Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கடன் செலுத்தாதோர் பட்டியல் வெளியிட ஆர்.பி.ஐ., மறுப்பு

Posted: 23 May 2017 09:38 AM PDT

புதுடில்லி: வங்கிகளில், ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல், கடன் வாங்கி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட, ரிசர்வ் வங்கி, மீண்டும் மறுத்து விட்டது.

'வங்கிகளில், ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் கடன் பாக்கி வைத்து, திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்' என கோரி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கிக்கு, 2015ம் ஆண்டில், ஒருவர் மனு கொடுத்தார்.
கடன் பாக்கி
இந்த மனுவை நிராகரித்த ரிசர்வ் வங்கி, 'இந்த விபரங்களை வெளியிட்டால், நாட்டில் பொருளாதார, வர்த்தக நம்பிக்கை பாதிக்கும்' என கூறியது. இதையடுத்து, மனுதாரர், ...

ராணுவ தாக்குதலில் பாக்., பதுங்கு குழிகள் அழிப்பு பதிலடி! பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை

Posted: 23 May 2017 09:55 AM PDT

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும், பாக்., ராணுவத்திற்கு பதிலடி தரும் வகையில், நம் ராணுவ வீரர்கள் நேற்று, பாக்., ராணுவ நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை தாக்கி அழித்தனர்.

'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கையால், காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்படும்' என, ராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., எனப்படும், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், இந்தியா - பாக்., ...

ஆசிய - ஆப்பிரிக்க வளர்ச்சி: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 23 May 2017 10:01 AM PDT

காந்திநகர்: 'ஆசியா - ஆப்பிரிக்கா இடையேயான வளர்ச்சி பாதை மேம்பட வேண்டும்' என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்

குஜராத்தில், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் காந்தி நகரில், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி குழுவின், 52வது ஆண்டு கூட்டம் நேற்று துவங்கியது.
கூட்டத்தை துவக்கி வைத்து, மோடி பேசியதாவது: ஆப்பிரிக்காவுடனான நமது உறவு, இன்று, நேற்றல்ல;
பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகிறது. இப்போது, அது, மேலும் வலுப்பெற்று வருகிறது. பிரதமராக, 2014ல் நான் பதவியேற்ற பின், இந்திய வெளியுறவு கொள்கையில், ஆப்பிரிக்காவுக்கு ...

முதல்வரிடம் புகார் பட்டியல் வாசிக்க அடுத்தடுத்து எம்.எல்.ஏ.,க்கள் படையெடுப்பு!

Posted: 23 May 2017 10:16 AM PDT

கூவத்துார் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அ.தி.மு.க., - சசிகலா அணியில், அதிருப்தி அதிகரித்துள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் புகார் பட்டியல் வாசிக்க, அடுத்தடுத்து படையெடுத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டாக, முதல்வரை சந்தித்தனர். நேற்று, 10 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து, தங்கள் குறைகளை கொட்டினர்.'சட்டசபை கூட்டத்திற்கு முன், மந்திரி பதவி வேண்டும்; மாவட்டம், ஜாதி வாரியாக, அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட வேண்டும்' என்றும், அவர்கள் நெருக்கடி கொடுக்க ...

ஆட்சி மாற்றம் எப்போது; மக்கள் ஏக்கம்: ஸ்டாலின்

Posted: 23 May 2017 10:25 AM PDT

சென்னை: அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்களும், ஆட்சி மாற்றம் எப்போது வரும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தவர்களும், ஆட்சி மாற்றம் எப்போது வரும் என்ற, ஏக்கத்தில் உள்ளனர். மக்கள் படும் இன்னல்களை நீக்க, மனசாட்சி இல்லாத அரசாக பழனிசாமி அரசு செயல்படுகிறது. அ.தி.மு.க., அரசு பதவியேற்று, ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
இமாலய ஊழல்
அதிகார பலத்தால் வென்ற அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே உள்ள ஓட்டு வித்தியாசம், 1.1 சதவீதம் தான். ஓட்டளித்த மக்களின் ...

வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

Posted: 23 May 2017 10:36 AM PDT

மத்திய அரசின், வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டத்துக்கு, 2016ல், எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, தற்போது அதை ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது.

வீடுகள், கடைகள் மற்றும் மனைகளை வாடகைக்கு விடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண, மாதிரி வீட்டு வாடகை சட்டத்தை, 2015ல், மத்திய அரசு உருவாக்கியது. பின், மாநில அரசுகள் கருத்தை அறிய, அதன் வரைவு நகலை சுற்றுக்கு அனுப்பியது. பெரும்பாலான மாநிலங்கள், இதை ஏற்றாலும், தமிழக அரசு ஏற்கவில்லை.
'சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தினால், வீட்டு உரிமையாளர்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும். வாடகைதாரர்களால், வீடு, மனை ...

