Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்

Posted: 23 May 2017 03:01 PM PDT

சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் செய்யுறதைச் செஞ்சுடுங்க நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க ஒண்ணுமே நடக்காம உள்ளம் நொந்து செத்தாங்க என்னாலும் ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க முடியிருந்தும் மொட்டைகளாய் மூச்சிருந்தும் கட்டைகளாய் விழியிருந்தும் பொட்டைகளாய் விழுந்துகிடக்கப் போறீங்களா? முறையைத் தெரிஞ்சு நடந்து பழைய நினைப்பை மறந்து உலகம் போற பாதையிலே உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா சித்தர்களும் ...

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?

Posted: 23 May 2017 02:52 PM PDT

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா? திடீரென நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பது போல் உணர்ந்தாலும், மூளையில் ஏதோ குழம்புவது போல் இருந்தாலம், செயலில் ஒரு தடுமாற்றம் இருந்தாலும், எடை திடீரென அதிகம் கூடுவது (அல்லது) குறைவது போல் இருந்தாலும், முடி திடீரென அதிகமாக கொட்டினாலும், பரபரப்பு, அதிக வியர்வை இவையெல்லாம் இருந்தாலும் தைராய்டு சரிவர இயங்காததன் அறிகுறிகளாக இருக்கக் கூடும். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இத்தனை முக்கியத்துவம் பெறும் இந்த தைராய்டு சுரப்பி நம் உடலில் எங்கு இருக்கின்றது ...

பழைய துப்பறியும் நாவல்கள்.

Posted: 23 May 2017 01:09 PM PDT

ஈகரை சொந்தங்களே,பழம் பெரும் எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,ஜே.ர்.ரெங்கராஜு ஆகியோர் படைத்த அற்புதமான துப்பறியும் கதைகள் இருந்தால் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்

Posted: 23 May 2017 12:04 PM PDT

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம் இந்த ஆசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். முயல் அல்லது பிறைச்சந்திரத் தோற்றம். 'சசாங்க' என்றால் பிறைச்சந்திரன். ஆனால், உண்மையில் இதன்பெயர் சசாகா (முயல்) ஆசனம் (நிலை) என்றும் நம்பப்படுகிறது. ஆசனத்தின் உச்சநிலையில் உடல் பிறைச்சந்திரன் அல்லது முயலைப் போன்றிருக்கும். செய்முறை : விரிப்பில் நேராக உட்கார்ந்து கால்களை நேராக நீட்டவும். பாதங்கள் இணைந்த நிலையில், ...

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை

Posted: 23 May 2017 10:22 AM PDT

புதுடெல்லி: குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமானது தனது 12-ம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கட்டண சலுகையை அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.12 முதல் ஆரம்பிக்கும் என்ற சலுகையை அறிவித்துள்ளது. இந்த 12 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டும்தான். வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் தனியாக செலுத்த வேண்டும். இந்த சலுகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை இரண்டுக்கும் பொருந்தும். இது ...

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer

Posted: 23 May 2017 10:06 AM PDT

PMPlayer எனப்படும் இது ஒரு இலவச மென்பொருளாகும். இது அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் ஆடியோ பைல்களையும் சுலபமாகவும் விரைவாகவும் திறக்கக்கூடியது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.  இதன் கீழ்புறம் நிறைய ஐகான்கள் ;கொடுத்திருக்கின்றார்கள். இதில் முதலாவது ஐகானை கிளிக் செய்தால் பைல்கள் திறப்பதற்கான டேப் ஓப்பன் ஆகும். தேவையான பைலினை தேர்வ சேய்து ஒடவிடலாம். இரண்டாவதாக உள்ள ஐகானை கிளிக்செய்தால் ...

அஞ்செழுத்தால்

Posted: 23 May 2017 09:54 AM PDT

நமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல ! இது ஒரு சித்தர்களின் பரிபாஷை ! பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன் அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன் அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே 1) முதல் வரி :அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் ந் என்ற எழுத்தால் மண்ணை படைத்தனன் ம என்ற எழுத்தால் நீர் சி என்ற எழுத்தால் நெருப்பு வ என்ற எழுத்தால் காற்று ய ...

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்

Posted: 23 May 2017 09:52 AM PDT

- -புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று ஜெயின் கமிஷன் அறிக்கையில் சந்திராசாமியை குறிப்பிட்டனர். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருக்கு சந்திராசாமி நெருக்கமானவராக இருந்தார். இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த சந்திராசாமி இன்று டெல்லியில் காலமானார். - ---------------------------- தினத்தந்தி

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!

