Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் இன்று! வேலைநிறுத்தம்...

Posted: 29 May 2017 10:09 AM PDT

'ஆன்லைன்' மருந்து வணிக அனுமதி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருந்து வணிகர்கள், இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர். அதனால், தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்படுகின்றன.

பகல் முழுவதும், ஊசி, மருந்து, மாத்திரைகள் கிடைக்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, 1.50 லட்சம் ஓட்டல்களும், இன்று மூடப்படுகின்றன.
மத்திய அரசு, 'ஆன்லைன்' மருந்து வணிக அனுமதி சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், மருந்து வணிக உரிம கட்டணத்தை, 3,000த்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி உள்ளது. இதை எதிர்த்து, இன்று ...

தினகரனுக்கு ஜாமின் அளிக்க டில்லி போலீஸ் கடும் எதிர்ப்பு! ஆதாரங்களை மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Posted: 29 May 2017 10:13 AM PDT

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரனுக்கு ஜாமின் அளிக்க,டில்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மொபைல் போனை சேதப்படுத்தியது உட்பட, ஆதாரங்களை மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அ.தி.மு.க., பிளவுபட்டதைத் தொடர்ந்து, முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்தர், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா ...

பன்னீர் அணி அனுப்பிய 'மினி லாரி' கடும் குழப்பத்தில் தேர்தல் கமிஷன்

Posted: 29 May 2017 10:21 AM PDT

சசி அணியைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் அணியும், ஒரு, மினி லாரியை பிடித்து, அதில், ஒரு லட்சத்து 36 ஆயிரம் பிரமாண பத்திரங்களை ஏற்றி வந்து, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையில், கடுமையான போட்டி இருந்து வந்தது. இந்த போட்டி, அடுத்தடுத்த கட்டங்களை கடந்து, தற்போது பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதில் வந்து நிற்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளிடமிருந்து கையெழுத்து வாங்கி, அந்த பத்திரங்களை தாக்கல் செய்வதில் சசி அணி முனைப்பு காட்டுகிறது. ...

ரூ.900 கோடியால் காங்கிரஸ் பீதி; 'மாஜி' அமைச்சர் ரெட்டி பரபரப்பு

Posted: 29 May 2017 10:27 AM PDT

பெங்களூரு: ''எஸ்.ஐ.டி., அதிகாரிகள், என்னிடமிருந்து பறிமுதல் செய்திருந்த, 900 கோடி ரூபாயை, கோர்ட், என்னிடம் திருப்பிக் கொடுத்துள்ளது. இதனால், காங்கிரசார் நடுக்கத்தில் உள்ளனர்,'' என, கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.
பயப்பட அவசியமில்லை
முந்தைய, பா.ஜ., ஆட்சியில், அமைச்சராக இருந்தவர், ஜனார்த்தன ரெட்டி. பெரும் கோடீஸ்வர தொழில் அதிபரான இவர் மீது, சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் ...

சில தனியார் பாலில் கலப்படம் ஆய்வில் உறுதி என அமைச்சர் தகவல்

Posted: 29 May 2017 10:38 AM PDT

சென்னை::''பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்,'' என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அமைச்சர் கூறியதாவது:ஆய்வில் கிடைத்த தகவல் அடிப்படையில், பாலில் கலப்படம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இது தொடர்பாக, முதல்வரை சந்தித்து பேசினேன். அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் அறிவுரை வழங்கினார். தலைமை செயலர், உணவு பாதுகாப்பு கமிஷனர் உட்பட, அதிகாரிகளை அழைத்து பேசினார்.'பாலில் கலப்படம் செய்வது, மிகப்பெரிய குற்றம். இதில், ...

