Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூபாய் நோட்டு வாபஸ்: ரூ.5 லட்சம் கோடி லாபம்: 10 அம்சங்கள்

Posted: 25 May 2017 04:49 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவ., 8 ம் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். இந்த நடவடிக்கை, டிச., 19ம் தேதி வரை அமலில் இருந்தது. இதனால் நாட்டுக்கு பல நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இது குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:1. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன் நாட்டில், 17.77 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இதில், 15.44 லட்சம் கோடி ரூபாய் அதிக மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள். 2.33 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 100 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள் ...

தே.ஜ., அரசின் மூன்றாண்டு நிறைவையொட்டி கொண்டாட்டம்! 20 நாட்கள் விழாவை அசாமில் துவக்குகிறார் மோடி

Posted: 25 May 2017 09:54 AM PDT

பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் மூன்றாண்டு நிறைவை, 20 நாட்களுக்கு விழாவாகக் கொண்டாட, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. அசாமில் நடக்கும் பேரணியில், பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 'மோடி விழா' என்ற பெயரில், நாடுமுழுவதும் நடக்கும் நிகழ்ச்சி களில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் கள், மாநில முதல்வர்கள் உட்பட, 450 பேர் பங்கேற்கின்றனர்.

கடந்த, 2014ல், லோக்சபாவுக்கு நடந்த தேர்த லில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மே, 26ல் பதவியேற்றது.
மோடி தலைமையிலான அரசு, இன்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையொட்டி, நாடு ...

சீக்கிரம் அரசியலுக்கு வாங்க; ரஜினிக்கு சத்ருகன் அழைப்பு

Posted: 25 May 2017 10:17 AM PDT

பாட்னா: ''நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரவேண்டும்; அவருக்கு உதவ, நான் தயாராக இருக்கிறேன்,'' என, பா.ஜ., - எம்.பி.,யும், நடிகரு மான, சத்ருகன் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.

யோசனைநடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா; தனிக்கட்சி துவங்குவாரா;பா.ஜ.,வில் சேருவாராஎன்பதுதான், தமிழகத்தில், இப்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பீஹார் மாநில, பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். பா.ஜ., தலைமை மீது அதிருப்தியில் உள்ள சத்ருகன் சின்ஹா, 'எந்த கட்சியிலும் சேர வேண்டாம்' என, ...

மருத்துவ கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 25 May 2017 10:20 AM PDT

மும்பை: ''அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை கிடைக்க, மருத்துவ கருவி களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனை யின், 75ம் ஆண்டு நிறைவையொட்டி, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், டில்லியில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரஸ்' மூலம் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்ற னர்; இவர்களில், 6.5 லட்சம் பேர் உயிரிழக்கின் றனர்.அடுத்த, 30 ...

ரூ.1,500 கோடி நில அபகரிப்பு மோசடி அமலாக்கத்துறை அதிரடி 'ரெய்டு'

Posted: 25 May 2017 10:29 AM PDT

புதுடில்லி:ஹரியானா மாநிலம் குர்கானின் மானசேர் பகுதியில், விவசாயிகள் உள்ளிட்டோரிடம் இருந்து நிலங்களை அபகரித்து, 1,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்டோ ரின் வீடு, அலுவலகம் உட்பட, 10 இடங்களில், அமலாக்கத் துறை, நேற்று சோதனையில் ஈடுபட்டது.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந் துள்ளது. மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, டில்லிக்கு அருகில் உள்ள குர்கானின் மானசேர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள், நில உரிமையாளர்கள் மிரட்டப் பட்டு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக ...

எம்.எல்.ஏ.,க்களை கவனியுங்க: மந்திரிகளுக்கு முதல்வர் உத்தரவு

Posted: 25 May 2017 10:35 AM PDT

'எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகளை நிறை வேற்றுங்கள்' என, அமைச்சர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, அமைச்சரவை கூட்டம் துவங்கியது. முதல்வர் பழனிசாமி தலைமையில், மாலை 4 மணி வரை நடந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திற்கு, ஒப்புதல் அளிப்பது மற்றும் அதன் சாதக, பாதகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், சட்டசபை கூட்டத் தொடரை, அடுத்த மாதம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மாலை, 4:00 மணியில் இருந்து, 4:30 மணி வரை, அதிகாரிகள் இல்லாமல், முதல்வர் தலைமையில், ...

பதவி கேட்டு எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி: அமைச்சரவையை மாற்ற முதல்வர் முடிவு?

Posted: 25 May 2017 10:39 AM PDT

பதவி கேட்டு, எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி கொடுப்பதால், அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்தும், புதியவர்களுக்கு அமைச் சர் பதவி வழங்குவது குறித்தும், முதல்வர் பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா அமைச்சரவையில், 32 அமைச்சர் கள் இருந்தனர். அவர் மறைவை தொடர்ந்து, 2016 டிச., 5ல், பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். ஜெ., அமைச்சரவையில் இருந்த அனைவரும், மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.பின், பிப்., 16ல், முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில், பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. பன்னீர் ...

