Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வைட்டமின் டி

Posted: 02 May 2017 03:29 PM PDT

வைட்டமின் டி நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.   எலும்புகளின் வலுவுக்கு கால்ஷியம் மிகவும் முக்கியம். அந்த கால்ஷியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் ...

எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் கூடாது

Posted: 02 May 2017 03:26 PM PDT

புதுடெல்லி: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நேற்று ஒரு மனுவை அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மட்டும் இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்தலின் போது பலமான முறையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது. அதனை தடுக்க தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு சவாலாகவே இருந்து உள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற விஷயங்களை தடுக்க எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர சின்னம் கொடுக்கக் கூடாது. ஏனெனில் இன்றைய மக்கள் ...

ஜுன் மாதத்தில் இந்தியாவில் 420 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் : அதிரவைக்கும் ஆய்வு

Posted: 02 May 2017 03:23 PM PDT

குறிப்பாக, தற்போது நகர்புறப் பகுதிகளை விட, கிராமப்புறத்தில் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்தும் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் முடிவில் இந்தியாவில் 389 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் இருந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் முதல், 2016-ம் ஆண்டு அக்டோபர் வரை, இந்தியாவில் மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதில் நகர்புறத்தில் 9 சதவிகிதம் வளர்ச்சி இருக்க, கிராமப்புற பகுதிகளில் ...

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Posted: 02 May 2017 03:22 PM PDT

- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற பகுதியில் உள்ள பால்குர்காட் என்ற சட்டக்கல்லூரியில் தற்போது 3வது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதை எழுதிய மாணவர்களில் சிலர், கேள்விக்குரிய விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர். இந்த மாணவர்களின் விடைத்தால்களை திருத்திய ஆசிரியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் ...

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Posted: 02 May 2017 03:16 PM PDT

பொண்ணு டி.வி. பிரபலம்னு சொல்லி கட்டி வச்சுட்டாங்க! – அது பொய்யா? – டி.வி. பிரபலம்தான்…சொல்வதெல்லாம் உண்மை புரோக்ராம்ல வந்த பிரபலமாம்!! – வி.சகிதாமுருகன் – ———————————– – அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – வீடு, வாசலை பெருக்கிக்கிட்டே பாட்டுப் பாடற போட்டி..!! – க.சரவணகுமார் – ———————————– – எதார்த்தமானவர் நம் புலவர்! – பாடிய புலவருக்கு அரிசி, பருப்பு, பாமாயில் குடுக்கும்போதே தெரிஞ்சிகிட்டேன்! – வி.சகிதாமுருகன் – ———————————- –

மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்!

Posted: 02 May 2017 03:12 PM PDT

தாங்கள் நேற்று பாட வருவதாகச் சொல்லிவிட்டு இன்று வருகிறீர்களே ஏன்? – கஜானாவில் பொற்காசுகளை இன்றுதான் லோடு செய்வதாக கேள்விப்பட்டேன், மன்னா! – கே.அருள்சாமி – —————————— – மன்னர் பதுங்கு குழியை மெகா சைஸ்ல வெட்டும்போதே சந்தேகப்பட்டேன்… – என்ன? – உள்ளே நர்த்தகிகள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்..! – ———————————- – மாப்பிள்ளைக்கு பொண்ணைப் பிடிக்கலயாம்! – அப்ப, மேக்கப் சார்ஜ் 3500 ரூபாயை குடுத்துட்டு நடையைக் கட்டுங்க! – கே.அருள்சாமி – ———————— – ஆபிஸ்ல இருந்து வரும்போதே மாமியார் ...

மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்

Posted: 02 May 2017 01:57 PM PDT

மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம் வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை ...

எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்!

Posted: 02 May 2017 12:59 PM PDT

ஓட்டுனர் உரிமம் பெற வேண்டிய வயதில், உரிமம் பெற்று, கார் ஓட்டி பழகியவன் நான். வாகனம் ஓட்டுவதில், மிகுந்த அனுபவம் உண்டு. என் விபத்தில்லா பயணம், இன்றளவும் தொடர்கிறது. என் நிறைந்த அனுபவத்தை வைத்து, விபத்தில்லா பயணத்திற்கென ஒன்றை மட்டும் வாகன ஓட்டிகளுக்கு, சொல்லி வைக்கிறேன்... 'சில நேரங்களில், சாலையில் நம் எதிர் வாகனத்தில் இருப்பவர் வழி விடுவாரா... நம்மை போகவிட்டு, பின், அவர் போவாரா, நாம் முதலிலா, அவர் முதலிலா, நம்மை அவர் முந்துவாரா, நாம் முந்தலாமா...' என்பது போன்ற கேள்விகள் எழுந்து, மன போராட்டங்களாய் ...

