Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உ.பி: மது பார் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை

Posted: 29 May 2017 03:33 PM PDT

லக்னோ: உ.பி.யில் மதுபார் ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உபி.யில் பா.ஜ. தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், பா.ஜ. நிர்வாகியாக உள்ளார். நேற்று லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய பார் ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் புகைபடங்கள் ...

அரியலூர் மாரியம்மன் கோயில் தேர் சாய்ந்தது

Posted: 29 May 2017 03:29 PM PDT

அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. 40 அடி உயர தேர் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சிலையுடன், பக்தர்கள் வடம்பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் தேரோடும் வீதியில் செல்லும்போது, வலதுபுற சக்கரத்தின் அச்சு திடீரென முறிந்ததில் தேர் சாயத்தொடங்கியது. தேரின் மேலே அமர்ந்து தீபாராதனை செய்த அமிர்தலிங்கம் ...

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :

Posted: 29 May 2017 03:26 PM PDT

- சென்னை : மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 31ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை தட்டிப் பறிக்கும் வகையில், மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இதற்கு திமுக தனது எதிர்ப்பினை ...

பத்து அறிவு

Posted: 29 May 2017 10:33 AM PDT

பசிவந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள் என்ன அந்தப்பத்து ? அந்தப்பத்து என்பது எவை ? என்பதற்கு பல்வேறு யூகங்கள் இன்றுவரை இருக்கின்றன . ஆனால் திரு மூலரோ அறிவே பத்து என்கிறார் . அவருக்கு முன் இருந்த தொலகாப்பியர் முதல் அனைவரும் 2000 ஆண்டுகளாக ஆறுதான் என்று கூறிக்கொண்டிருந்தபோது , ஓரறிவதுவே உற்றறிவு அதுவே இரண்டறிவு அதுவே அதனொடு நாவே மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே (தொல்காப்பியம் மரபியல்) இதற்குச் ...

வெண்டைக்காயை வதக்குவது நல்லது…

Posted: 29 May 2017 10:26 AM PDT


=
அவள் விகடன்

தேசிய குற்ற ஆவணத்தின்தகவலின் படி…

Posted: 29 May 2017 10:24 AM PDT


-
அவள் விகடன்

பெரியோர் நலன் பேணுங்கள்

Posted: 29 May 2017 08:49 AM PDT

சுடிதார் இளைஞி

Posted: 29 May 2017 08:42 AM PDT


-
குங்குமம்

அமெரிக்காவில் இந்த வாரம் - 3

Posted: 29 May 2017 08:32 AM PDT

அமெரிக்காவில் இந்த வாரம் - 3



நன்றி-தmerica

பொய்மை – சிறுகதை

Posted: 29 May 2017 08:24 AM PDT

அப்சல் - - காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ''ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன். எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற 'மயங்கினேன் சொல்லத் ...

அப்பொழுதில்…அச்செயலில்…

Posted: 29 May 2017 08:19 AM PDT

நேற்றைப் போன்றதொரு நாளில் இரவைப் போன்றதொரு பொழுதில் கடலைப் போன்றதொரு வடிவில் நீர்த்திரள் கூட்டமொன்று என் வீட்டிற்கு வந்திருந்தது - என்னைத் தேடி தூரமாய் நின்று ஆதுரமாய்ப் பார்த்துவிட்டு அருகில் வந்து என் நெஞ்சை வருடியது ரோமங்கள் புல்லரித்தன திரேகமெங்கும் நெற்றியில் குனிந்து முத்தமிட்டது - ரத்த ஓட்டம் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டது. ஒரு நாலடி கடவுளை என் காலடியில் காணிக்கை வைத்து கரம் கூப்பி வணங்கியது - கற்று மட்டும் தாருங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றது பணிவாக நீருக்கு ...

எப்போது பெய்யும் மழை?

