Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிறந்த நாள் வாழ்த்துகள் - விமந்தனி

Posted: 04 May 2017 12:09 PM PDT



இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

WhatsApp

Posted: 04 May 2017 12:00 PM PDT

கணினியில் வாட்ஸாப்ப் உபயோக படுத்துகின்றோம் அதில் படங்கள் எல்லாம் கணினி மூலமாக பதிவேற்றம் செய்ய முடியுமா

பொதுவாழ்விலிருந்து விலகினார் பிலிப் கோமான்

Posted: 04 May 2017 10:04 AM PDT

- லண்டன்: பொது வாழ்விலிருந்து விலக பிலிப் கோமான் முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி: ஆகஸ்ட் வரை ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகளில் மட்டும் அரசியுடனோ அல்லது தனியாகவோ கலந்து கொள்வார். இதன் பிறகு எந்த பயணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒப்பு கொள்ள மாட்டார். இருப்பினும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் நேரத்திற்கு ஏற்றவாறு கலந்து கொள்வது குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 91 வயதாகும் அரசி எலிசபெத் அரசு பணிகளில் ...

100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?

Posted: 04 May 2017 09:42 AM PDT

கடலூர் மாவட்டத்தில் பழைய 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விறக முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர், தன்னிடம் இளைஞர் ஒருவர் பழைய ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்துற்கு விற்க அனுகியதாக காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நோட்டமிட்ட காவல்துறையினர், அந்த இளைஞர் நல்லதம்பியிடம் பேரம் பேசியபோது கைது செய்தனர்.பின்னர் விசாரணையின் போது அது பழைய கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட அரிய வகை 100 ரூபாய் நோட்டு என தெரியவந்தது. இந்த ...

கனவல்ல நிஜம்

Posted: 04 May 2017 08:45 AM PDT

கனவல்ல நிஜம் நிழலைத் தேடி தேடித் அலைந்தேன் நிழலுக்கான சுவடுகளே அங்கெங்கும் காணவில்லை ஓடிக் கொண்டே இருக்கிறேன் அப்பாலைவனத்தில் தகிக்கும் மணல் தவிர வேரொன்றும் இல்லை தாகத்தில் என் நாக்கு நீளவில்லை வார்த்தைகள் எல்லாம் வழுக்கி விழுந்து விட்டது தண்ணீராவது வேண்டும் அதோ தூரத்தில் தெரிகிறதே ஓ அதுவும் கானல் நீர் தான் கண்களிலும் ஈரம் வற்றி விட்டதே.. அடுத்த சுவாசத்திற்கு காற்றாவது வேண்டும் காற்றும் கைவிட்டது இதோ நான் மூர்ச்சையாகி விட்டேன்.. திடீரென என் ...

தமிழ் புத்தகங்கள் சில PDF வடிவில் வேண்டும் உதவி - பிஜிராமன்

Posted: 04 May 2017 08:21 AM PDT

உறவுகளே

எனக்கு சில தமிழ் புத்தகங்கள் வேண்டும் அவை கீழே

1. நா. காமராசன் அவர்களின் - கருப்பு மலர்கள்
2. மு. வரதராசனார் அவர்களின் - அறமும் அரசியலும்
3. அகிலோன் அவர்களின் - சித்திரப்பாவை
4. ஜெயகாந்தன் அவர்களின் - குருபீடம்
5. சோ அவர்களின் - யாருக்கும் வெட்கமில்லை
6. கி.வ. ஜெகநாதன் அவர்களால் எடிட் செய்யப்பட்ட - மலையருவி

தந்து உதவுங்கள் நண்பர்களே

நன்றிகள்

வர்மக்கலை

Posted: 04 May 2017 08:18 AM PDT

மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை அல்லது மர்மக்கலை. இது உடலின் உறுப்புகளில் மர்மமாக அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களப் பயன்படுத்தி போர்க்கலையும், வைத்தியமுறையும் செயற்படுத்தப்பட்டன. செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. வர்மக்கலை எளிமையானது. ஏழைக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. வர்மம் மர்மமோ, மாயமோஇ தந்திரமோ அல்ல; விஞ்ஞான ரீதியில் ஆனது. வர்மக்கலை ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்காகப் பயிற்று விக்கப்பட்டது. இது அடுத்தவர்களின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ...