வீடு என்ற பெயரில்!

Posted: 02 May 2017 12:57 PM PDT

விமானம், சென்னை விமான நிலையத்தை அடைந்த போது, காலை, 11:00 மணி; மனைவி, மகனுடன், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான், தீபக். எல்லாருக்கும் நல்ல பசி; அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தான். அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை; லேண்ட் லைன் போனுக்கு தொடர்பு கொண்ட போதும், யாரும் எடுக்கவில்லை. 'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் ...

படித்ததில் பிடித்தது - II :) -- இப்படியும் ஒரு சேவையா?

Posted: 02 May 2017 12:52 PM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Posted: 02 May 2017 12:52 PM PDT

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! - பா.வெ. ஓட்டுக்கட்டிடம் தாங்கிய ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று ஊர்புறத்தில் கல்வியை ஊட்டி வளர்க்கும்! ஆரம்ப கல்வியை ஆரம்பிக்கும் குழந்தைகள் ஆரஞ்சு மிட்டாய்களை அனைவருக்கும் வழங்கி மகிழும்! கல்லு சிலேட்டும் தகர சிலேட்டும் நாலு கோடு போட்ட நோட்டும் ஆரம்ப வகுப்புகளை ஆரம்பிக்கும்! முக்காலித் தாங்கியில் கரும்பலகையும் முழங்கால் மடிக்காத மர நாற்காலியும் முக்காலமும் வாழும் வகுப்பறை சின்னங்கள்! மண்வாசம் ...

அந்தநாள் ஞாபகம் – கோவில்கள்!

Posted: 02 May 2017 12:38 PM PDT

அந்தநாள் ஞாபகம் – கோவில்கள்! - பா.வெ. வயல்வெளி கடந்து ஊருக்குள் செல்கையில் வரலாறு ஏந்திய கோவில்கள் வரிசையாக தென்படும்! ஓட்டுக்கட்டிடத்தில் வீற்றிருக்கும் ஊர்ப்புற தெய்வங்கள் ஊர் மக்கள் வேண்டுதல்களை ஒன்றுவிடாமல் நிறைவேற்றும்! கண்கண்ட தெய்வத்தின் கோவில் சுவர்கள் கரிய தேர்வு எண்களுடன் காட்சியளிக்கும்! கணநேரமும் குறையாத வெள்ளந்தி நம்பிக்கைக்கு சாட்சியளிக்கும்! சுவர்களில் பதிந்த சித்திர உருவங்கள் விழியால் மெல்ல மிரட்டும்! தீயவற்றை விரட்டும்! எண்ணெய் ...

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Posted: 02 May 2017 12:30 PM PDT

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர் மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார். வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் ...

செம ஹாட் மச்சி!

Posted: 02 May 2017 12:28 PM PDT

வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது? என்பது பற்றி வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் டிப்ஸ் கொடுத்தால் தான் சரியாக இருக்கும் இல்லையா? கோடை என்று மட்டும் இல்லை, எப்போதுமே ராட்சத விளக்குகளின் ஒளியில் அதிக வெப்பத்தில் பணியாற்றும் சில டி.வி. பர்சனாலிட்டிகளிடம் ஹீட்டை சமாளிப்பது எப்படி? என்று டிப்ஸ் கேட்டோம். - -- - திவ்யதர்ஷினி - அடிக்கிற வெயிலில் டூ வீலரில் போனாலும், நடந்து போனாலும் கண்களில் எரிச்சல் ஏற்படும். வெயில் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடம்பு முழுக்க நல்லெண்ணெய் ...

சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்

Posted: 02 May 2017 12:23 PM PDT

ஜி.லட்சுமணன் -------------- சாதாரண சளி, காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரை உடல் நலனில் ஏதாவது பிரச்னை என்றால், நாம் நாடுவது மருத்துவரைத்தான். முதலில் நோயாளியின் நாடித்துடிப்பையோ அல்லது இதயத்துடிப்பையோ அவர் ஆராய்வார். பின்னர் பிரச்னைக்கு ஏற்ப ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளுக்குப் பரிந்துரை செய்வார். - பரிசோதனையின் முடிவில் கிடைக்கும் ரிப்போர்ட்டில் வெறும் எண்களாகத்தான் இருக்கும். இவை வெறும் எண்கள் மட்டும் அல்ல; நம்முடைய உடல் நலனை குறிப்பிடும் ஆரோக்கிய குறியீடுகள். ...

இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.