Posted: 29 May 2017 08:17 AM PDT

- ஒரு நீள்சாலையென நீண்டிருக்கிறாய் பகலின் நீலவானமென விரிந்திருக்கிறாய் இரவில் நட்சத்திரங்களென நிறைந்திருக்கிறாய் அழகான காட்சிகளின் ஜீவனாயிருக்கிறாய் - இருதய ஒலியின் ஜீவிதமாயிருக்கிறாய் எண்ணங்களின் வண்ணங்களாயிருக்கிறாய் காலத்தின் எல்லா வினாடிகளுமாயிருக்கிறாய் - இயற்கையின் பூக்களாயிருக்கிறாய் பாடல்களின் இசையாயிருக்கிறாய் நதிகளில் நீராயிருக்கிறாய் உயிரின் வேராயிருக்கிறாய் - எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கிறாய் எங்கு சென்றபோதும் வந்துவிடுகிறாய் ஆத்மாவின் உயிராயிருக்கிறாய் மனதின் ...

வேடிக்கை

Posted: 29 May 2017 08:16 AM PDT

நகரப்பேருந்தின்
அழுக்கடைந்த பின்னிருக்கையில்
சிறியகூடை ஒன்றை மடியில் வைத்தபடி
பயணிக்கிறாள் ஒரு பெண்.
நனைந்த வெண்ணிறத் துணியில் சுற்றப்பட்டு
கூடையில் அடுக்கப்பட்டிருக்கிற
வெள்ளரிப் பிஞ்சுகளில் ஒன்று
சிறிது தலை நீட்டி, குறுகுறுப்போடு
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருகிறது சாலையை.
-

------------

– தீபு ஹரி

குங்குமம்

கலெக்டர் நயன்தாரா!

Posted: 29 May 2017 08:15 AM PDT

- -மை.பாரதிராஜா ———– எப்போதும் வெயில் சுட்டெரிக்கும் ராமநாதபுரம் ஆப்பனூர் ஏரியா. முதல்முறையாக கலெக்டராக நயன்தாரா நடிக்கும் 'அறம்' படப்பிடிப்பு பரபரத்துக் கொண்டிருந்தது. ஒரு நேர்மையான ஆபீஸரின் ஸ்டிரைட் ஃபார்வேர்டு லுக். காதில் ஸ்டிக்கர் பொட்டு சைஸில் சின்ன கம்மல். நெற்றியை அலங்கரிக்கும் குங்குமப் பொட்டு. போலீஸ், அதிகாரிகள் புடைசூழ சிமென்ட் கலர் காட்டன் புடவை காஸ்ட்யூமில் ஸ்பாட்டுக்கு வீரநடையோடு விசிட் அடித்தார் கலெக்டர் நயன்தாரா. – ஷாட் முடிந்து பிரேக் விட்டுவிட்டு பேட்டிக்கு ...

ஐந்து கரங்களைக் கொண்டவனே என் ஹீரோ!

Posted: 29 May 2017 08:11 AM PDT

ஈட்டி – ரவி அரசு அதகளம் -மை.பாரதிராஜா ஆரஞ்சும் கோல்டும் கலந்துகட்டும் பார்டர் மினுமினுக்க… மஞ்சள் நிற டிசைனர் சேலையில் கண்கள் நிறைய காதல் பார்வையை வீசும் மகிமா. இதற்கு மேட்ச்சிங்கான கலர் காம்பினேஷன் காஸ்ட்யூமில் பக்கத்தில் புன்னகைக்கும் ஜி.வி.பிரகாஷ். சென்னையில் உள்ள கல்யாண மண்டபம் ஒன்றில் 'ஐங்கரன்' படத்திற்கான ஷூட்டிங் பரபரத்துக் கொண்டிருந்தது. ஸ்பாட்டில் நம்மை கண்டதும் பிரேக் விட்டுவிட்டு வந்தார் ரவி அரசு. -

என் வீட்டு நந்தவனம்

Posted: 29 May 2017 08:04 AM PDT


-
-அவள் விகடன்

போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்

Posted: 29 May 2017 06:56 AM PDT

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தன் மனைவியை, சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன், போன் மூலம், 'தலாக்' கூறி, அவரது கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23, ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன், அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம், மனைவியை கொடுமை ...