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுவது குற்றமா? ; ஐகோர்ட் கேள்வி

Posted: 04 May 2017 07:38 AM PDT

சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் அரசுக்கு ஐகோர்ட் தொடர்ந்து பல்வேறு எதிரான உத்தரவுகளை பிறப்பித்து வருவதால் டாஸ்மாக் நடத்துவதில் அரசு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மது பான கடைகள் அடைக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதில் தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்க அரசு மாநில நெடுஞ்சாலைகளை அந்தந்த நகராட்சி, ஊராட்சி சாலைகளாக ...

தமிழகத்தில் கல்வி தரம் குறைவா? ஐகோர்ட் கேள்வி

Posted: 04 May 2017 07:13 AM PDT

சென்னை: கடலூரை சேர்ந்த ராமச்சந்திரன் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் நீட் தேர்வுடன் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? நீட் தேர்வை எதிர்கொள்ள தகுதியான மாணவர்களை உருவாக்காதது தான் காரணமா? தமிழகத்தில் மாணவர்களின் கல்வி தரம் குன்றி உள்ளனவா? தரம் குறைந்த மாணவர்கள் உருவாக்கும் கல்வி நிறுவனங்கள் பெருகிவிட்டன. இவ்வாறு ...

தூய்மை இந்தியா: 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது திருச்சி

Posted: 04 May 2017 07:07 AM PDT

- புதுடில்லி: தூய்மை இந்தியா பட்டியலில், கடந்த வருடம் 3வது இடத்தை பிடித்த திருச்சி, தற்போது 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணப்படி, 'துாய்மை இந்தியா' திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் தூய்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அதன் முடிவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இந்த ஆய்வு 434 நகரங்களில், 37 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த பட்டியலில், முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் உள்ளது. ...

லட்சியம் – குறுங்கதை

Posted: 04 May 2017 06:39 AM PDT


-

ஒரு தீர்வு!

Posted: 04 May 2017 06:22 AM PDT

'காலை, 6:00 மணிக்கு வந்துடுறோம் சார்...' என்று, பேரூராட்சி ஊழியர்கள், தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருந்ததால், சீக்கிரமே எழுந்து விட்டார், சுந்தரம். 'தூங்கும் நேரமாக வந்து, அரைகுறையாக அள்ளிப் போட்டு போய் விடுவரோ...' என்று நினைத்து, இரவெல்லாம் அவருக்கு தூக்கமே வரவில்லை. அவர் மனைவி சும்மா இல்லாமல், ''அவங்க, வருவாங்கன்னா நினைக்கிறீங்க... எத்தனை நாளு இப்படி சொல்லி, வராம போயிருக்காங்க. அவங்க வேலை நேரமே, 10:00 மணிக்கு தான் ஆரம்பிக்குது; இதுல எப்படி, காலையில், 6:00 மணிக்கு வருவாங்க; ...

பெண்!

Posted: 04 May 2017 06:21 AM PDT

நீளமான காரிடரின் இரு மருங்கிலும், நாற்காலிகள் போடப்பட்டும், மையத்தில், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. நடுவில், சில நாற்காலிகள் போடப்பட்டு, முன்புற டேபிளில், 'வெல்வெட்' துணி விரிப்பில், அலங்கரித்த, பூச்சாடி வைக்கப்பட்டிருந்தது. வங்கியின் பெயரும், அது துவங்கப்பட்ட ஆண்டும், மற்ற குறிப்புகளும் எழுதப்பட்ட, 'பேனர்' பின்புறம் தொங்க, மற்றொருபுறம், அன்று வங்கியில் இருந்து, விருப்ப ஓய்வு பெறும் வர்ஷாவின் புகைப்படமும், வாழ்த்தும் இடம் பெற்றிருந்தது. இத்தனை நாளும், வங்கிக்கும், அதன் கிளை ...

வீடு என்ற பெயரில்!

Posted: 04 May 2017 06:13 AM PDT

விமானம், சென்னை விமான நிலையத்தை அடைந்த போது, காலை, 11:00 மணி; மனைவி, மகனுடன், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான், தீபக். எல்லாருக்கும் நல்ல பசி; அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தான். அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை; லேண்ட் லைன் போனுக்கு தொடர்பு கொண்ட போதும், யாரும் எடுக்கவில்லை. 'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் ...