Posted: 23 May 2017 07:27 AM PDT

ல நடிகரான - ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று ஸ்விட்சர்லாந்தில் காலமானார். மூரின் இறப்பு செய்தியை, அவரது குடும்பம் உறுதி செய்துள்ளது. கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் அவர் 7 திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். அவரது அதிகாரபூர்வ சமூக வலைதள ...

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)

Posted: 23 May 2017 05:33 AM PDT


-
ச்சும்மா ஜாலிக்கு...
-
மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...
நூடுல்ஸ் பண்ணிக்கொடும்மா!
-
-------------------------------
-
எப்ப பார்த்தாலும் மானாட மயிலாட பார்க்காதேன்னு
சொன்னா கேட்டாதானே,
பாரு தூக்கத்துல கூட தொங்கற!
-
--------------------------------
பார்த்ததில் பிடித்தது

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!

Posted: 23 May 2017 05:32 AM PDT

சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதால், 'தூய்மையான காற்றையே சுவாசிக்க முடியவில்லை...' என, ஏக்கத்தில் தவிப்போருக்கு தீர்வு வந்து விட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில், ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது, ஒரு நிறுவனம். 1 லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்று, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது, அரை லிட்டர் பாட்டிலிலும் கிடைக்கிறது. அதிகமாக வாங்குவோருக்கு, விலையில் தள்ளுபடி உண்டாம்.

டிப்ஸ...டிப்ஸ்...

Posted: 23 May 2017 04:41 AM PDT

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்

Posted: 23 May 2017 02:09 AM PDT

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'. 'ரத்தம் ஒரே நிறம்' கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது 'கறுப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது ...

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்

Posted: 23 May 2017 01:39 AM PDT

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்

Posted: 23 May 2017 01:37 AM PDT

நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!

Posted: 23 May 2017 01:37 AM PDT

கூழாங்கல் வாக்கிங்

Posted: 23 May 2017 01:32 AM PDT

ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!

Posted: 23 May 2017 01:21 AM PDT

- 'நதி நீர் இணைப்புத் திட்டம்' குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான இன்பதுரை, ''மக்கள் நலனில் அக்கறை இருந்தால், நதி நீர் இணைப்புக்கு ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாயை வழங்க வேண்டும்'' எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைக் கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ளநீர்க் கால்வாய் மூலமாக திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ...

நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!

Posted: 23 May 2017 01:12 AM PDT

பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஆஜராகாததால், நடிகர்கள் சரத்குமார், சூர்யா, நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு பேருக்கு, நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசினர். இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை ...

மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்

Posted: 23 May 2017 01:05 AM PDT

மான்செஸ்டர்: இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் பலியாயினர்; 50 பேர் படுகாயம் அடைந்தனர். விசாரணையில் இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்றும், இந்த மனித குண்டும் இந்த சம்பவத்தில் பலியானான் என்றும் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து, இசை நிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடினர். ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 22 May 2017 09:30 PM PDT

அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். *

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை

Posted: 22 May 2017 09:02 PM PDT

மத்திய அரசால் செல்லா தென அறிவிக்கப்பட்ட, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரித்து, ஒடிசா மாணவன் சாதனை படைத்துள்ளான். ஒடிசாவில், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இங்கு, நுவாபடா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் படிக்கும், லக்மண் துண்ட், 17; ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கல்லுாரி நேரத்திற்கு பின், மின்சார பல்பு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து உள்ளான். இது குறித்து, ...

தங்கமோ தங்கம் !

Posted: 22 May 2017 08:58 PM PDT

பொதுவாக உலோகத்தை 'பொன்' என்று சொல்வது மரபு. ஆனால் பொன்னிலேயே நான்கு வகை இருக்கிறது .என்பது எனக்கு வியப்பு செய்தியாக இருந்தது அத்தகைய நான்கு வகை பொன்னும் பண்டைய தமிழகத்தில் வெகுவாக புழக்கத்தில் இருந்ததை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் தெரிவிக்கிறார் . எப்படியெல்லாம் ஆற்றலுடன் அறிவுடன் இருந்திருக்கிறது அன்றைய தமிழ்ர் சமுதாயம் , இப்போது எங்கே போனது அத்தகைய தெளிவும் ஆற்றலும் என்கிற ஆற்றாமை வருகிறது . சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையில் பொலம்தெரி மாக்கள் ...