1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'

Posted: 23 May 2017 10:44 AM PDT

சென்னை: மனப்பாட கல்வி முறையை கைவிடும் வகையில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அறிவியல் பாடத்தில், கணினி அறிவியலும் இடம் பெறுகிறது.பள்ளி பாடத்திட்ட மாற்றத்திற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், நேற்று வெளியிட்டு உள்ளார்.

அதன் விபரம்:
சர்வதேச அளவிலான அறிவியல், சமூக, பொருளாதார வளர்ச்சி, போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் வெற்றியை கருத்தில் கொண்டு, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.
சி.பி.எஸ்.இ.,யை விட மேலானதாகவும், தமிழக பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், ...

சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி; நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு

Posted: 23 May 2017 10:46 AM PDT

சுதந்திர தினத்தன்று, புது கட்சி அறிவிப்பை வெளியிட, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். கட்சிக் கொடியை, இரு தினங்களுக்கு முன் வடிவமைத்துள்ளார். ரஜினி கட்சியில் சேர, நடிகைகள் மீனா, நமீதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி, சமீபத்தில், தன் ரசிகர் களை சந்தித்தார். அப்போது, 'அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் போருக்கு, ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும்' என, அழைப்பு விடுத்தார்.
புதிய கட்சி அறிவிப்பு
இரு தினங்களுக்கு முன், வெளிநாடு சென்று உள்ள தொழிலதிபர் ஒருவரிடம், ...

ஸ்மிருதியை துரத்தும் கல்வித்தகுதி வழக்கு

Posted: 23 May 2017 10:54 AM PDT

புதுடில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த வழக்கில், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது, அவருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 41, ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார். தற்போது ஜவுளித் துறையை கவனித்து வரும் அவர், முதலில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, டில்லியைச் சேர்ந்த அகமது கான் என்பவர், டில்லி கோர்ட்டில்,
ஒரு வழக்கு தொடர்ந்தார்.பொய் தகவல் 'மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2004 லோக்சபா தேர்தலின் போது, ...

எங்கள் நாட்டை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் : பாக்., ராணுவ அதிகாரி தகவல்

Posted: 23 May 2017 11:57 AM PDT

இஸ்லாமாபாத்: ''பாகிஸ்தானை பயங்கரவாதிகள் பிற நாட்டுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்,'' என்று அந்நாட்டு தலைமை ராணுவ அதிகாரி பாஜ்வா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி டேவிட் ஹேலே மற்றும் பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி ஜாதவ் பாஜ்வா இடையே அமெரிக்கா -- பாகிஸ்தான் இடையே பரஸ்பர உறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த ஆலோசனை நடந்தது.இது குறித்து தலைமை ராணுவ அதிகாரி ஜாதவ் பாஜ்வா கூறும்போது, "இரு நாடுகளும் தங்கள் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ...

ஜெட்லி அவதூறு வழக்கு : கெஜ்ரிவாலுக்கு 'நோட்டீஸ்'

Posted: 23 May 2017 12:53 PM PDT

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 10 கோடி ரூபாய் கேட்டு தொடர்ந்துள்ள அவதுாறு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ஐகோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
கடும் வாக்குவாதம் :
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. துவக்கம் முதலே, மத்திய அரசுடன், மோதல் போக்கை கொண்டுள்ளார், கெஜ்ரிவால். 'டில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது, மத்திய நிதியமைச்சராக
உள்ள அருண் ஜெட்லி, மோசடிகள் செய்தார்' என, அரவிந்த் கெஜ்ரிவால் ...

வாடிக்கையாளர்களுக்கு 4 சதவீத வட்டி வழங்குகிறது பேடிஎம்

Posted: 23 May 2017 01:23 PM PDT

புதுடில்லி: பேடிஎம் நிறுவனம் புதிதாக துவங்கவுள்ள வங்கி மூலம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4 சதவீத வட்டி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்ட பின்பு டிஜிட்டல் முறை பண பரிமாற்றத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இதனால் ஆன் - லைன் பண பரிமாற்ற நிறுவனமான பே டிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. தற்போது 2.2 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் தற்போது தங்களது வாடிக்கையாளர்கள் ...

50 டிகிரி செல்சியஸை நெருங்குது கோடை வெப்பம்

Posted: 23 May 2017 02:00 PM PDT

ராய்பூர்: அக்னி நட்சத்திரம் துவங்கியதில் இருந்து வடமாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சட்டிஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நேற்று 49.3 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. விரைவில் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு கோடை வெயில் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கிய பின்பு தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வந்தாலும் வட மாநிலங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டு வருகிறது.
இதன் படி சட்டிஸ்கர் மாநிலம் ...

'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு ரேஷன் கடையில் வேலை

Posted: 23 May 2017 02:35 PM PDT

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத, 'டாஸ்மாக்' ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த, 3,000 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அவற்றில் பணிபுரிந்த ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள அரங்கில், 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குனர், கிர்லோஷ் குமார் தலைமையில், அதன் மாவட்ட மேலாளர்கள் கூட்டம், நேற்று நடந்தது.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மூடிய கடைகளுக்கு, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™