Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கட்சி அமைப்பில் பெரிய அளவில்... மாற்றம்!:பா.ஜ., தலைவர் அமித் ஷா தீவிரம்

Posted: 02 May 2017 09:45 AM PDT

பா.ஜ.,வில், மிகப் பெரிய அளவில், நிர்வாகி களை மாற்றுவதற்கான பணிகளில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தீவிரமாக களம் இறங்கியுள்ளார். கட்சியின், பலம் வாய்ந்த அமைப்பான, பார்லிமென்ட் போர்டில், முக்கிய தலைவர்களுக்கு இடமளிக்கும் வகையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

உ.பி., உட்பட நான்கு மாநில சட்டசபைத் தேர்தல்களில், தன் பலத்தை நிரூபித்த கையோடு, டில்லியில் நடந்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், மாபெரும் வெற்றியை, பா.ஜ., பெற்றது.இந்த தொடர் வெற்றிகள், அக்கட்சிக்குள் பெரிய அளவில் உற்சாகத்தை அளித்து உள்ளன. 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ...

ஆதார் கட்டாயமானால் போலி 'பான் கார்டு' ஒழியும்!

Posted: 02 May 2017 09:48 AM PDT

புதுடில்லி:நாடு முழுவதும் போலி, 'பான்' கார்டுகளை ஒழிக்கவே, ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படுவதாக, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண் அட்டை வழங்கு வதற்கு, ஆதார் எண்ணை கட்டாய மாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில்ஆஜரான, அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி கூறியதாவது:நாடு முழுவதும் போலி பான் ...

வீரர்கள் தலையை துண்டிப்பதா? பாக்.,குக்கு கடும் கண்டனம்

Posted: 02 May 2017 09:57 AM PDT

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காடி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், நேற்றுமுன்தினம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், கொல்லப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் தலையை துண்டித்து, வெறிச்செயலில் ஈடுபட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக் கைக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது; ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.'ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் வீணாகாது; பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். போர் நடக்கும்போது கூட, இதுபோன்ற ...

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க... முடியுமா?

Posted: 02 May 2017 10:19 AM PDT

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுக்கள், தேர்தல் கமிஷனின் பரிசீலனையில் உள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா, பொதுக்குழு கூடி அதிரடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான சர்ச்சை கேள்விகளுக்கு, சட்ட நிபுணர்கள் விரிவான பதிலளித்து உள்ளனர்.

பொதுச் செயலராக இருந்த, ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுக்குழு கூடி, சசி கலாவை பொதுச் செயலராக நியமித்தது. ஆனால், அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான், பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த விதியை ...

தினகரனுக்கு மேலும் சிக்கல் அமலாக்க துறையும் வழக்கு பதிவு

Posted: 02 May 2017 10:22 AM PDT

புதுடில்லி:அன்னிய செலாவணி மோசடி வழக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவழக்கைதொடர்ந்து, சசிகலா அக்கா மகன் தினகரன் மீது, அமலாக்க துறையும், பண மோசடி வழக்கை தொடர்ந்துள்ளது.

தினகரன் சட்டவிரோதமாக வாங்கி குவித் துள்ள சொத்துக்களை முடக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டதைத் தொடர்ந்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலா அக்கா மகன் தினகரன் மீது, டில்லி போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
4 நாள் ...

'சசி' நிம்மதியை குலைத்த கோடநாடு கொலை!

Posted: 02 May 2017 10:50 AM PDT

கோடநாடு எஸ்டேட் கொள்ளை விவகாரம் குறித்து தகவல் அறிந்ததும், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கள நிலவர தகவல்களை சொல்லக் கூட, ஆளில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ஜெ., தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, உறவினர்கள் சந்திக்கக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ...

தொண்டர்களை சந்திக்க பன்னீர் பயணம் மே 5 முதல் 31 வரை மாவட்டங்களில் வலம்

Posted: 02 May 2017 10:59 AM PDT

அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களை சந்திக்க, மே 5ம் தேதி முதல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, சிலர் முயற்சி எடுத்தனர். இரு அணிகள் சார்பிலும், பேச்சு நடத்த குழு அமைக் கப்பட்டது. 'சசிகலா குடும்பத்தை, முழுமை யாக விலக்க வேண்டும்; ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது தான் பேச்சுக்கு வர முடியும்' என, பன்னீர் அணி சார்பில், நிபந்தனை விதிக்கப்பட்டது.முதல்வர் பழனிசாமி தரப்பினர், அவற்றை ஏற்க மறுத்ததுடன், பேச்சுக்கு எந்த ...