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு

Posted: 22 May 2017 08:48 PM PDT

உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஒரே வாரத்திற்கும் குறைந்த காலத்தில் இரண்டு முறை அடைந்து ஒரு இந்திய பெண் சாதனை படைத்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான 37 வயது அன்ஷு ஜம்சென்பா, மே மாதம் 16ம் தேதி மற்றும் 21ம் தேதி என இரண்டு நாட்களில் எவெரெஸ்ட் மலையை அடைந்ததாக சுற்றுலாத்துறை அதிகாரியான கியானேந்திரா ஷ்ரேஸ்தா பிபிசி நேபாளி சேவையிடம் உறுதிப்படுத்தினார். ஒரு பெண் எவெரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறுவதில் தற்போதைய கின்னஸ் சாதனை என்பது ஏழு நாட்கள் என்பதுதான். ஒரே வாரத்தில், மலையேறும் மூன்று ...

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Posted: 22 May 2017 08:37 PM PDT

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற. வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரகர். விற்காத வீடுகளைக்கூட விற்கச் செய்பவர். தனக்கென ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அந்த வீட்டில் பேய் இருப்பதாக புரளியை ஏற்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார். அதே வீட்டுக்கு ஜம்புலிங்கம் (தம்பி ராமைய்யா) என்பவரும் உரிமைகோரி அதே வீட்டில் தங்குகிறார். ஜம்புலிங்கத்தின் மகள் ஸ்வேதா (ஸ்ரீ திவ்யா). ஜம்புலிங்கத்தின் ...

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி

Posted: 22 May 2017 08:32 PM PDT

தற்போதுள்ள கணினிகளை விட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் கையாளும் திறன் கொண்ட புரட்சிகரமான புதிய கணினியை ஹெச்.பி எனப்படும் ஹெவ்லர்ட்-பேக்கர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கணினி, 160 டிபி நினைவகத் திறன் கொண்டது. `தி மெஷின்' என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி, நிலையான மின் தூண்டுதல்கள் மூலம் சிலிக்கான் வழியாக பயணம் செய்வதற்கு பதிலாக, ஒளி அலைகளைப் பயன்படுத்தி தரவுகளை அனுப்பும். இந்தப் புதிய கணினியின் நினைவகத் திறன், எல்லையில்லா நினைவகத் திறன் படைத்த கணினிகளை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் ...

- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்

Posted: 22 May 2017 07:53 PM PDT

இயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்

Posted: 22 May 2017 07:48 PM PDT


-

பண்பு ...

Posted: 22 May 2017 07:45 PM PDT

உறக்கம் சிறக்க...

Posted: 22 May 2017 07:41 PM PDT


-
கோகுலம்

உருமாற்றம் - சிறுவர் பாடல்

Posted: 22 May 2017 07:37 PM PDT


-

-

-
கோகுலம்

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!

Posted: 22 May 2017 07:35 PM PDT


-

அணில் – சிறுவர் பாடல்

Posted: 22 May 2017 07:33 PM PDT


-

பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்

Posted: 22 May 2017 07:32 PM PDT

ரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்

Posted: 22 May 2017 07:06 PM PDT


-

-
நன்றி- கோகுலம்

ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்

Posted: 22 May 2017 07:05 PM PDT


-
நன்றி- கோகுலம்

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது

Posted: 22 May 2017 05:59 PM PDT

- பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள ஒரு பெல்ட் ஒரு ரோடு புதிய வாணிபத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனாவை சென்றடைந்தது. வடமேற்கு சீனாவின் கரமெய் பகுதிக்கு பாகிஸ்தானிலிருந்து கடல் உணவு வந்திறங்கியது. பாகிஸ்தானில் உள்ள கவாதார் துறைமுகத்திலிருந்து இந்த கடல் உணவு சீனாவுக்கு 34 மணி நேரத்தில் வந்ததையடுத்து கரமேய் பகுதி மக்கள் பாகிஸ்தான் கடல் உணவை ருசித்ததாக சீன பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 16 வகையான ஆழ்கடல் கடலுணவு ...

எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்

Posted: 22 May 2017 05:51 PM PDT

புதுடெல்லி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது மாயமான இந்தியர், 200 அடி பள்ளத்தில் விழுந்து பலியானது தெரியவந்துள்ளது. உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில் ஏறுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மலையேறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரவிகுமார்(27) என்பவர் தனது வழிகாட்டி லக்பா வோங்கியா ஷேர்பா என்பவருடன் ...

உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!

Posted: 22 May 2017 05:11 PM PDT

அமெரிக்காவைச் சேர்ந்த பைக் ரேசர் நிக்கி ஹேடன், அவருக்கு வயது 35. அவர் 2006-ம் ஆண்டின் மோட்டோஜிபி சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர், இத்தாலி நாட்டில் விபத்துக்குள்ளானார். மே 17-ம் தேதி நிக்கி ஹேடன் இத்தாலி நாட்டின் ரிமினி கடற்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது ஒரு கார் மோதியது. அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மௌரிஸியோ புஃபலானி என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™