Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


25 ஆண்டுக்கு பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை விறு.. விறு...! அத்வானி மீது குற்றச்சாட்டு பதிவு; ஜாமினில் விடுவிப்பு

Posted: 30 May 2017 09:42 AM PDT

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை, மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது. சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட, ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், அனைவருக்கும் ஜாமின் அளித்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த, பாபர் ...

பயங்கரவாதத்திற்கு எதிராக போர்: ஜெர்மனியில் பிரதமர் சூளூரை

Posted: 30 May 2017 09:46 AM PDT

பெர்லின் : ''சர்வதேச அளவில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க, இந்தியாவும், ஜெர்மனியும் உறுதி பூண்டுள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் மோடி, ஜெர்மன், பிரான்ஸ், ஸ்பெயின், ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளுக்கு, அரசுமுறை பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில், ஜெர்மன் சென்றடைந்த அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து, இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இதை ...

அனைவரும் எதிர்பார்த்த தென் மேற்கு பருவமழை துவங்கியது!

Posted: 30 May 2017 09:53 AM PDT

கொளுத்தும் கோடைக்கு முடிவு கட்டும் வகையில், அனைவரும் எதிர்பார்த்த, தென் மேற்கு பருவமழை, நேற்று கேரளாவில் துவங்கியது. 'மோரா' புயல் காரணமாக, இரு நாட்களுக்கு முன்னதாகவே துவங்கிய இம்மழை, கேரளா, வட கிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கியது. இன்னும் இரு நாட்களில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், மழை தீவிரமடையும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், தென் மேற்கு பருவமழையும், ஜனவரியில் முடிந்த வட கிழக்கு பருவமழையும், போதிய அளவு பெய்யாததால், நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியும், கடும் ...

மாடு விற்பனை தடைக்கு எதிர்ப்பு; கட்டுப்பாட்டை தளர்த்த திட்டம்?

Posted: 30 May 2017 10:07 AM PDT

புதுடில்லி: ''இறைச்சிக்காக, சந்தைகளில் மாடுகளை விற்கத் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் அமைப்புகள் அளித்துள்ள கருத்துக்களை, மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது,'' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

உத்தரவு
சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும், மத்திய அரசு, சமீபத்தில்
தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல கோர்ட்டுகளில், பொது நலன்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மத்திய அரசு, தன் நிலையை ...

ஜெ., சொத்துகள் பறிமுதல்; கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

Posted: 30 May 2017 10:14 AM PDT

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய, சொத்துகள் அனைத்தையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, தமிழக அரசு துவக்கி உள்ளது.

கடந்த, 1991 - 96 வரை, முதல்வராக ஜெ., இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவர் மீதும், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும், தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அத்துடன், ஜெ.,க்கு, 100 கோடி ரூபாய், ...

மனைகள் வரன்முறைக்கு நவ., 3 வரை அரசு கெடு; பரிசீலனை நடைமுறைகள் அறிவிப்பு

Posted: 30 May 2017 10:18 AM PDT

'அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு, நவம்பர், 3க்குள் மனைப்பிரிவு உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 2016 அக்., 20க்குள் விற்கப்பட்ட அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், உருவாக்கப்பட்ட மனைப்பிரிவு களுக்கான வரன்முறை திட்டத்தை, மே, 4ல், அரசு அறிவித்தது. மனைகளின் தகுதி, கட்டணம், நிபந்தனைகள் உள்ளிட்ட விபரங்களும் அறிவிக்கப் பட்டன.
நடைமுறை என்ன?
இத்திட்டத்துக்கு, உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இதற்கான செயல்திட்டம்
உருவாக்கும் முயற்சியில், கலெக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர். ...

இறைச்சிக்காக மாடு விற்பனை 'ஓகே' மத்திய அரசின் சட்ட திருத்தத்திற்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

Posted: 30 May 2017 10:26 AM PDT

மதுரை, இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை, சந்தைகளில் விற்பதை தடை செய்யும் மத்திய அரசின் சட்ட திருத்தத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்காலத் தடை விதித்தது.

மதுரை வழக்கறிஞர் செல்வ கோமதி தாக்கல் செய்த பொதுநல மனு:பிராணிகள் வதை தடுப்புச் சட்டம், 1960ல் அமலானது. இதன்படி பிராணிகளை, உணவுக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம். இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, புதிய விதிகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலர், மே 23ல் அறிவித்தார். இதன்படி மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க தடை ...