ஏட்டை இம்சிக்கும் முதல்வரின் சகோதரர்; இஷ்டத்துக்கு இடம் மாற்றி பந்தாட்டம்

Posted: 25 May 2017 10:43 AM PDT

சேலம்: முதல்வர் பழனிசாமியின் சகோதரர் உத்தரவுப்படி, போலீஸ் ஏட்டை, அடிக்கடி இடம் மாற்றி, அதிகாரிகள் பந்தாடுகின்றனர்.

முதல்வர் பழனிசாமியின், சொந்த ஊரான, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, சிலுவம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, 47; இவர், 1997ல், போலீஸ் பணிக்கு தேர்வானார். பல மாவட்டங்களில் பணியாற்றிய பின், சேலம் மாவட்டத்துக்கு வந்தார்.சிலுவம்பாளையத்தில், முதல்வர் பழனிசாமி யின் வீட்டுக்கு நேர் எதிரே, ஏட்டு பழனிச்சாமி யின் வீடு உள்ளது. 2015 டிசம்பரில், ஏட்டுக்கும், முதல்வரின் சகோதரர் கோவிந்தராஜுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏட்டை, கோவிந்தராஜ் ...

தனியார் பால் பற்றிய மந்திரியின் விமர்சனத்தால் முகவர்கள் கொதிப்பு!

Posted: 25 May 2017 11:06 AM PDT

தனியார் பால் தரம் குறித்து, அமைச்சர் ராஜேந் திர பாலாஜி செய்து வரும் தொடர் விமர்சனத் தால், பால் முகவர்கள் கொதிப் படைந்துள்ள னர். இது, மக்கள் மத்தியில் அச்சம், பீதியை ஏற்படுத்தும் என்றும், ஒரு பொறுப்புள்ள மந்திரி, வழிப்போக்கன் போல பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின், பால் தேவையை பூர்த்தி செய்வ தில், ஆவினை விட, தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகம். இந்நிலையில், 'தனியார் நிறுவ னங்கள், பால் கெடாமல் இருக்க ரசாயனம் கலக்கின்றன' என, பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, நேற்று முன் தினம் புகார் ...

சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 'ரிசல்ட்' எப்போது?

Posted: 25 May 2017 12:07 PM PDT

புதுடில்லி : ''சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
குழப்பம்:
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. மதிப்பெண் வழங்கும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
விளக்கம்:
இந்நிலையில், ''இது ...

மணல் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் தீரும்!

Posted: 25 May 2017 12:42 PM PDT

மணல் தட்டுப்பாட்டை நீக்குவது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி முடிந்ததால், மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி பெறும் முயற்சியில், தமிழக அரசு இறங்கியது. ஒப்பந்ததாரரை நியமிக்காமல், அரசே நேரடியாக மணலை விற்பனை செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டது. 5ம் தேதி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

முதலில், திருச்சி மற்றும் விழுப்புரத்தில், இரண்டு குவாரிகள் மட்டுமே திறக்கப்பட்டன. தற்போது, 20 குவாரிகள் திறக்கப்பட்டு உள்ளன. ...

'நீட்' தேர்வை எதிர்க்கும் மனு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

Posted: 25 May 2017 01:14 PM PDT

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத் தேர்வு, கடந்த, 7ல் நடந்தது. நாடு முழுவதும், 1,900 மையங்களில், 11 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுதினர்.
'பீஹாரில், இந்த நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள் முன்னதாகவே வெளியானது; அது, ராஜஸ்தான், மேற்கு வங்கத்திலும் கிடைத்தது. அதனால், இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 'இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, ...

வெயில் எதிரொலி: பணி நேரம் மாற்றம்!

Posted: 25 May 2017 01:45 PM PDT

கொளுத்தும் வெயில் காரணமாக, வேலை உறுதியளிப்பு திட்ட பணி நேரத்தை மாற்றியமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சொந்த ஊரில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும், தேசிய வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில், கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள் துார் எடுப்பதாக துவங்கிய பணி, பின், பொது இடங்களை சுத்தப்படுத்துவது, பண்ணைக்குட்டை அமைப்பது, சமுதாய கழிப்பிடம் என, மாற்று பணிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட வெயில் கொளுத்துவதால், காலை, 9:00 மணி முதல், மாலை, ...

‛மன்மோகன்சிங் மரணம்' என டுவிட்; இலங்கை அமைச்சர் பெயரில் போலி பதிவு

Posted: 25 May 2017 02:29 PM PDT

கொழும்பு: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் காலமானதாக இலங்கை அமைச்சர் பெயரில் போலி டுவிட் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணநாயகே பெயரில் டுவிட்டரில் இருந்த போலி கணக்கு ஒன்றில் இருந்து, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணமடைந்து விட்டதாக டுவிட் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட, உடனடியாக அந்த டுவிட்டை போலீசார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், போலி கணக்கில் டுவிட் பதிவு செய்த மர்ம நபர்களை தேடி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™