Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம்... பின்னடைவு! சறுக்கியது திருச்சி; திணறுது சென்னை

Posted: 04 May 2017 09:29 AM PDT

நாட்டின் மிகவும் துாய்மையான நகரங்கள் பட்டியலில், தமிழக நகரங்கள் மிக மோசமான இடத்தையே பிடித்துள்ளன. பெருநகரமான சென்னை, 235வது இடத்தில் உள்ளது; கடந்த ஆண்டு, மூன்றாவது இடத்தில் இருந்ததிருச்சி, ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

வரும், 2019ல், மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை கொண்டாடும்போது, துாய்மை யான இந்தியாவை உருவாக்கும் இலக்குடன், தேசிய அளவிலான, 'ஸ்வச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் துவக்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதும் துாய்மைப் பணிகள் மேற்கொள்வது தீவிரமானது.இந்த திட்டத்தை பிரபலப்படுத்தவும், ...

அங்கீகாரமற்ற மனை வரன்முறைக்கு ஒப்புதல்!

Posted: 04 May 2017 10:30 AM PDT

சென்னை:அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான விதிகளுக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், அரசாணை பிறப்பித்து,நீதிமன்றத்தில், இன்று தாக்கல் செய்வதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற தடை இருந்த காலத்தில், ஒன்பது மண்டலங்களில், 9,760 அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்ப தாகவும், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்தி ரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளைநிலங்களை வீட்டுமனை களாக மாற்றி ...

உ.பி.,யில் மலிவு விலை உணவகம் ஏழைகள் பசியாற முதல்வர் திட்டம்

Posted: 04 May 2017 10:32 AM PDT

லக்னோ:உ.பி.,யில் ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில், மூன்று ரூபாய்க்கு காலை உணவு, ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும், 'அன்ன பூர்ணா போஜனாலயா' எனப்படும் மலிவு விலை உணவகங்களை திறக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுஉள்ளது.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். மார்ச், 19ல் முதல்வர் பொறுப்பேற்ற யோகி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாநிலத்தில் வசிக்கும் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், குறைந்த வருவாய் பிரிவினரின் பசியை போக்க, மாநிலம் முழுவதும்மலிவு விலை உணவகங்களை திறக்க, முதல்வர் திட்டமிட்டு ...

மந்திரி விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறை... கிடுக்கிப்பிடி!

Posted: 04 May 2017 10:35 AM PDT

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அமைச்சருக்கு சொந்த மான குவாரி, கல்வி நிறுவனங்களில் நடந்த வரி ஏய்ப்புகள் குறித்தும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடந்த,ரூ.89 கோடி வினியோகம் குறித்தும், அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, வருமான வரித்துறை ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்த, சுகாதாரத்துறை அமைச்சர், விஜய பாஸ்கரின் வீடுகளில்,ஏப்., 7ல், திடீர் சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது சொந்த ...

மனநல பரிசோதனைக்கு நீதிபதி கர்ணன் மறுப்பு

Posted: 04 May 2017 10:39 AM PDT

கோல்கட்டா:'நான் நல்ல மனநலம் மற்றும் உடல் நலத்துடன் உள்ளேன்; மருத்துவப் பரி சோதனை ஏதும் தேவையில்லை' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தன்னை பரி சோதிக்க வந்த டாக்டர்களிடம், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சுப்ரீம் கோர்ட் தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக, கடந்த, 1ம் தேதி நடந்த விசாரணையின்போது, 'நீதிபதி கர்ணனுக்கு, 4ம் தேதி மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் ...

அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு

Posted: 04 May 2017 10:41 AM PDT

புதுடில்லி:மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங் களின் நம்பகத்தன்மை குறித்து, அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க, தேர்தல் கமிஷன் முன்வந்துள்ளது. இது குறித்த விளக்க கூட்டம், டில்லியில் வரும், 12ல் நடக்க உள்ளது.

உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய, ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு மாநிலங் களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது; பஞ்சாப்பில் மட்டும், காங்., வெற்றி பெற்றது. இதையடுத்து, மின்னணு ஓட்டுப் பதிவு இயந் திரங்களில் முறைகேடு செய்து, தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதாக, காங்., சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ...

வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக சசிக்கு அனுமதி

Posted: 04 May 2017 10:46 AM PDT

சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராகலாம் என, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

ஜெஜெ, 'டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்தல் மற்றும் வெளிநாடுகளில், சட்ட விரோதமாக பணம் முதலீடு செய்ததிலும், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன் மற்றும் பாஸ்கரன் மீது1990 ல், அமலாக்கப்பிரிவு வழக்குகளை தொடர்ந்தது.இந்த வழக்குகள், சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1 மற்றும், 2ல் நடந்து வருகிறது. இரட்டை இலை ...

கோடநாட்டில் பதற்றம் தணிக்க ஜெ.,க்கு 'ஆத்ம சாந்தி' பூஜை

Posted: 04 May 2017 10:49 AM PDT

ஊட்டி:முன்னாள் முதல்வர் ஜெ., இறந்த பின், அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களை அடுத்து, கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 'ஆத்ம சாந்தி' பூஜை நடத்த, நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த, 1991 - 96ல் ஜெ., முதல்வராக இருந்த போது, கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டது. 2001ம் ஆண்டுக்கு பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், அரசியலில், 'பிசி'யான ஜெ., சில முறை மட்டுமே வந்து சென்றாலும், அங்கு தங்கியதில்லை. 2006ல், அங்கு நடந்த பிரம்மாண்ட பூஜைகளுக்கு பின், எஸ்டேட் பழைய பங்களாவில் அடிக்கடி தங்கி வந்தார். அங்குள்ள இயற்கை சூழல் அவரை கவர்ந்த காரணத்தால், 'வாக்கிங்' ...

தமிழக சுற்றுப்பயணம்: பன்னீர் இன்று துவக்கம்

Posted: 04 May 2017 10:57 AM PDT

அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம், இன்று தன் சுற்றுப்பயணத்தை துவக்குகிறார்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து, தன் அணிக்கு ஆதரவு திரட்ட, பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அதற்காக, இன்று முதல், 31ம் தேதி வரை, மாவட்ட வாரியாக, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து, இன்று தன் பயணத்தை துவக்குகிறார்.மேலும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை கொண்டாடவும், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து விவாதிக்கவும், மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் ...

மீண்டும் 2 மணி நேரம் மின் தடையா? : 'வாட்ஸ் ஆப்' வதந்தியால் வாரியம் 'ஷாக்'

Posted: 04 May 2017 12:06 PM PDT

சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின் தடை செய்யப்படுவதாக, 'வாட்ஸ் ஆப்'பில் வரும் வதந்தியால், மின் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில், 2008ல் மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், வீடுகளில், சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்பட்டது.
வட சென்னை, மேட்டூர் விரிவாக்கம், வல்லுார், கூடங்குளம் உள்ளிட்ட புதிய மின் நிலையங்களில், 2013 - 14ல் உற்பத்தி துவங்கியது. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைத்தது. இதையடுத்து, 2014ல், தமிழக அரசு, மின் தடை அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக விலக்கியது. தற்போது, கோடை காலம் ...

122 எம்.எல்.ஏ.க்களும் கொத்தடிமைகள் தான் : எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

Posted: 04 May 2017 01:11 PM PDT

கோவை: ''எல்லாவற்றிலும் கையெழுத்து மட்டும் போட சொன்னார்கள். எடப்பாடி அணியின் 122 எம்.எல்.ஏ.க்களும் கொத்தடிமைபோல இருக்கும் சூழ்நிலை உள்ளது'' என்று சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் நேற்று அளித்த பேட்டி: கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம். எடப்பாடி அணியுடன் இணைவதற்கு பன்னீர்செல்வம் ஆர்வமாக உள்ளார்.
ஆனால், அவருடன் இருக்கும் பதவியில் இல்லாத சில மாஜி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ...

வீடு கட்ட 1000 சதுர அடி நிலம்: சிந்துவுக்கு தெலுங்கானா முதல்வர் வழங்கினார்

Posted: 04 May 2017 01:56 PM PDT

ஐதராபாத்: பிரபல பாட்மின்டன் வீராங்கனை சிந்துவுக்கு வீடு கட்டுவதற்காக 1000 சதுரடி நிலம் பரிசாக வழங்கினார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில் நேற்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ஐதராபாத் நகரில் தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிந்து வீடு கட்டுவதற்கு 1000 சதுரடி நிலம் பரிசாக வழங்கினார். அப்போது சிந்து தனது குடும்பத்தினருடன் வந்திருந்து நிலத்திற்கான ஆவணத்தை நேரில் பெற்றார் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™