இதற்கொரு கவிதை தேவை --2

Posted: 29 May 2017 06:50 AM PDT

இதற்கொரு கவிதை தேவை --2



ரமணியன்

இந்த வார திரைப்பட செய்திகள்

Posted: 28 May 2017 06:43 PM PDT


-
விவாகரத்துக்கு பின், சினிமாவில் அதிரடி பிரவேசம்
செய்ய முடிவெடுத்துள்ள நடிகை அமலாபால், கூடவே,
'பிசினஸ்' பெண்ணாகவும் உருவெடுக்க உள்ளார்.

சென்னையில், ஒரு ஓட்டல் துவங்க இருக்கிறார்.
அந்த ஓட்டலில், தியானம் மற்றும் யோகா சென்டர்களும்
திறக்கப்பட உள்ளது.

ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!

———————————
— எலீசா.

கடமை தவறாதிரு! – கவிதை

Posted: 28 May 2017 06:22 PM PDT

- அன்பு செய்வதில் காற்றாய் இருந்து விடு உன்னை யாரும் தடுக்க முடியாது! கருணை பொழிவதில் கடலாய் இருந்து விடு உன்னை யாரும் அளக்க முடியாது! பாசம் காட்டுவதில் மழையாய் இருந்து விடு உன்னை யாரும் மறுக்க முடியாது! உதவி செய்வதில் மலையாய் இருந்து விடு உன்னை யாரும் மறைக்க முடியாது! பிறர் வாழ்வில் ஒளியாய் இருந்து விடு உன்னை யாரும் பிடிக்க முடியாது! பிறரை புரிந்து கொள்வதில் கண்ணாடியாய் இருந்து விடு உன்னை யாராலும் குற்றம் சொல்ல முடியாது! உழைப்பில் நீ உறங்காது இருந்து விடு உன் ...

பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’ ஜுன் 2-ல் தமிழில் ரிலீஸ்

Posted: 28 May 2017 06:18 PM PDT

இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படம் 'பேவாட்ச்'. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது. – இந்த படத்தை தமிழில் ஹியு பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. – பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த `தமிழன்' படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானார். இந்தியில் பெரிய நடிகையாகி தற்போது 'பேவாட்ச்' ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ...

காந்தியை கொன்றது கோட்சே மட்டுமா? கிளம்பியது புது சர்ச்சை

Posted: 28 May 2017 06:05 PM PDT

புதுடில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே மட்டுமா என்ற சந்தேகத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு: இதுகுறித்து மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஸ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி மரணத்திற்கு கோட்சே மற்றும் சாவர்க்கர் மட்டுமே குறை கூறி வந்துள்ளோம். ஆனால் காந்தி மரணத்தில் பெரும் சதி அடங்கியுள்ளது. பழைய பத்திரிகை செய்திகள் மற்றும் எனது ஆராய்ச்சியின் படி, ...

கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்

Posted: 28 May 2017 05:50 PM PDT

- புதுடில்லி: டில்லியில் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு மாணவனை மீட்டுள்ளார் ஒரு பெண். டில்லி பல்கலைக்கழக மாணவர் ஆசிப். 21 வயதான இவரை முகமது ரபி, ஆகாஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர். போனில் மிரட்டல் ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் ஆசிப்பை உயிரோடு விடுவோம் என்று கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி உள்ளனர். இந்நிலையில், அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல் குறித்து தகவல் கொடுத்தனர். போலீசாரும் கடத்தல் காரர்கள் சொன்ன பஜ்ரங்புரா ...

