Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'டெண்டர்' கமிஷன் பிரிப்பதில் மா.செ.,க்கள், மந்திரிகள் குடுமிப்பிடி!

Posted: 22 May 2017 10:08 AM PDT

'டெண்டர்' கமிஷன் பிரிப்பதில், மாவட்ட செயலர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே, குடுமிப்பிடி சண்டை துவங்கி உள்ளது. கிடைத்ததை எல்லாம், ஆளாளுக்கு சுருட்டுவதால், கொதிப்படைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்து, புகார் பட்டியல் வாசித்துள்ளனர். ஆளும் கட்சியினர் தரும் அடுத்தடுத்த நெருக்கடிகளால், பழனிசாமி அரசு தவிக்கிறது.

சென்னை, கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்தபோது, 'நான்கு கோடி ரூபாய் ரொக்கம்; 1 கிலோ தங்கம்; அரசு பணிகளில் கமிஷன்; பணி நியமனத்தில் பங்கு' என, சசிகலா குடும்பத்தினர் வாக்குறுதிகளை வாரி வழங்கினர்.
அதை நம்பி, எம்.எல்.ஏ.,க்கள் ...

வாராக்கடன் வசூலிப்பது எப்படி? 15 நாட்களில் வழிமுறைகள் வெளியீடு

Posted: 22 May 2017 10:09 AM PDT

புதுடில்லி: வாராக்கடன்களை வசூலிக்க, வங்கிகளுக்கு தகுந்த உத்தரவுகளை ரிசர்வ் வங்கி அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள, புதிய அவசர சட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகளை, 15 நாட்களுக்குள் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது.

அவசர சட்டம் :
பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், எட்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வங்கிகளுக்கு மிகப்பெரும் சிக்கலாக உள்ள, வாராக்கடன்களை வசூலிக்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க, ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்து, புதிய அவசரசட்டம், சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ...

இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு! பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம்

Posted: 22 May 2017 10:12 AM PDT

ரியாத்: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். ''பயங்கரவாதத்தால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,'' என, அவர் வருத்தம் தெரிவித்தார்.

அண்டை நாடான பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன் நடந்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து, நம் நாடு, சர்வதேச அரங்கில் வெளிப்படையாக தெரியப்படுத்தி வருகிறது; பயங்கரவாதத்துக்கு எதிராக, பல்வேறு நாடுகளின் ஆதர வையும் கோரி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராகசர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
முதல் ...

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு

Posted: 22 May 2017 10:20 AM PDT

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, 10 கோடி ரூபாய் கேட்டு, மற்றொரு புதிய அவதுாறு வழக்கை தொடர்ந்துள்ளார்,

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதலே, மத்திய அரசுடன் மோதல் போக்கை கொண்டுள்ளது. 'டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி முறைகேடுகள் செய்தார்' என, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.
ரூ10 கோடி
அதை தொடர்ந்து, கெஜ்ரிவால் மீது, 10 கோடி ரூபாய் கேட்டு, அவதுாறு வழக்கை ...

ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு; தமிழக பா.ஜ., தலைவர்கள் தவிப்பு

Posted: 22 May 2017 10:33 AM PDT

நடிகர் ரஜினிக்கு, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா பகிரங்க அழைப்பு விடுத்திருப்பதால், தமிழக பா.ஜ., பிரமுகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, ரஜினியின் வீட்டுக்கு, மோடி நேரில் சென்றார். பா.ஜ., கூட்டணிக்கு, அவர் ஆதரவு தரவில்லை என்றாலும், பா.ஜ.,வுக்கு நெருக்கமானவர் என்ற பிம்பம் ஏற்பட்டது. அவர், விரைவில் பா.ஜ.,வில் சேருவார் என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ரஜினியின் பேச்சு, அவரது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, அவர் பா.ஜ.,வில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...

கருணாநிதியின் வைர விழா அரசியலுக்கு அப்பாற்பட்டதா? காதில் பூ சுற்றும் ஸ்டாலின்

Posted: 22 May 2017 10:39 AM PDT

'பா.ஜ., மற்றும் ம.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைர விழா, அரசியலுக்கு அப்பாற்பட்டது என, ஸ்டாலின் கூறுவது, காதில் பூ சுற்றும் செயல்' என, அரசியல் நோக்கர்கள் விமர்சித்து உள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், வீட்டில் முடங்கி உள்ளார். செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்பாட்டில், கருணாநிதியின் சட்டசபை, 60வது ஆண்டு வைர விழா, ஜூன், 3ல், சென்னையில் நடக்கிறது. இதில், அகில இந்திய அளவில், பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.விழா குறித்து, நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், 'ஜனாதிபதி தேர்தலுக்காகவோ, ...