Posted: 02 May 2017 12:21 PM PDT

இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர். இதுகுறித்து கடப்பா ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி-கோலாப்பூர் இடையே செல்லும் ஹரிப் பிரியா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை திருப்பதி யிலிருந்து புறப்பட்டது. அப்போது இருக்கை ஒதுக்குவது தொடர்பாக திருப்பதியைச் சேர்ந்த கிரி பிரசாத் என்பவருக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் பயணிகள் சமாதானப்படுத்தி ...

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?

Posted: 02 May 2017 12:21 PM PDT

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா? இப்போது அவைகளை வேகமாக அழித்தபின் புதிய விவாதம் தொடங்கியுள்ளது கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்யமுடியுமா ? யாரைத்தான்நம்புவதோ பேதை நெஞ்சம் என கலக்கம் ஒண்ணுமே புரியலே என்னமோ நடக்குது என மயக்கம் ! தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இன்றைய தமிழ் ஹிந்துவில் ஒரு சுவையான கட்டுரை வந்துள்ளது தகவலுக்காக நன்றியுடன் பகிர்கிறேன் உவர் நிலத்தின் ஆலகால விஷத்தை உண்டது சீமைக்கருவேல ...

உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் அறிமுகம்

Posted: 02 May 2017 12:17 PM PDT

- காயமடைந்த, நோயுற்ற பசுக்களைக் காக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா திங்கட்கிழமை அன்று கொடியசைத்துத் துவங்கி வைத்தார். லக்னோவில் உள்ள கேசவ் பிரசாத்தின் அரசு இல்லத்தில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தன் சேவையைத் தொடங்கின. இந்த சேவையில், காயமடைந்த, நோயுற்ற பசுக்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோ சாலைகளுக்கோ, கால்நடை மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லப்படும். பசு சேவைக்காக டோல் ஃப்ரீ எண்ணும் ...

அந்த 8வது தோட்டா யாருக்கு? - ‘8 தோட்டாக்கள்’ பட விமர்சனம்

Posted: 02 May 2017 12:09 PM PDT

வங்கிக்கொள்ளை ஒன்றில் தெரியாமலே சிக்கிக் கொள்கிறார் ஒரு காவல் அதிகாரி. அந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்களை அவர் தேடி அலைவதே 8 தோட்டாக்கள். சத்யா (வெற்றி), சிறு வயதில் செய்யாத கொலைக்காக சிறைக்குச் சென்று அங்கிருந்து படித்து போலீஸ் ஆனவர். மிக சாந்தமாக, எந்த வம்பிற்கும் போகாத, லஞ்சம் வாங்காத நல்லவர். குற்றவாளி ஒருவரைப் பின் தொடரும் பொறுப்பு சத்யாவுக்கு வழங்கப்படுகிறது. பாதுகாப்புக்கு எட்டு தோட்டாக்கள் அடங்கிய ப்ரூனி ரக துப்பாக்கியும் வழங்கப்படுகிறது. முதல் நாளிலேயே ...

10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது இன்போசிஸ்

Posted: 02 May 2017 12:06 PM PDT

ஹெச் 1 பி விசா தொடர்பான சர்ச்சை நிலவி வரக் கூடிய சூழ்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் 4 முக்கிய பிரிவுகளை உருவாக்கி புதிதாக 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர இருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு பேசிய இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி விகாஷ் சிக்கா, இந்த திட்டத்தில் முதல் பகுதி வரும் ஆகஸ்ட் மாதம் இண்டியானா மாகாணத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல் கட்டத்தில் இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ...

புருஷனுக்கு தெரியாம தினமும் ரெண்டு படம் பார்ப்பேன்!

Posted: 02 May 2017 12:05 PM PDT

- மனம் திறக்கிறார் சுந்தர்.சி.யின் அம்மா -மை.பாரதிராஜா ''அம்மா ரொம்ப அமைதி. அதிகமா பேச மாட்டாங்க. இன்டர்வியூனு வந்துட்டீங்க... எவ்வளவு பேசுவாங்கனு தெரியலை. ஆனா, சினிமா பத்தி கேட்டீங்கன்னா மணிக்கணக்குல பேசுவாங்க...'' அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்திலும் நமக்கு 'ஹலோ' சொல்லி அம்மாவை அறிமுகப்படுத்துகிறார். ''வேற புடவை கட்டிக்கம்மா... போட்டோல அழகா தெரிவ...'' என்றபடி அம்மாவை முத்தமிடுகிறார். ''சீ போடா...'' வெட்கத்துடன் புன்னகைக்கிறார் தெய்வானை. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், ...