நடுரோட்டில் பெண்களை மானபங்க படுத்திய சிறுவர்கள்

Posted: 28 May 2017 05:45 PM PDT

ராம்பூர்: உ.பி.,யில் பட்டப்பகலில் நடுரோட்டில் 2பெண்களை 14 சிறுவர்கள் மானபங்க படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உ.பி., மாநிலம், ரா ம்பூர் மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற 2 பெண்களை, அங்கிருந்த 14 சிறுவர்கள் மானபங்க படுத்தினர். தங்களை விட்டுவிடுமாறு, அந்த பெண்கள் கெஞ்சியும் அதனை பொருட்படுத்தாத அந்த இளைஞர்கள், அவர்களின் கையை பிடித்து இழுத்தும், மானபங்கபடுத்தியும், கிண்டல் செய்தும் சிரித்து மகிழ்ந்தனர்.. இதனால் பயந்த நிலையில் இருந்த அந்த பெண்கள் தங்களை ...

இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை

Posted: 28 May 2017 05:42 PM PDT

லண்டன்: இங்கிலாந்தில் மக்களோடு மக்களாக 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை நடந்த இசை நிகழ்ச்சியில் மனித குண்டு வெடித்ததில் 22 பேர் பலியாயினர், 119 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் சல்மான் அபேதி(22) என்ற இளைஞர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் லிபியாவைச் சேர்ந்த முஸ்லிம். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்து வளர்ந்தவர். இங்கு பள்ளிப் படிப்பை முடித்த ...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 8 பேர் பரிதாப பலி

Posted: 28 May 2017 05:39 PM PDT

புரூக்ஹெவன்: அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் நகர துணை தலைவர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். சந்தேகக்குரிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் லின்கான் பகுதியில் உள்ள கிராமத்தில் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கோரி காட்போல்ட் (35 வயது) வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.\ இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் ...

ஜூன் 30-ல் சைமா விருதுகள் வழங்கும் விழா

Posted: 28 May 2017 05:35 PM PDT

சென்னை:
ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ல் தென்னிந்திய சர்வதேச
திரைப்பட(சைமா) விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் சிறந்த
திரைப்படம், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது
வழங்கப்படுகிறது.

சைமா விருதுகள் அபுதாபியில் நடக்கும் விழாவில்
வழங்கப்படும் இயக்குநர் பிருந்தா பிரசாத் அறிவித்துள்ளார்.
-
-------------------------
தினகரன்

ஜியோவை சமாளிக்க ஏர்டெல் புதிய திட்டம் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை

Posted: 28 May 2017 05:32 PM PDT

புதுடெல்லி: ஜியோவின் அதிரடி சலுகைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏர்டெல் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ பிராட்பாண்ட் சேவையில் இறங்க இருக்கிறது. ஜியோ பைபர் சில நகரங்களில் சோதனை செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஜியோவின் இந்த புதிய திட்டத்தால் ஏர்டெல் உள்ளிட்ட மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதை சமாளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்’: திருவாரூரில் ஆழித்தேரோட்டம்

Posted: 28 May 2017 05:29 PM PDT

- திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நாளை பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இன்று விநாயகர் தேரோட்டத்தில் தேர் கட்டுமானம் லேசாக சாய்ந்ததால் சிறிது நேரம் தேரோட்டம் தடைபட்டது. சைவ சமயத்தின் தலைமைப்பீடமாகவும், சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர். ஆழித்தேரோட்டம் நாளை (29ம் தேதி) காலை 7க்கு மேல் ...

அமெரிக்காவை அதிரவைக்கப் போகும் பறை முழக்கம்!

Posted: 28 May 2017 05:15 PM PDT

FeTNA – Federation of Tamil Sangams of North அமெரிக்கா - அமெரிக்காவில் ஜூலை மாதம் 'வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா' நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் அமெரிக்காவிலுள்ள பறைக் குழுக்கள் இணைந்து 133 அதிகாரப் பறை முழக்கம் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. இதே விழாவில் பல்வேறு தமிழர் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக பறைக் குழுக்கள் உள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. - ---------------------------- விகடன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™