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது

Posted: 22 May 2017 10:46 AM PDT

சென்னை: வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக ...

பிரதமர் சந்திப்பு: பன்னீர் அணி உற்சாகம்

Posted: 22 May 2017 10:49 AM PDT

பிரதமருடன் நடந்த சந்திப்பு, அ.தி.மு.க., - பன்னீர் அணியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. பன்னீர் அணிக்கு, பா.ஜ., மறைமுகமாக உதவியது. சசிகலா மற்றும் தினகரன் சிறைக்கு சென்ற பின், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், மத்திய அரசுடன் நெருக்கம் காட்டினர்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சென்னை, தலைமை செயலகத்தில், அரசு துறைகளின் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். மத்திய அரசின் உத்தரவுகளுக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கட்டுப்பட்டனர்.
கலக்கம்'மத்திய ...

சுகேஷுக்கு ஜாமின் மறுப்பு தினகரனுக்கும் சிக்கல்?

Posted: 22 May 2017 11:49 AM PDT

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, இடைத்தரகர் சுகேஷ் சந்தரின் ஜாமின் மனுவை, டில்லி கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

இதன் மூலம், சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கும் ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அ.தி.மு.க., பிளவுபட்டதால், முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, இடைத்தரகர் சுகேஷ் தாக்கல் செய்த ...

மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93.45 கோடியாக உயர்வு

Posted: 22 May 2017 11:53 AM PDT

நம் நாட்டில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 93.45 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் அமைப்பினர் கூறியதாவது: நம் நாட்டில், ஏப்ரலில் மட்டும், 28 லட்சம் பேர், புதிதாக மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது, மொத்த மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 93.45 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில், 28.50 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்ற, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 27.65 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்ததாக, வோடபோன், 20.98 கோடி; ஐடியா செல்லுலர், 19.60 கோடி வாடிக்கையாளர்களை ...

வருமானம் இல்லாத துறைக்கு இத்தனை அதிகாரிகளா?

Posted: 22 May 2017 12:41 PM PDT

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தின் வருமானத்தை பெருக்க, வழி வகுக்காத அதிகாரிகளுக்கு, அதிக சம்பளம் வழங்கப்படுவதாக, ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது: தமிழகத்தில், சென்னை உட்பட, எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அவற்றில், 22 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக வருமானத்தில், 45 சதவீதம், சம்பளத்திற்கும், 32 சதவீதம், டீசலுக்கும் செலவாகிறது.
பராமரிப்பு, பழுது நீக்கம், தேய்மானம், விபத்து, வட்டி, வரிகள் உள்ளிட்டவற்றிற்கு, 23 ...

உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்

Posted: 22 May 2017 01:14 PM PDT

புதுடில்லி: உருக்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு 2 இடம் கிடைத்துள்ளது.கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் உருக்கு உற்பத்தி 3 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் உற்பத்தி 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகவலை சர்வதேச உருக்கு அமைப்பு வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் உற்பத்தி 9 சதவீதம் அதிகரித்துள்ளதால் 2வது இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி தற்போது இந்தியா 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வளர்ச்சியை நிலையாக்க நடவடிக்கை ...

மனிதனை கேடயமாக பயன்படுத்திய ராணுவ அதிகாரிக்கு விருது வழங்கியதற்கு எதிர்ப்பு

Posted: 22 May 2017 01:58 PM PDT

ஸ்ரீநகர் : கடந்த ஏப்ரல் காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் உள்ள பீர்வாக் தொகுதியில் இடைத்தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை ராணுவத்திற்கு சொந்தமான ஜீப் ஒன்றின் முன்புறத்தில் கட்டி வைத்த அழைத்து சென்றது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ துவங்கியது. அதில் மனிதனை கேடயமாக பயனப்படுத்தியதாக ராணுவ மேஜர் நிதின்லீதுல் லெட்டினட் கோகெய்,52 என்பவர் மீது ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் ராணுவத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ராணுவ தலைமை , பிபின் ராவத், சர்ச்சையில் ...

மல்லையா நிறுவன பங்குகள் அமலாக்க துறை பறிமுதல்

Posted: 22 May 2017 02:32 PM PDT

புதுடில்லி: 'கிங்பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, 'யுனைடெட் பிரீவரிஸ்' நிறுவன பங்குகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தப்பி ஓட்டம்:
கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தைச் சேர்ந்த, கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றான். அவன் மீது, பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™