ரயில்வே வாங்கும் 100 கிராம் தயிரின் விலை ரூ.972; எண்ணெய் 1 லி. ரூ.1241: ஆர்டிஐ மூலம் அம்பலம்

Posted: 02 May 2017 11:58 AM PDT

மத்திய ரயில்வே சமையல் பிரிவு சுத்திகரிக்கப்பட்ட 1 லிட்டர் சமையல் எண்ணெயை ரூ.1241-க்கும், 100 கிராம் தயிரை ரூ.972க்கும் வாங்கியுள்ளது. இதுபோல ஏராளமான சமையல் பொருட்கள் அவற்றின் உச்சகட்ட விலையை விடப் பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் சமூக ஆர்வலர் ஒருவர் தொடுத்த ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. அஜய் போஸ் என்ற சமூக ஆர்வலர் இதுகுறித்துக் கூறும்போது, ''ரயில்வே சமையல் பிரிவு, என்ன சமையல் பொருட்களை எ ன்ன தொகைக்கு வாங்கியுள்ளது என்று ஜூலை 2016-ல் தகவல் உரிமைச் ...

'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது

Posted: 02 May 2017 11:56 AM PDT

'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால், படத்திற்கான பணிகள் தாமதம் ஆனது. இதனால் 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்தார். 'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'தூங்காவனம்' என கமல் ...

ஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்

Posted: 02 May 2017 11:54 AM PDT

காதல் திருமணம் செய்துக்கொண்ட புனே தம்பதியினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்துக் கோரி புனே குடும்ப நல நீதிமன்ற மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மூத்த சிவில் நீதிபதி வி.எஸ்.மல்கன்பட்டே ரெட்டி முன் விசாரணைக்கு வந்தது. கணவன் - மனைவி இருவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். கணவன் சிங்கப்பூரில் உள்ளார். மனைவி லண்டனில் உள்ளார். இருவரும் பணி காரணமாக புனே நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனது. இதனால் ஸ்கைப் மூலம் விவாகரத்து வழக்கில் ஆஜராக ...

விளம்பரம் செய்திருந்தா இன்னும் சிறப்பா கவனிக்கப்பட்டிருக்கும்!

Posted: 02 May 2017 11:50 AM PDT

- பாம்புசட்டை – ஆடம்தாசன் ''சமீபத்துல இயக்குநர் சங்கத்துல 'பாம்பு சட்டை' ஸ்கிரீன் பண்ணியிருந்தாங்க. பார்த்த அத்தனை பேரும் படம் முடிஞ்சதும் எழுந்து நின்னு கைதட்டினாங்க. - நல்ல படத்துக்கான அங்கீகாரம் அது…'' திருப்தியாகப் பேசுகிறார் ஆடம் தாசன். ஷங்கரின் பட்டறையில் கூர் தீட்டப்பட்டவர் இவர். -' திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர்தான் நான் பொறந்து வளர்ந்த ஊர். அம்மா நிறைய சினிமா பார்ப்பாங்க. அதுவும் எம்ஜிஆர் படம்னா கண்டிப்பா என்னையும் கூட்டிட்டு போவாங்க. இப்படி படம் பாத்து ...

செவிலியராக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை

Posted: 02 May 2017 11:48 AM PDT

திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு செவிலியராக 140-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் பெரும்பாலான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த செவிலியர் பயிற்சி பள்ளியில் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் திண்டுக்கலில் வாடகை வீடு ஒன்றில் தங்கி வந்தார். அவர் செவிலியராக படிக்கும் மாணவிகளை டியூசன் சொல்லி தருவதாக வீட்டிற்கு அழைப்பார். ஆசிரியரை நம்பி அவரிடம் டியூசனுக்கு வரும் மாணவிகளுக்கு ...

என் ஆளோட செருப்பக்காணோம்

Posted: 02 May 2017 11:47 AM PDT

- 'ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்‌ஷன்ஸ்' நிறுவனம் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் 'என் ஆளோட செருப்பக்காணோம்'. இதில் அறிமுக நாயகனாக தமிழ் நடிக்கிறார். கதாநாயகியாக 'கயல்' ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங் ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு- சுக செல்வன், இசை (பாடல் கள்)-இஷான்தேவ், பின்னணி-தீபன் சக்கரவர்த்தி, படத் தொகுப்பு-மணிகண்டன் சிவகுமார், கலை-என்.கே.பால முருகன், பாடல்கள்- விஜயசாகர், நடனம்- ...

ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

Posted: 02 May 2017 11:45 AM PDT

- புதுடெல்லி, டெல்லியில் நடந்த விழாவில் ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். தபால் தலை வெளியீடு ராமானுஜரின் 1000–வது அவதார தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராமானுஜரின் திருவுருவம் பொறித்த தபால் தலை நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் மோடி, ராமானுஜர் தபால் தலையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– அனைவரும் சமம் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகம், மதம் மற்றும் ...

வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்தது

Posted: 02 May 2017 11:40 AM PDT

டோக்கியோ, வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்தது. போர் பதற்றம் - ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவர், தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக எல்லையில் படைகளை குவித்து வைத்து இருக்கிறார். தென்கொரியாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் அமெரிக்காவையும் கிம் ஜாங் அன் அரசாங்கம் மிரட்டுகிறது. தவிர, ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி அது அணுகுண்டு சோதனைகளை ...

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை

Posted: 02 May 2017 11:39 AM PDT

புதுடெல்லி, கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிபதி கர்ணன் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார். 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகளை தேர்வு செய்யும் 'கொலிஜியம்' அமைப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். பின்னர், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு ...

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிவோம்!

Posted: 02 May 2017 10:59 AM PDT

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிவோம்! கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு ...

புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள் !

Posted: 02 May 2017 10:57 AM PDT

புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள்; அதிர்ச்சியடைந்த விமான நிலையம் ! சென்னை விமான நிலையத்தில் உள்ள புகார் பெட்டியில் பயணிகள் சிலர் நன்கொடை பெட்டி என நினைத்து காசு போட்டுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் நன்கொடை பெட்டி ஒன்று இருக்கும். அது பெரும்பாலும் கண்னாடி பெட்டியாக இருக்கும். அதே போல் சென்னை விமான நிலையத்தில் ஆங்காங்கே புகார் பெட்டி உள்ளது. அதை சில பயணிகள் நன்கொடை பெட்டி என நினைத்துக்கொண்டு அதில் காசு போட்டுள்ளனர். புகார் போட பெட்டியில் காசு நிரம்பியுள்ளது. இதைக்கண்டு ...

பொலிக! பொலிக! in pdf

Posted: 02 May 2017 10:55 AM PDT

பொலிக! பொலிக!

ஸ்ரீமத் ராமானுஜரின்  1000  ஆண்டு மஹோத்சவத்திற்காக   தினமலர் நாளிதழில் 108 நாட்களாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு pdf வடிவில் நண்பர்களுக்காக


www.mediafire.com/file/8mq0bzfm7rxj9jh/PoligaPoliga_RamanujaKaaviyamfromDinamalar.pdf

அன்பின் ஈன்ற ஓர் ஆணை

Posted: 02 May 2017 12:35 AM PDT


-

-

-

பெங்களூர் அணி ஐபிஎல் ஸ்கோர்: கலக்கல் மீம்ஸ்!!

Posted: 01 May 2017 07:38 PM PDT

ஆசிய ஸ்குவாஷ் கோப்பை: தீபிகா பல்லிகலை வீழ்த்தி ஜோஷ்னா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

Posted: 01 May 2017 06:11 PM PDT

- சென்னை – ஆசிய ஸ்குவாஷ் கோப்பை போட்டியின் மகளிர் பிரிவில் தீபிகா பல்லிகலை இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இறுதி போட்டி 19-வது ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகலை ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதுவே முதல்முறை 1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் ...

நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா? சமூக வலைதளங்களில் கண்டனம்

Posted: 01 May 2017 06:06 PM PDT

- மும்பை, இந்தி நடிகை கஜோல் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளத்தில், நண்பர் ஒருவருடன் இறைச்சி சாப்பிட்ட வீடியோவை பதிவு செய்திருந்தார். கஜோல் சாப்பிட்டது தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி என்று சமூக வலைதளங்களில், அவருக்கு எதிராக விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இதற்கு நடிகை கஜோல் நேற்று விளக்கம் அளித்தார். அதில், ''அது மாட்டிறைச்சி என்று சொல்லப்படுவது தவறான தகவல். வீடியோவில் காட்டப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி. இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இது மிகவும் உணர்வுப்பூ ர்வமான ...

ஜெனீவாவில் ஜூன் 12–ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

Posted: 01 May 2017 05:50 PM PDT

சென்னை, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– தமிழீழ பிரதமர் கடிதம் தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கிய அறிவுரைகளின்படி, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சமர்ப்பித்த 'டெசோ' மாநாட்டுத் தீர்மானங்கள் இந்த ஆண்டுக்கான ஐ.நா. ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 2017–2018–ம் ஆண்டு அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தி.மு.க. மற்றும் 'டெசோ' அமைப்பு இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™