தி.மு.க.,வில் 15 'டம்மி' மா.செ.,க்கள்!:ஸ்டாலின் கையில் 'கல்தா' பட்டியல்

Posted: 02 May 2017 11:09 AM PDT

தி.மு.க.,வில், சரிவர செயல்படாத, 'டம்மி' மாவட்டச் செயலர்கள் பட்டியலை, அக்கட்சி யின் செயல் தலைவர், ஸ்டாலின் தயாரித்துள் ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, கட்சியை சீரமைக்கும் நடவடிக்கையாக, மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்பட்டு, 65 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டம் என, கட்சி அமைப்புகள் உருவாக்கப் பட்டும், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்விக்கு, மாவட்ட செயலர்கள் தான், காரணம் என, கட்சி தலைமைக்கு, அறிக்கை ...

மத்திய அரசை விமர்சிக்காதீங்க! மந்திரிகளுக்கு முதல்வர் அறிவுரை

Posted: 02 May 2017 11:20 AM PDT

'மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்' என, அமைச்சர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பழனிசாமி அரசு பொறுப்பேற்ற பின், 2-வது முறையாக, சென்னை, தலைமை செயலகத் தில், நேற்று, அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டம் காலை, 11:00 மணிக்கு துவங்கியது. கூட்டத்தில்,அங்கீகாரமற்ற நிலம் விற்பனைக்கு, உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை, புதிய வழிகாட்டி மதிப்பு வெளியீடு மற்றும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.சரக்கு மற்றும் சேவை வரி சட்டம்; நிதி, வருவாய், போக்குவரத்து, வீட்டு வசதி துறை ...

'சிவப்பு சுழல் விளக்கை அகற்ற முடியாது' : கர்நாடக அமைச்சர் பிடிவாதம்

Posted: 02 May 2017 12:15 PM PDT

மங்களூரு: ''முதல்வர் உத்தரவிட்டால் மட்டுமே, காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கை
அகற்றுவேன்,'' என, கர்நாடக மாநில அமைச்சர், காதர் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா சபாநாயகர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரை தவிர, மற்றவர்கள், தங்கள் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்த, மத்திய அரசு தடை விதித்தது. இம்மாதம் முதல், இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உட்பட பலர், தங்கள் கார்களில் ...

அணு ஆயுத சோதனை நடத்துவோம் வடகொரியா மீண்டும் எச்சரிக்கை

Posted: 02 May 2017 01:15 PM PDT

பியாங்யாங் : வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து, அமெரிக்கா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து கொரிய தீபகற்ப பகுதியில் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற போர்க்கப்பலை நிறுத்தியது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பதிலடி அளிக்கும் வகையில், அதிக திறன் கொண்ட அணுஆயுத ஏவுகணை சோதனையை எந்த நேரத்திலும் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது: அமெரிக்கா ...

காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்களாம்: பாக். ஆலோசகரின் திமிர் பேச்சு

Posted: 02 May 2017 02:04 PM PDT

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கான அனைத்து வாய்ப்புகளை இந்தியா நழுவவிட்டுவிட்டது என பாக். ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றம்சாட்டுகிறார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காடி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், நேற்றுமுன்தினம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், கொல்லப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் தலையை துண்டித்து, வெறிச்செயலில் ஈடுபட்டது. பாக்.மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது.இந்ந சூழ்நிலையில் பாக். வெளியுறவு ...

நகரங்களில் தூய்மை அதிகரிப்பு: 'தூய்மை இந்தியா' திட்டம் வெற்றி

Posted: 02 May 2017 02:59 PM PDT

புதுடில்லி : மத்திய அரசின், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல பகுதிகள் துாய்மை அடைந்துள்ளதாக, மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளையும் துாய்மையானதாக மாற்ற, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, 500 நகரங்களில் உள்ள மக்களிடம், இத்திட்டத்தின் பயன் குறித்து கருத்துக் கேட்கப்பட்டது.
அதில், 434 நகரங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு முடிவுகள் வெளியாகியுள்ளன; இதில், 83 சதவீதம் பேர், அவர்கள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™