மத்திய அரசின் 'வெற்றி கதைகள்' தயாரிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

Posted: 29 May 2017 10:45 AM PDT

சென்னை: 'மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, வெற்றிக் கதைகள் தயாரித்து அனுப்ப வேண்டும் என, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களான, பி.ஆர்.ஓ.,க்களுக்கு, செய்தித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளது, அத்துமீறிய செயல்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும், குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. மதுக்கடைகளை எதிர்த்து, பெண்கள் தன்னெழுச்சியாக போராடுகின்றனர்.
இது குறித்த தகவல்களை திரட்டி, அரசுக்கு கொடுத்து, மக்களின் குறைகளை தீர்க்க, செய்தித் தொடர்புத் துறைமுன்வரவில்லை.
அத்துமீறிய ...

சட்டம் படிக்க வயது தடையில்லை!

Posted: 29 May 2017 11:01 AM PDT

தமிழகத்தில், சட்ட படிப்பில் சேருவதற்கான வயது வரம்பை நீக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலுார், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில், அரசு சட்டக் கல்லுாரிகளும், சென்னையில் சீர்மிகு சட்ட கல்லுாரியும் செயல்படுகின்றன.இவற்றில், எல்.எல்.பி., மூன்று ஆண்டு படிப்பு; பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்து ஆண்டு; எல்.எல்.பி., 'ஹானர்ஸ்' படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகளில், எந்த வயதினரும் சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பிளஸ் 2 முடித்தவர் முதல், 100 வயது ...

நெருக்கடிக்கு பணியாதீங்க! மா.செ.,க்கள் போர்க்குரல்

Posted: 29 May 2017 11:07 AM PDT

அ.தி.மு.க., - சசிகலா அணி மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, முடிவு செய்யப்பட்டது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்தினர் இல்லாமல், முதன்முதலாக, மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. மாலை, 5:30 மணிக்கு துவங்கிய கூட்டம், 6:30 மணிக்கு நிறைவு பெற்றது.
பத்திரத்தில் கையெழுத்து
கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பேசினர். அமைச்சர், சி.வி.சண்முகம் நன்றி ...

ஜெ., சூட்கேசை திறந்தவன் கைது

Posted: 29 May 2017 11:41 AM PDT

கோத்தகிரி,கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொலை செய்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சூட்கேசை உடைத்து, வாட்ச் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்த வழக்கில், தலைமறைவாக இருந்த, 11வது குற்றவாளியை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுாரை, ஏப்., 24ல், 11 பேர் கும்பல் கொலை செய்தது. பின், பங்களா ஜன்னலை உடைத்து , ஜெ., தங்கும் அறைக்குள் புகுந்தது.
நடித்து காட்ட
அங்கு, ஜெ.,யின் சூட்கேசை உடைத்து, அதிலிருந்த வாட்ச் உள்ளிட்டபொருட்களை கொள்ளை அடித்து தப்பியது.நீலகிரி, எஸ்.பி., முரளி ரம்பா ...

உ.பி: மது பார் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை

Posted: 29 May 2017 12:45 PM PDT

லக்னோ: உ.பி.யில் மதுபார் ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உபி.யில் பா.ஜ. தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், பா.ஜ. நிர்வாகியாக உள்ளார். நேற்று லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய பார் ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார்.

இது பெரும் சர்ச்சைஏறை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்ளிலும் வைரலாக பரவியுள்ளது.காங். கட்சியினர் கூறுகையில், ...

விமானம் வாங்கியதில் முறைகேடு; சி.பி.ஐ., மூன்று வழக்குகள் பதிவு

Posted: 29 May 2017 02:45 PM PDT

புதுடில்லி: 'ஏர் இந்தியா' விமான நிறுவனம், 111 விமானங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.

சி.பி.ஐ., செய்தித் தொடர்பாளர், ஆர்.கே.கவுர், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 'இந்தியன் ஏர்லைன்ஸ் - ஏர் இந்தியா' ஆகிய விமான சேவை நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்தன.
இணைப்பு நடவடிக்கைகள் நடந்த சமயத்தில், 111 விமானங்கள் வாங்கப்பட்டன. லாபகரமான விமான வழித்தடங்கள், உள்நாடு மற்றும் சர்வதேச தனியார் விமான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™