வசனம் தேவையில்லை…!!

Posted: 04 May 2017 05:59 AM PDT

நன்றிக் கடன் – ஒரு பக்க கதை

Posted: 04 May 2017 05:57 AM PDT

நிலா – ஒரு பக்க கதை

Posted: 04 May 2017 05:56 AM PDT

மூக்கு

Posted: 04 May 2017 05:28 AM PDT

மூக்கு ====== மூக்கின் அழகே முகத்தழகு என்பது முன்னோர்கள் சொன்ன மொழி. பெண்கள் மூக்கும் முழியுமாக இருந்தால் பாக்கும் வெற்றிலையும் வைத்து பரிசம் போட வருவார்கள். திருமணச் சந்தையில் கிளிமூக்குப் பெண்களுக்கு வரதட்சிணை துளிகூடக் கொடுக்காமல் திருமணத்தை முடித்திடலாம். நாக்கும் மூக்கும் நல்ல நண்பர்கள் மூக்கிலே சளி பிடித்தால் நாக்கிலே சுவை தெரியாது. கும்பகோணம் டிகிரி காபி குடித்தாலும் கஷாயம் குடிப்பது போலத்தான் இருக்கும் . நாக்குக்கு சுவையாக உணவு கிடைத்தால் மூக்குப் பிடிக்க ...

15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்

Posted: 04 May 2017 01:46 AM PDT

- முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. - இந்நிலையில் உ.பி.யில் ஒரே நபரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் அவர் நான்காவதாக திருமணம் புரிவதை தடுக்க ஒன்றிணைந்துள்ளனர். - உ.பி.யின் பைரேச் நகரைச் சேர்ந்தவர் தானிஷ் (29). கார் மெக்கானிக்கான இவருக்கு 2013-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு வருடத்தில் முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்த தானிஷ், பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். - சில மாதங்களில் ...

வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க

Posted: 04 May 2017 01:43 AM PDT

கேமரா மற்றும் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள் சில சமயம்அதிக எம்.பி. அளவில் இருக்கும். அதனை இணையத்திலோ அல்லது முகநூலிலோ பதிவேற்றம் செய்யும் சமயம் நேரம் ஆகும். வீடியோவின் தரம் குறையாமல் அளவினை குறைத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் அளவு குறைக்கவேண்டிய பைலினை டிராக் அன்ட்டிராப் முறையில் இழுத்துவிடவும். இதில் பிக்ஸர்.பில்டிர்.வீடியோ.ஆடியோ.சப்டைடில்.மற்றும் ...

முதல் பார்வை: கவண்- ஊடக விளையாட்டு

Posted: 04 May 2017 01:41 AM PDT

- உண்மையை உரக்கச் சொல்ல நினைக்கும் இளைஞனின் மீடியா சார்ந்த போராட்டமே 'கவண்'. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் முதல் நாள் பணிக்குச் செல்லும்போதே பெரிய கலவரத்தைக் காட்சிப்படுத்தி, நல்ல பெயர் வாங்குகிறார் விஜய் சேதுபதி. ஆனால், அதைத் தொலைக்காட்சியில் வேறு விதமாக சித்தரிக்கின்றனர். மீடியாவில் தனி நபராக எதையும் மாற்ற முடியாது என உணரும் தருணத்திலும், நேரடி ஒளிபரப்பில் புகுந்து புறப்பட்டு ஓர் அரசியல்வாதியின் நிஜ முகத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இதனால் அந்நிறுவனத்தில் இருந்து ...

அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது - விடுகதைகள்

Posted: 04 May 2017 01:29 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

இந்த வார சினிமா செய்திகள்

Posted: 04 May 2017 01:22 AM PDT

ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். - சுஜா வரூணி - - 'மிஜா', 'கிடாரி', 'குற்றம் 23' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சுஜா வரூணி. மேலும் சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இனி அவர் மேற்கொண்டு சொல்வதைக் கேட்போம். "எனக்கு வாய்ப்பு அளிப்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குநரிடம் முதலில் நான் திறந்த மனதுடன் அவர் சொல்லும் கதையைக் கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் 'நச்' சென்று ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். இதுவே எனது விருப்பம். - --------------------

அருங்காட்சியமாக மாறும் மகாத்மா காந்தி படித்த பள்ளி!