தமிழகத்தில் உணவகங்கள் மூடல்; ரூ.150 கோடி விற்பனை பாதிப்பு

Posted: 30 May 2017 10:35 AM PDT

சென்னை: மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில், ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டதால், 150 கோடி ரூபாய்க்கு விற்பனை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில், பேக்கரி, இனிப்பு, துரித உணவகம், ஓட்டல் என, 5.50 லட்சம் கடைகள் உள்ளன. இவற்றில், தினமும், 100 - 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. மத்திய அரசு, ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரியை, ஜூலை முதல் அமல்படுத்த உள்ளது.
அதில், ஓட்டல் உணவுப் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நட்சத்திர ஓட்டல்கள் தவிர, தமிழகத்தில் உள்ள, உணவகங்கள், ஓட்டல்கள், சிறு டிபன் கடைகள் என, ...

'பீர் பார்' திறந்த பெண் அமைச்சரால் உ.பி., முதல்வர் யோகிக்கு சிக்கல்

Posted: 30 May 2017 10:41 AM PDT

லக்னோ: உத்தர பிரதேச பெண்கள் நலத் துறையின் பெண் அமைச்சர், 'பீர் பார்' திறப்பு விழாவில் பங்கேற்றது, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வராக பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம், மக்களின் அபிமானத்தை, ஆதித்யநாத் பெற்று வருகிறார்.
சமூகதளங்களில் பரவியது
இந்நிலையில், லக்னோவில், பீர் பார் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.இதில், மாநில பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்வாதி சிங் பங்கேற்று, அந்த பாரை ...

சென்னை ஐ.ஐ.டி., மாணவர் மீது தாக்குதல்; 8 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 30 May 2017 11:36 AM PDT

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 8 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாக்குதல்:
மாட்டிறைச்சி விற்பனை செய்வதை தடை செய்து, மத்திய அரசு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை கண்டித்து, போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி.,யில் மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கூறி சூரஜ் என்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு பதிவு:
இந்நிலையில் ...

மலேசிய குடியுரிமை பெற ஜாகிர் நாயக் முயற்சி

Posted: 30 May 2017 12:21 PM PDT

மும்பை: இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசிய குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்,51, தொண்டு நிறுவனம், மற்றும் பீஸ் டி.வி. சானல் ஆகியவற்றை நடத்தி வருகிறார். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பலியாயினர். இதில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள், தாம் ஜாகிர் நாயக்கின் டி.வி. பேச்சால் கவரப்பட்டதாக கூறினர்.
பயங்கரவாதத்தினை தூண்டும் இவரது பேச்சு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் வழக்குப்பதிவு ...

தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த களத்தில் இறங்குகிறார் ராகுல்

Posted: 30 May 2017 01:17 PM PDT

புதுடில்லி: தென் மாநிலங்களில் காங்.கட்சியை வலுப்படுத்த நாளை ( ஜூன்.1-) தேதி முதல் களத்தில் குதித்து தனது அரசியல் நடவடிக்கையை துவக்குகிறார் அக்கட்சி துணை தலைவர் ராகுல். வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உள்ள எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங். தலைவர் சோனியா எதிர்கட்சித் தலைவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விருந்து வைத்தார்.இதில் சரத்பவார், லாலு, சரத்யாதவ், சீத்தாராம் யெச்சூரி, உள்ளிட்ட தேசிய தலைவர்களும், தி.மு.க.வின் கனிமொழியும் கலந்து கொண்டனர். இந்த ...

நேரடி மணல் விற்பனையை முடக்கிய அதிகாரிகள் : கட்டுமான துறையினர் குற்றச்சாட்டு

Posted: 30 May 2017 02:22 PM PDT

சென்னை: முதல்வர் அறிவித்த, நேரடி மணல் விற்பனை திட்டத்தை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடக்குவதால், மீண்டும், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர், எஸ்.யுவராஜ், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக அறக்கட்டளை தலைவர், ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:மணல் விற்பனையில் முறைகேடுகளுக்கு முடிவு கட்டும் வகையில், நேரடி விற்பனை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, மே, 5ல் அறிவித்தார். இதன்படி பொதுப்பணித் துறையினர், கரூர், ...

சூதாட்டத்துக்கு சட்ட அங்கீகாரம்?; கருத்து கேட்கிறது சட்டக்கமிஷன்

Posted: 30 May 2017 03:25 PM PDT

புதுடில்லி: 'சூதாட்டம், பந்தயம் கட்டுதல் போன்றவற்றை சட்டப்பூர்வமாக்க வேண்டுமா' என, மக்களிடம், சட்டக்கமிஷன் கருத்து கேட்டு உள்ளது.

உத்தரவு:
பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், பீஹார் கிரிக்கெட் சங்கம் இடையிலான வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், நம் நாட்டில், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க சாத்தியம் உள்ளதா என்பதை ஆராய்ந்து கூறும்படி, சட்டக் கமிஷனுக்கு, 2016ல், உத்தரவிட்டது.
பந்தயம் கட்டுதல் :
அதன்படி, ஆய்வு நடத்தி வரும் சட்டக்கமிஷன், மக்களுக்கு விடுத்துள்ள ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™