ்தான உறுப்பினர்வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர், சேகர் ரெட்டி; சென்னை, பசுல்லா சாலையில், குடும்பத்துடன் வசித்து வந்தார். அ.தி.மு.க., பிரமுகரான இவர், தமிழக அரசின், பல துறைகளில் கான்ட்ராக்ட் எடுத்து, கோடிகளில் புரண்டு வந்தார். மேலும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சேகர் ரெட்டி, எஸ்.ஆர்.எஸ்., என்ற பெயரில், மணல் கான்ட் ராக்ட் தொழிலில் கொடி கட்டி பறந்தார். அவரது செல்வாக்கு, ...

தச்சர் சஜீவனின் பேட்டியால் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி

Posted: 05 May 2017 10:46 AM PDT

கோவை:கோடநாடு பங்களாவில் தச்சு வேலை பார்த்த சஜீவன் அளித்த பேட்டி, ஆளுங்கட்சியி னர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொல்லப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்தது; இதில், மற்றொரு காவலாளியும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப் படும் குற்றவாளிகள் பலர், கேரளாவைச் சேர்ந் தவர்கள் என்பதால், கோடநாடு எஸ்டேட் பங்க ளாவிற்கு மர வேலைகள் செய்த, கேரளாவைச் சேர்ந்த சஜீவன், 40, மீதும் சந்தேகம் எழுந்தது. இதற்கேற்ப, இந்த சம்பவங்களின் போது, அவர் துபாய் சென்றிருந்தார். ...

பன்னீர் பற்றி பேசாதீங்க! மந்திரிகளுக்கு வாய்ப்பூட்டு

Posted: 05 May 2017 10:51 AM PDT

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக வும், பன்னீர்செல்வம் பற்றியும், அமைச்சர்கள் கருத்து கூறுவதற்கு, முதல்வர் பழனிசாமி தடை விதித்துள்ளார்.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளை இணைக்க, சிலர் முயற்சி எடுத்தனர். பேச்சு நடத்த, இருதரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. ஆனால், சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சிலர் தெரிவித்த மாறுபட்ட கருத்துக்களால், பேச்சு துவங்காமல், இணைப்பு முயற்சி தடைபட்டது.அதனால், கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்திக்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சுற்றுப்பயணம் துவக்கி உள்ளார். சசிகலா அணியின ரும்,தங்கள் பணிகளை கவனிக்க துவங்கி உள்ளனர். ...

மும்பை--கராச்சி விமான சேவை மே11 முதல் நிறுத்த பாக்., முடிவு

Posted: 05 May 2017 01:43 PM PDT

கராச்சி: மும்பை -கராச்சி விமான சேவையை மே 11 ஆம் தேதி முதல் நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது, மும்பை---கராச்சி இடையே வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும் சர்வதேச விமானத்தை மே 11 முதல் தற்காலிகமாக நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. மே 11 க்கு பிறகு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த முன்பதிவையும் மேற்கொள்ளவில்லை. விமான சேவை எதனால் நிறுத்தப்படுகிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், தற்போதைய இந்தியா- -பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள பதட்டம், அல்லது வணிக ரீதியிலும் இந்த முடிவுகள் ...

பதற்றமடைந்த மாநிலமாக அசாம்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 05 May 2017 03:01 PM PDT

புதுடில்லி: அசாம் மாநிலம் முழுவதும் பதற்றமடைந்த பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தை ஒட்டியுள்ளா மேகாலயா எல்லைப்பகுதியையும் பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாதம் ராணுவ கட்டுப்பாடு
அசாம் மாநிலம் முழுவதும் உல்பா, என்.டி.எப்.பி., ஆகிய அமைப்புக்களின் வன்முறை நடவடிக்கையின் காரணமாக 3 மாதத்திற்கு பதற்றமடைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 2016ல் 75 வன்முறை சம்பவங்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™