Posted: 04 May 2017 01:19 AM PDT

= குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், 'மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளி' உள்ளது. இந்தப் பள்ளி, ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இது, 1853-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போது இந்தப் பள்ளி, 'ராஜ்கோட் ஆங்கிலப் பள்ளி' என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், 1868-ஆம் ஆண்டில் 'ராஜ்கோட் மேல்நிலைப் பள்ளி' என்றும், 1907-ஆம் ஆண்டில், ஆல்ஃப்ரெட் மேல்நிலைப் பள்ளி' என்றும், 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 'மோகன்தாஸ் காந்தி மேல்நிலைப்பள்ளி' என்றும் பெயர் மாற்றப்பட்டது. அந்தப் ...

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 04 May 2017 01:14 AM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

ஸ்ரீ ராமானுஜர் 1000: மே 1 - திருவாதிரை திருநட்சத்திரம் திக்கெட்டும் கொண்டாட்டம்

Posted: 04 May 2017 01:12 AM PDT

- திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன் ராமாவதாரத்தில் ராமருக்குத் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்பது புராணம் .அதே ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது ஐதீகம். இவர், கிபி 1017-ம் ஆண்டு, அப்போது பூதபுரி என்று அழைக்கப் பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் என்ற இத்தலத்தில் தோன்றினார். அப்போது கலியுகம் 4119 சாலிவாகன் சக ஆண்டு 939 பிங்கள வருடம் சித்திரை மாதம் 13 ம் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 03 May 2017 11:16 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

Posted: 03 May 2017 11:06 PM PDT

03. கடவுள் வாழ்த்து ஆன்மீகச் செய்திக் கவிதைகள் 0002. திருவையாற்று ஐங்கரன் (நேரிசை வெண்பா) (பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி) சித்திரை 01, ஹேவிளம்பி வருடம் 01 சித் 5118: 14 Apr 2017 திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை. ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில் மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக் காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே ஊணற்றுப் போகும் உறவு. [ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு] 15/04/2017 ***** 0003. விழுப்புரம் ஆஞ்சநேயர் (கலிவிருத்தம்) (அனுமன்: விழுப்புரம் ...

சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா மறு சீராய்வு மனு

Posted: 03 May 2017 09:00 PM PDT

புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டோர் மறு சீராய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். - இந்த மனு சுப்ரீம் கோர்ட் பதிவாளர் விசாரணைக்கு வரலாம் எனவும் அப்போது மனுவை ஏற்பதா , நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணை எப்படி வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகையில், இது போன்ற சீராய்வு மனு மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலையில் நீதிபதிகள் தங்களது அறையில் வைத்து விசாரணை நடத்துவர் ...

எட்டு வித்தியாசம் - கண்டு பிடிங்க

Posted: 03 May 2017 07:30 PM PDT

கூடா நட்பு - கவிதை

Posted: 03 May 2017 07:20 PM PDT

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 03 May 2017 07:18 PM PDT

‘காதல்’ அவசரம் தடைபோடாதீர்கள்!

Posted: 03 May 2017 06:17 PM PDT

– பெருநகரத்து கலவரத்தில் பால் வண்டி ரேசன் வண்டி ஆம்புலன்ஸ் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன் காதலியைப் பார்க்க அவசரமாய் டூவீலரில் போய்க் கொண்டிருக்கும் இளைஞன் முணுமுணுத்தாவாறே செல்கிறான் 'காதல்' அவசரம் தடைபோடாதீர்கள்! – ——————– பாக்யாவேலு – மணிசங்கர் மூக்குத்திப் பூக்கள் – கவிதை தொகுப்பிலிருந்து

கறுப்பு பணம் – கவிதை

Posted: 03 May 2017 06:16 PM PDT

தைப்பொங்கல் கவிதை

Posted: 03 May 2017 06:15 PM PDT

வாகனமற்ற ஞாயிற்றுக்கிழமை

Posted: 03 May 2017 05:46 PM PDT

சிங்கப்பூர் - - செயிண்ட் ஆண்ட்ரூ சாலையில் வாகனங்களற்ற ஞாயிற்றுக் கிழமையை உல்லாசமாகக் கொண்டாடும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ------------------------- மே1 நேற்று வாகனங்களற்ற ஞாயிற்றுக்கிழமையாகக் கடைப்பிடிக்கப் பட்டது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாகனங்களற்ற ஞாயிறாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. வாகனங்களுக்கு விடை கொடுக்கும் சாலைகளில் சைக்கிளோட்டம், நடை உள்ளிட்ட மற்ற கேளிக்கை, கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். அவ்வகையில் நேற்று செயிண்ட் ...

2020க்குள் திரவ எரிவாயு துறைமுகம் தயார்

Posted: 03 May 2017 05:40 PM PDT

- ஜூரோங் துறைமுகத்தில் நேற்று திரவ எரிவாயு கப்பலில் ஏற்றப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ----------------------- சிங்கப்பூர் - அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் திரவ எரிவாயுவை அதற்குரிய கப்பலில் ஏற்றும் வசதியைக் கொண்ட துறைமுகம் தயாராகி விடும் என்று வர்த்தக தொழில் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்துள்ளார். உலகளாவிய கந்தக வெளி யேற்ற வரம்பை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 0.5 விழுக்காட்டுக்கு உயர்த்த அனைத்துலக கடல்துறை அமைப்பு கடந்த ஆண்டு ...

10 தலையை எடுப்போம் என்றீர்களே செய்தது என்ன? மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் கேள்வி

Posted: 03 May 2017 05:14 PM PDT

ஸ்ரீநகர், காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற மிருகத்தனமான செயலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு எல்லையில் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ் உடல் பாகிஸ்தான் ராணுவத்தால் சிதைக்கப்பட்டது. இப்போது பாகிஸ்தான் மிகத்தனமாக நடந்து கொண்டதையடுத்து இது தொடர்பாக ...

ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!

Posted: 03 May 2017 05:06 PM PDT

ஸ்ரீகாளஹஸ்தி: - சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும் அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள். - ------------------------------------ - கீழப்பெரும்பள்ளம்: - மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. - ------------------------------------ - திருநாகேஸ்வரம்: - கும்பகோணத்திலிருந்து ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

Posted: 03 May 2017 05:04 PM PDT

பதிவு: மே 03, 2017 18:07 - - கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர். - ராஜாக்கமங்கலம் துறையில் இன்று கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. - குமரி மாவட்டத்தில் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் சிரமம் ஏற்படும். மேலும் கடல்நீர் மீனவர் கிராமங்களில் புகுந்துவிடும் சூழ்நிலையும் உருவாகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதமே கடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. ...

அரவம் தீண்டாத ஊர் - நாகமுகுந்தன்குடி. -

Posted: 03 May 2017 04:55 PM PDT

அரனின் அணிகலனாக விளங்கும் அரவம், தனக்கு வந்த இடரை நீக்கியதற்கு நன்றிக் கடனாக ஓர் ஊரில் எவரையும் தீண்டமாட்டேன் என்று வாக்குக் கொடுத்து, அதை இன்றளவும் நிறைவேற்றி வருகிறது. இந்தத் தலம், நாகமுகுந்தன்குடி. - அக்காலத்தில் வில்வவன க்ஷேத்திரமாகத் திகழ்ந்திருந்த இந்த வனப்பகுதியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. ஒருநாள் அங்கு வந்த வேடன் ஒருவன் வானரம் ஒன்றைப் பிடிக்க எண்ணினான். - ஆனால் அது வேகமாகத் தாவிச் சென்று ஒரு வில்வ மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டது. அதை எப்படியாவது ...

சப்--கலெக்டரை காதல் திருமணம் செய்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

Posted: 03 May 2017 04:46 PM PDT

- திருவனந்தபுரம்: கேரள முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயன் மகன் சபரிநாதன். தந்தை இறந்த பின்னர் சபரிநாதன், அருவிக்கரை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், அதை தொடர்ந்து நடந்த பொதுத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் தொகுதிக்கு உள்பட்ட ஆரியநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் தனது திருமண அறிவிப்பை தொண்டர்கள் மத்தியில் வெளியிட்டார். திருவனந்தபுரம் சப்- கலெக்டர் திவ்யாவை காதல் திருமணம் செய்யப் போவதாகவும், திருமண தேதியை இரு வீட்டாரும் கலந்து பேசி அறிவிப்பார்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™